Friday, 2 April 2010

தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கும் தமிழர் கட்சிகளின் நிலைப்பாடுகளும்


mediaதாயகத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய சக்திகள் இருமுனையில் போட்டியிடுகிறார்கள். தமிழ் தேசியத்தின் உறுதியான பற்றுதலில் பயணிக்கவேண்டும் என்ற வகையில் ஒரு தரப்பும் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எமது போராட்டமும் பயணிக்கவேண்டும் என இன்னொரு தரப்புமாக இரண்டு எதிர்நிலைகளில் தமிழ் தேசிய சக்திகள் பயணிக்கின்றன என்பது யாவரும் அறிந்தவிடயம்.
தமிழ் தேசிய சக்திகளின் போக்குகளையும் அதன் நிலைப்பாடுகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சித்து அதன் சரியான நிலைப்பாடுகளை மக்கள் முன்னெடுத்து செல்வதே ஊடகங்களின் நிலைப்பாடாக இருக்கவேண்டும். ஆனால் இன்று சில ஊடகங்கள் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களை மட்டும் முன்வைத்தோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கருத்தை மட்டும் முன்வைத்தோ அரசியல் செய்கின்றனர்.

Friday, 5 March 2010

நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்

money_tender_currencyநிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது.

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் ஒவ்வொருவரும், 'நிகர சொத்து மதிப்பு' (NAV) குறித்த தெளிவினைப் பெற்றிருத்தல் அவசியம். ஒரு அறிவுக்கூர்மையுள்ள விவரமறிந்த முதலீட்டாளருக்கு NAV எவ்வளவு பயனளிக்குமோ அதைவிட அதிகமாக அதைப்பற்றி ஏதும் அறியாத முதலீட்டாளருக்கு அது ஊறு செய்யவும் கூடும். 

தொடர்ந்து வாசிக்க...

Thursday, 4 March 2010

மௌன அஞ்சலி


Mauna-Anjali


கடல்களைக்கடந்தும்,

தரைகளைக்கடந்தும்,

வான்மீதேறி

மேற்குப்புலத்தில் 
தொடர்ந்து வாசிக்க...

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!


try-is-the-bestமுன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

களங்கள் - 5. ஓயாத அலைகள் மூன்று


29/10/1999 இரவு.
நடந்து முடிந்த ஆட்லறிச் சூட்டுத் திருத்தப் பயிற்சி தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்ட தலைவர், தனது திருப்தியைத் தெரிவித்தார். அதேபோல் தாக்குதலிலும் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இலக்குக்கு ஆகக் கிட்டவாக நிலையெடுக்க வேண்டாமென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். திருத்தங்கள் சொல்லும் ஓ.பி காரர்கள் தமது முகாமுக்குள் நிற்கிறார்கள் என்பதை ஒருகட்டத்தில் உணரும் எதிரி உங்களைத் தேடியழிக்க முனைவான், அதிலிருந்து தப்பும், நழுவும் வழிகளை முற்கூட்டியே ஆயத்தப்படுத்தி வைத்துக்கொண்டுதான் தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  இயன்றவரை மோதலைத் தவிர்க்கச் சொன்னார். இறுதியில், “எதிரியின் ஆட்லறி நிலைகள்தான் இப்போது எமது இலக்கு; ஒவ்வோர் அணிக்கும் தரப்படும் இலக்குகளை எமது ஆட்லறிகளைக் கொண்டு தாக்கியழிக்கும் நடவடிக்கையில் திருத்தங்கள் சொல்பவர்களாக உங்களை அனுப்புகிறேன்” என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் தலைவர்.

Saturday, 27 February 2010

நீருந்து விசைப்படகு (WaterJet Boat)

180px-Yamaha_SUVபொதுவாகப் படகுகள் நீரின் அடியில் சுழலும் சுழலிகளின் (propeller) மூலமாகக் கிடைக்கும் உந்துவிசையின் மூலமாகவே உந்திச்செல்லப்படுகின்றன. ஆனால், நீருந்து விசைப்படகு நீர்த்தாரைகளைப் படகின் பின்னோக்கிப் பீய்ச்சியடிப்பதன் மூலம் நீர்ப்பரப்பின் மீது உந்துவிசையை உருவாக்குகின்றது. இதன்காரணமாக, நீருந்து விசைப்படகுகளில் சுழலிகளுக்குப் பதிலாக நீர்த்தாரைகளைப் பீய்ச்சியடிக்கும் இயந்திர அமைப்புக்கள் காணப்படும். ஆரம்பத்தில் வேகமாக ஓடும் மற்றும் ஆழம் குறைந்த நதிகளிற் பயன்படுத்துவதற்காக, நியூசிலாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான சேர் வில்லியம் ஹமில்ற்றன் (Sir William Hamilton) என்பவரால் 1954 ஆம் ஆண்டில் நீருந்து விசைப்படகு வடிவமைக்கப்பட்டது.


தொடர்ந்து வாசிக்க...

Friday, 26 February 2010

கூட்டமைப்பைக் குலைத்த சம்பந்தர் மீண்டும் நிமிர்வாரா?


TNA-maveerar-illamநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான தடுமாற்றமான நிலைப்பாடுகளால் அனைத்து தமிழ் மக்களிடத்திலும் ஏமாற்றமான மனநிலை காணப்படுகிறது.
தமிழ் தேசியத்தோடு கூட நின்ற அனைத்து தமிழ்ப்பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி ஒற்றுமையாக இணைந்து செல்லவேண்டிய பொறுப்பிலிருக்கின்ற தமிழர் தரப்பானது ஏன் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியது என்பதுதான் புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கிறது.

Thursday, 25 February 2010

சாதனைப்பெண் டேனியலா கார்சியா

wheelchair-disabledஇறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில் இருந்து மீண்டெழுந்தது மட்டுமின்றி, தான் விபத்தில் அடிபட்டதையும் அதிலிருந்து மீண்டதையும் 'மகிழ்ச்சியான கதை' என்று கூறும் ஒரு வித்தியாசமான பெண் டேனியலா கார்சியா. 
தொடர்ந்து வாசிக்க...

தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்


idp-issue2010 நாடாளுமன்றத் தேர்தல் வழமையிலும் பார்க்க இந்த முறை பரபரப்பு மிக்கதாக நோக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் மாறுபட்ட வாதப்பிரதிவாதங்களும், மக்கள் முடிவெடுப்பதில் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல சிங்கள தேசத்திலும் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
முதலில் சிங்களத் தரப்பினரின் தேர்தல் நகர்வுகளை மேலோட்டமாக நோக்குவோம். தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் மகிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனதாக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

Tuesday, 23 February 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05


Pirabakaran-Anthathy-Padam-05
சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (41)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.

இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (42)

களங்கள் - 4. ஓயாத அலைகள் மூன்று


அன்று (28/10/99) அதிகாலை மூன்று மணியளவில் கரும்புலிகளின் ஐந்து அணிகள் பயிற்சி நகர்வைத் தொடங்கின. அவர்களுக்கான ஆள்கூறுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இலக்கு நோக்கிய நகர்வை மக்களின் கண்களில் தட்டுப்படாமல் முடிக்க வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
காலை ஆறு மணியளவில் எனக்கொரு பணி தரப்பட்டு குமுழமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கே ராஜு அண்ணையோடு ஈழவனும் இன்னும் சிலரும் வந்துசேர்ந்தார்கள். பின் அங்கிருந்து ஆண்டாங்குளம் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று வாகனங்களை விட்டுவிட்டுக் காட்டுக்குள் இறங்கினோம். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு வெட்டைப் பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். அது வயற்பகுதியோடு சேர்ந்த ஒரு வெட்டை. சற்று இடைவெளிகள் விட்டு ஐந்து நிலையங்கள் எனக்குக் குறித்துத் தரப்பட்டன. 
தொடர்ந்து வாசிக்க...

Friday, 19 February 2010

கூட்டமைப்பின் ஆபத்தான பயணம் - வழிமறிக்கப் போவது யார்?

tna-in-turmoilநடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள். 


தொடர்ந்து வாசிக்க...

ஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை!

raminjungleஉலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள்.








தொடர்ந்து வாசிக்க...

Thursday, 18 February 2010

தமிழீழத்திற்கான புலத்து தமிழர்களின் ஆணை சாதிக்கப்போவது என்ன?


london-vigilஇன்றுவரை புலத்து தமிழர்கள் வாழ்ந்துவரும் பல்வேறு நாடுகளில் தமிழீழ தனிநாட்டுக்கான மக்களாணையை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு நடத்தப்பட்டுவரும் தேர்தல்களும் அவற்றில் மக்களின் பங்களிப்பும் சர்வதேச அரசுகளினது கவனத்தை கவர்ந்துள்ளதுள்ளதுடன், சிறிலங்கா அரசையும் அச்சுறுத்த தொடங்கியுள்ள வேளையில், இவ்வாறான தேர்தல்களும் அவை சாதிக்கபோவது என்ன? என்ற வினாக்களும் அவசியமற்றவை தான்.
ஆனாலும் இவ்வாறான மக்களாணையை பற்றிய புரிதல் தமிழர்கள் மத்தியில் தெளிவாக கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்பதும் அவ்வாறான மக்களாணை அவசியம் தானா என்பது பற்றிய தெளிதல் ஏற்பட்டுள்ளதா என்பதும் அவசியமானது. இன்னும் பல நாடுகளில் தமிழீழ தனியரசிற்கான மக்களாணைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில முக்கிய விளக்கங்களை தருவது பொருத்தமானது என கருதுகின்றோம்.

இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்


sri-lanka-elections-mahindaஎதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத்தீவிலுள்ள பெரும்பாலும் அனைத்து தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகள் எவற்றுடனும் சேராது தனித்து போட்டியிடவுள்ளதாகவே இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வெளிக்காட்டிய உணர்வின் வெளிப்பாடுகளின் விளைவுகளாகவே தற்போது தமிழ்க்கட்சிகள் எடுக்கின்ற முடிவுகளை நோக்கவேண்டும். அவை தொடர்பான அலசல்களாக விரிகின்றது இக்கட்டுரை.
கடந்த அரச தலைவர் தேர்தலில், கணிசமான மக்கள் தேர்தலில் பங்குபற்றாத நிலை காணப்பட்டாலும், பங்குபற்றிய தமிழ் பேசும் மக்கள், மகிந்தவுக்கு எதிராக வாக்களித்துள்ளமை, சிறிலங்கா அரசியலில் தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடுகளை அசைக்கதொடங்கிவிட்டன.

காபி கற்றுத்தரும் பாடம்

coffeeeநளினி உள்ளே நுழையும்பொழுதே அம்மாவிற்குப் புரிந்துவிட்டது, இன்றும் அலுவலகத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் நடந்திருக்கின்றன என்று. நளினி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள முகாமையாளராக சில நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தாள். சமீப காலமாக, அங்கு ஏராளமான நிர்வாகக் கோளாறுகள், குழப்பங்கள், எக்கச்சக்க நெருக்கடிகள். புதிதாகச் சேர்ந்த நளினிக்கு அவற்றை தினம் தினம் எதிர்கொள்வது பெரும் சோதனையாக இருந்தது. தன்னுடைய பதட்டம், சலிப்பு எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லிப் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது அவளுக்கு. இன்றும் அப்படித்தான். 'சோதனைகளை எதிர்கொள்ளாமல் சாதனைகள் இல்லை' என்று நளினிக்குப் புரியவைத்தாக வேண்டும் என்று தோன்றியது அவள் அம்மாவிற்கு.

தொடர்ந்து வாசிக்க...

Monday, 15 February 2010

அன்பால் இணைவோம்

crocodile2செல்லப் பிராணிகள் பலருக்கு இருப்பதுண்டு. ஆனால் கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த சிடோ (Chito)  என்றழைக்கப்படும் கில்பர்ட்டோ ஷெட்டென்Gilberto Shedden என்ற மீனவனுக்குச் செல்லப் பிராணி எது தெரியுமா? பதினேழு அடி நீளமுள்ள ஒரு முதலை தான். 52 வயதான சிடோ தண்ணீரில் அந்த பெரிய முதலையுடன் கட்டிப் பிடித்து விளையாடுவது கண் கொள்ளாக் காட்சி.


தொடர்ந்து வாசிக்க...

B-52 குண்டுவீச்சு விமானம்


300px-Usaf.Boeing_B-52குண்டுவீச்சு விமானங்களின் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் அவை காலத்திற்குக் காலம் நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி புதிய வினைத்திறனுடன் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. இந்த வகையில் அமெரிக்க விமானப்படையாற் பயன்படுத்தப்படும் B-52 வகைக் குண்டுவீச்சு விமானம் மிக நவீன தொழிநுட்பங்களை உள்ளடக்கிய ஒரு விமானமாகும். 1955 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விமானப்படையின் சேவையில் உள்ள இவ்வகைக் குண்டுவீச்சு விமானங்கள் காலத்திற்குக் காலம் விருத்திசெய்யப்பட்டு நவீன தொழிநுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் ஆறு சுழலி இயந்திரங்களைக் (turbo propeller) கொண்டிருந்த போதிலும் நவீன வடிவங்கள் தாரை இயந்திரங்களைக் கொண்டிருக்கின்றன.

Friday, 12 February 2010

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி


sathiyamoorthyஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 22-02-2010 உடன் ஓராண்டு பூர்த்தி கொள்கின்றது.
தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.






"எதிர்கொள்ளுதல்" (சிறுகதை)


Eathirkolluthallகொழும்பு  இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன்  வெளிக்கிடுகின்றது.

"அக்காவிற்குக்  கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால்  நல்லது."

இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில  அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவென்றாலும் அக்காதான் போடுவா. அத்தான் எழுதின கடிதத்தின்ர சுருக்கத்தில இருந்து நிலமையைப் புரிஞ்சு கொண்டன். அக்காவின் கடைசிப் பக்கங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடிதம் கிடைச்ச மூண்டு நாளைக்குள்ள அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிக்கிட்டு சிறீலங்கா வந்திட்டன். வடபகுதி நிலமையள் மிக மோசமா இருந்தன. நாலு கிழமையா பலாலிக்கான விமானப் போக்குவரத்து நடக்கேல்லை. வடபகுதி முற்றாக ஏனைய பகுதிகளிலையிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

பொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள் முறுகல் வெளிப்பாடு

fonseka_rajapakse_vaharaiநீதி வேண்டிநிற்கும் உலகில் மற்றோர் நீதி அரங்கேற்றம் பெற்றுள்ளது. ஆனால் அந்த நீதி மற்றொரு அநீதியால் அரங்கேற்றப்பட்டுள்ளமை தான் வித்தியாசமானது. தமிழின அழிப்பினை மேற்கொண்ட ஓரங்க நாடகத்தின் பிரதான வில்லன்களில் ஒரு வில்லன் மற்றொரு வில்லனால் அழிக்கப்பட்ட அல்லது சிறையெடுக்கப்பட்ட கதைதான் பொன்கேசா கைது.

விடுதலைப் போராட்டத்தின் இறுதிப் பகுதியில் ஒப்பேற்றப்பட்ட தமிழின அழிப்பின் கூரிய வாள் பொன்சேகாவிடமே இருந்தது. அந்த வாள் கண்ணை மூடி வீசப்பட்ட பொழுது வீழ்ந்த தலைகள் ஆயிரம் என்றால் அந்தத் தலைக்குச் சொந்தமான பல்லாயிரம் கண்களின் கண்ணீர்களின் சாபத்திற்கு அவரும் அவரது அன்றைய தலைவர் மகிந்தராஜபக்சவும் உட்பட்டிருந்தனர்.





தொடர்ந்து வாசிக்க...

Thursday, 11 February 2010

நாவினால் சுட்ட வடு

harsh-wordஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக அவன் கோபமும், சண்டையுமாக இருப்பதால் அவனுக்கு நண்பர்களே இல்லை, பள்ளியிலும் ஆசிரியர்களிடம் அவனுக்குக் கெட்ட பெயர்தான். இதன் காரணமாக அவனும் எப்பொழுது பார்த்தாலும் வருத்தத்தில் இருந்தான். கோபமும் துயரமுமான மனநிலையிலேயே அவன் இருந்ததால் அவனால் சரிவரப்படிப்பிலும் கவனம் செலுத்த இயலவில்லை, விளையாட்டுக்களிலும் அவனைச் சேர்த்துக்கொள்ள யாரும் விரும்பவில்லை.

தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 9 February 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 03


Pirabakaran-Anthathy031
இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*
அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)

தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க
எழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்
கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை
மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)


தொடர்ந்து வாசிக்க...

கடுங்கோட்பாடும் ‘கால் பிடி’ வைத்தியமும் !


karuna-douglas-kishore
சென்ற பெப் 4 ந் தேதிக்குப்பின், இலங்கையில் இருந்து வெளியாகிய எல்லாப் பத்திரிகைகளிலும் அந்நாட்டின் அதிபர் கண்டி மாநகரில் ஆற்றியிருந்த உரை குறித்த விபரங்களும்,அதுபற்றிய ஆசிரியத் தலையங்கங்களும் வெளியாகியிருந்தன.
இலங்கையில் எந்தக் கட்சி அரசு அமைத்தாலும், அந்த அரசுக்குச் சாதகமான செய்திகளையும், அதன் திட்டங்களை ஆதரித்து தலையங்கங்களைத் தீட்டுவதிலும் ‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான தமிழ்-ஆங்கில-சிங்கள ஏடுகள் என்றும் பின்னிற்பதில்லை. ஒருவகையில் அரசின் ‘ஊதுகுழல்’களாகச் செயல்படும் இப்பத்திரிகைகள் இந்த முறையும் தங்கள் கடமையினைச்(?) செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றன.

3 இடியட்ஸ் திரைவிமர்சனம்

3-idiotsஅனைவருமே வெற்றிக்கான  பாதையில் தான் செல்ல விரும்புகிறோம். ஆனால் வெற்றியை குறிக்கோளாகக்  கொண்டு செயல்படுகிற போது போட்டி, பொறாமைகள், பிரச்சனைகள், தோல்விகள், மனக்கசப்புகள்  என்று படிப்படியாக பல தடைகளும் துன்பங்களும் நேரிடுகிறது. வெற்றியின் பின்னால் ஓடாமல்  ஒரு நல்ல செயலை எடுத்துக்கொண்டு நல்ல திட்டமிடுதலும் அதை சரியான வழியில் செயல்படுத்தலும் வெற்றியை தன் பின்னால் ஓடிவரச் செய்யக்கூடியதாக மாற்றுவதும் ஒரு புத்திசாலியின் வழியாகும்.


தொடர்ந்து வாசிக்க...

Monday, 8 February 2010

மகிந்தவின் போர்வாள் புலம்பெயர் தமிழர் மீது ஏவி விடப்பட்டுள்ளது


20060530-torontorally-optimizedதேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்.  அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது ஆதரவை நல்க வேண்டுமெனவும் வெளிவிகார அமைச்சர் யாழ் நூலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார்.
ஜனவரி 30 , 2010 அன்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ் சென்ற அவர் நல்லூர் கந்தசாமி கோவில் சென்று வழிபட்ட பின்னர் யாழ் நூலகம் சென்ற அவர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து யாழ்ப்பாணத்தில் அரசு உத்தேசித்துள்ள வேலைத்திட்டங்களை அறிவித்தார்.
அவரின் அறிவிப்புக்களில் முக்கியமானது இரண்டு விடயங்கள்:

Sunday, 7 February 2010

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன?


tna-meeting-with-ltte-smallமீண்டுமொரு தேர்தல் முனைப்புக்களுக்கான தளம் திறக்கப்பட்டுள்ளது. ஆரசியல் களத்தில் நான் முந்தி நீ முந்தி என கூட்டணிகளும், கருத்து வெளிப்பாடுகளும் தலை தூக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சரியான கேள்விகளுக்கான சரியான பதில்களை வழங்க வேண்டிய சூழலில் தமிழ் அரசியல்த் தலைவர்கள் இருக்கின்றார்கள்.
நாளுக்கு நாளான அரசியல் மாற்றத்தின்படியான மாறுதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உறுதியான முடிவினை வெளிப்படுத்த வேண்டிய ஒரு கட்டத்தில் தற்போது களத்தில் உள்ளது. கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இன்று முக்கிய இடத்தினை வகிப்பது. கூட்டமைப்பு தொடர்பிலான மக்கள் சந்தேகங்களை நிவர்த்திப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை கூட்டமைப்பு எடுக்க வேண்டியதாகும்.

Friday, 5 February 2010

Hypersonic விமானம்

200px-X-43A_Hyper_-_X_Mach_7_computational_fluid_dynamic_CFDவிமானவியற் தொழிநுட்பத்தில், ஒலியின் வேகத்திலும் ஐந்து மடங்கு அதிகமான வேகத்திற் பயணிக்கவல்ல விமானங்கள் hypersonic விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. சாதாரண தாரை இயந்திரங்களின் (jet engines) மூலம் ஒலியின் ஐந்து மடங்கு வேகத்தினைப் பெறுவதென்பது இலகுவான காரியமில்லை. இதன் காரணமாக இவ்வகை விமானங்களுக்கு, அடிப்படையில் ramjet இயந்திரத்தின் தத்துவத்தில் இயங்கினாலும், அதனைவிட அதிகளவாக உந்துசக்தியைப் பிறப்பிக்கவல்ல scramjet இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


தொடர்ந்து வாசிக்க...

பழங்களை உண்ணும் முறை


how-to-eat-fruitபழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.
பழங்களை எப்போது எப்படி எப்போது உண்ணவேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன? இது தொடர்பான மின்னஞ்சல் ஊடாக பரிமாறப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து விளக்கம் அளிக்கலாமென எண்ணுகின்றேன்.
தொடர்ந்து வாசிக்க...

Thursday, 4 February 2010

ஜோஹாரி சாளரம்

தன்னைத் தானே அறிவதன் முதல் படியான SWOT Analysis குறித்து இப்பகுதியில் கண்டோம். சுயபரிசோதனையையும், சுயமுன்னேற்றத்தை ஊக்குவிக்கும் இன்னொரு முறைதான் ஜோஹாரி சாளரம் (JOHARI Window). தன்னைத் தான் அறிந்து கொள்வதோடு நின்று விடாமல், குழுவினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும்கூட உதவி புரிவது இந்த உருமாதிரி(Model).

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியல் மருத்துவர்களாகிய ஜோசப் லுஃப்ட் மற்றும் ஹாரி இங்காம் ஆகிய இருவராலும் உருவாக்கப்பட்ட மாதிரி(Model)ஆகிய இது இருவருடைய பெயர்களையும் தாங்கி 'ஜோஹாரி சாளரம்' என்று பெயரிடப்பட்டது. இக்கட்டமைப்பினை 'தன்னுணர்வுக்கான வெளிப்பாடு மற்றும் பின்னூட்ட மாதிரி' (Disclosure/Feedback )

Wednesday, 3 February 2010

தடங்கள் -5. ஓயாத அலைகள் -3. பகுதி 2



இது 1999 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியும் அதற்குரிய நிர்வாகமும் வேறோர் இடத்திலிருந்து கடற்பயிற்சிக்காக முல்லைத்தீவின் கள்ளப்பாடு என்ற கடற்கரைக் கிராமத்துக்கு நகர்ந்திருந்தது. இங்கே கரும்புலிகள் அணி எனப்படுவது தரைக் கரும்புலிகள் அணியைக் குறிக்கும். பொதுவாக கடற்கரும்புலிகளை ‘கடற்கரும்புலிகள்’ என்றும், தாயகப்பகுதிக்கு வெளியேயோ உள்ளேயோ இயக்கத்தால் உரிமை கோரப்படாத தற்கொடைத் தாக்குதல் நடத்தும் அணியை ‘மறைமுகக் கரும்புலிகள்’ என்றும், மற்றவர்களை ‘கரும்புலிகள்’ என்றும் அழைப்பதுண்டு. இந்தத் தரைக்கரும்புலிகள் அணி இம்ரான்-பாண்டியன் படையணியின் நிர்வாகத்தின் கீழ் ஓரணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

Tuesday, 2 February 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02


Pirabakaran-Anthathy02










பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (11)

உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (12)

உண்மையான தலைவன்


true-leader1அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் சிப்பாய்களைக் காண அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்வார். மருத்துவர்களிடம் அவர்களுடைய உடல்நல முன்னேற்றத்தைக் கேட்டு அறிந்து கொள்வார்.
அப்படி ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் பேசிய போது ஒரு மருத்துவர் ஒரு சிப்பாய் மரணத் தறுவாயில் இருப்பதாகச் சொன்னார். உடனே ஆப்ரகாம் லிங்கன் அந்த சிப்பாயின் அருகில் சென்று அமர்ந்தார். உற்றார் உறவினர் யாரும் அருகில் இல்லாமல் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த சிப்பாயிடம் ஆப்ரகாம் லிங்கன் “உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டார்.

Monday, 1 February 2010

தமிழர் தேசத்தில் தோற்கடிக்கப்பட்ட சிங்கள தேசத்தின் அரச தலைவர்

tamil-diasporaதற்போது இலங்கைத்தீவில் நடந்துமுடிந்த தேர்தல், அங்கு வாழும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை எவ்வாறு சிறிலங்கா என்ற நாட்டுக்குள் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்ற வினாவை மீண்டும் எழுப்பி நிற்கின்றது. அத்துடன் தமது ஆட்சிக்கதிரைக்காக தமிழர்களை எவ்வாறு அடக்குகிறார்கள் என்பதை வெளிக்காட்டும் இன்னொரு சாட்சியாகவும் அத்தேர்தல் முடிந்திருக்கிறது.








தொடர்ந்து வாசிக்க...

எறிபாதை ஏவுகணை (Ballistic Missile)

250px-Trident_II_missile_imageமிகத் தொலைதூர இலக்குக்களை நோக்கி உயர் புவிச்சுற்றுவட்டப்பாதைவழியே வழிநடாத்தப்பட்டு இலக்குகளைத் தாக்கியழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணையே எறிபாதை ஏவுகணை (Ballistic Missile) என்றழைக்கப்படுகின்றது. இவ்வகை ஏவுகணைகள் எறிபாதை ஏவுகணை என்று அழைக்கப்படுவதன் காரணம் இவை ஒரு எறியப்பாதையினூடாகவே பயணிக்கின்றன. இவ்வகை ஏவுகணைகள் கிடைப்பறப்பை மேற்கொள்வதில்லை. சாதாரணமாக பந்து ஒன்றையோ அல்லது வேறொரு பொருளையோ எறியும்போது அது எவ்வாறு ஒரு எறியப்பாதையில் பயணிக்கின்றதோ, அவ்வாறே எறியப்பாதை ஏவுகணைகளும் பயணிக்கின்றன.














தொடர்ந்து வாசிக்க...

Sunday, 31 January 2010

விலைபோகா இனம் தமிழினம் என்பதை நிரூபித்த அரச தலைவர் தேர்தல்

eelam-smallமீண்டும் தமிழர்தாயக மக்கள் ஒன்றிணைந்ததான தமது கொள்கையை நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஒன்று சேர வெளிப்படுத்தியுள்ளனர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு என்பது தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே வெளியாகியிருக்கின்றது.

சிங்களப் பெரும்பான்மை சக்திகளால் தமிழின அழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்த போது ஒருவர் தீர்மானம் எடுக்க அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றியவர் மற்றவர். இருவரும் எதிர் எதிர் துருவங்களாக நின்று ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் நிலைபாட்டினை எடுத்தது மட்டுமல்லாமல் இருவர் தொடர்பிலான வெளிவராத பல உண்மைகள் வெளிவரத் தொடங்கின. இன்னும் பெருமளவில் வெளிவரும் என்பதனை யாரும் மறைக்க முடியாது.



தொடர்ந்து வாசிக்க...

Friday, 29 January 2010

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.

browsing_laptop1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.













தொடர்ந்து வாசிக்க...

தடங்கள் -4. ஓயாத அலைகள் -3. பகுதி -1.




இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.
‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.
‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.

‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.


-இளந்தீரன்

Thursday, 28 January 2010

இசையெனும் அமுதம்

music_noteஇசை, மொழி இனம் மதம் கடந்து அனைவரையும் இணைக்கக் கூடியது, அதிலும் குறிப்பாக இந்தியாவில், இந்து மதத்தில் "இசையால் தமிழாய் இருப்பவனே" என்றும், "இசையால் வசமாகா இதயம் எது, ஈசனே இசைவடிவம் எனும்போது" என்றும் இசை இறைவடிவாகவே நோக்கப் படுகிறது. கலைமகள் வீணையிசைப்பதாகவும், நாரதர் கந்தருவர்கள் முதலியவர்கள் இசையில் தேர்ந்தவர்கள் எனவும், கண்ணனின் குழலிசையில் பசுக்களும், பறவைகளும், ஏன்... செடி கொடிகள் கூட மயங்கி நின்றதாகவும் இசை தொடர்பான ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)


காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

வாழ்க்கைப் பாடம்

good-thinkingஅந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.


தொடர்ந்து வாசிக்க...

Wednesday, 27 January 2010

சிரித்து வாழவேண்டும்


"வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்கிறது முதுமொழி. "கோமாளி ஒரு தலைவலி மாத்திரைக்கு ஒப்பானவன். ஒரே வித்தியாசம் என்னவெனில் அவன் இருமடங்கு வேகமாகச் செயல்படுவான்" என்கிறார் க்ரூசோ மார்க்ஸ் என்ற அறிஞர். உடல் வலியைக்குறைப்பதிலும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சிரிப்பு அதிகப் பங்கு வகிக்கிறது.
நல்ல நகைச்சுவை சிரிப்பலைகளைப் பரவ விடுகிறது. சிரிப்புகூட ஒரு தொற்றுநோய்தான். ஆரோக்கியமான தொற்று. கொட்டாவி, இருமல், தும்மலை விட வேகமாகப் பரவக்கூடியது சிரிப்பு. ஒருவருடன் சிரித்துப் பேசுகையில் நெருக்கம் அதிகரிக்கிறது. சிரிப்பு ஒரு நல்ல பாலம். அது மனிதர்களை இணைக்கிறது. மனத்தை லேசாக்குகிறது. அது மட்டுமல்ல... அது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை (Immunity) அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் ஆற்றலை மேம்படுத்துகிறது. வலியையும் இறுக்கத்தையும் (Pain and Stress) குறைக்கிறது.

எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?


mahinda-sarathவரும் 26 ஆம் நாள் (26/01/2010) இலங்கையில் இடம்பெற இருக்கும் அதிபருக்கான தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு அமையவும் நடைபெறுமா என்னும் கேள்வி இப்போது எழுந்துள்ளது.
சென்ற 19/01/2010ல் இலங்கையின் தேர்தல் ஆணையாளரான தயானந்த திசாநாயக்கா வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில், எதிர்வரும் ஜனாதிபதிக்கான தேர்தலில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் பெருமளவில் தேர்தல் விதிகளை மீறிச்செயல்படுவதாகவும், இந்நிலையில் தாம் 26ந் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலின்போது, தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணுதல் போன்றவற்றுக்கு மட்டுமே பொறுப்பேற்கவிருப்பதாகவும் ஏனைய தேர்தல் நடைமுறைகளைச் செயல்படுத்த இயலாதிருப்பதாயும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆளில்லா வானூர்தி (Unmanned Aerial Vehicle)

180px-MQ-9_Reaper_in_flight_2007மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.


தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 26 January 2010

புதிய கிளிநொச்சி


kilinochchi-2கிளிநொச்சி மீள்குடியேற்றம் அதன் பின்னான மக்களின் இயல்பு வாழ்வு என்றெல்லாம் பல்வேறு செய்திகள் நாளுக்கு நாள் வெளிவந்தாலும் உண்மையில் கிளிநொச்சியின் நிலைப்பாடு தொடர்பில் வெளி உலகிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கிளிநொச்சி என்றால் அனைவரது கண்முன்னே விரியும் செழுமை நவீனமும் தொன்மையும் கலந்த நகர், கோவில்கள், அழகிய வயல்வெளிகள் அழகான தமிழ்ப்பெயர்கள், என எண்ணற்றவற்றைக் கூறலாம். அத்தகைய கிளிநொச்சியின் தற்போது இருக்கும் நிலைதான்  வேதனைக்குரியது.

அதிஸ்ரக்காரன் (சிறுகதை)


கந்தப்பு மாஸ்ரர், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை சேர்த்தவர். அவர் கற்பித்த பாடசாலையிலே ஓய்வு நிலைபெறும் வரை சேவையாற்றியதோடு பாடசாலை வளர்ச்சியிலும் கல்வி மேம்பாட்டுக்கும் முன் நின்று உழைத்தவர்.
நான்கு பிள்ளைகளையும் பெற்றுக் கொடுத்து விட்டு அவர் மனைவி காமாட்சி கண்ணை மூடிக்கொண்டார்.
நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி படிப்பித்து நிமிர்த்தும் வரையும், படாத பாடு பட்டவர். ஒரு ஆண் பிள்ளையையும் ஒரு பெண் பிள்ளையையும் வைத்தியக் கலாநிதியாகவும் மற்றைய ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் பொறியலாளர்களாகவும் இந்த உலகுக்கு தந்ததோடு, ஆசிரியர் தொழிலுக்கும் ஓய்வு நிலைபெறும் வயதையும் அடைந்து விட்டார்.
Athisttakaararn

என்னையே ஏன் சோதிக்கிறாய்?


அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற விம்பில்டன் ஆட்டக்காரர் ஆர்தர் அஷெ (Arthur Ashe) 1983 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சையின் போது பெற்ற ரத்தம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த போது அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். உலகெங்குமிருந்து அவர் ரசிகர்கள் கடிதங்கள் மூலமாகத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.

அதில் ஒரு ரசிகர் மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். "கடவுள் ஏன் உங்களை இந்தக் கொடிய நோயிற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை".

நட்பெனப்படுவது யாதெனில்...

ஒரு ஊரில் சோமு என்பவன் வசித்து வந்தான். ஒரு நாள் செய்யாத ஒரு குற்றத்திற்கான அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டு விட்டது. உன்னுடைய கடைசி ஆசை என்ன? என்று கேட்ட மன்னரிடம், தள்ளாத வயதுடைய தனது தாய் பக்கத்து ஊரில் வசிப்பதாகவும், அவளை ஒரு முறை பார்த்து வணங்கிவிட்டு வர அனுமதி வேண்டுமென்றும் கோரினான் சோமு. "நீ திரும்பி வரவில்லையென்றால் என்ன செய்வது? உனக்குப்பதில் வேறொருவர் பிணையாக நிற்பதானால் உன்னை அனுமதிக்கிறேன். இல்லையென்றால் முடியாது", என்றார் அரசர்.




தொடர்ந்து வாசிக்க...

ஒருகாலத்தில் தமிழர்களின் கருவறை தெய்வமாக விளங்கிய இந்தியா இன்று சண்டேஸ்வரர் நிலையில்!

Mahinda_Sleepingதமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரிய பலமாக விளங்கிய தமிழர்களின் இராணுவ பலம் சிறிலங்கா அரசினாலும் அதன் நேச சக்திகளின் கூட்டுச்சதியினாலும் சிதைக்கப்பட்ட தற்போதைய நிலையில் அவ்வாறான சூழ்ச்சிவலையில் தமிழ்மக்கள் எவ்வாறு சிக்கினார்கள்? அந்த சூழ்ச்சிவலையின் பிரதான சூத்திரதாரிகள் யார்? அவ்வாறான கபடநாடகங்கள் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் போராட்டங்களில் எவ்வாறான பரிணாமத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றன? போன்ற விடயங்களை, போரின் உஷ்ணம் தணிந்துள்ள இப்போது சற்று இரைமீட்டிக்கொள்வது எதிர்கால பயணத்துக்கு ஆரோக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கும் என்பது உறுதி.


தொடர்ந்து வாசிக்க...

Wednesday, 20 January 2010

எடடி மண்வெட்டி! நடவடி அம்பாந்தோட்டைக்கு!


தேர்தல் களத்தில் நாளுக்கு நாளான கருத்து மோதல்களும் அதனூடான உளறல்களும் அதிகரித்து வருகின்றன. இனி வரும் காலங்களில் தமது குடும்ப அரசியலை யாராலும் அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த மகிந்த குடும்பம் தற்போது அச்சத்தால் வெருண்டிருப்பதை அண்மைய நடவடிக்கைகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.
"நாட்டின் ஆட்சியின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளமையால் அதனைக் காக்கும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபடவேண்டும்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எதனைக் கருத்திற் கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார் என்று புரிகின்றது.



Tuesday, 19 January 2010

யாதுமாகி


Yathumaki_Kavithai_Padam
யாதுமாகி நிற்கிறது உலகு !!

எல்லாம் இழந்து
ஏதிலி ஆனது - என்
தமிழ்சாதி !!

நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்
கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்
அகதியாக்கிய உலகே - இன்று
அகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !



நேர்முகத்தேர்வு- பொதுவான கேள்விக்கணைகள்

job-interviewநேர்முகத்தேர்வில் உங்கள் அறிவைச் சோதிக்கும் கேள்விகளை விட உங்கள் தன்மையைச் சோதிக்கும் கேள்வுகள் தான் பொதுவாக அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் வெவ்வேறு விதம். ஒரு தேர்வாளரின் குணமும் மற்றவருடைய குணமும், நேர்முகத்தேர்வுகளுக்கான முறைகளும் ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் அமைதியாக, தட்டிக்கொடுக்கும் விதமாக உங்களை நேர்முகம் செய்யலாம். சிலர் உங்களைச் சீண்டி உங்கள் குணாதிசயத்தை எடை போட விரும்பலாம். ஆனால் நீங்கள் ஒரே விதமாக, அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் பதில்களைச் சொல்வது அவசியம்.


தொடர்ந்து வாசிக்க...

Monday, 18 January 2010

காய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர் தரப்பு


mahinda-rajapaksa098சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது சிறிலங்காவின் தேர்தல்தான். யார் ஆட்சிக்கு வந்தாலென்ன அவர்களுடன் தமது அரசுகள் தொடர்ந்து இணைந்து செயற்படும் என அறிவித்துவிட்டு தேர்தல் முடியும்வரை காத்திருக்க சர்வதேச நாடுகள் தயாரில்லை. சிறிலங்காவின் தேர்தல் தற்போது சர்வதேச சக்திகளின் கைகளுக்கும் சென்றுவிட்டதை தெளிவாக காணமுடிகின்றது.
இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத் பொன்சேகாதான் ஆட்சிக்கு வருவார் என்பது வெளிப்படையானது. இவ்வாறான பின்புலத்தில், இத்தேர்தலில் சர்வதேச நாடுகளின் வகிபாகம் என்னவாக இருக்கபோகின்றது? குறிப்பாக இந்தியாவின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.

குரூஸ் ஏவுகணை (Cruise Missile)

250px-Tomahawk_Block_IV_cruise_missileநவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்கமும் அவற்றுக்கான நவீன தொழிநுட்ப உருவாக்கமும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.


தொடர்ந்து வாசிக்க...

Sunday, 17 January 2010

கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!


Computer
கணினி மயமான வாழ்க்கை முறையில்
மனிதன் குடும்பத்தை விட்டுக் -- கணினியுடன்
ஒன்றிக் கலந்துவிட்டான்!இங்கே குடும்பத்தார்
திண்டாடும் கோலங்கள் பார்


தொடர்ந்து வாசிக்க...

Thursday, 14 January 2010

நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும்

velupillaai-last-respectகடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.


தொடர்ந்து வாசிக்க...

Wednesday, 13 January 2010

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்

சுய முன்னேற்றம் பெறவேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அவர் முதலில் செய்ய வேண்டுவது சுயபரிசோதனை. தன்னைத் தான் அறிதல் எந்த வெற்றிப்பயணத்திற்கும் அவசியம். தன்னை அறிதலும், பிறர் தன்னைப்பற்றி நல்ல முறையில் அறியும்படி செய்தலும் வாழ்வில் பல பொன்னான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கக் கூடியவை. நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? என நினைக்க வேண்டாம்.நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது நிரம்பவே இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொள்ள நாம் செய்யவேண்டியது கொஞ்சம் சுய பரிசோதனை. இந்தப் பரிசோதனை தனிமனிதர்கள் மட்டுமல்ல, பல சமயங்களில் பெரும் நிறுவனங்கள் கூட செய்துகொள்ளவேண்டிய சோதனை. அதுதான் உங்கள் வலிமை, பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த 'SWOT Analysis' (Strengths, Weaknesses, Opportunities and Threats).


தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 12 January 2010

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

stressபதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.




தொடர்ந்து வாசிக்க...