Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Thursday, 4 March 2010

மௌன அஞ்சலி


Mauna-Anjali


கடல்களைக்கடந்தும்,

தரைகளைக்கடந்தும்,

வான்மீதேறி

மேற்குப்புலத்தில் 
தொடர்ந்து வாசிக்க...

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!


try-is-the-bestமுன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

Friday, 19 February 2010

ஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை!

raminjungleஉலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள்.








தொடர்ந்து வாசிக்க...

Friday, 12 February 2010

"எதிர்கொள்ளுதல்" (சிறுகதை)


Eathirkolluthallகொழும்பு  இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன்  வெளிக்கிடுகின்றது.

"அக்காவிற்குக்  கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால்  நல்லது."

இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில  அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவென்றாலும் அக்காதான் போடுவா. அத்தான் எழுதின கடிதத்தின்ர சுருக்கத்தில இருந்து நிலமையைப் புரிஞ்சு கொண்டன். அக்காவின் கடைசிப் பக்கங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடிதம் கிடைச்ச மூண்டு நாளைக்குள்ள அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிக்கிட்டு சிறீலங்கா வந்திட்டன். வடபகுதி நிலமையள் மிக மோசமா இருந்தன. நாலு கிழமையா பலாலிக்கான விமானப் போக்குவரத்து நடக்கேல்லை. வடபகுதி முற்றாக ஏனைய பகுதிகளிலையிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

Thursday, 11 February 2010

நாவினால் சுட்ட வடு

harsh-wordஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக அவன் கோபமும், சண்டையுமாக இருப்பதால் அவனுக்கு நண்பர்களே இல்லை, பள்ளியிலும் ஆசிரியர்களிடம் அவனுக்குக் கெட்ட பெயர்தான். இதன் காரணமாக அவனும் எப்பொழுது பார்த்தாலும் வருத்தத்தில் இருந்தான். கோபமும் துயரமுமான மனநிலையிலேயே அவன் இருந்ததால் அவனால் சரிவரப்படிப்பிலும் கவனம் செலுத்த இயலவில்லை, விளையாட்டுக்களிலும் அவனைச் சேர்த்துக்கொள்ள யாரும் விரும்பவில்லை.

தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 9 February 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 03


Pirabakaran-Anthathy031
இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*
அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)

தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க
எழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்
கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை
மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)


தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 2 February 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02


Pirabakaran-Anthathy02










பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (11)

உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (12)

Thursday, 28 January 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)


காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

Tuesday, 26 January 2010

அதிஸ்ரக்காரன் (சிறுகதை)


கந்தப்பு மாஸ்ரர், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை சேர்த்தவர். அவர் கற்பித்த பாடசாலையிலே ஓய்வு நிலைபெறும் வரை சேவையாற்றியதோடு பாடசாலை வளர்ச்சியிலும் கல்வி மேம்பாட்டுக்கும் முன் நின்று உழைத்தவர்.
நான்கு பிள்ளைகளையும் பெற்றுக் கொடுத்து விட்டு அவர் மனைவி காமாட்சி கண்ணை மூடிக்கொண்டார்.
நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி படிப்பித்து நிமிர்த்தும் வரையும், படாத பாடு பட்டவர். ஒரு ஆண் பிள்ளையையும் ஒரு பெண் பிள்ளையையும் வைத்தியக் கலாநிதியாகவும் மற்றைய ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் பொறியலாளர்களாகவும் இந்த உலகுக்கு தந்ததோடு, ஆசிரியர் தொழிலுக்கும் ஓய்வு நிலைபெறும் வயதையும் அடைந்து விட்டார்.
Athisttakaararn

Tuesday, 19 January 2010

யாதுமாகி


Yathumaki_Kavithai_Padam
யாதுமாகி நிற்கிறது உலகு !!

எல்லாம் இழந்து
ஏதிலி ஆனது - என்
தமிழ்சாதி !!

நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்
கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்
அகதியாக்கிய உலகே - இன்று
அகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !



Sunday, 17 January 2010

கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!


Computer
கணினி மயமான வாழ்க்கை முறையில்
மனிதன் குடும்பத்தை விட்டுக் -- கணினியுடன்
ஒன்றிக் கலந்துவிட்டான்!இங்கே குடும்பத்தார்
திண்டாடும் கோலங்கள் பார்


தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 12 January 2010

வாலியிடம் பேச்சிழந்த இராமன்


raman-seethai-ilakuvanம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.
வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான்.

Friday, 8 January 2010

கயிறு நாவலின் சில துளிகள்

kayiruகதையின் தொடக்கத்தில் கோயிலைச் சேர்ந்த 'எருமத்ர' மடத்தினை  'கண்டெழுத்து' (நில அளவுRevenue survey and settelment period) எழுதவருகிற 'க்ளாசிப்பேரு கொச்சுப்பிள்ளை' (classifier)க்காக சுத்தம் செய்து தயார் ஆக்குகிறார்கள். கோடாந்திர முத்தாசான் போன்றவர்களுக்கு கிளாசிப்பேர் என்றால் அந்த பெயரை வைத்து என்ன மாதிரியான வேலை அது, என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று பல குழப்பங்கள். அதுகாலம் வரையிலும் பிராமணல்லாதவரை எருமத்ரமடத்தில் தங்க வைத்ததில்லை. ஆனால் பொன்னு தம்பிரான் (ராஜா) உத்தரவு . இதனைக் காலமாற்றம் நிகழத்தொடங்கியதின் குறிப்பு  எனக்கொள்ளலாம். செய்யும் வேலையினைக் கொண்டு ஒருவருடைய நிலை உயர்த்தப்பட்டுவிட்டது.


















தொடர்ந்து வாசிக்க...

Wednesday, 6 January 2010

ஈழகாவியம் - 16


Washington0220_x05


ஈழகாவியம்
புலத்துக் காண்டம்
அத்தியாயம் -16
ஐந்தொகை-10
முடிப்புரை- எழுத்தர் எண்ணம்!

என்னரும் தமிழீர் இந்த
          இனியபத் தாண்டு தன்னில்
இன்னொரு பதியம் வைத்து
          எழுந்துமே நடக்கின் றோமே!
ஒன்பதாம் வருடம் செத்த
          உடல்களாய் இராட்ச தர்கள்
தின்றனர்! தமிழிச் சிக்கள்
         தீயுடல் தந்தார் அன்றோ!
தொடர்ந்து வாசிக்க...

சுவடுகள் - 8. கப்டன் அருணன்


அன்று மாலையே நாங்கள் தங்கியிருந்த வீடு களைகட்டத் தொடங்கியது. வழமையான – அலுப்புத்தட்டும் இரவுகள் போலன்றி இன்றைய இரவு சுவாரசியமாகக் கழியப் போகின்றது என்ற உற்சாகம் எம்மைத் தொற்றிக் கொண்டது. விறகு, சீனி, தேயிலை என்று தேனீர் போடத் தேவையான பொருட்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டான் மறவன். இந்தப் பரபரப்பெல்லாம் அருணனுக்கானத்தான். வரப்போகும் விருந்தாளியை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
Maveerar2நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.




Monday, 4 January 2010

அழகின் பின்னனி


Alagin_Pinnani
நளினத்தின் பின்னணியில் நங்கை அழகு!
உளிகளின் பின்னணியில் ஓசை அழகு!
விழிகளின் பின்னணியில் பார்வை அழகு!
துளிகள் மழையின் அழகு.



Monday, 28 December 2009

மெத்தை - சிறுகதை

இன்று நத்தார். உலகைமீட்கும் இரட்சகர் புவிப்பிறந்த நாள். இந்த மகத்தான நாளை மார்கழி மாதம் முழுவதுமே நினைவுகூருமாப்போல முன்கூட்டியே வண்ண விளக்கு அலங்காரங்களும்,பைன் மரங்களில் தோரண மாலைகளும் குடும்பங்கள் யாவும் ஒன்று கூடி கலகலப்பும், கும்மாளமுமாய் ஊரே அமர்க்களப்பட்டது. இந்த நாட்களில்த் தான் வடதுருவக் கோடியில் இருந்து கலைமான் பூட்டிய சறுக்குவண்டியில் வெண்பனித்தாடியுடன் "சாந்தா கிள்வ்ஸ்" எனப்படும் நத்தார்ப்பாப்பா எங்களுக்கு வேண்டும் பரிசு கொணர்ந்து வீட்டின் புகைபோக்கியினூடாகப் போடுகிற நாள் என்று பேசிக்கொள்வார்கள். ஆனால் இது வரையில் நானோ, ஆடம்பரமான மோல்களில் பிள்ளைகளை மடிமீது இருத்தி போட்டோ எடுத்த பின் அதனை விற்பனை செய்கிற வியாபார நத்தார்ப் பாப்பாக்களைத்தான் கண்டிருக்கின்றேன்.


தொடர்ந்து வாசிக்க...

Wednesday, 23 December 2009

பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......

சீடர்கள் சூழச் சிரித்தபடியே
விருந்து நாயகனின்,
பாதம் கழுவிப் பணிந்து தொழுவதாய்
பாசாங்கு செய்து
விழுந்து கிடக்குமென்
யூதாஸ் கரியோத்து...

எழுந்திரு !!!



தொடர்ந்து வாசிக்க...

Friday, 18 December 2009

ஈழகாவியம் - 13


நாடு கடந்த தமிழீழ அரசு
(ஆசிரியத்தாழிசை)

நாடு கடந்த தமிழார் அரசென்று
ஏடு உடைத்து எழுமாகில் வெள்ளைமண்
ஊடாய் நிமிருமே  எங்கள் தமிழீழம்!

வேளை இதனுள் விழுந்த தமிழ்மண்ணை
மாளாது வைக்க மதியுரைத்துச் செந்தமிழர்
கோளாகக் கொற்றம் குறித்தார் உலகெலாம்!
தொடர்ந்து வாசிக்க...

Friday, 11 December 2009

பேரருள்


காணிக்கை என்பதும் கையூட்டாய்
கடவுள் கூட  அவர் கூட்டாய்
பால்வெண்மையில்  கரையுமோ
சிவப்பு நிறப்பாவங்கள்
கண்கள் மூடிய  அரையிருட்டில்
தள்ளுமுள்ளு இல்லாத