அண்மையில் வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு படமிது. ஆகா ஓகோ என்று பெருவாரியான பாராட்டுக்களையும் புகழாரங்களையும் சூடிக்கொண்ட அதேநேரம் திரைப்படம் சொல்லவரும் கருத்து, அவற்றின் பின்னணி தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனங்களையும் சில தரப்புக்களிலிருந்து பெற்றுக்கொண்ட படம்.
சந்தேகமேயில்லாமல் தமிழ்த் திரையுலகில் இப்படம் ஒரு மைல் கல்லேதான். திரைப்படக் கலை என்றளவில் இது மிக நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்ட ஒரு திரைப்படம். அவ்வகையில் இப்படத்துக்குரிய இடம் முக்கியமானதே. ஆனால் இதன் கருவாக, போதனையாக, அறிவுரையாகச் சொல்லப்படும் விடயம் தமிழ்த் திரையுலகிற்குப் புதியதன்று. ஏற்கனவே விஜயகாந்த், அர்ஜுன் போன்றவர்களின் படங்களிற் சொல்லப்பட்டவைதாம்.
பெரும்பாலும் குறுந்தூரத்திற்கு ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், திண்ம எரிபொருள் உந்துகணைகளையே பயன்படுத்துகின்றன. நெடுந்தூர ஏவுகணைகள் மற்றும் விண்வெளிப் பயண ஊர்திகள் போன்றவற்றிற் பயன்படுத்தப்படும் உந்துகணைகள் திரவ எரிபொருள் உந்துகணைகளைப் பயன்படுத்துகின்றன.
விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக சாத்தியகூற்று ஆய்வினை மேற்கொள்ளும் விவசாய விஞ்ஞானிகளின் குழு கடந்தவாரம் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. ஒரு துறைசார் திட்டமிடலுக்கான இக்குழு, நாட்டின் அரசியல் மற்றும் அதிகார உயர்மட்டங்களுடனான சந்திப்பினை மட்டுமே முக்கியத்துவப்படுத்தியிருக்கின்றது. இச்செயற்பாடு, விவசாய மேம்பாட்டுதிட்டத்தில் அரசாங்கத்தின் அபிலாஷைகளே பிரதானமாக்கப்பட்டிருக்கின்றது என்ற முடிவினையே தருவதாக அமைந்தள்ளது. ஏனெனில்; ஏற்கனவே மகாவலித்திட்டத்தினூடாக வன்னியில் பாரிய சிங்களக்குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற இலங்கை அரசின் நீண்டநாள் கனவுக்கோவை மீளத் தூசுதட்டப்பட்டு, சர்வதேச உதவியுடன் புத்துயிர் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் மேலோங்கியிருப்பதே இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.