வன்னிப் பெருநிலப்பரப்பில் 600 கோடி ரூபா முதலீட்டில் பாரிய விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான திட்டமிடல் செயற்பாடுகள் மிகத்துரிதமாக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வரவேற்றக்கப்படவேண்டிய இத்திட்டம் அரசியல்வாதியான பசில் ராஐபக்ச தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.
அதேவேளை அரசியல் பலவீனத் தள நிலையிலிருக்கும் தமிழ்மக்கள் இதை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றார்கள்; என்ற கேள்வியை சிந்திக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். ஏதோ ஒருவகையில் நிறைவேறப்போகின்ற திட்டத்தை எவ்வாறு எம்மக்களுக்குச் சாதகமாக மாற்றுவது, அரசியல் ரீதியாக வரக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பிரதான விடயங்களில் உள்ளுர், புலம்பெயர் முதலீட்டார்களும் புலமைசார்வல்லுனர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டிய தார்மீக பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பது வன்னி விவசாய பெருமக்களின் எதிர்பார்ப்பு.

1 comment:
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...3
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!
Post a Comment