இனிய இல்லறத்திற்கு
வாழ்க்கையின் வெற்றி இனிய, நிம்மதியான வாழ்வைப் பொறுத்தது. அந்த நிம்மதியைக் கொடுப்பதோ, கெடுப்பதோ நமது இல்லறம்தான். வெளியில் தமது நல்ல குணங்களுக்காகவும், பழகும் விதத்திற்காகவும் பாராட்டப்படுபவர்கள் கூட, தமது வீட்டில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியிடம் அல்லது கணவரிடம் பழகும்பொழுது உரிமையின் காரணமாக, பல சமயங்களில் அறிந்தோ அறியாமலோ காயப்படுத்திவிடுகின்றனர். இதனால் வாழ்க்கை பல நேரங்களில் கசந்துகூட விடுகிறது. எப்பொழுதும் வாழ்வு இனிமையாகவே இருக்கவேண்டுமானால் கீழ்க்கண்ட யோசனைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த யோசனைகள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் எளிமையானவை; கடைப்பிடிக்கக் கடினமானவை. ஆனால், இருவரில் ஒருவர் கடைப்பிடித்தால் கூட இல்லறம் நல்லறமாவதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை: எப்பொழுதும் பிறரிடம் உள்ள நல்ல குணத்தை மட்டுமே பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். இது எல்லோருக்குமே பொருந்தும் என்றாலும், முக்கியமாக வாழ்க்கைத் துணையிடம் பின்பற்றவேண்டியது இது. 'Nobody is Perfect' என்பது ஞாபகம் இருக்கட்டும். எந்தச் செயலையும் வாய்விட்டு, மனம் விட்டுப் பாராட்டுங்கள். அது முடியவில்லையா? குறைந்த பட்சம் எதற்கெடுத்தாலும் குறை சொல்வதை நிறுத்துங்கள். நிஜமாகவே பெரிய தப்பாக இருந்தாலும், கத்திக் கூச்சல் போட்டு திட்டி..
தொடர்ந்து வாசிக்க...
-பாலகார்த்திகா
1 comment:
தூள் வாத்தியாரே தூள்
Post a Comment