Thursday, 12 November 2009

அடிப்பது போல் அடித்த அமெரிக்காவும் அழுவது போல் அழுத பொன்சேகாவும்


"சிறிலங்காவின் தலைநகரம் என்ன?" - என்று கேட்டால் கூட "சரத் பொன்சேகா" என்று கூறுமளவுக்கு எல்லாமே மறந்துபோய் பொன்சேகா காய்ச்சல் பிடித்த அரசியல் நோயாளிகளாக பிதற்றும் நிலைக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய கொழும்பு நிலைவரம் இதுதான். போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுகூட அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இவ்வளவு அடிப்பட்டதில்லை.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் முடிவை - தாம் செய்த உதவிகளின் அடிப்படையில் - முன்னமே ஊகித்துக்கொண்ட சர்வதேச சமூகத்தினால், தற்போது கொழும்பில் வீசும் அரசியல் சுனாமியை சில மாதங்களுக்கு முன்னர்வரை ஊகித்திருக்கமுடியாது. அவ்வளவுக்கு கொழும்பு அரசியல் மாற்றங்கள் சடுதியாக மாற்றம் கொண்டது மட்டுமல்லாமல் அதில் சர்வதேச சமூகத்தையும் வலுக்கட்டாயமாக உள்ளே பிடித்து இழுத்திருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க...


-பொற்கோ

Tuesday, 10 November 2009

ஒளிரும் விளக்குகள், தொலையும் விண்மீன்கள்

இரவு, வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டுக்கொண்டு படுத்திருக்கும் தாத்தா அல்லது அப்பாவின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு, மினுமினுக்கும் நட்சத்திரங்களையும், நிலாவையும் பார்த்தவாறு கதை கேட்ட அனுபவம் உண்டா? நட்சத்திரம் ஏன் மின்னுகிறது, நிலா ஏன் தேய்கிறது, நிலாவுக்குள் எப்படிப் போய் ஒரு பாட்டி வடை சுடுகிறாள் அல்லது முயல் எப்படி அவ்வளவு தூரம் போயிற்று என்ற ஏராளமான கேள்விகளுக்கு விதம் விதமாய் சுவையான பதில்களும் கதைகளும் பதிலாகக் கிடைத்த இளம்வயது நினைவுகள் இன்னும் இனிக்கின்றன நமக்கு.

galaxyஆனால், நம் இன்றைய சந்ததியினருக்கு அந்தப் பரிசை நாம் வழங்கவில்லை என்பது வருத்தமான உண்மை. நம் தலைமுறை, பேராசையுடன் இயற்கையை முரட்டுத்தனமாகக் கசக்கிப் பிழிகிறது.











தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

இரண்டு துருவங்களான தமிழ் சிங்கள சமூகங்கள்


(இத்தொடரின் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது பகுதிகள் ) 1920 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களவர் – தமிழர் அரசியலில் இரு துருவங்களாகப் பிரிந்து சண்டை பிடிக்கத் தொடங்கினர். சிங்களவரை இலங்கை தேசிய காங்கிரஸ் சார்ப்பு படுத்தியது. தமிழர் சார்பாக சேர்.பொன். இராமநாதன் இருந்தார்.
இலங்கைக்கு என்றோ ஒரு நாள் தன்னாட்சி (self-rule) அல்லது சுதந்திரம் கிடைக்கும் என சிங்களத் தலைவர்கள் நினைக்கவில்லை. தன்னாட்சி பற்றியோ சுதந்திரத்தைப் பற்றியோ அவர்கள் சிந்திக்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் இலங்கைக்கு ஒரு நாள் தன்னாட்சி அல்லது சுதந்திரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன் உடன்பிறப்புக்களே முதலில் உண்டாக்கினார்கள்.
sir-pon-ramanathan


















ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 05

நல்லமனம் கொண்டோரை நாடு போற்றும்!
   நல்லாட்சி செய்வோரை மறைகள் போற்றும்!
கொல்பவர்க்கு வாள்கொடுத்தாற் கொடுமை ஆகும்!
   கூற்றுவனைப் பின்தொடர்ந்தால் மனிதம் சாகும்!
சொல்லுண்மை சரிபார்த்துத் தொடுதல் வேண்டும்!
   சுதந்திரத்தை எல்லோர்க்கும் பகிர்தல் வேண்டும்!
வல்லோர்க்கும் தீமையிலா திருக்க வேண்டும்!
   வளர்நாடு தர்மத்தை வணங்க வேண்டும்!

eelakaaviyam-05


-புதிய பாரதி

Monday, 9 November 2009

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள் – பல கேள்விகள், சில விளக்கங்கள்


"மாங்காய்க்குப் புளிப்பே இல்லை, கீரையில் மண் வாடை வருகிறது, மாம்பழத்தில் மருந்தின் சுவை உள்ளது" என்றெல்லாம் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவற்றில் சிலதை நாமும் அனுபவித்திருக்கிறோம். கடைக்காரரிடம் காரணம் கேட்டால், "விவசாயம் செய்பவர்கள் கண்ட கண்ட மருந்தைத் தெளிக்கிறார்கள், இயற்கை உரம் பயன்படுத்துவதில்லை, அதனால் தான் பழைய சுவை ஏதும் காய் மற்றும் பழங்களுக்கு இருப்பதில்லை" என்று சொல்வார்கள்.
geneticengineering



-தீபா கோவிந்த்

விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி (Aircraft flight control system)


250px-Fly_by_wire_A321_cockpitபல்லாயிரம் மெற்றிக்தொன் நிறையுடைய விமானம் ஒன்றின் பறப்பு அதன் இறக்கை, உடற்பகுதி போன்றவற்றின் வடிவமைப்பினாலும் வேகத்தாலுமே சாத்தியமாகின்றது. இவ்விரண்டும் சரியாக அமையாதபட்சத்தில் விமானம் ஒன்றின் பறப்பு சாத்தியமற்றதே. இவற்றின் வடிவமைப்பில் சாத்தியமான சில மாற்றங்களை பறப்பின்போது உருவாக்குவதன் மூலமே விமானத்தினை விமானியொருவர் தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். விமானியறையிலுள்ள (Cockpit) கட்டுப்பாட்டுக் கருவிகளின் உதவியுடன் விமானியால் விமானம் ஒன்றைக் கட்டுப்படுத்த முடியும்.
விமானம் ஒன்றின் கட்டுப்பாட்டுத் தொகுதியானது பிரதானமாகப் பின்வரும் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும்.
  1. பறப்புக் கட்டுப்பாட்டு மேற்பரப்பு
  2. விமானியறைக் கட்டுப்பாட்டுக் கருவித்தொகுதி
  3. அவசியமான பொறியமைப்புக்கள்


-ஜெயசீலன்

Friday, 6 November 2009

சுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்

ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு - வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது சண்டைகள் மூண்டு தணிந்து கொண்டிருந்தன.
Ratha_M


தொடர்ந்து வாசிக்க...


-அன்பரசன்

தாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை


இன்று தாயகத்தில் செய்யப்படவேண்டிய மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முழுமையான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டிய அவசியம் பற்றியும் அதனைச் செய்விக்கக்கூடிய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது அத்தகைய நிறுவனங்களோ இருக்கின்றதா என்பது பற்றியும் இப்பத்தி ஆராய்கிறது.
தாயகத்தில் நடைபெற்றுவந்த ஆயுத வழியிலான விடுதலைப்போராட்டம் முடக்கப்பட்ட நிலையில் தற்போது சிறிலங்கா அரசின் தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் செயற்படுத்தப்படும் எந்த அபிவிருத்தித் திட்டங்களும் அரச ஆதரவுள்ள கட்சிகளின் ஊடாக அல்லது அதன் மேற்பார்வையில்தான் நடாத்தப்பட்டு வருகின்றன.
displaced-class










ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 04


மானுட சாசனம் வைத்திருக் கும்நல்ல                           
  மாக்கன டாவினைப் பாடுமம் மா!                               
வானிடும் குண்டில் மக்களெ ரிகையில்                            
  வாழக்க ரம்தந்த நாடுஅம் மா!
 
ஈனத்த ரானஇ லங்கரின் ஆட்சியில்
  என்றும ழிந்ததும் எம்மின மே!
கூனக்கி ழத்தின ரானமோ டர்களால்
  கொஞ்சுநி லம்எரிந் தாச்சுதம் மே!
eelakaaviyam-04
தொடர்ந்து வாசிக்க...

Thursday, 5 November 2009

மதுவின் பிடியில்!!!


ஒழுக்கமும் வீரமும் நிறைந்த இளைஞன் ஒருவன் முக்கிய வேலையாகக் காட்டினூடே சென்றுகொண்டிருந்தான். அவனைப் பாதை மாற வைக்கவேண்டும், தவறு செய்யத் தூண்டவேண்டும் என்று விரும்பிய சாத்தான் காட்டில் அழகிய இளம்பெண் ஒருத்தி, ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு புட்டி மதுவுடன் வழியில் காத்துக்கொண்டிருந்தது. அவனை வழிமறித்து, "நீ மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டுமானால், இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யவேண்டும், அல்லது இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும். இந்த இரண்டும் செய்ய விரும்பவில்லை என்றால் குறைந்த பட்சம் இந்த மதுவையாவது அருந்த வேண்டும். இல்லையெனில், நான் உன்னை விடமாட்டேன்." என்று சொன்னது.



beer_invitation



























தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

Wednesday, 4 November 2009

தோல்வியைத் தவிர்க்க....

ஒருவரின் வெற்றிக்குத் தேவையான குணங்கள் என சிலவற்றைக் குறிப்பிடுகிறோம். அதே போல் ஒருவர் தோல்வியடைவதற்கும் அவருடைய சில குணங்களே காரணமாகின்றன. ஒருவருடைய அறிவுக்கூர்மையும், கடின உழைப்பும் மட்டும் அவரது வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை. அவருடைய மற்ற குணநலன்களே பெரும்பாலும் வெற்றிக்கோ தோல்விக்கோ வித்திடுகின்றன. எப்படி வெற்றிக்கான குணங்களை வளர்த்துக்
கொள்வது முக்கியமோ, அதே போல் தோல்விக்கான குணங்களைக் கிள்ளியெறிவதும் முக்கியம். என்னென்ன குணங்கள் ஒருவருடைய தோல்விக்கு வித்திடுகின்றன என்று தெரிந்துகொள்வோமா? 



தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

Tuesday, 3 November 2009

தமிழா ஒன்றாக வா அதுவும் இன்றாக வா

எத்தனை கொடுமை ஆட்சி
எழியரின் கொடுமை சிங்க
யுத்தரின் கொடுமை இந்த
யுகத்தொடும் கொடுமை எங்கள்
பத்தரை மாற்றுப் பெண்கள்
பகையிலே மாய்ந்த பின்னும்
நித்திரை கொள்ள வோடா
நிமிர்ந்துநீ எழுந்து வாடா!

Ondrai_vaa_Thamila
தொடர்ந்து வாசிக்க...



Monday, 2 November 2009

அனைத்துலக அரசியலின் ஆடுகளமாகியுள்ள சிறிலங்காவில் பகடைக்காயாகியுள்ள தமிழீழம்

வடக்கு நோக்கி துரிதமாக நடைபெறும் “வடக்கின் வசந்தம்” என்று அழைக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தை 180 நாட்களுக்குள் விரைவுபடுத்தும் நோக்குடன், சீன அரசாங்கத்திடமிருந்து பெருமளவிலான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. 2049 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த உபகரணங்களை  இலங்கைக்கான சீனத்தூதுவர் கடந்த 28 ம் திகதி இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.

மேற்கு நாடுகளின் அழுத்தம், பிராந்திய வல்லரசுகளின் போட்டியாதரவு போன்ற சாதக, பாதக அரசியல் சூழல் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இக்காரணிகள் மும்முனை அதிகாரவலுப்பிரயோக அரசியற்களமாக இலங்கைத்தீவை மாற்றியுள்ளது.

Mahinda_Rajapakse_with_Dr._Manmohan_Singh




தொடர்ந்து வாசிக்க...


-அபிஷேகா

Sunday, 1 November 2009

ஈழகாவியம் இலக்கியதொடர் - 03


முள்ளிவாய்க்கால் நந்திகட லோரப் போரில்
    விசக்குண்டு வீசுங்கால் மக்கள் செத்துக்
கொள்ளியிடக் கூடாமல் குருமான் குஞ்சும்
    குருதியொடும் நிலங்களிலே சிதறிப் போக
அள்ளுகொள்ளை யாய்நெரிந்து இராணு வப்பேய்
    அடிமைகளாய்ப் போனதினால் இலட்சம் மூன்று
தெள்ளுதமிழ் மக்களுமாய்த் தீயில் வெந்த
    தினம்கண்டே அமெரிக்கம் தெளியக் கண்டார்!
eelakaaviyam
தொடர்ந்து வாசிக்க...

சிங்கள அரசியல்வாதிகளை நம்பிய பொன். அருணாசலம்


(இத்தொடரின் முதலாவது இரண்டாவது மூன்றாவது பகுதிகள் ) 1919 ஆம் ஆண்டு இலங்கையருக்குக்  கூடிய தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டதைப் பார்த்தோம். அதன்   தலைவராக  பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன, மொழி, மத வேறுபாடின்றி எல்லோரும் இலங்கையர்  என்ற அடிப்படையில் தன்னாட்சி என்ற இலக்கை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே பொன். அருணாசலம் அவரது அரசியல்  வேட்கையாக இருந்தது.
இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பது தொடர்பாக சேர். பொன். அருணாசலம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி சி.ஈ.கொறயா பின்வருமாறு குறிப்பிட்டார்.

Ponnambalam_arunachalam