Thursday, 12 November 2009

அடிப்பது போல் அடித்த அமெரிக்காவும் அழுவது போல் அழுத பொன்சேகாவும்


"சிறிலங்காவின் தலைநகரம் என்ன?" - என்று கேட்டால் கூட "சரத் பொன்சேகா" என்று கூறுமளவுக்கு எல்லாமே மறந்துபோய் பொன்சேகா காய்ச்சல் பிடித்த அரசியல் நோயாளிகளாக பிதற்றும் நிலைக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய கொழும்பு நிலைவரம் இதுதான். போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுகூட அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இவ்வளவு அடிப்பட்டதில்லை.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் முடிவை - தாம் செய்த உதவிகளின் அடிப்படையில் - முன்னமே ஊகித்துக்கொண்ட சர்வதேச சமூகத்தினால், தற்போது கொழும்பில் வீசும் அரசியல் சுனாமியை சில மாதங்களுக்கு முன்னர்வரை ஊகித்திருக்கமுடியாது. அவ்வளவுக்கு கொழும்பு அரசியல் மாற்றங்கள் சடுதியாக மாற்றம் கொண்டது மட்டுமல்லாமல் அதில் சர்வதேச சமூகத்தையும் வலுக்கட்டாயமாக உள்ளே பிடித்து இழுத்திருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க...


-பொற்கோ

No comments:

Post a Comment