
பல்லாயிரம் மெற்றிக்தொன் நிறையுடைய விமானம் ஒன்றின் பறப்பு அதன் இறக்கை, உடற்பகுதி போன்றவற்றின் வடிவமைப்பினாலும் வேகத்தாலுமே சாத்தியமாகின்றது. இவ்விரண்டும் சரியாக அமையாதபட்சத்தில் விமானம் ஒன்றின் பறப்பு சாத்தியமற்றதே. இவற்றின் வடிவமைப்பில் சாத்தியமான சில மாற்றங்களை பறப்பின்போது உருவாக்குவதன் மூலமே விமானத்தினை விமானியொருவர் தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். விமானியறையிலுள்ள (Cockpit) கட்டுப்பாட்டுக் கருவிகளின் உதவியுடன் விமானியால் விமானம் ஒன்றைக் கட்டுப்படுத்த முடியும்.
விமானம் ஒன்றின் கட்டுப்பாட்டுத் தொகுதியானது பிரதானமாகப் பின்வரும் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும்.
- பறப்புக் கட்டுப்பாட்டு மேற்பரப்பு
- விமானியறைக் கட்டுப்பாட்டுக் கருவித்தொகுதி
- அவசியமான பொறியமைப்புக்கள்
-ஜெயசீலன்
No comments:
Post a Comment