1832 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்த அதிகாரிகளது ஆட்சிமுறை 1921 இல் பிரதிநித்துவ அரசாக மாறியது. 1924 இல் அரசியல் யாப்பில் மேலும் சீர் திருத்தம் செய்யப்பட்டது. முதலில் வகுப்புவாரி அடிப்படையில் (Communal Representation) நடைபெற்று வந்த நியமனங்கள் 20 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இருந்து ஆட்புல அடிப்படைக்கு (Territorial Representation) மாறியது. அதாவது இலங்கையின் நிலப்பரப்பு பிரிக்கப்பட்டு தொகுதிவாரியாக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கோல்புறூக் இலங்கைக்கு வந்த காலத்தில் (1832) 9 அதிகாரிகளையும் 6 உத்தியோகப்பற்றற்றவளையும் கொண்டிருந்த சட்டவாக்க அவை ஆளுநர் மக்கெல்லம் (McCallum -1912) காலத்தில் 11 அதிகாரிகள் 10 அதிகாரிகள் அல்லாதோர் என்றாகி, ஆளுநர் மன்னிங் (Manning -1921) காலத்தில் அதிகாரிகள் 14, மற்றையோர் 23 என விரிவு அடைந்தது.
தொடர்ந்து வாசிக்க...
-நக்கீரன்
Tuesday, 24 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment