'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர் தமது திருமந்திரத்தில். 'சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும்' என்றும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றும் சொல்கிறது நம் பழமொழி. நமது உடலை நாம் பாதுகாக்காமல் அடுத்தவரா பாதுகாக்க முடியும்? உடலைப் பேணிப்பாதுகாப்பது என்றால் என்ன? நன்கு மூக்குப் பிடிக்க விதவிதமாகச் சாப்பிட்டுவிட்டு, நாற்காலியில் அமர்ந்துகொண்டு துரும்பைக்கூட அசைக்காமல், நான் என் உடம்பை நன்கு பத்திரமாகக் கவனித்துக்கொள்கிறேன் என்றா சொல்லவேண்டும்? இல்லை.
-பாலகார்த்திகா
No comments:
Post a Comment