Sunday, 22 November 2009

கண்டேன் காதலை - ஒரு பார்வை

எதிர்பாராமல் சந்திக்கின்ற வித்தியாசமான மனிதர்களும் எதிர்பாராத சூழ்நிலைகளும் வாழ்வின் பாதையை மாற்றக்கூடியவையே. காதல், வாழ்வை மாற்றலாம். வாழ்வை மாற்றியவர்களை காதலிக்கவும் நேரலாம். திரைப்படங்களில் தொடக்கத்தில் காதல் தோன்றி முடிவில் வெற்றி பெறுவதும் சுபம் போடுவதும் வழக்கமான ஃபார்முலா . கதைகளின் முடிவில் தான் தங்கள் காதலை உணர்ந்து கொள்வதாக வருகிற கதைகளும் கண்டிருப்பீர்கள். காதல் கணக்கை பல நிகழ்தகவுகளில் மாற்றி மாற்றி எடுப்பதும் சுவாரசியங்களை இணைப்பதுமான திரைக்கதை வகையில் கண்டேன் காதலை ஒரு துறுதுறு பெண்ணின் பேச்சில் நகரும் விறுவிறுப்பான கதை.


தொடர்ந்து வாசிக்க...

Friday, 20 November 2009

"இனக்கொலை" நாயகர்களின் இழுபறிப் போர்!


இருபதாம் நூற்றாண்டின் ‘யூதஇன’ப் படுகொலைகளுக்குப் பின், இந்நூற்றாண்டு மறக்கவோ மன்னிக்கவோ இயலாத ‘சிறுபான்மை இன அழிப்பு’ இவ்வருட(2009) முற்பாதியில் அரங்கேறியிருக்கிறது.
அதனை ‘வெற்றி’கரமாக நடாத்தி முடித்தவர்கள் இலங்கையின் அதிபர் ராஜபக்‌ஷேயும், முப்படைத்தளபதியாக அதிபரின் கட்டளையை ஏற்றுச் செயற்பட்ட சரத் பொன்சேகாவும் !
‘ஈழம்’ என்னும் ஓர் தனித்தமிழ் நாடு உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றிய ஓர் அண்டை நாடும் இந்த ‘வெற்றி’யில் கணிசமான பங்கினை வகித்திருந்தது.

sarath_mahinda


-சர்வசித்தன்

Thursday, 19 November 2009

சுதந்திரக்கட்சியின் கூட்டத்துக்கு முன் சிறிலங்கா சென்ற பிரணாப் முகர்ஜியின் விஜயத்தின் பின்னணியில்....!!

இலங்கைக்கான விஐயத்தை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகையின் பின்னணியில் இலங்கையின் அரசியல் தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் உள்ளடங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, முன்னாள் இராணுவத் தளபதியின் பதவி விலகல் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரான அரசியல் நிலமை தொடர்பாக கடும் கரிசனை கொண்டுள்ள இந்தியா - பிரணாப் முகர்ஜியின் விஐயத்தின் பின்னணி தொடர்பாக என்னதான் காரணங்களைக் கூறினாலும் - அடிப்படையில்  எப்படியாவது தனக்கு சார்பான ராஐபக்சவின் அரசை மீளக்கொண்டுவருவதில் மேற்கொள்ளும் பகீரதப்பிரயத்தனத்தின் ஒரு அங்கமாகவே முகர்ஜியின் வருகை நோக்கப்படுகின்றது.


Mahinda_-_pranab1


தொடர்ந்து வாசிக்க...


-அபிஷேகா

Windows Security – நேரமிருந்தால் பாதுகாப்பு நிச்சயம்.


தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கு மட்டுமே "அத்தியாவசியம்" என்றிருந்த கணனி, இன்று, எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. அலுவலகங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், கல்விமையங்களிலும் கணனியின் பங்கை (கற்றுக்கொள்ள மட்டும் அல்ல, பிரயோகிப்பதிலும் கூட) அலட்சியப்படுத்த முடியாது. செலவு செய்து பொருட்களை வாங்கிக்குவித்தால் மட்டும் போதுமா, அவைகளை முறையே பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை உணர வேண்டும். இது சாதாரண மேசை – நாற்காலியானாலும் சரி, கணனி போன்ற உயர்தர பொருட்களானாலும் சரி.

Microsoft Security Essentials


windows7




-தீபா கோவிந்த்

ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...



தொடர்ந்து வாசிக்க...


-என்.கணேசன்

Wednesday, 18 November 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 08


முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழ
சுள்ளிகளும் தீப்பற்றிச் சுடுகாடாய் மாறியதே!
ஒன்றாயும் பத்துமென உயிர்கருகிப் போகையிலும்
சென்றுசிங்க ளத்திற்குச் சேதிசொல்லி வந்துவிட்டு
இந்தியமும் மூக்காவும் இருந்தரைந்த நாடகத்தில்
சந்துகளும் எரிந்துவிழச் சாக்காடாய் மாறியதே!
தொடர்ந்து வாசிக்க...
-புதிய பாரதி

இந்தியாவின் இலங்கைக்கு பொன்சேகா பொருத்தமானவரா?

சிறிலங்காவில் சரத் பொன்சேகா விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ள பெரும் விடயமாக இருந்துவருகின்றவேளையில் சிறிலங்காவை விட இந்தியாதான் இது விடயத்தில் பெரும் பீதிக்கு உள்ளாகி தலையிலடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சரத் பொன்சேகா விவகாரம் என்பது எதிர்பாராமல் இடம்பெற்ற பெரும் விபத்தாகும்.

சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இன்றையநிலையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதநிலை. ஆனால், அறவே பிடிக்காத அந்த இராணுவ அதிகாரியை தமக்கு பிடிக்காது என்று கூறப்போய் அதுவே தமக்கு எதிராக வீம்பு அளந்துகொண்டிருக்கும் மகிந்தவுக்கு ஆதரவாக அமைந்துவிடுமோ என்ற சிக்கலில் இந்தியத்தரப்பு புழுங்கிக்கொண்டிருக்கிறது.



fonseka_kelaniya


தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 17 November 2009

ஏன் செய்ய வேண்டும் உடற்பயிற்சி?


'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர் தமது திருமந்திரத்தில். 'சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும்' என்றும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றும் சொல்கிறது நம் பழமொழி. நமது உடலை நாம் பாதுகாக்காமல் அடுத்தவரா பாதுகாக்க முடியும்? உடலைப் பேணிப்பாதுகாப்பது என்றால் என்ன? நன்கு மூக்குப் பிடிக்க விதவிதமாகச் சாப்பிட்டுவிட்டு, நாற்காலியில் அமர்ந்துகொண்டு துரும்பைக்கூட அசைக்காமல், நான் என் உடம்பை நன்கு பத்திரமாகக் கவனித்துக்கொள்கிறேன் என்றா சொல்லவேண்டும்? இல்லை.
gym2பயன்படுத்தாத இயந்திரமே துருப்பிடித்து வீணாகிவிடுகையில் மனித உடம்பு உழைப்பு இல்லை என்றால் என்ன ஆகும்? உடம்பு நன்றாக இருக்கவேண்டும், நோய்நொடியின்றி வாழவேண்டுமென்றால் நாம் உடலுக்கு சரியான சத்தான உணவும் கொடுக்கவேண்டும், சரியாக உடற்பயிற்சியும் செய்யவேண்டும்.


-பாலகார்த்திகா

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 07


அத்தியாயம்:09 நிகழ்காலம்.
நோர்டிக் நாடுகளும் ஐரோப்பியமும்!
(அகவல்)

கடலும் வானும் கரையும் நிலமும்
உடலை வருத்தி உள்ளமும் நொந்தும்
ஆயிர மாயிரம் இனச்சிற கிழந்தபின்
சேயொடும் தந்தையும் சேர்ந்த அன்னையும்
இருபது நாடுகள் ஏறி இறங்கி
வருவதை ஏற்று வந்து குவிந்தோம்!





-புதிய பாரதி

Monday, 16 November 2009

ஆட்புல சார்புத்துவம் என்ற கோட்பாடு தமிழர்களை தேசிய சிறுபான்மை ஆக்கியது

தமிழீழ தாயக விடுதலையை முன் நகர்த்தும் பெருமுயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அய்ந்தாவது விளக்கம் - கருத்துப் பகிர்வு – கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (நொவெம்பர் 07) மாலை மொன்றியல் முருகன் கோயில் அரங்கில் நடைபெற்றது. அரங்கு நிறைந்த உறவுகள் கூடியிருந்தனர். அது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. வீழ்ந்தாலும் மீண்டும் எழுச்சியோடு எழுவோம் என்பதற்கு அந்த உறவுகள் சான்று பகர்ந்தார்கள்.

தொடர்ந்து வாசிக்க...

-நக்கீரன்

கொன்கோட் (Concorde)

கொன்கோட் வகை மிகையொலித்தாரை போக்குவரத்து விமானங்கள் வான்வழிப் போக்குவரத்து வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுக்கொண்டபோதிலும் அவற்றின் பயன்பாடு குறுகிய காலத்திலேயே முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. 1969 இல் முதலாவது பறப்பை மேற்கொண்டு 1976 இல் பொதுப்பாயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கொன்கோட் விமானங்கள் 27 வருடங்களில் குறுகிய ஆயுளுடன் தமது சேவையை நிறுத்திக்கொண்டன.



தொடர்ந்து வாசிக்க...

-ஜெயசீலன்

நேர்முகத்தேர்வில் வெற்றி பெற...

நாம் வாழ்வில் எத்தனை எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றில் வெற்றி பெறும்பொழுதுதான் நாம் முன்னேற்றமடையவும் முடிகிறது. அத்தகைய சவால்களில் ஒன்றுதான் நேர்முகத்தேர்வு(Interview). நேர்முகத்தேர்வுகளில் பல வகை இருப்பினும், நாம் இங்கு பணிக்கான நேர்முகத்தேர்வுகள் குறித்தும், அதில் வெற்றி பெறுவதற்கான சில ஆலோசனைகளையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து வாசிக்க...

-பாலகார்த்திகா

Sunday, 15 November 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 06

பிரித்தா னியர்கள் பிறழ்ந்த போதே
நரிச்சிங் களத்தை நம்தமிழ் கண்டது!
சுதந்திர நாடாய்ச் செப்பிய இலங்கை
மதத்த நாடாய் மறுகணம் வந்தது!
பரத்தையர் கொடுத்துப் படுக்க வைத்துக்
கரத்தைக் கட்டிலில் கைப்பிடித் ததனால்
ஆளுனர் சோல்பரி அசிங்கர் கையில்
வாளைக் கொடுத்து வரலா றழித்தார்!
சோல்பரிக் குழுவில் செப்பிய பொன்னரின்
சால்புநீ தியையும் சரித்திடக் கெடுத்தார்!
பின்னர் ஒருமுறை பித்தர் சோல்பரி
மன்னன் சங்கிலி வாழ்ந்த பூமியாம்


 

தொடர்ந்து வாசிக்க...

-புதிய பாரதி

Friday, 13 November 2009

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல

பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.


karuthu













தொடர்ந்து வாசிக்க...

-என். கணேசன்

சாகாது உணர்வின் தமிழ் மூச்சு

வட கிழக்கும், மலை நாடும் தமிழர் பூமி

   மறுபவரை மறுத்திடடா தமிழா நீயும்

அட அந்தச் "சிங்க"த்தின் வழிவந்தோரால்

   அனுபவித்த துயரங்கள் போதும் போதும்!

இடங்கண்டால் சிறு நரியும் சிறுத்தை முன்னால்

   இயலுமட்டும் "தன் வீரம்" காட்டித் துள்ளும்
 


 
read more...