Wednesday, 26 August 2009

13 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம் சொல்வது என்ன?

சர்வதேசத்திடமிருந்து நிதியைப் பெற்று சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வெளிவிளம்பரமாக - காலா காலமாக - சிங்கள அரசுகளால் முன்வைக்கப்படுகின்ற 'இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறோம்' என்ற போலி உறுதிமொழியின் இன்னொரு வடிவத்தைத் தற்போது மகிந்த அரசும் தன் பங்குக்கு உருட்டிவிளையாடத் தொடங்கியுள்ளது.

தமிழ்மக்களுக்கு என்ன தீர்வு கொடுக்கலாம் என்பதை அரசியல் கட்சிகளை அழைத்துப் பேசுவதற்கு அமைக்கப்பட்ட 'அனைத்துக்கட்சி ஆலோசனை சபை' என்ற அமைப்பின் ஊடாக தீர்வு ஆராய்ச்சி நடைபெற்று முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 123 அமர்வுகளின் பின்னர் தற்போது தீர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அனைத்துக்கட்சி ஆலோசனைக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில்,தமது தீர்வுத்திட்டம் 13 ஆவது அரசமைப்பு சட்ட சீர்திருத்தத்தின் சாராம்சத்தை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொடர்ந்து வாசிக்க...


-பொற்கோ

No comments:

Post a Comment