Friday 2 April 2010

தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கும் தமிழர் கட்சிகளின் நிலைப்பாடுகளும்


mediaதாயகத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய சக்திகள் இருமுனையில் போட்டியிடுகிறார்கள். தமிழ் தேசியத்தின் உறுதியான பற்றுதலில் பயணிக்கவேண்டும் என்ற வகையில் ஒரு தரப்பும் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எமது போராட்டமும் பயணிக்கவேண்டும் என இன்னொரு தரப்புமாக இரண்டு எதிர்நிலைகளில் தமிழ் தேசிய சக்திகள் பயணிக்கின்றன என்பது யாவரும் அறிந்தவிடயம்.
தமிழ் தேசிய சக்திகளின் போக்குகளையும் அதன் நிலைப்பாடுகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சித்து அதன் சரியான நிலைப்பாடுகளை மக்கள் முன்னெடுத்து செல்வதே ஊடகங்களின் நிலைப்பாடாக இருக்கவேண்டும். ஆனால் இன்று சில ஊடகங்கள் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களை மட்டும் முன்வைத்தோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கருத்தை மட்டும் முன்வைத்தோ அரசியல் செய்கின்றனர்.

Friday 5 March 2010

நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்

money_tender_currencyநிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது.

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் ஒவ்வொருவரும், 'நிகர சொத்து மதிப்பு' (NAV) குறித்த தெளிவினைப் பெற்றிருத்தல் அவசியம். ஒரு அறிவுக்கூர்மையுள்ள விவரமறிந்த முதலீட்டாளருக்கு NAV எவ்வளவு பயனளிக்குமோ அதைவிட அதிகமாக அதைப்பற்றி ஏதும் அறியாத முதலீட்டாளருக்கு அது ஊறு செய்யவும் கூடும். 

தொடர்ந்து வாசிக்க...

Thursday 4 March 2010

மௌன அஞ்சலி


Mauna-Anjali


கடல்களைக்கடந்தும்,

தரைகளைக்கடந்தும்,

வான்மீதேறி

மேற்குப்புலத்தில் 
தொடர்ந்து வாசிக்க...

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!


try-is-the-bestமுன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

களங்கள் - 5. ஓயாத அலைகள் மூன்று


29/10/1999 இரவு.
நடந்து முடிந்த ஆட்லறிச் சூட்டுத் திருத்தப் பயிற்சி தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்ட தலைவர், தனது திருப்தியைத் தெரிவித்தார். அதேபோல் தாக்குதலிலும் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இலக்குக்கு ஆகக் கிட்டவாக நிலையெடுக்க வேண்டாமென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். திருத்தங்கள் சொல்லும் ஓ.பி காரர்கள் தமது முகாமுக்குள் நிற்கிறார்கள் என்பதை ஒருகட்டத்தில் உணரும் எதிரி உங்களைத் தேடியழிக்க முனைவான், அதிலிருந்து தப்பும், நழுவும் வழிகளை முற்கூட்டியே ஆயத்தப்படுத்தி வைத்துக்கொண்டுதான் தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  இயன்றவரை மோதலைத் தவிர்க்கச் சொன்னார். இறுதியில், “எதிரியின் ஆட்லறி நிலைகள்தான் இப்போது எமது இலக்கு; ஒவ்வோர் அணிக்கும் தரப்படும் இலக்குகளை எமது ஆட்லறிகளைக் கொண்டு தாக்கியழிக்கும் நடவடிக்கையில் திருத்தங்கள் சொல்பவர்களாக உங்களை அனுப்புகிறேன்” என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் தலைவர்.

Saturday 27 February 2010

நீருந்து விசைப்படகு (WaterJet Boat)

180px-Yamaha_SUVபொதுவாகப் படகுகள் நீரின் அடியில் சுழலும் சுழலிகளின் (propeller) மூலமாகக் கிடைக்கும் உந்துவிசையின் மூலமாகவே உந்திச்செல்லப்படுகின்றன. ஆனால், நீருந்து விசைப்படகு நீர்த்தாரைகளைப் படகின் பின்னோக்கிப் பீய்ச்சியடிப்பதன் மூலம் நீர்ப்பரப்பின் மீது உந்துவிசையை உருவாக்குகின்றது. இதன்காரணமாக, நீருந்து விசைப்படகுகளில் சுழலிகளுக்குப் பதிலாக நீர்த்தாரைகளைப் பீய்ச்சியடிக்கும் இயந்திர அமைப்புக்கள் காணப்படும். ஆரம்பத்தில் வேகமாக ஓடும் மற்றும் ஆழம் குறைந்த நதிகளிற் பயன்படுத்துவதற்காக, நியூசிலாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான சேர் வில்லியம் ஹமில்ற்றன் (Sir William Hamilton) என்பவரால் 1954 ஆம் ஆண்டில் நீருந்து விசைப்படகு வடிவமைக்கப்பட்டது.


தொடர்ந்து வாசிக்க...

Friday 26 February 2010

கூட்டமைப்பைக் குலைத்த சம்பந்தர் மீண்டும் நிமிர்வாரா?


TNA-maveerar-illamநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான தடுமாற்றமான நிலைப்பாடுகளால் அனைத்து தமிழ் மக்களிடத்திலும் ஏமாற்றமான மனநிலை காணப்படுகிறது.
தமிழ் தேசியத்தோடு கூட நின்ற அனைத்து தமிழ்ப்பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி ஒற்றுமையாக இணைந்து செல்லவேண்டிய பொறுப்பிலிருக்கின்ற தமிழர் தரப்பானது ஏன் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியது என்பதுதான் புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கிறது.

Thursday 25 February 2010

சாதனைப்பெண் டேனியலா கார்சியா

wheelchair-disabledஇறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில் இருந்து மீண்டெழுந்தது மட்டுமின்றி, தான் விபத்தில் அடிபட்டதையும் அதிலிருந்து மீண்டதையும் 'மகிழ்ச்சியான கதை' என்று கூறும் ஒரு வித்தியாசமான பெண் டேனியலா கார்சியா. 
தொடர்ந்து வாசிக்க...

தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்


idp-issue2010 நாடாளுமன்றத் தேர்தல் வழமையிலும் பார்க்க இந்த முறை பரபரப்பு மிக்கதாக நோக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் மாறுபட்ட வாதப்பிரதிவாதங்களும், மக்கள் முடிவெடுப்பதில் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல சிங்கள தேசத்திலும் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
முதலில் சிங்களத் தரப்பினரின் தேர்தல் நகர்வுகளை மேலோட்டமாக நோக்குவோம். தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் மகிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனதாக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

Tuesday 23 February 2010

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05


Pirabakaran-Anthathy-Padam-05
சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (41)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.

இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (42)

களங்கள் - 4. ஓயாத அலைகள் மூன்று


அன்று (28/10/99) அதிகாலை மூன்று மணியளவில் கரும்புலிகளின் ஐந்து அணிகள் பயிற்சி நகர்வைத் தொடங்கின. அவர்களுக்கான ஆள்கூறுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இலக்கு நோக்கிய நகர்வை மக்களின் கண்களில் தட்டுப்படாமல் முடிக்க வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
காலை ஆறு மணியளவில் எனக்கொரு பணி தரப்பட்டு குமுழமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கே ராஜு அண்ணையோடு ஈழவனும் இன்னும் சிலரும் வந்துசேர்ந்தார்கள். பின் அங்கிருந்து ஆண்டாங்குளம் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று வாகனங்களை விட்டுவிட்டுக் காட்டுக்குள் இறங்கினோம். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு வெட்டைப் பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். அது வயற்பகுதியோடு சேர்ந்த ஒரு வெட்டை. சற்று இடைவெளிகள் விட்டு ஐந்து நிலையங்கள் எனக்குக் குறித்துத் தரப்பட்டன. 
தொடர்ந்து வாசிக்க...

Friday 19 February 2010

கூட்டமைப்பின் ஆபத்தான பயணம் - வழிமறிக்கப் போவது யார்?

tna-in-turmoilநடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள். 


தொடர்ந்து வாசிக்க...

ஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை!

raminjungleஉலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள்.








தொடர்ந்து வாசிக்க...

Thursday 18 February 2010

தமிழீழத்திற்கான புலத்து தமிழர்களின் ஆணை சாதிக்கப்போவது என்ன?


london-vigilஇன்றுவரை புலத்து தமிழர்கள் வாழ்ந்துவரும் பல்வேறு நாடுகளில் தமிழீழ தனிநாட்டுக்கான மக்களாணையை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு நடத்தப்பட்டுவரும் தேர்தல்களும் அவற்றில் மக்களின் பங்களிப்பும் சர்வதேச அரசுகளினது கவனத்தை கவர்ந்துள்ளதுள்ளதுடன், சிறிலங்கா அரசையும் அச்சுறுத்த தொடங்கியுள்ள வேளையில், இவ்வாறான தேர்தல்களும் அவை சாதிக்கபோவது என்ன? என்ற வினாக்களும் அவசியமற்றவை தான்.
ஆனாலும் இவ்வாறான மக்களாணையை பற்றிய புரிதல் தமிழர்கள் மத்தியில் தெளிவாக கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்பதும் அவ்வாறான மக்களாணை அவசியம் தானா என்பது பற்றிய தெளிதல் ஏற்பட்டுள்ளதா என்பதும் அவசியமானது. இன்னும் பல நாடுகளில் தமிழீழ தனியரசிற்கான மக்களாணைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில முக்கிய விளக்கங்களை தருவது பொருத்தமானது என கருதுகின்றோம்.

இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்


sri-lanka-elections-mahindaஎதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத்தீவிலுள்ள பெரும்பாலும் அனைத்து தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகள் எவற்றுடனும் சேராது தனித்து போட்டியிடவுள்ளதாகவே இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வெளிக்காட்டிய உணர்வின் வெளிப்பாடுகளின் விளைவுகளாகவே தற்போது தமிழ்க்கட்சிகள் எடுக்கின்ற முடிவுகளை நோக்கவேண்டும். அவை தொடர்பான அலசல்களாக விரிகின்றது இக்கட்டுரை.
கடந்த அரச தலைவர் தேர்தலில், கணிசமான மக்கள் தேர்தலில் பங்குபற்றாத நிலை காணப்பட்டாலும், பங்குபற்றிய தமிழ் பேசும் மக்கள், மகிந்தவுக்கு எதிராக வாக்களித்துள்ளமை, சிறிலங்கா அரசியலில் தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடுகளை அசைக்கதொடங்கிவிட்டன.