Sunday 31 January 2010

விலைபோகா இனம் தமிழினம் என்பதை நிரூபித்த அரச தலைவர் தேர்தல்

eelam-smallமீண்டும் தமிழர்தாயக மக்கள் ஒன்றிணைந்ததான தமது கொள்கையை நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஒன்று சேர வெளிப்படுத்தியுள்ளனர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு என்பது தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே வெளியாகியிருக்கின்றது.

சிங்களப் பெரும்பான்மை சக்திகளால் தமிழின அழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்த போது ஒருவர் தீர்மானம் எடுக்க அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றியவர் மற்றவர். இருவரும் எதிர் எதிர் துருவங்களாக நின்று ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் நிலைபாட்டினை எடுத்தது மட்டுமல்லாமல் இருவர் தொடர்பிலான வெளிவராத பல உண்மைகள் வெளிவரத் தொடங்கின. இன்னும் பெருமளவில் வெளிவரும் என்பதனை யாரும் மறைக்க முடியாது.



தொடர்ந்து வாசிக்க...

Friday 29 January 2010

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.

browsing_laptop1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.













தொடர்ந்து வாசிக்க...

தடங்கள் -4. ஓயாத அலைகள் -3. பகுதி -1.




இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.
‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.
‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.

‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.


-இளந்தீரன்

Thursday 28 January 2010

இசையெனும் அமுதம்

music_noteஇசை, மொழி இனம் மதம் கடந்து அனைவரையும் இணைக்கக் கூடியது, அதிலும் குறிப்பாக இந்தியாவில், இந்து மதத்தில் "இசையால் தமிழாய் இருப்பவனே" என்றும், "இசையால் வசமாகா இதயம் எது, ஈசனே இசைவடிவம் எனும்போது" என்றும் இசை இறைவடிவாகவே நோக்கப் படுகிறது. கலைமகள் வீணையிசைப்பதாகவும், நாரதர் கந்தருவர்கள் முதலியவர்கள் இசையில் தேர்ந்தவர்கள் எனவும், கண்ணனின் குழலிசையில் பசுக்களும், பறவைகளும், ஏன்... செடி கொடிகள் கூட மயங்கி நின்றதாகவும் இசை தொடர்பான ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)


காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

வாழ்க்கைப் பாடம்

good-thinkingஅந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.


தொடர்ந்து வாசிக்க...

Wednesday 27 January 2010

சிரித்து வாழவேண்டும்


"வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்கிறது முதுமொழி. "கோமாளி ஒரு தலைவலி மாத்திரைக்கு ஒப்பானவன். ஒரே வித்தியாசம் என்னவெனில் அவன் இருமடங்கு வேகமாகச் செயல்படுவான்" என்கிறார் க்ரூசோ மார்க்ஸ் என்ற அறிஞர். உடல் வலியைக்குறைப்பதிலும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சிரிப்பு அதிகப் பங்கு வகிக்கிறது.
நல்ல நகைச்சுவை சிரிப்பலைகளைப் பரவ விடுகிறது. சிரிப்புகூட ஒரு தொற்றுநோய்தான். ஆரோக்கியமான தொற்று. கொட்டாவி, இருமல், தும்மலை விட வேகமாகப் பரவக்கூடியது சிரிப்பு. ஒருவருடன் சிரித்துப் பேசுகையில் நெருக்கம் அதிகரிக்கிறது. சிரிப்பு ஒரு நல்ல பாலம். அது மனிதர்களை இணைக்கிறது. மனத்தை லேசாக்குகிறது. அது மட்டுமல்ல... அது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை (Immunity) அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் ஆற்றலை மேம்படுத்துகிறது. வலியையும் இறுக்கத்தையும் (Pain and Stress) குறைக்கிறது.

எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?


mahinda-sarathவரும் 26 ஆம் நாள் (26/01/2010) இலங்கையில் இடம்பெற இருக்கும் அதிபருக்கான தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு அமையவும் நடைபெறுமா என்னும் கேள்வி இப்போது எழுந்துள்ளது.
சென்ற 19/01/2010ல் இலங்கையின் தேர்தல் ஆணையாளரான தயானந்த திசாநாயக்கா வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில், எதிர்வரும் ஜனாதிபதிக்கான தேர்தலில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் பெருமளவில் தேர்தல் விதிகளை மீறிச்செயல்படுவதாகவும், இந்நிலையில் தாம் 26ந் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலின்போது, தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணுதல் போன்றவற்றுக்கு மட்டுமே பொறுப்பேற்கவிருப்பதாகவும் ஏனைய தேர்தல் நடைமுறைகளைச் செயல்படுத்த இயலாதிருப்பதாயும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆளில்லா வானூர்தி (Unmanned Aerial Vehicle)

180px-MQ-9_Reaper_in_flight_2007மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.


தொடர்ந்து வாசிக்க...

Tuesday 26 January 2010

புதிய கிளிநொச்சி


kilinochchi-2கிளிநொச்சி மீள்குடியேற்றம் அதன் பின்னான மக்களின் இயல்பு வாழ்வு என்றெல்லாம் பல்வேறு செய்திகள் நாளுக்கு நாள் வெளிவந்தாலும் உண்மையில் கிளிநொச்சியின் நிலைப்பாடு தொடர்பில் வெளி உலகிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கிளிநொச்சி என்றால் அனைவரது கண்முன்னே விரியும் செழுமை நவீனமும் தொன்மையும் கலந்த நகர், கோவில்கள், அழகிய வயல்வெளிகள் அழகான தமிழ்ப்பெயர்கள், என எண்ணற்றவற்றைக் கூறலாம். அத்தகைய கிளிநொச்சியின் தற்போது இருக்கும் நிலைதான்  வேதனைக்குரியது.

அதிஸ்ரக்காரன் (சிறுகதை)


கந்தப்பு மாஸ்ரர், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை சேர்த்தவர். அவர் கற்பித்த பாடசாலையிலே ஓய்வு நிலைபெறும் வரை சேவையாற்றியதோடு பாடசாலை வளர்ச்சியிலும் கல்வி மேம்பாட்டுக்கும் முன் நின்று உழைத்தவர்.
நான்கு பிள்ளைகளையும் பெற்றுக் கொடுத்து விட்டு அவர் மனைவி காமாட்சி கண்ணை மூடிக்கொண்டார்.
நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி படிப்பித்து நிமிர்த்தும் வரையும், படாத பாடு பட்டவர். ஒரு ஆண் பிள்ளையையும் ஒரு பெண் பிள்ளையையும் வைத்தியக் கலாநிதியாகவும் மற்றைய ஆண் பிள்ளையையும் பெண்பிள்ளையையும் பொறியலாளர்களாகவும் இந்த உலகுக்கு தந்ததோடு, ஆசிரியர் தொழிலுக்கும் ஓய்வு நிலைபெறும் வயதையும் அடைந்து விட்டார்.
Athisttakaararn

என்னையே ஏன் சோதிக்கிறாய்?


அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற விம்பில்டன் ஆட்டக்காரர் ஆர்தர் அஷெ (Arthur Ashe) 1983 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சையின் போது பெற்ற ரத்தம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த போது அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். உலகெங்குமிருந்து அவர் ரசிகர்கள் கடிதங்கள் மூலமாகத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.

அதில் ஒரு ரசிகர் மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். "கடவுள் ஏன் உங்களை இந்தக் கொடிய நோயிற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை".

நட்பெனப்படுவது யாதெனில்...

ஒரு ஊரில் சோமு என்பவன் வசித்து வந்தான். ஒரு நாள் செய்யாத ஒரு குற்றத்திற்கான அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டு விட்டது. உன்னுடைய கடைசி ஆசை என்ன? என்று கேட்ட மன்னரிடம், தள்ளாத வயதுடைய தனது தாய் பக்கத்து ஊரில் வசிப்பதாகவும், அவளை ஒரு முறை பார்த்து வணங்கிவிட்டு வர அனுமதி வேண்டுமென்றும் கோரினான் சோமு. "நீ திரும்பி வரவில்லையென்றால் என்ன செய்வது? உனக்குப்பதில் வேறொருவர் பிணையாக நிற்பதானால் உன்னை அனுமதிக்கிறேன். இல்லையென்றால் முடியாது", என்றார் அரசர்.




தொடர்ந்து வாசிக்க...

ஒருகாலத்தில் தமிழர்களின் கருவறை தெய்வமாக விளங்கிய இந்தியா இன்று சண்டேஸ்வரர் நிலையில்!

Mahinda_Sleepingதமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரிய பலமாக விளங்கிய தமிழர்களின் இராணுவ பலம் சிறிலங்கா அரசினாலும் அதன் நேச சக்திகளின் கூட்டுச்சதியினாலும் சிதைக்கப்பட்ட தற்போதைய நிலையில் அவ்வாறான சூழ்ச்சிவலையில் தமிழ்மக்கள் எவ்வாறு சிக்கினார்கள்? அந்த சூழ்ச்சிவலையின் பிரதான சூத்திரதாரிகள் யார்? அவ்வாறான கபடநாடகங்கள் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் போராட்டங்களில் எவ்வாறான பரிணாமத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றன? போன்ற விடயங்களை, போரின் உஷ்ணம் தணிந்துள்ள இப்போது சற்று இரைமீட்டிக்கொள்வது எதிர்கால பயணத்துக்கு ஆரோக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கும் என்பது உறுதி.


தொடர்ந்து வாசிக்க...

Wednesday 20 January 2010

எடடி மண்வெட்டி! நடவடி அம்பாந்தோட்டைக்கு!


தேர்தல் களத்தில் நாளுக்கு நாளான கருத்து மோதல்களும் அதனூடான உளறல்களும் அதிகரித்து வருகின்றன. இனி வரும் காலங்களில் தமது குடும்ப அரசியலை யாராலும் அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த மகிந்த குடும்பம் தற்போது அச்சத்தால் வெருண்டிருப்பதை அண்மைய நடவடிக்கைகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.
"நாட்டின் ஆட்சியின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளமையால் அதனைக் காக்கும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபடவேண்டும்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எதனைக் கருத்திற் கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார் என்று புரிகின்றது.



Tuesday 19 January 2010

யாதுமாகி


Yathumaki_Kavithai_Padam
யாதுமாகி நிற்கிறது உலகு !!

எல்லாம் இழந்து
ஏதிலி ஆனது - என்
தமிழ்சாதி !!

நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்
கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்
அகதியாக்கிய உலகே - இன்று
அகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !



நேர்முகத்தேர்வு- பொதுவான கேள்விக்கணைகள்

job-interviewநேர்முகத்தேர்வில் உங்கள் அறிவைச் சோதிக்கும் கேள்விகளை விட உங்கள் தன்மையைச் சோதிக்கும் கேள்வுகள் தான் பொதுவாக அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் வெவ்வேறு விதம். ஒரு தேர்வாளரின் குணமும் மற்றவருடைய குணமும், நேர்முகத்தேர்வுகளுக்கான முறைகளும் ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் அமைதியாக, தட்டிக்கொடுக்கும் விதமாக உங்களை நேர்முகம் செய்யலாம். சிலர் உங்களைச் சீண்டி உங்கள் குணாதிசயத்தை எடை போட விரும்பலாம். ஆனால் நீங்கள் ஒரே விதமாக, அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் பதில்களைச் சொல்வது அவசியம்.


தொடர்ந்து வாசிக்க...

Monday 18 January 2010

காய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர் தரப்பு


mahinda-rajapaksa098சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது சிறிலங்காவின் தேர்தல்தான். யார் ஆட்சிக்கு வந்தாலென்ன அவர்களுடன் தமது அரசுகள் தொடர்ந்து இணைந்து செயற்படும் என அறிவித்துவிட்டு தேர்தல் முடியும்வரை காத்திருக்க சர்வதேச நாடுகள் தயாரில்லை. சிறிலங்காவின் தேர்தல் தற்போது சர்வதேச சக்திகளின் கைகளுக்கும் சென்றுவிட்டதை தெளிவாக காணமுடிகின்றது.
இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத் பொன்சேகாதான் ஆட்சிக்கு வருவார் என்பது வெளிப்படையானது. இவ்வாறான பின்புலத்தில், இத்தேர்தலில் சர்வதேச நாடுகளின் வகிபாகம் என்னவாக இருக்கபோகின்றது? குறிப்பாக இந்தியாவின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.

குரூஸ் ஏவுகணை (Cruise Missile)

250px-Tomahawk_Block_IV_cruise_missileநவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்கமும் அவற்றுக்கான நவீன தொழிநுட்ப உருவாக்கமும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.


தொடர்ந்து வாசிக்க...

Sunday 17 January 2010

கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!


Computer
கணினி மயமான வாழ்க்கை முறையில்
மனிதன் குடும்பத்தை விட்டுக் -- கணினியுடன்
ஒன்றிக் கலந்துவிட்டான்!இங்கே குடும்பத்தார்
திண்டாடும் கோலங்கள் பார்


தொடர்ந்து வாசிக்க...

Thursday 14 January 2010

நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும்

velupillaai-last-respectகடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.


தொடர்ந்து வாசிக்க...

Wednesday 13 January 2010

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்

சுய முன்னேற்றம் பெறவேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அவர் முதலில் செய்ய வேண்டுவது சுயபரிசோதனை. தன்னைத் தான் அறிதல் எந்த வெற்றிப்பயணத்திற்கும் அவசியம். தன்னை அறிதலும், பிறர் தன்னைப்பற்றி நல்ல முறையில் அறியும்படி செய்தலும் வாழ்வில் பல பொன்னான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கக் கூடியவை. நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? என நினைக்க வேண்டாம்.நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது நிரம்பவே இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொள்ள நாம் செய்யவேண்டியது கொஞ்சம் சுய பரிசோதனை. இந்தப் பரிசோதனை தனிமனிதர்கள் மட்டுமல்ல, பல சமயங்களில் பெரும் நிறுவனங்கள் கூட செய்துகொள்ளவேண்டிய சோதனை. அதுதான் உங்கள் வலிமை, பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த 'SWOT Analysis' (Strengths, Weaknesses, Opportunities and Threats).


தொடர்ந்து வாசிக்க...

Tuesday 12 January 2010

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

stressபதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.




தொடர்ந்து வாசிக்க...

வாலியிடம் பேச்சிழந்த இராமன்


raman-seethai-ilakuvanம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.
வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான்.

Monday 11 January 2010

அரை நூற்றாண்டு காலமாக அரசியலில் ஆளுமை செலுத்திய பொன். இராமநாதன்


Ponnambalam_Arunachalam_80238_200பொன்.இராமநாதன் ஒரு சிறந்த வழக்கறிஞர். அரசியல் அறிஞர். சட்டசபை உறுப்பினர். திறமையான பேச்சாளர். 1879 இல் தனது 28 ஆவது அகவையில் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் ஆதரவோடு சட்டவாக்க சபையில் காலடி எடுத்து வைத்ததோடு அவரது அரசியல் வரலாறு தொடங்கியது. எழுபதாவது அகவையில் 1921 ஆம் ஆண்டில் சேர் பட்டம் பெற்றவர்
இராமநாதன் 1911 இல் அகில இலங்கை அடிப்படையில் படித்தோர் தொகுதிக்குப் போட்டியிட்டு சிங்களத் தலைவர்களில் ஒருவரான சேர் மார்க்கஸ் பெர்னாந்துவைத் தோற்கடித்தார். கண்டி உயர்சாதிப் பவுத்த  சிங்களவர்கள் கிறித்து சமயத்தவரும் கரவா  சாதியைச் சேர்ந்தவருமான பெர்னாந்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.

ஏழை அகதிகளை இரட்சிக்க யார் வருவார்?



idpதேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ஊடகங்களுக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் செய்திகளை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றமையால் தற்போது முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகளின் நிலை குறித்து எதுவும் வெளிவருவதில்லை.






ஒற்றைத்தண்டவாளத் தொடர்வண்டி (Monorail)

230px-Kl_monorailஒற்றைத் தண்டவாளத்தில் பயணிக்கும் தொடர்வண்டி வகையைச்சேர்ந்த போக்குவரத்து வாகனமே ஒற்றைத்தண்டவாளத் தொடர்வண்டி (Monorail) என்றழைக்கப்படுகின்றது. Monorail என்ற ஆங்கிலப்பதம் ஒற்றைத்தண்டவாளத்தையே குறித்தாலும், அதிலே பயணிக்கும் தொடர்வண்டியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகின்றது. இவ்வகைப் போக்குவரத்து வாகனங்கள் தொடர்வண்டிகள் என்றழைக்கப்பட்டபோதிலும், பெரும்பாலும் இவை தொடர்வண்டிகளின் அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லவல்லவையாகக் காணப்படுவதில்லை. இதன்காரணமாக இவ்வகை தொடர்வண்டிகள் தூர இடங்களுக்கு இயக்கப்படுவதில்லை. பொதுவாக நகரங்களுக்குள்ளான போக்குவரத்துத் தேவைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது. சில நாடுகளில் விமான நிலையறங்களுக்கான போக்குவரத்திலும் பயன்படுத்தப்படுகின்றது.

Saturday 9 January 2010

கூட்டமைப்பின் முடிவு சரியா?

tna-for-press-meetநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு பிரதான தரப்புக்களும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தன. எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியுமா? எனத் தீவிரமாக ஆராய்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதியில் சில அம்சங்களைக் கோரிக்கைகளாக்கி இரண்டு தரப்பிடமும் முன்வைத்தது. இந்தக் கோரிக்கைகளுக்கு உடன்படும் வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு ஆதரவு வழங்குவதென கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தது.






தொடர்ந்து வாசிக்க...

2009 இல் ஹொலிவூட் திரையுலகம்.


உலகின் மிகப்பெரும் வர்த்தக – பொழுதுபோக்குத் துறைகளுள் ஒன்றான ஹொலிவூட் திரையுலகமானது நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டில் 10 பில்லியன் வசூலை அமெரிக்கா, கனடா ஆகியவற்றில் திரட்டிச் சாதனை புரிந்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் இந்தப் புள்ளி இப்போதுதான் ஹொலிவூட் திரையுலகத்தால் எட்டப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் ஓராண்டில் அதிகளவான வசூலைக் குவித்தது (அமெரிக்கா, கனடாவில்) 2007 ஆம் ஆண்டில்தான். அவ்வாண்டில் 9.68 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வசூலாகியது. 2008 இல் இத்தொகை 9.63 பில்லியன்களாக இருந்தது. 2009 இல் இது அண்ணளவாக 10.6 பில்லியன்களாக உயர்ந்துள்ளது. 2009 இன் இறுதிப்பகுதியில் வெளியான ‘Avatar’ மற்றும் ‘Sherlock Holmes’ ஆகிய படங்கள் இவ்வாண்டுக்கான வசூலை உயர்த்தியவற்றில் முக்கியமானவை.

Friday 8 January 2010

கயிறு நாவலின் சில துளிகள்

kayiruகதையின் தொடக்கத்தில் கோயிலைச் சேர்ந்த 'எருமத்ர' மடத்தினை  'கண்டெழுத்து' (நில அளவுRevenue survey and settelment period) எழுதவருகிற 'க்ளாசிப்பேரு கொச்சுப்பிள்ளை' (classifier)க்காக சுத்தம் செய்து தயார் ஆக்குகிறார்கள். கோடாந்திர முத்தாசான் போன்றவர்களுக்கு கிளாசிப்பேர் என்றால் அந்த பெயரை வைத்து என்ன மாதிரியான வேலை அது, என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று பல குழப்பங்கள். அதுகாலம் வரையிலும் பிராமணல்லாதவரை எருமத்ரமடத்தில் தங்க வைத்ததில்லை. ஆனால் பொன்னு தம்பிரான் (ராஜா) உத்தரவு . இதனைக் காலமாற்றம் நிகழத்தொடங்கியதின் குறிப்பு  எனக்கொள்ளலாம். செய்யும் வேலையினைக் கொண்டு ஒருவருடைய நிலை உயர்த்தப்பட்டுவிட்டது.


















தொடர்ந்து வாசிக்க...

"எதிரியின் எதிரி நண்பன்": இப்போது அதுவே ஆயுதம்


CowsArmyVellankulamநீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன? சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது.
தற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Thursday 7 January 2010

சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

coinsபரஸ்பர நிதிகள்(Mutual funds) என்றால் என்ன? அவற்றின் நிறைகுறைகள் என்னென்ன என்பன குறித்து சென்ற கட்டுரையில் கண்டோம். நாம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக இருந்தால், சரியான பரஸ்பர நிதியத்தினைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.








தொடர்ந்து வாசிக்க...

Wednesday 6 January 2010

ஈழகாவியம் - 16


Washington0220_x05


ஈழகாவியம்
புலத்துக் காண்டம்
அத்தியாயம் -16
ஐந்தொகை-10
முடிப்புரை- எழுத்தர் எண்ணம்!

என்னரும் தமிழீர் இந்த
          இனியபத் தாண்டு தன்னில்
இன்னொரு பதியம் வைத்து
          எழுந்துமே நடக்கின் றோமே!
ஒன்பதாம் வருடம் செத்த
          உடல்களாய் இராட்ச தர்கள்
தின்றனர்! தமிழிச் சிக்கள்
         தீயுடல் தந்தார் அன்றோ!
தொடர்ந்து வாசிக்க...

சுவடுகள் - 8. கப்டன் அருணன்


அன்று மாலையே நாங்கள் தங்கியிருந்த வீடு களைகட்டத் தொடங்கியது. வழமையான – அலுப்புத்தட்டும் இரவுகள் போலன்றி இன்றைய இரவு சுவாரசியமாகக் கழியப் போகின்றது என்ற உற்சாகம் எம்மைத் தொற்றிக் கொண்டது. விறகு, சீனி, தேயிலை என்று தேனீர் போடத் தேவையான பொருட்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டான் மறவன். இந்தப் பரபரப்பெல்லாம் அருணனுக்கானத்தான். வரப்போகும் விருந்தாளியை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
Maveerar2நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.




வலுவான எலும்புகள்; வலியில்லா வாழ்க்கை

onion_onions_springநம்மில் பலர் காலையில் எழுந்திருக்கையிலேயே அதிகமான இடுப்புவலி, முதுகுவலியுடன் எழுகிறோம். அதற்கு என்ன காரணம்? வயதானவர்கள் பலருக்கு, மிக இலேசாக அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படுகிறது. உடம்பிலேயே மிக வலுவானது என்று கருதப்படும் இந்த எலும்புகள், பட்பட் என்று ரொட்டித்துண்டு போல் உடைவது ஏன்?அது மட்டுமல்ல. இன்று பல சிறு குழந்தைகளுக்குக் கூட கை கால்கள் வளைதல், எளிதில் எலும்பு முறிதல் ஆகியவை ஏற்படுகின்றன என்பதைப் பல செய்தித்தாள்களில் படிக்க நேரிடுகிறது.




தொடர்ந்து வாசிக்க...

மின்சாரத் தொடர்வண்டி (Electric Trains)

250px-Db-152073-00தொடர்வண்டி (Train) என்றதும் உடனடியாக எமது மனக்கண்முன் தோன்றும் வடிவம் நீண்ட காலமாகப் பயன்பாட்டிலுள்ள எரிபொருள் இயந்திரத்தின் மூலம் இயங்கும் தொடர்வண்டியே. பெரும் சுமைகளைச் கொண்டு செல்லும் பணிகளில் இன்றும் எரிபொருள் மூலம் இயங்கும் தொடர்வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றதன. இருந்தபோதிலும் பயணிகள் போக்குவரத்துக்கான தேவைகளில் பெரும்பாலான நாடுகளில் இன்று மின்சாரத்தில் இயங்கும் தொடர்வண்டிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. மின்சாரத் தெடர்வண்டிகளின் வருகையின் பின்னர் தொடர்வண்டிகளைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. இத்துடன் உயர் சக்தியை வழங்கவல்ல மின்சாரத் தொடர்வண்டிகளின் பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான பொருளாதாரச் செலவு ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுவதும் இவ்வகைத் தொடர்வண்டிகளின் அதிகரித்த பயன்பாட்டிற்கான பிரதான காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.


தொடர்ந்து வாசிக்க...

Monday 4 January 2010

புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன?

thaipongal-2005இழப்புக்களையும் வலிகளையும் சுமந்த ஆண்டான 2009 கடந்து இன்று புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த விடுதலை போராட்டம் வல்லாதிக்க சக்திகளின் உதவியுடனும் போராட்ட பயணத்தில் உறுதியோடு பயணித்து தடம்மாறி காட்டிக்கொடுப்போராக மாறிய எம்மவர்களின் துரோகங்களுடனும் எமது தமிழ் இராச்சியம் மீளவும் வீழ்த்தப்பட்ட ஆண்டாக 2009 ஆம் ஆண்டு கடந்துசெல்கின்றது. புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன?


தொடர்ந்து வாசிக்க...

அழகின் பின்னனி


Alagin_Pinnani
நளினத்தின் பின்னணியில் நங்கை அழகு!
உளிகளின் பின்னணியில் ஓசை அழகு!
விழிகளின் பின்னணியில் பார்வை அழகு!
துளிகள் மழையின் அழகு.



தடுமாறும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தடம்மாறப் போகிறதா?

tna-undecidedதாயகத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகவாவது தமிழ்த் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஒரே குரலில் நின்று பெற்றுக்கொள்ள முடியுமென்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டங்களிலிருந்தது. ஆனால் தற்போது எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வெவ்வேறான நிலைப்பாடுகள் இருப்பது வெளிக்காட்டப்பட்டு வருகின்றது.














தொடர்ந்து வாசிக்க...



Saturday 2 January 2010

மாறுங்கள், மாற்றுங்கள்

noone-careமாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்பது பொன்மொழி. நேற்றுபோல் இன்று இல்லை, இன்று போல் நாளையில்லை. ஒவ்வொரு நாளும் உலகம் ஒரு புதிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. ஆதிமனிதன் முதலில் இலைகளை உடுத்தத்தொடங்கியது முதல், இன்றைய கணிணி யுகம் வரை, வாழ்க்கை முறைகளில், வியாபாரங்களில், தகவல் பரிமாற்றங்களில், சுற்றுப்புறச் சூழலில் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக்கொள்ளாத எதுவும் நிலைத்திருக்க முடிவதில்லை. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறாத உயிரினமான டைனோசர், எத்தனையோ பெரியதாக இருந்தும், சுத்தமாக அழிந்து விட்ட உயிரினமாகி விட்டது. சூழலுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் கரப்பான்பூச்சிகளை எத்தனை பூச்சிக்கொல்லிகள் வந்தும் அழிக்க இயலவில்லை. இன்று பெங்குயின்கள் கூட மெள்ளமெள்ளப் பறக்கத் துவங்குவதாக ஒரு பிபிசி நிகழ்ச்சியில் பார்த்தோம்.


தொடர்ந்து வாசிக்க...

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்கள்

Mahinda_-_monksசிறிலங்காவுக்கான அரச தலைவர் தேர்தலுக்காக தமிழர் தரப்பு தமது முடிவினை விரைவினில் வெளிப்படுத்தவேண்டிய நிலையில் இருப்பதால் ஆட்சி மாற்றத்தின் மூலம் சாதிக்கப்போவது என்னென்னவென்பது பற்றியும் அதற்கு அவசியமான காரணங்கள் பற்றியும் அலசுகிறது இக்கட்டுரை.

சில நேரங்களில் சில மனிதர்கள்

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்த சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.


என். கணேசன்