Monday, 30 November 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 09


புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:11 நிகழ்காலம்.
இந்தப் பொழுதின் மாவீரர் நாள்
கார்த்திகை மைந்தர் வணக்கம்!
(அறுசீர் விருத்தம்)

கார்த்திகைக் காலம் இந்நாள்!
 கதையொடும் சிதைகள் நின்று
கோர்த்திடும் மைந்தர் பேச்சுக்
 கேட்டிடும் நாட்கள் இந்நாள்!
வார்ப்பொடும் பாச நெஞ்சம்
 வைத்தவர் உயிரைத் தூவிச்
சேர்த்தவர் ஒளிரும் தேசச்
 சிற்பிகள் உலவும் நாட்கள்!
தொடர்ந்து வாசிக்க...
-புதிய பாரதி

அரசதலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் கொள்கை பிரகடனம் என்ன?

சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் வாசலுக்கு வந்துள்ளநிலையில், இந்த அரசிற்களத்தில் புலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவிற்கு பின் உள்ள அரசியல் நிலைமையினை கையாள்வது எவ்வாறு என்பதே இன்று தமிழ்மக்களுக்குள்ள மிகவும் முக்கியமான விடயம். இதற்கு, தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து பொது அரசியல் தீர்மானத்தை எட்டுதல் வேண்டும். எடுக்கப்படும் அரசியல் தீர்மானம் மக்களின் கருத்துக்கணிப்பிற்கு விடப்பட்டு, பொதுத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம், தமிழ்மக்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்திக் திருப்திகரமான அரசியல் உரிமைகளை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கவேண்டும்.28iraq2-600


தொடர்ந்து வாசிக்க...

மனச்சோர்வால் வாடும் அரும்புகள்

இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் ஒரு சிறிய கதை கண்ணில் பட்டது. ஒரு சிறுவன், "அப்பா, கொஞ்ச நேரம் என்னுடன் விளையாட வாருங்கள்" என்று தன் தந்தையிடன் கேட்கிறான். தந்தை சொல்கிறார்" எனக்கு உன்னுடன் விளையாட எல்லாம் நேரம் ஒதுக்க முடியாது. என் ஒவ்வொரு நிமிடமும் மதிப்புடையது". சிறுவன் விடவில்லை. "அப்பா! நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?". 'உன் தாய் கூட இப்ப்டிக் கேட்டதில்லை. உனக்கு எதற்கு இந்த விவரம்?" என்றார் தந்தை. "தயவு செய்து சொல்லுங்கள்" என்று நச்சரிக்கிறான் மகன். "ஒரு மணி நேரத்தில் நான் இருபது டாலர் சம்பாதிப்பேன்", கர்வத்துடன் சொல்லிவிட்டு தந்தை தன் வேலையில் மூழ்கிவிடுகிறார்.
child_depression


தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

வேர்பாய்ந்த விழுதுகள்.. (சிறுகதை)


பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது.
கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது.
வீதிக்கு வருவதும் வாகனத்தைக் கண்டதும் இறங்கி நடப்பதுமாக அந்த வயோதிபரைப் பார்க்க முடிந்தது. கையில் ஒரு தூக்குப்பை வைத்திருந்தார்.


Veerpaintha_Viluthugal-1


Sunday, 29 November 2009

பிச்சை எடுக்கும் அரசு பிச்சை போடுமா?

வன்னியில் தொடர் அவலங்களைச் சந்தித்து அதன் தொடராக வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு சர்வதேசத்தின் தொடர் அழுத்தங்களால் மீள் குடியேற்றம் என்ற பெயரில் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்பிவிட்டார்களா? என்பதை சர்வதேச நாடுளோ அல்லது சர்வதேச அமைப்புக்களோ ஏன் புலம்பெயர் தமிழ் உறவுகளோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.


IDP_1


தொடர்ந்து வாசிக்க...


-இராவணேசன்

Wednesday, 25 November 2009

ஊடகங்கள் செய்த(வ)து போதுமா?


தேசியவிடுதலைப் போரின் தோற்றம் அதன் பின்னரான வளர்ச்சி அது இடையில் எதிர்கொண்ட பின்னடைவு இவை அனைத்துடனும் ஊடகங்களின் ஒன்றிணைவு என்பது முக்கியமான விடயமாகும்.
இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கிய அகிம்சைப் போராட்டம் முதல் இன்றுவரை சுமார் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் எமது மக்களுக்கான உரிமைகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை அல்லது பெறமுடியவில்லை என்றால் எங்கள் ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையின் தோல்வியே முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


-இராவணேசன்

Tuesday, 24 November 2009

"டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லை" - சேர் பொன். இராமநாதன்

1832 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்த அதிகாரிகளது ஆட்சிமுறை 1921 இல் பிரதிநித்துவ அரசாக மாறியது. 1924 இல் அரசியல் யாப்பில் மேலும் சீர் திருத்தம் செய்யப்பட்டது. முதலில் வகுப்புவாரி அடிப்படையில் (Communal Representation) நடைபெற்று வந்த நியமனங்கள் 20 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இருந்து ஆட்புல அடிப்படைக்கு (Territorial Representation) மாறியது. அதாவது இலங்கையின் நிலப்பரப்பு பிரிக்கப்பட்டு தொகுதிவாரியாக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கோல்புறூக் இலங்கைக்கு வந்த காலத்தில் (1832) 9 அதிகாரிகளையும் 6 உத்தியோகப்பற்றற்றவளையும் கொண்டிருந்த சட்டவாக்க அவை ஆளுநர் மக்கெல்லம் (McCallum -1912) காலத்தில் 11 அதிகாரிகள் 10 அதிகாரிகள் அல்லாதோர் என்றாகி, ஆளுநர் மன்னிங் (Manning -1921) காலத்தில் அதிகாரிகள் 14, மற்றையோர் 23 என விரிவு அடைந்தது.

தொடர்ந்து வாசிக்க...

-நக்கீரன்

Monday, 23 November 2009

AH-65 Apache தாக்குதல் உலங்குவானூர்தி

நவீன மரபுவழி யுத்தங்களில் யுத்த டாங்கிகளின் பயன்பாடு எந்தளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதேயளவு முக்கியத்துவத்தினை தாக்குதல் உலங்குவானூர்திகளும் பெறுகின்றன. யுத்த முனைகளின் பயன்பாட்டில் தாக்குதல் விமானங்களைவிட தாக்குதல் உலங்குவானூர்திகளே வினைத்திறனுடையவையாகக் காணப்படுகின்றன. பல்வேறு நாடுகளின் பயன்பாட்டிலுள்ள தாக்குதல் உலங்குவானூர்திகளில் AH-65 Apache தாக்குதல் உலங்குவானூர்தியானது முன்னணித் தாக்குதல் உலங்குவானூர்திகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.தொடர்ந்து வாசிக்க...

கலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்


கலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்
நிலா தந்து போன வானம் - தினம்
பிணம் பெய்து போகக்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்...!

நிறைந்த வெளிகள் தோண்டி - என்
உறவுமறைந்த குழிகள் மூடிப் - பல
திறந்த முகாம்கள் வந்த பின்பு
கலைந்துபோய்க் கிடக்கிறது என் தேசம்..!
Kalainthu_Poaikidekiraathu_Enn_Thesam
தொடர்ந்து வாசிக்க...

Sunday, 22 November 2009

கண்டேன் காதலை - ஒரு பார்வை

எதிர்பாராமல் சந்திக்கின்ற வித்தியாசமான மனிதர்களும் எதிர்பாராத சூழ்நிலைகளும் வாழ்வின் பாதையை மாற்றக்கூடியவையே. காதல், வாழ்வை மாற்றலாம். வாழ்வை மாற்றியவர்களை காதலிக்கவும் நேரலாம். திரைப்படங்களில் தொடக்கத்தில் காதல் தோன்றி முடிவில் வெற்றி பெறுவதும் சுபம் போடுவதும் வழக்கமான ஃபார்முலா . கதைகளின் முடிவில் தான் தங்கள் காதலை உணர்ந்து கொள்வதாக வருகிற கதைகளும் கண்டிருப்பீர்கள். காதல் கணக்கை பல நிகழ்தகவுகளில் மாற்றி மாற்றி எடுப்பதும் சுவாரசியங்களை இணைப்பதுமான திரைக்கதை வகையில் கண்டேன் காதலை ஒரு துறுதுறு பெண்ணின் பேச்சில் நகரும் விறுவிறுப்பான கதை.


தொடர்ந்து வாசிக்க...

Friday, 20 November 2009

"இனக்கொலை" நாயகர்களின் இழுபறிப் போர்!


இருபதாம் நூற்றாண்டின் ‘யூதஇன’ப் படுகொலைகளுக்குப் பின், இந்நூற்றாண்டு மறக்கவோ மன்னிக்கவோ இயலாத ‘சிறுபான்மை இன அழிப்பு’ இவ்வருட(2009) முற்பாதியில் அரங்கேறியிருக்கிறது.
அதனை ‘வெற்றி’கரமாக நடாத்தி முடித்தவர்கள் இலங்கையின் அதிபர் ராஜபக்‌ஷேயும், முப்படைத்தளபதியாக அதிபரின் கட்டளையை ஏற்றுச் செயற்பட்ட சரத் பொன்சேகாவும் !
‘ஈழம்’ என்னும் ஓர் தனித்தமிழ் நாடு உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றிய ஓர் அண்டை நாடும் இந்த ‘வெற்றி’யில் கணிசமான பங்கினை வகித்திருந்தது.

sarath_mahinda


-சர்வசித்தன்

Thursday, 19 November 2009

சுதந்திரக்கட்சியின் கூட்டத்துக்கு முன் சிறிலங்கா சென்ற பிரணாப் முகர்ஜியின் விஜயத்தின் பின்னணியில்....!!

இலங்கைக்கான விஐயத்தை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகையின் பின்னணியில் இலங்கையின் அரசியல் தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் உள்ளடங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, முன்னாள் இராணுவத் தளபதியின் பதவி விலகல் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரான அரசியல் நிலமை தொடர்பாக கடும் கரிசனை கொண்டுள்ள இந்தியா - பிரணாப் முகர்ஜியின் விஐயத்தின் பின்னணி தொடர்பாக என்னதான் காரணங்களைக் கூறினாலும் - அடிப்படையில்  எப்படியாவது தனக்கு சார்பான ராஐபக்சவின் அரசை மீளக்கொண்டுவருவதில் மேற்கொள்ளும் பகீரதப்பிரயத்தனத்தின் ஒரு அங்கமாகவே முகர்ஜியின் வருகை நோக்கப்படுகின்றது.


Mahinda_-_pranab1


தொடர்ந்து வாசிக்க...


-அபிஷேகா

Windows Security – நேரமிருந்தால் பாதுகாப்பு நிச்சயம்.


தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கு மட்டுமே "அத்தியாவசியம்" என்றிருந்த கணனி, இன்று, எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. அலுவலகங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், கல்விமையங்களிலும் கணனியின் பங்கை (கற்றுக்கொள்ள மட்டும் அல்ல, பிரயோகிப்பதிலும் கூட) அலட்சியப்படுத்த முடியாது. செலவு செய்து பொருட்களை வாங்கிக்குவித்தால் மட்டும் போதுமா, அவைகளை முறையே பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை உணர வேண்டும். இது சாதாரண மேசை – நாற்காலியானாலும் சரி, கணனி போன்ற உயர்தர பொருட்களானாலும் சரி.

Microsoft Security Essentials


windows7
-தீபா கோவிந்த்

ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...தொடர்ந்து வாசிக்க...


-என்.கணேசன்

Wednesday, 18 November 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 08


முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழ
சுள்ளிகளும் தீப்பற்றிச் சுடுகாடாய் மாறியதே!
ஒன்றாயும் பத்துமென உயிர்கருகிப் போகையிலும்
சென்றுசிங்க ளத்திற்குச் சேதிசொல்லி வந்துவிட்டு
இந்தியமும் மூக்காவும் இருந்தரைந்த நாடகத்தில்
சந்துகளும் எரிந்துவிழச் சாக்காடாய் மாறியதே!
தொடர்ந்து வாசிக்க...
-புதிய பாரதி

இந்தியாவின் இலங்கைக்கு பொன்சேகா பொருத்தமானவரா?

சிறிலங்காவில் சரத் பொன்சேகா விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ள பெரும் விடயமாக இருந்துவருகின்றவேளையில் சிறிலங்காவை விட இந்தியாதான் இது விடயத்தில் பெரும் பீதிக்கு உள்ளாகி தலையிலடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சரத் பொன்சேகா விவகாரம் என்பது எதிர்பாராமல் இடம்பெற்ற பெரும் விபத்தாகும்.

சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இன்றையநிலையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதநிலை. ஆனால், அறவே பிடிக்காத அந்த இராணுவ அதிகாரியை தமக்கு பிடிக்காது என்று கூறப்போய் அதுவே தமக்கு எதிராக வீம்பு அளந்துகொண்டிருக்கும் மகிந்தவுக்கு ஆதரவாக அமைந்துவிடுமோ என்ற சிக்கலில் இந்தியத்தரப்பு புழுங்கிக்கொண்டிருக்கிறது.fonseka_kelaniya


தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 17 November 2009

ஏன் செய்ய வேண்டும் உடற்பயிற்சி?


'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர் தமது திருமந்திரத்தில். 'சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும்' என்றும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றும் சொல்கிறது நம் பழமொழி. நமது உடலை நாம் பாதுகாக்காமல் அடுத்தவரா பாதுகாக்க முடியும்? உடலைப் பேணிப்பாதுகாப்பது என்றால் என்ன? நன்கு மூக்குப் பிடிக்க விதவிதமாகச் சாப்பிட்டுவிட்டு, நாற்காலியில் அமர்ந்துகொண்டு துரும்பைக்கூட அசைக்காமல், நான் என் உடம்பை நன்கு பத்திரமாகக் கவனித்துக்கொள்கிறேன் என்றா சொல்லவேண்டும்? இல்லை.
gym2பயன்படுத்தாத இயந்திரமே துருப்பிடித்து வீணாகிவிடுகையில் மனித உடம்பு உழைப்பு இல்லை என்றால் என்ன ஆகும்? உடம்பு நன்றாக இருக்கவேண்டும், நோய்நொடியின்றி வாழவேண்டுமென்றால் நாம் உடலுக்கு சரியான சத்தான உணவும் கொடுக்கவேண்டும், சரியாக உடற்பயிற்சியும் செய்யவேண்டும்.


-பாலகார்த்திகா

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 07


அத்தியாயம்:09 நிகழ்காலம்.
நோர்டிக் நாடுகளும் ஐரோப்பியமும்!
(அகவல்)

கடலும் வானும் கரையும் நிலமும்
உடலை வருத்தி உள்ளமும் நொந்தும்
ஆயிர மாயிரம் இனச்சிற கிழந்தபின்
சேயொடும் தந்தையும் சேர்ந்த அன்னையும்
இருபது நாடுகள் ஏறி இறங்கி
வருவதை ஏற்று வந்து குவிந்தோம்!

-புதிய பாரதி

Monday, 16 November 2009

ஆட்புல சார்புத்துவம் என்ற கோட்பாடு தமிழர்களை தேசிய சிறுபான்மை ஆக்கியது

தமிழீழ தாயக விடுதலையை முன் நகர்த்தும் பெருமுயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அய்ந்தாவது விளக்கம் - கருத்துப் பகிர்வு – கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (நொவெம்பர் 07) மாலை மொன்றியல் முருகன் கோயில் அரங்கில் நடைபெற்றது. அரங்கு நிறைந்த உறவுகள் கூடியிருந்தனர். அது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. வீழ்ந்தாலும் மீண்டும் எழுச்சியோடு எழுவோம் என்பதற்கு அந்த உறவுகள் சான்று பகர்ந்தார்கள்.

தொடர்ந்து வாசிக்க...

-நக்கீரன்

கொன்கோட் (Concorde)

கொன்கோட் வகை மிகையொலித்தாரை போக்குவரத்து விமானங்கள் வான்வழிப் போக்குவரத்து வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுக்கொண்டபோதிலும் அவற்றின் பயன்பாடு குறுகிய காலத்திலேயே முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. 1969 இல் முதலாவது பறப்பை மேற்கொண்டு 1976 இல் பொதுப்பாயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கொன்கோட் விமானங்கள் 27 வருடங்களில் குறுகிய ஆயுளுடன் தமது சேவையை நிறுத்திக்கொண்டன.தொடர்ந்து வாசிக்க...

-ஜெயசீலன்

நேர்முகத்தேர்வில் வெற்றி பெற...

நாம் வாழ்வில் எத்தனை எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றில் வெற்றி பெறும்பொழுதுதான் நாம் முன்னேற்றமடையவும் முடிகிறது. அத்தகைய சவால்களில் ஒன்றுதான் நேர்முகத்தேர்வு(Interview). நேர்முகத்தேர்வுகளில் பல வகை இருப்பினும், நாம் இங்கு பணிக்கான நேர்முகத்தேர்வுகள் குறித்தும், அதில் வெற்றி பெறுவதற்கான சில ஆலோசனைகளையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து வாசிக்க...

-பாலகார்த்திகா

Sunday, 15 November 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 06

பிரித்தா னியர்கள் பிறழ்ந்த போதே
நரிச்சிங் களத்தை நம்தமிழ் கண்டது!
சுதந்திர நாடாய்ச் செப்பிய இலங்கை
மதத்த நாடாய் மறுகணம் வந்தது!
பரத்தையர் கொடுத்துப் படுக்க வைத்துக்
கரத்தைக் கட்டிலில் கைப்பிடித் ததனால்
ஆளுனர் சோல்பரி அசிங்கர் கையில்
வாளைக் கொடுத்து வரலா றழித்தார்!
சோல்பரிக் குழுவில் செப்பிய பொன்னரின்
சால்புநீ தியையும் சரித்திடக் கெடுத்தார்!
பின்னர் ஒருமுறை பித்தர் சோல்பரி
மன்னன் சங்கிலி வாழ்ந்த பூமியாம்


 

தொடர்ந்து வாசிக்க...

-புதிய பாரதி

Friday, 13 November 2009

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல

பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.


karuthu

தொடர்ந்து வாசிக்க...

-என். கணேசன்

சாகாது உணர்வின் தமிழ் மூச்சு

வட கிழக்கும், மலை நாடும் தமிழர் பூமி

  மறுபவரை மறுத்திடடா தமிழா நீயும்

அட அந்தச் "சிங்க"த்தின் வழிவந்தோரால்

  அனுபவித்த துயரங்கள் போதும் போதும்!

இடங்கண்டால் சிறு நரியும் சிறுத்தை முன்னால்

  இயலுமட்டும் "தன் வீரம்" காட்டித் துள்ளும்
 


 
read more...

Thursday, 12 November 2009

அடிப்பது போல் அடித்த அமெரிக்காவும் அழுவது போல் அழுத பொன்சேகாவும்


"சிறிலங்காவின் தலைநகரம் என்ன?" - என்று கேட்டால் கூட "சரத் பொன்சேகா" என்று கூறுமளவுக்கு எல்லாமே மறந்துபோய் பொன்சேகா காய்ச்சல் பிடித்த அரசியல் நோயாளிகளாக பிதற்றும் நிலைக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய கொழும்பு நிலைவரம் இதுதான். போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுகூட அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இவ்வளவு அடிப்பட்டதில்லை.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் முடிவை - தாம் செய்த உதவிகளின் அடிப்படையில் - முன்னமே ஊகித்துக்கொண்ட சர்வதேச சமூகத்தினால், தற்போது கொழும்பில் வீசும் அரசியல் சுனாமியை சில மாதங்களுக்கு முன்னர்வரை ஊகித்திருக்கமுடியாது. அவ்வளவுக்கு கொழும்பு அரசியல் மாற்றங்கள் சடுதியாக மாற்றம் கொண்டது மட்டுமல்லாமல் அதில் சர்வதேச சமூகத்தையும் வலுக்கட்டாயமாக உள்ளே பிடித்து இழுத்திருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க...


-பொற்கோ

Tuesday, 10 November 2009

ஒளிரும் விளக்குகள், தொலையும் விண்மீன்கள்

இரவு, வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டுக்கொண்டு படுத்திருக்கும் தாத்தா அல்லது அப்பாவின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு, மினுமினுக்கும் நட்சத்திரங்களையும், நிலாவையும் பார்த்தவாறு கதை கேட்ட அனுபவம் உண்டா? நட்சத்திரம் ஏன் மின்னுகிறது, நிலா ஏன் தேய்கிறது, நிலாவுக்குள் எப்படிப் போய் ஒரு பாட்டி வடை சுடுகிறாள் அல்லது முயல் எப்படி அவ்வளவு தூரம் போயிற்று என்ற ஏராளமான கேள்விகளுக்கு விதம் விதமாய் சுவையான பதில்களும் கதைகளும் பதிலாகக் கிடைத்த இளம்வயது நினைவுகள் இன்னும் இனிக்கின்றன நமக்கு.

galaxyஆனால், நம் இன்றைய சந்ததியினருக்கு அந்தப் பரிசை நாம் வழங்கவில்லை என்பது வருத்தமான உண்மை. நம் தலைமுறை, பேராசையுடன் இயற்கையை முரட்டுத்தனமாகக் கசக்கிப் பிழிகிறது.தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

இரண்டு துருவங்களான தமிழ் சிங்கள சமூகங்கள்


(இத்தொடரின் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது பகுதிகள் ) 1920 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களவர் – தமிழர் அரசியலில் இரு துருவங்களாகப் பிரிந்து சண்டை பிடிக்கத் தொடங்கினர். சிங்களவரை இலங்கை தேசிய காங்கிரஸ் சார்ப்பு படுத்தியது. தமிழர் சார்பாக சேர்.பொன். இராமநாதன் இருந்தார்.
இலங்கைக்கு என்றோ ஒரு நாள் தன்னாட்சி (self-rule) அல்லது சுதந்திரம் கிடைக்கும் என சிங்களத் தலைவர்கள் நினைக்கவில்லை. தன்னாட்சி பற்றியோ சுதந்திரத்தைப் பற்றியோ அவர்கள் சிந்திக்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் இலங்கைக்கு ஒரு நாள் தன்னாட்சி அல்லது சுதந்திரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன் உடன்பிறப்புக்களே முதலில் உண்டாக்கினார்கள்.
sir-pon-ramanathan


ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 05

நல்லமனம் கொண்டோரை நாடு போற்றும்!
   நல்லாட்சி செய்வோரை மறைகள் போற்றும்!
கொல்பவர்க்கு வாள்கொடுத்தாற் கொடுமை ஆகும்!
   கூற்றுவனைப் பின்தொடர்ந்தால் மனிதம் சாகும்!
சொல்லுண்மை சரிபார்த்துத் தொடுதல் வேண்டும்!
   சுதந்திரத்தை எல்லோர்க்கும் பகிர்தல் வேண்டும்!
வல்லோர்க்கும் தீமையிலா திருக்க வேண்டும்!
   வளர்நாடு தர்மத்தை வணங்க வேண்டும்!

eelakaaviyam-05


-புதிய பாரதி

Monday, 9 November 2009

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள் – பல கேள்விகள், சில விளக்கங்கள்


"மாங்காய்க்குப் புளிப்பே இல்லை, கீரையில் மண் வாடை வருகிறது, மாம்பழத்தில் மருந்தின் சுவை உள்ளது" என்றெல்லாம் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவற்றில் சிலதை நாமும் அனுபவித்திருக்கிறோம். கடைக்காரரிடம் காரணம் கேட்டால், "விவசாயம் செய்பவர்கள் கண்ட கண்ட மருந்தைத் தெளிக்கிறார்கள், இயற்கை உரம் பயன்படுத்துவதில்லை, அதனால் தான் பழைய சுவை ஏதும் காய் மற்றும் பழங்களுக்கு இருப்பதில்லை" என்று சொல்வார்கள்.
geneticengineering-தீபா கோவிந்த்

விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி (Aircraft flight control system)


250px-Fly_by_wire_A321_cockpitபல்லாயிரம் மெற்றிக்தொன் நிறையுடைய விமானம் ஒன்றின் பறப்பு அதன் இறக்கை, உடற்பகுதி போன்றவற்றின் வடிவமைப்பினாலும் வேகத்தாலுமே சாத்தியமாகின்றது. இவ்விரண்டும் சரியாக அமையாதபட்சத்தில் விமானம் ஒன்றின் பறப்பு சாத்தியமற்றதே. இவற்றின் வடிவமைப்பில் சாத்தியமான சில மாற்றங்களை பறப்பின்போது உருவாக்குவதன் மூலமே விமானத்தினை விமானியொருவர் தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். விமானியறையிலுள்ள (Cockpit) கட்டுப்பாட்டுக் கருவிகளின் உதவியுடன் விமானியால் விமானம் ஒன்றைக் கட்டுப்படுத்த முடியும்.
விமானம் ஒன்றின் கட்டுப்பாட்டுத் தொகுதியானது பிரதானமாகப் பின்வரும் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும்.
 1. பறப்புக் கட்டுப்பாட்டு மேற்பரப்பு
 2. விமானியறைக் கட்டுப்பாட்டுக் கருவித்தொகுதி
 3. அவசியமான பொறியமைப்புக்கள்


-ஜெயசீலன்

Friday, 6 November 2009

சுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்

ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு - வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது சண்டைகள் மூண்டு தணிந்து கொண்டிருந்தன.
Ratha_M


தொடர்ந்து வாசிக்க...


-அன்பரசன்

தாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை


இன்று தாயகத்தில் செய்யப்படவேண்டிய மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முழுமையான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டிய அவசியம் பற்றியும் அதனைச் செய்விக்கக்கூடிய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது அத்தகைய நிறுவனங்களோ இருக்கின்றதா என்பது பற்றியும் இப்பத்தி ஆராய்கிறது.
தாயகத்தில் நடைபெற்றுவந்த ஆயுத வழியிலான விடுதலைப்போராட்டம் முடக்கப்பட்ட நிலையில் தற்போது சிறிலங்கா அரசின் தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் செயற்படுத்தப்படும் எந்த அபிவிருத்தித் திட்டங்களும் அரச ஆதரவுள்ள கட்சிகளின் ஊடாக அல்லது அதன் மேற்பார்வையில்தான் நடாத்தப்பட்டு வருகின்றன.
displaced-class


ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 04


மானுட சாசனம் வைத்திருக் கும்நல்ல              
 மாக்கன டாவினைப் பாடுமம் மா!                
வானிடும் குண்டில் மக்களெ ரிகையில்              
 வாழக்க ரம்தந்த நாடுஅம் மா!
 
ஈனத்த ரானஇ லங்கரின் ஆட்சியில்
 என்றும ழிந்ததும் எம்மின மே!
கூனக்கி ழத்தின ரானமோ டர்களால்
 கொஞ்சுநி லம்எரிந் தாச்சுதம் மே!
eelakaaviyam-04
தொடர்ந்து வாசிக்க...

Thursday, 5 November 2009

மதுவின் பிடியில்!!!


ஒழுக்கமும் வீரமும் நிறைந்த இளைஞன் ஒருவன் முக்கிய வேலையாகக் காட்டினூடே சென்றுகொண்டிருந்தான். அவனைப் பாதை மாற வைக்கவேண்டும், தவறு செய்யத் தூண்டவேண்டும் என்று விரும்பிய சாத்தான் காட்டில் அழகிய இளம்பெண் ஒருத்தி, ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு புட்டி மதுவுடன் வழியில் காத்துக்கொண்டிருந்தது. அவனை வழிமறித்து, "நீ மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டுமானால், இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யவேண்டும், அல்லது இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும். இந்த இரண்டும் செய்ய விரும்பவில்லை என்றால் குறைந்த பட்சம் இந்த மதுவையாவது அருந்த வேண்டும். இல்லையெனில், நான் உன்னை விடமாட்டேன்." என்று சொன்னது.beer_invitationதொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

Wednesday, 4 November 2009

தோல்வியைத் தவிர்க்க....

ஒருவரின் வெற்றிக்குத் தேவையான குணங்கள் என சிலவற்றைக் குறிப்பிடுகிறோம். அதே போல் ஒருவர் தோல்வியடைவதற்கும் அவருடைய சில குணங்களே காரணமாகின்றன. ஒருவருடைய அறிவுக்கூர்மையும், கடின உழைப்பும் மட்டும் அவரது வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை. அவருடைய மற்ற குணநலன்களே பெரும்பாலும் வெற்றிக்கோ தோல்விக்கோ வித்திடுகின்றன. எப்படி வெற்றிக்கான குணங்களை வளர்த்துக்
கொள்வது முக்கியமோ, அதே போல் தோல்விக்கான குணங்களைக் கிள்ளியெறிவதும் முக்கியம். என்னென்ன குணங்கள் ஒருவருடைய தோல்விக்கு வித்திடுகின்றன என்று தெரிந்துகொள்வோமா? தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

Tuesday, 3 November 2009

தமிழா ஒன்றாக வா அதுவும் இன்றாக வா

எத்தனை கொடுமை ஆட்சி
எழியரின் கொடுமை சிங்க
யுத்தரின் கொடுமை இந்த
யுகத்தொடும் கொடுமை எங்கள்
பத்தரை மாற்றுப் பெண்கள்
பகையிலே மாய்ந்த பின்னும்
நித்திரை கொள்ள வோடா
நிமிர்ந்துநீ எழுந்து வாடா!

Ondrai_vaa_Thamila
தொடர்ந்து வாசிக்க...Monday, 2 November 2009

அனைத்துலக அரசியலின் ஆடுகளமாகியுள்ள சிறிலங்காவில் பகடைக்காயாகியுள்ள தமிழீழம்

வடக்கு நோக்கி துரிதமாக நடைபெறும் “வடக்கின் வசந்தம்” என்று அழைக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தை 180 நாட்களுக்குள் விரைவுபடுத்தும் நோக்குடன், சீன அரசாங்கத்திடமிருந்து பெருமளவிலான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. 2049 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த உபகரணங்களை  இலங்கைக்கான சீனத்தூதுவர் கடந்த 28 ம் திகதி இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.

மேற்கு நாடுகளின் அழுத்தம், பிராந்திய வல்லரசுகளின் போட்டியாதரவு போன்ற சாதக, பாதக அரசியல் சூழல் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இக்காரணிகள் மும்முனை அதிகாரவலுப்பிரயோக அரசியற்களமாக இலங்கைத்தீவை மாற்றியுள்ளது.

Mahinda_Rajapakse_with_Dr._Manmohan_Singh
தொடர்ந்து வாசிக்க...


-அபிஷேகா

Sunday, 1 November 2009

ஈழகாவியம் இலக்கியதொடர் - 03


முள்ளிவாய்க்கால் நந்திகட லோரப் போரில்
  விசக்குண்டு வீசுங்கால் மக்கள் செத்துக்
கொள்ளியிடக் கூடாமல் குருமான் குஞ்சும்
  குருதியொடும் நிலங்களிலே சிதறிப் போக
அள்ளுகொள்ளை யாய்நெரிந்து இராணு வப்பேய்
  அடிமைகளாய்ப் போனதினால் இலட்சம் மூன்று
தெள்ளுதமிழ் மக்களுமாய்த் தீயில் வெந்த
  தினம்கண்டே அமெரிக்கம் தெளியக் கண்டார்!
eelakaaviyam
தொடர்ந்து வாசிக்க...

சிங்கள அரசியல்வாதிகளை நம்பிய பொன். அருணாசலம்


(இத்தொடரின் முதலாவது இரண்டாவது மூன்றாவது பகுதிகள் ) 1919 ஆம் ஆண்டு இலங்கையருக்குக்  கூடிய தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டதைப் பார்த்தோம். அதன்   தலைவராக  பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன, மொழி, மத வேறுபாடின்றி எல்லோரும் இலங்கையர்  என்ற அடிப்படையில் தன்னாட்சி என்ற இலக்கை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே பொன். அருணாசலம் அவரது அரசியல்  வேட்கையாக இருந்தது.
இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பது தொடர்பாக சேர். பொன். அருணாசலம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி சி.ஈ.கொறயா பின்வருமாறு குறிப்பிட்டார்.

Ponnambalam_arunachalam