Tuesday 17 November 2009

ஏன் செய்ய வேண்டும் உடற்பயிற்சி?


'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர் தமது திருமந்திரத்தில். 'சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும்' என்றும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றும் சொல்கிறது நம் பழமொழி. நமது உடலை நாம் பாதுகாக்காமல் அடுத்தவரா பாதுகாக்க முடியும்? உடலைப் பேணிப்பாதுகாப்பது என்றால் என்ன? நன்கு மூக்குப் பிடிக்க விதவிதமாகச் சாப்பிட்டுவிட்டு, நாற்காலியில் அமர்ந்துகொண்டு துரும்பைக்கூட அசைக்காமல், நான் என் உடம்பை நன்கு பத்திரமாகக் கவனித்துக்கொள்கிறேன் என்றா சொல்லவேண்டும்? இல்லை.
gym2பயன்படுத்தாத இயந்திரமே துருப்பிடித்து வீணாகிவிடுகையில் மனித உடம்பு உழைப்பு இல்லை என்றால் என்ன ஆகும்? உடம்பு நன்றாக இருக்கவேண்டும், நோய்நொடியின்றி வாழவேண்டுமென்றால் நாம் உடலுக்கு சரியான சத்தான உணவும் கொடுக்கவேண்டும், சரியாக உடற்பயிற்சியும் செய்யவேண்டும்.


-பாலகார்த்திகா

No comments:

Post a Comment