Saturday, 29 August 2009

யாழில் இருந்து தமிழனின் இன்றைய இசைவரை...


சங்க இலக்கியமான சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி. காந்தருவதத்தை என்னும் இசையில் தேர்ந்த அழகிய பெண்ணை யாழிசைப்போட்டியில் வெற்றி பெறுவோரே மணக்கலாம் என்று நாடு முழுவதும் அறிவிக்கப்படுகிறது.
பல இசை வல்லுநர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவுகிறார்கள். இறுதியில், கதையின் நாயகனான சீவகன் அவனது நண்பன் புத்திசேனனுடன் போட்டிக்கு வருகிறான். போட்டி தொடங்குகிறது.
mayyaஅழகி காந்தருவதத்தை ஒரு பிழையான யாழை அவளது பணியாளரான வீணாபதி என்னும் பேடியிடம் கொடுத்தனுப்புகிறாள். அதை வைத்து போட்டியில் பங்குபெறுமாறு அறிவுறுத்தப்படுகிறான் சீவகன்.
சீவகன் அந்த யாழைச் சோதித்து அந்த யாழ் அதிக ஈரப்பதன் கொண்ட மரத்தால் செய்யப்படது என நிராகரித்துவிடுகிறான்.
அடுத்து வந்த யாழை தீ தாக்கிய மரத்தால் செய்தது என்று நிராகரிக்கிறான்.
Friday, 28 August 2009

கூட்டம்


வண்ணக்குழம்புகள் பூசிய முகங்கள்
ஒன்றேபோல உடைகள்
புடைத்த நரம்புகள்
கனத்த குரல்கள்
குறிக்கோள் தாங்கிய கண்மணிகள்
வீசி உதறி குதித்து
ஓரோர் பக்கமாய் நிமிர்ந்து நின்றனர்.

பறவையைப்போல்
சிறகுவிரித்துப் பறந்தான் ஒருவன்
மஞ்சள் வண்ணம் ஒளிரும் முகம்
சிரிக்கக் கண்டார்கள்.


-கயல் லக்ஷ்மி

கனவுப்பாதை


மூடிய இமைப்போர்வைகளைப் போர்த்துக்கொண்டு
உறக்கத்தின் வாயிற்கதவு தேடி,
கண்மணிகளின் நகர்வுகள்……
அந்த இரவையும் கிழித்துக்கொண்டு,
வாயில்தூண்களை உடைத்தெறிந்தபடி
உள்நுழைகிறது அந்த ஒளிக்கீற்று ….
என்னையும் தன்னோடு பற்றிக்கொண்டு
தன்வழிப்பயணமாய் தொடங்கிற்று
கனவெளியின் தூரப்பாதை கனவு நோக்கி,


தொடர்ந்து வாசிக்க...


-ஜானி சங்கையா

நமக்கானதோர் மாலைப்பொழுது


நானெழுதும் ஒவ்வொரு வாக்கியத்துக்குமெதிரான பிரதி வாக்கியமொன்றை
வனைந்துகொண்டிருக்கிறதொரு பறவை
சொல்லொன்று பூமியில் வந்து தெறிப்பதற்கும்
பனம்பழம் கொப்பறுந்து விழுவதற்குமான நிகழ்தகவினை
எந்தப் பின்னமும் உறுதிசெய்வதாயில்லை


-நிவேதா

யாவரும் நலம்


தரைமுழுதும் உதிர்ந்திருக்கும்
பின்கட்டு முருங்கைப்பூ,
செலவழிக்க விரும்பாத
சிறுவாடாய் ,
சின்னப்பிள்ளைகள் சிரிப்பினில்
மகிழ்ந்திருந்த
மல்லிகை மணம் வீசும்
முற்றமிருக்கும்.

YavarumnalamKavithai

-கயல் லக்ஷ்மி

Wednesday, 26 August 2009

ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள்

ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.

Thamilar_Padai_2
இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.
முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.
-வன்னியன்

சாவின் விளிம்பிலுள்ள சரணடைந்த போராளிகள்

நிராயுதபாணிகளாக சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சிறிலங்கா அரசின் புலனாய்வுப்பிரிவினாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிங்கள ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் சமராய்வுப்பொறுப்பாளர் யோகி,பொருண்மியப்பொறுப்பாளர்களில் ஒருவரான கரிகாலன் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் அடங்குவர் என்றும் கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த மே மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது மிகக்கொடூரமான - மிருகவெறித்தனமான - நடவடிக்கைகளை தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயம். ஈற்றில் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு நிராயுதபாணிகளாக வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை தலைவர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரை சிறிலங்கா படையினர் மிகக்கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மொத்தத்தில் சர்வதேச போர் நியமங்களை அனைத்தையும் மீறிய படுபாதகங்களை அங்கு அரங்கேற்றியது.தொடர்ந்து வாசிக்க...


-சேரன் 

13 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம் சொல்வது என்ன?

சர்வதேசத்திடமிருந்து நிதியைப் பெற்று சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வெளிவிளம்பரமாக - காலா காலமாக - சிங்கள அரசுகளால் முன்வைக்கப்படுகின்ற 'இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறோம்' என்ற போலி உறுதிமொழியின் இன்னொரு வடிவத்தைத் தற்போது மகிந்த அரசும் தன் பங்குக்கு உருட்டிவிளையாடத் தொடங்கியுள்ளது.

தமிழ்மக்களுக்கு என்ன தீர்வு கொடுக்கலாம் என்பதை அரசியல் கட்சிகளை அழைத்துப் பேசுவதற்கு அமைக்கப்பட்ட 'அனைத்துக்கட்சி ஆலோசனை சபை' என்ற அமைப்பின் ஊடாக தீர்வு ஆராய்ச்சி நடைபெற்று முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 123 அமர்வுகளின் பின்னர் தற்போது தீர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அனைத்துக்கட்சி ஆலோசனைக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில்,தமது தீர்வுத்திட்டம் 13 ஆவது அரசமைப்பு சட்ட சீர்திருத்தத்தின் சாராம்சத்தை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து வாசிக்க...


-பொற்கோ

Saturday, 22 August 2009

பன்னாட்டுச் சமூகத்தின் அச்சத்தின் பின்னணியில் தமிழர் தரப்பின் விளக்கம்

இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் பிபிசி செய்திச் சேவைக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, அமெரிக்க அரச தரப்பு அதிகாரி கூறிய இந்தக் கருத்து புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் கருத்துக்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனைகொள்வது போலவும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்குக் கைமேல் பலன் கிடைத்தது போன்ற ஓர் அர்த்தத்தை வெளிப்படுத்தினும், அந்த வாக்கியங்களுக்குப் பின்னால் தொக்கிநிற்கும் பல அர்த்தங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் இருந்துவருகின்ற தீராத அச்சத்தின் வெளிப்பாடுகளே ஆகும்.தொடர்ந்து வாசிக்க...


-முகிலன்

உரிமைப்போரின் உயிர்த்துடிப்பை உறுதிசெய்துள்ள வரலாற்றுத் தீர்ப்பு


யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கு சிறிலங்கா அரசு அவசர அவசரமாக நடத்திய தேர்தலில் பங்குகொண்ட மக்கள் தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடி இன்னமும் துடிப்புடன் இருப்பதை உறுதிசெய்துள்ளார்கள். தமது உரிமைகளுக்கான பேரவாவையும் அதற்கு தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் மீண்டுமொரு தடவை சிறிலங்கா அரசின் ஊடாக சர்வதேச சமூகத்துக்கும் எடுத்து கூறியுள்ளனர்.

போர் முடிவடைந்ததாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில் பல இலட்சக்கணக்கான மக்களை முகாம்களிலும் திறந்த வெளிச்சிறைகளிலும் வைத்திருந்தபடி - அந்த மக்கள் அடுத்த நேர உணவுக்கு மன்றாடிக்கொண்டிருக்க - தான் நினைத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை மக்கள் மீது திணித்து, தனது அதிகார ஆக்கிரமிப்பை நிலைநாட்ட முயன்ற சிங்கள அரசுக்கு தற்போது கிடைத்திருப்பது தோல்வியே ஆகும்.


தொடர்ந்து வாசிக்க...


-சேரன்

புலம்பெயர்ந்துவாழும் தமிழரின் பொருளாதார பலம் சாதிக்கவேண்டிய தளம்

சர்வதேச அரங்கில் எந்த ஒரு மாற்றத்தையும் தீர்மானிக்கும் மிகப்பிரதான சக்தியாக பொருளாதார பலம் எனப்படும் விடயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவே இன்றைய வேகமான உலகின் மிகப்பெரும் ஆயுதமாகவும் நோக்கப்படுகிறது.

உலக அரங்கில் இடம்பெறும் சமாதான உடன்படிக்கைகள் மற்றும் சமரச வரைவுகள் முதல் சண்டைகள் வரை எல்லாமே இந்தப் பொருளாதாரப் பலத்தைக் கையகப்படுத்துவதற்கான மூலோபாயமாகவே காணப்படுகிறது.

அந்த வகையில், உலகமயமாக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில் தமிழர்களின் பொருளாதார பலத்தை நிரூபிக்கும் பாதையின் ஊடாகவும் பயணிக்கவேண்டிய தேவை தற்போது அதிகரித்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க...

Friday, 21 August 2009

நுனிக்கொம்பு


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்

கொம்பிலேறி உச்சாணிக்குச் செல்பவர் முதிர் கொம்பு தாண்டிய பின்னும் ஏறுவாரேயானால் தளிர் கொம்பு ஒடிந்து கீழே விழுந்து உயிர் இழப்பார். மிகத்தெளிவான எளிய உண்மை. இதற்குப் போய் ஒரு குறளா? என்னுடைய பிற மொழி நண்பர் ஒருவர் இக்குறளை வேறு ஒருவரிடமிருந்து கற்றிருந்தார். அவருக்குக் குழப்பம். அந்த நண்பர் அதே அதிகாரத்திலிருந்து கீழ்க்கண்ட குறளையும் கூறி உள்ளார்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

மயிலிறகே ஆயினும் அதிகமான அளவுக்கு பாரம் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும். இது முதற் குறளைவிட இன்னமும் எளிமையானது.


அர.வெங்கடாசலம்

Thursday, 20 August 2009

பாதை திறப்பின் ஊடாக அரசின் விளம்பரமும் வியாபாரமும்

தமிழர் தாயகத்தின் வடக்குப் பெருநகரான யாழ்ப்பாணத்தினை தென்னிலங்கையுடன் இணைக்கும் ஏ-9 வீதியை மீளத்திறந்துள்ள சிறிலங்கா அரசு, அதனை தேர்தல் கருப்பொருளாக வைத்து குடாநாட்டு மக்களின் வாக்குகளை வேட்டையாடும் பாரிய திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறது.

இனப்பிரச்சினையின் உஷ்ணம் ஆயுதப்போராட்டத்தின் ஊடாக வெடித்த காலப்பகுதியில் - 1984 ஆம் ஆண்டில் - தமிழர்தாயகத்துக்கான மிகமுக்கியமான நெடுஞ்சாலையான ஏ-9 வீதியை சிறிலங்கா அரசு இழுத்து மூடியது. சுமார் 18 வருடங்களின் பின்னர், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி இப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது. அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மீண்டும் ஆரம்பித்த முறுகல் நிலையை அடுத்து 2006 ஆம் ஆண்டு ஆவணிமாதம் சிறிலங்கா அரசினால் மீண்டும் இழுத்து மூடப்பட்டது.

Wednesday, 19 August 2009

திருக்குறளில் முகாமைத்துவம்


முகாமைத்துவம் (Management), என்ற படிப்பு இன்றைய தலைமுறையினரிடம் பிரபலமானது. MBA பட்டம் பெற்றவர்களைச் சமூகம் மிகுந்த மரியாதையுடன் நோக்குகிறது. இது ஏதோ, 20ம் நூற்றாண்டில், மேனாட்டரிஞர்கள் கண்டறிந்த கல்வி முறை என்று நாம் நினைக்கிறோம். உண்மை அதுவன்று. திருக்குறளிலும், இன்னும் பல சங்க இலக்கியங்களிலும், கம்ப ராமாயணத்திலும் ஏராளமான முகாமைத்துவம் குறித்த தத்துவங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இக்கட்டுரையில், இன்றைய முகாமைத்துவம் குறித்த கருத்துகள் திருவள்ளுவரால் எவ்வாறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளன என்று கண்டு இன்புறுவோம்.
முகாமைத்துவத்துவத்தின் கூறுகள் யாவை?

பொதுவாக ஐந்து பணிகளை முகாமைத்துவத்துவத்தின் முக்கியக்கூறுகள் (Important functions) என்பர். அவையாவன.

திராவிட மொழிகள் - சில ஒப்புமைகள்


உலகத்தில் உள்ள் பல மொழிக்குடும்பங்களில் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு,தோத(Thoda), கொத(Khotha), படக(Badaga),கோலமி(Kolami), பார்ஜி(Bargi), நைகி(Naiki), கோந்தி(Gondi), குவி(Kuvi), கோண்டா(Konda) , மால்டா(Malda), கட்பா(Gadba) போன்றவை இக்குடும்பத்தைச் சேர்ந்தவை.
இவற்றில், முக்கியமானவை, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியவை. திராவிட மொழிகளில் மிகத் தொன்மையானதும், தனித்தன்மையுடையதும் ஆகும். முன்னைக்காலத்தில் தமிழகம் வடவேங்கடம் முதல் தென்குமரி வரை பரவியிருந்தது. இன்றும் தமிழகம் மட்டுமில்லது, இலங்கையின் சில பகுதிகள்,சிங்கப்பூர், மொரிஷியஸ் ஆகிய பகுதிகளில் பேசப்பட்டு வருகிறது. தமிழுக்கும் பிற திராவிட மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமைக்கு இரு வேறு காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகின்றன.

Tuesday, 18 August 2009

இருள்கவிழ்ந்த "கிழக்கின் உதயம்" வடக்கின் வசந்ததுக்கு" அரிய உதாரணம்

வடக்கில் ஒரு தேர்தலை நடத்துவதன்மூலம் தனது அரசுக்குரிய ஆதரவினை பறைசாற்றவேண்டும் என்ற நோக்குடன் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாநகரசபை தேர்தலை நடத்துவதில் மும்முரமாகியுள்ள மகிந்த, வடக்கில் வசந்தம் வீசவைக்கப்போவதாக கங்கணம் கட்டிநிற்கிறார்.

மகிந்த அரசின் இந்த முயற்சி உண்மையிலேயே மக்கள் நலனை நோக்காக உடையதா அல்லது பன்னாட்டு சமூகத்துக்கான போலி விளம்பரம் செய்யும் நோக்கத்தினை உடையதா என்பதை எடைபோடடறிவதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கிழக்கு மண்ணின் இன்றைய நிலமையை எடுத்துக்கொள்ளலாம்.

பொக்கிசம் - ஒரு பார்வை


கதாநாயகர்களுக்காக சினிமா பார்ப்பது என்பதை மாற்றி அவ்வப்போது இயக்குனர்களுக்காக ஒரு சினிமா பார்க்கலாம் என்ற நம்பிக்கையை விதைக்கும் இயக்குனர் வரிசையில் சேரன் இருக்கிறார். பொக்கிஷம் திரைப்படம் மிக எதிர்பார்ப்பினையும் வேறு எழுப்பிவிட்டிருந்தது. ஆனால் நிறை குறைகள் சரிசமம். முழுப்படமும் ஒரு நீண்ட காதல் கவிதை. தற்போது நீளத்தைச் சற்றே குறைத்து வெளியிடுவதாக செய்தி வருகிறது என்றாலுமே இது மிக நீஈஈஈஈஈஈஈஈஈண்ட கவிதையே.
pokisam4காதலில் காத்திருந்து பழக்கப்பட்டவர்களுக்கும் பிரிவின் வலியை அனுபவித்தவர்களுக்கும் ஓர் இதமான உணர்வினைத் தருவதாக இப்படம் அமைந்திருக்கிறது. லெனினாக வருகிற சேரனின் மகன் மகேஷ் (ராஜேஸ்) இன்றைய தலைமுறையின் எஸ் எம் எஸ் , மிஸ்டுக்கால் வகையறா காதலில் கதையைத் துவங்கிவைக்கிறார் . தற்செயலாக தந்தையின் முகவரியிட்ட அவர் காதலியின் கடிதங்களைப் படிக்க நேர்கிறது. நெகிழ்வோடு அக்கடிதங்களின் வழி நாதிராவின் ( பத்மப்ரியா) காதலையும் அந்தக் கடிதங்கள் வந்த தேதியிட்ட தந்தையின் டைரிக்குறிப்பினால் அவருடைய காதலையும் மாறி மாறி அறிந்துகொள்கிறார்.


-கயல் லக்ஷ்மி

Monday, 17 August 2009

அடைமழையால் அந்தரிக்கும் அகதிமுகாம் மக்கள்

வடக்கில் பெய்துவரும் அடைமழையும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளமும் தடுப்பு முகாம்களிலுள்ள மக்களின் அவலநிலையை மீண்டுமொரு பேரவலத்திற்குள் தள்ளியுள்ளது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் போரின் உக்கிரத்தையும் அதனால் ஏற்பட்ட அவலத்தையும் மாறாத வடுக்களாக அனுபவித்தவாறு தமது எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் வாழ்நிலையை நகர்த்திவந்த மக்களுக்கு தற்போது அங்கே பெய்துவரும் அடைமழை அடுத்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறது. 


தொடர்ந்து வாசிக்க...


-வானதி

உறுதியான முடிவுகளே உலகத்தமிழர்களுக்கான வழி


ஈழத் தமிழரின் இன்றைய நிலைமை மிகக் கவலைக்குரியதாகியுள்ளது என்று சொல்லுவதைவிட கேள்விக்குரியதாகியிருக்கின்றது என்று சொன்னால் சாலப்பொருந்தும். சர்வதேசத்திடமிருந்தாவது நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கு, சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் பாதகமாகவே அமைந்து விடுகின்றது. இவை தற்செயலாகவோ அல்லது ஈழத்தமிழரின் பிரச்சினை தொடர்பான புரிதல் இல்லாததினாலோ மேற்கொள்ளப்படுவதில்லை என்பதனை, அண்மையில் நடந்த பத்மநாதன் அவர்களின் கைதும் அவர் உடனடியாகவே இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட சம்பவமும் தெளிவுபடுத்துகின்றது.
leaderகடந்த மே மாத நடுப்பகுதியில், முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தேறிய துயரச் சம்பவங்கள் இன்னும் மனதை வாட்டிவதைக்கும் நிலையில், இவ்வாறான சதிச் செயல்கள் சர்வதேசத்தின் மீதுள்ள சிறுநம்பிக்கையையும் இல்லாமற் செய்துவிட்டிருக்கின்றது.
-பருத்தியன்

Sunday, 16 August 2009

மகிந்தவின் அரசியல் திருவிழாவாகியுள்ள மடுமாதா தேவாலயப் பெருநாள்

கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான மடுமாதா தேவாலயத் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. சுமார் ஐந்நூறு வருடங்கள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சின்னம் மடுமாதா ஆலயம். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இத்திருத்தலத்தின் திருவிழாவை இம்முறையும் வெகு கோலாகலாமாக கொண்டாடவேண்டும் என்று சிறிலங்கா அரசு வழங்கிய ஆலோசனைகளின்படி திருவிழா ஏற்பாடுகளை மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் அவர்கள் மேற்கொண்டுள்ளார். இம்முறை திருவிழாவில் பங்குகொள்ளுவதற்குப் பெருந்தொகையான சிங்களமக்கள் தென்னிலங்கையிலிருந்து அங்கே செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து வாசிக்க...


-முகிலன்

யாழ்ப்பாணம்,வவுனியா தேர்தல்கள்: ஒரு பார்வை

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மாநகரசபை தேர்தல்களை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி நடத்தப்போவதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆளும் மகிந்த அரசு தனது ஏகோபித்த அரசியல் பலம் நாடெங்கும் பரந்துள்ளதை அறிவிப்பதற்கு துருப்புச்சீட்டாக இந்த தேர்தலை பயன்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் இந்த தேர்தலையும் பய்ன்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

இதற்காக, அரசியல் கூட்டணிகள் - தேர்தல் வாக்குறுதிகள் என எத்தனையோ விடயங்களை மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் மகிந்த அரசுக்கு முண்டுகொடுப்பதற்கென, சில தமிழ் கட்சிகள் தமது கொள்கைகளை சிங்கள தேசியத்திடம் அடகுவைத்துவிட்டு மக்கள் முன்போய் வாக்குகேட்கவும் துணிந்துவிட்டன.


தொடர்ந்து வாசிக்க...

தீர்வு பேச முயன்ற தயானை தீர்த்துக்கட்டிய மகிந்த

சிறிலங்கா அரசின் இனவாத கொள்கைகளையும் இனஅழிப்பு போருக்கு நியாயப்பாடுகளையும் உலகெங்கும் பரப்புரைசெய்து வந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதி தயான் ஜயதிலக மகிந்த சிந்தனையில் அடித்துச்செல்லப்பட்ட அடுத்த மனிதராக அவரது பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார்.

மகிந்த தலைமையிலான அரசு மேற்கொண்டுவந்த சகல நடவடிக்கைகளையும் ஏதோ ஒரு விதத்தில் நியாயப்படுத்தி உலக அரங்கில் அதற்கு ஆதரவு தேடிக்கொள்ளும் முயற்சியில் தயான் ஜெயதிலக சிங்களதேசத்தின் பிரசார பீரங்கியாக செயற்பட்டுவந்தார் என்றால் மிகையில்லை.

Friday, 14 August 2009

எம்மைப்பற்றி

ஈழநேசன் என்ற இந்த வலைச் சஞ்சிகை தன்னார்வ நோக்கில் ஒன்றிணைந்தவர்களால் நடத்தப்படுகிறது. இது எந்தவோர் அமைப்பினையோ குழுவையோ பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.

தமிழில் முழுமையான வலைச் சஞ்சிகையொன்றை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இத்தளம், ஆர்வமுள்ள அனைத்துப் படைப்பாளிகளுக்கும் களமாக அமையும். படைப்பாளிகளுக்கு தேவைப்படுமிடத்து ஊக்கதொகை வழங்கவும் எமது வலைச்சஞ்சிகை தயாராக இருக்கிறது. அவை தொடர்பான விபரங்களை எம்மோடு தொடர்புகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


தொடர்ந்து வாசிக்க...

Thursday, 13 August 2009

உதயன்: உறுதியின் உறைவிடம்

யாழ். குடாநாட்டிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழுக்கு ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது எந்த வகையிலும் உதயனுக்கு அங்கீகாரம் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், உதயன் நாளிதழின் சேவை என்பது அதற்கும் அப்பால் பல்லாயிரம் மடங்கு பெரியது. அதன் பணி பல்லாயிரம் மடங்கு துணிச்சல்மிக்கது. அதன் வளர்ச்சியும் பல்லாயிரம் மடங்கு விஸ்வரூபம் உடையது.

இத்துணை பெரிய வளர்ச்சியை அடைந்துள்ள உதயனின் கடந்த காலத்தைச் சற்றுத் திரும்பிப் பார்த்தால் அது நிச்சயம் - அது அன்றுமுதல் தமிழ்த்தேசியத்துக்காக ஓயாது குரல் கொடுத்த பெருமையைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கும். அதற்காக எத்தனையோ இடர்களைச் சந்தித்ததாக இருக்கும்.


தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 11 August 2009

இனி ஈழத்தின் ‘இதயம்’: புலம்பெயர்வாழ் இளையோரின் பலம்

சுமார் 25 ஆயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புடன் 30 ஆண்டு காலம் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்போராட்டத்தை உலகமயமாக்கி தமிழர்களின் அடையாளம் என்ன என்பதை உலகின் மூலை முடுக்கெங்கும் எடுத்துக்கூறி –

தமிழர்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் உச்சத்தை இன்னும் பல்லாண்டு காலம் இந்த உலகம் உச்சரிக்கும்வகையிலான ஓர் ஒப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி –

தமிழினத்தின் அடுத்த கட்டப்போராட்டத்தை அடுத்த சந்ததியினரிடம் ஒப்படைத்துள்ளார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறை அந்தப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டு அதனை மிகவும் பக்குவமாக – உணர்வுபூர்வமாக – தமக்கு தமது இனத்தின் தலைவன் இதுவரை காலமும் காட்டிய அந்தக் கொள்கை பிசகாத பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.


தொடர்ந்து வாசிக்க...

Monday, 10 August 2009

தமிழிலக்கியம்


இன்று உலகத்தில் வாழும் மொழிகளில் மிகவும் பழமையானது தமிழ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு மொழி செம்மொழி என்ற தகுதி பெற பழமை, கட்டமைப்புடைய இலக்கணம் என்ற அஸ்திவாரம், பண்பட்ட இலக்கியங்கள் என்ற மாளிகை ஆகிய அனைத்தும் தேவை.
இவை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் மொழி, நம் தமிழ் மொழி.

தமிழ் இலக்கியத்தின் காலத்தை வரையறுக்க இயலாது என்றாலும், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

தமிழ் இலக்கியத்தை, சங்ககால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள் மற்றும் தற்கால (பிற்கால) இலக்கியங்கள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பழந்தமிழகம், மூவேந்தர்களாகிய சேர, சோழ பாண்டியரின் ஆட்சியில் பசியும் பிணியும் இன்றிச் செழித்திருந்தபோது, சங்க இலக்கியங்கள் தோன்றின. அதிலும், பாண்டியர்கள் முதற்சங்கம்இடைச்சங்கம்கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை ஏற்படுத்தி, தமிழ் வளர்த்தனர்.


தொடர்ந்து வாசிக்க...

Saturday, 8 August 2009

அரங்கேறியது அடுத்த சதி: பத்மநாதன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரின் கூட்டுச்சதியினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்துசமூத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடொன்றின் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பங்களிப்புடன் வெகுநாட்களாக திட்டமிடப்பட்டே இந்த கடத்தல் இடம்பெற்றிருப்பதாகவும் அறியவருகிறது.

கடந்த 5 ஆம் திகதி புதன்கிழமை லண்டனிலிருந்து மலேசியாவுக்கு சென்றிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் சகோதரர் மற்றும் நடேசனின் மகன் ஆகியோரை சந்திப்பதற்காக பத்மநாதன் அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஜீத் இந்தியா என்ற இடத்தில் அமைந்துள்ள ரியூன் விடுதிக்கு சென்றிருந்துபோதே அவர் கடத்தப்பட்டார் என்று தெரியவருகிறது. தொடர்ந்து வாசிக்க...


-முகிலன்

Saturday, 1 August 2009

திருக்குறளில் மனித வள முகாமைத்துவம்


சென்ற கட்டுரையில் முகாமைத்துவம் குறித்து, குறள் காட்டிய கருத்துக்களைக் கண்டோம். இந்தக் கட்டுரை, முகாமைத்துவத்துவத்தின் ஒரு கூறான மனித வள முகாமைத்துவம் ( Human Resource Management) குறளில் எவ்வாறு எடுத்துக் காட்டப்படுகிறது என்பதைக் காணப் போகிறோம்.
ரு நிறுவனத்திற்கு மிக முக்கியமான தேவை மனிதவளம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இன்றைய கூட்டுறவு (corporate) உலகம், மனித வளத்தை சரியான முறையில் பயன்படுத்துவதே வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து, அத்துறைக்கு அதிக பட்ச முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். வள்ளுவர் கூறும் பல கருத்துக்கள் இன்றைய மனிதவள முகாமையாளர்களின் சித்தாந்தத்துடன் ஒத்து விளங்குகிறது. இதன் மூலம் அன்றைய தமிழகத்தில் நிர்வாகம் எவ்வளவு சிறப்பான முறையில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதையும், இன்றும் பொருந்தும் வகையில், வள்ளுவரின் வாய்மொழி எத்தனை அருமையான,சிறந்த கருத்துக்களை எடுத்துவிளக்கும் மேன்மையையும் நாம் உணர முடிகிறது.
மனித வள முகாமைத்துவத்துவத்தின் நான்கு தூண்களாக, பணிக்கான ஆட்களைத் தேர்ந்தெடுத்தல், பயிற்சியளித்தல், தலைமைப்பண்பும் ஊக்குவித்தலும் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றைக் கூறலாம். பணிக்குத் தகுதியான ஆட்களைத் தேர்ந்து எடுப்பது, முகாமையாளர்களின் மிகவும் இன்றியமையாத கடமை. சரியான ஊழியர் இல்லாத நிறுவனம் மற்ற எல்லா வளத்திலும் மேம்பட்டிருந்தாலும், வளர்ச்சியடைய இயலாது. அதே சமயம், ஒரு நிறுவனம், சிறந்த ஊழியர்கள் உடையதாக இருந்தால், மற்ற எல்லாத் தடைகளையும் எளிதில் தாண்டி வந்து வெற்றியடையும். எனவே, ஒரு பணிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து நியமிப்பது ஒரு நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் கையில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் மனிதவளத்துறையின் செயல்பாடு எத்தனை திறமையுடையது என்பதைக் கொண்டே அந்நிறுவனத்தைக் குறித்து அறிந்துவிடலாம் (Evaluating the performance of personnel function - Nich Cowan).