ஈழத் தமிழரின் இன்றைய நிலைமை மிகக் கவலைக்குரியதாகியுள்ளது என்று சொல்லுவதைவிட கேள்விக்குரியதாகியிருக்கின்றது என்று சொன்னால் சாலப்பொருந்தும். சர்வதேசத்திடமிருந்தாவது நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கு, சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் பாதகமாகவே அமைந்து விடுகின்றது. இவை தற்செயலாகவோ அல்லது ஈழத்தமிழரின் பிரச்சினை தொடர்பான புரிதல் இல்லாததினாலோ மேற்கொள்ளப்படுவதில்லை என்பதனை, அண்மையில் நடந்த பத்மநாதன் அவர்களின் கைதும் அவர் உடனடியாகவே இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட சம்பவமும் தெளிவுபடுத்துகின்றது.
கடந்த மே மாத நடுப்பகுதியில், முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தேறிய துயரச் சம்பவங்கள் இன்னும் மனதை வாட்டிவதைக்கும் நிலையில், இவ்வாறான சதிச் செயல்கள் சர்வதேசத்தின் மீதுள்ள சிறுநம்பிக்கையையும் இல்லாமற் செய்துவிட்டிருக்கின்றது.-பருத்தியன்
No comments:
Post a Comment