Saturday 1 August 2009

திருக்குறளில் மனித வள முகாமைத்துவம்


சென்ற கட்டுரையில் முகாமைத்துவம் குறித்து, குறள் காட்டிய கருத்துக்களைக் கண்டோம். இந்தக் கட்டுரை, முகாமைத்துவத்துவத்தின் ஒரு கூறான மனித வள முகாமைத்துவம் ( Human Resource Management) குறளில் எவ்வாறு எடுத்துக் காட்டப்படுகிறது என்பதைக் காணப் போகிறோம்.
ரு நிறுவனத்திற்கு மிக முக்கியமான தேவை மனிதவளம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இன்றைய கூட்டுறவு (corporate) உலகம், மனித வளத்தை சரியான முறையில் பயன்படுத்துவதே வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து, அத்துறைக்கு அதிக பட்ச முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். வள்ளுவர் கூறும் பல கருத்துக்கள் இன்றைய மனிதவள முகாமையாளர்களின் சித்தாந்தத்துடன் ஒத்து விளங்குகிறது. இதன் மூலம் அன்றைய தமிழகத்தில் நிர்வாகம் எவ்வளவு சிறப்பான முறையில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதையும், இன்றும் பொருந்தும் வகையில், வள்ளுவரின் வாய்மொழி எத்தனை அருமையான,சிறந்த கருத்துக்களை எடுத்துவிளக்கும் மேன்மையையும் நாம் உணர முடிகிறது.
மனித வள முகாமைத்துவத்துவத்தின் நான்கு தூண்களாக, பணிக்கான ஆட்களைத் தேர்ந்தெடுத்தல், பயிற்சியளித்தல், தலைமைப்பண்பும் ஊக்குவித்தலும் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றைக் கூறலாம். பணிக்குத் தகுதியான ஆட்களைத் தேர்ந்து எடுப்பது, முகாமையாளர்களின் மிகவும் இன்றியமையாத கடமை. சரியான ஊழியர் இல்லாத நிறுவனம் மற்ற எல்லா வளத்திலும் மேம்பட்டிருந்தாலும், வளர்ச்சியடைய இயலாது. அதே சமயம், ஒரு நிறுவனம், சிறந்த ஊழியர்கள் உடையதாக இருந்தால், மற்ற எல்லாத் தடைகளையும் எளிதில் தாண்டி வந்து வெற்றியடையும். எனவே, ஒரு பணிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து நியமிப்பது ஒரு நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் கையில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் மனிதவளத்துறையின் செயல்பாடு எத்தனை திறமையுடையது என்பதைக் கொண்டே அந்நிறுவனத்தைக் குறித்து அறிந்துவிடலாம் (Evaluating the performance of personnel function - Nich Cowan).

No comments:

Post a Comment