Monday, 28 September 2009

கண்பறித்துக் காட்சிகொடுக்கும் சர்வதேசம்


சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் "ஆழிப் பேரலை" என்னும் இயற்கையின் கோரப் பசிக்கு ஆயிரக் கணக்கில் மனித உயிர்கள் பறிக்கப்பட்டபோது, அந்த இயற்கையின் சீற்றத்துக்கு எதிராக எதுவும் செய்ய இயலாத நிலையில் மனிதகுலம் அலறித்துடித்தது!
பேரலையில் அள்ளுண்டுபோன மனித உயிர்களுக்காகப் பிரார்த்தனைகளை நடாத்தித் தன் இயலாமைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது உலக சமுதாயம். எஞ்சியிருந்தவர்களுக்கு உதவுவதற்காக இனம்-மொழி வேறுபாடின்றி உதவுவதற்கு ஓடோடி வந்தது சர்வதேசம்.
ஆனால்…….மனிதர்களால்…………."ஏகாதிபத்தியப்" பேராசை கொண்ட நாடுகள் சிலவற்றின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட பல்லாயிரக் கணக்கிலான மனிதப் படுகொலைகளைக் கண்டும், காணாதவர்களைப் போன்று கைகளைக் கட்டிக்கொண்டிருந்தது இதே சர்வதேசம்.
Kouchner-and-Miliband-in--002போதாதென்று…. அங்கு மனித அவலங்கள் நடந்தேறுவதற்கான அத்தனை இழுத்தடிப்புகளையும் சாவகாசமாகப் புரிந்து கொண்டிருந்தன ‘ஐ.நா’வும் அதன் அங்கத்துவ நாடுகள் சிலவும்!
இயற்கையின் கோபத்தின்போது உயிர்கள் பலியான நிகழ்வு மட்டுமே இடம்பெற்றிருந்தது. அப்போது "இயற்கை" எவரையும் சித்திரவதை செய்யவில்லை பாலியல் துன்புறுத்தல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கவில்லை! பட்டினிபோட்டுப் பணியவைக்கும் தந்திரத்தையோ, பசியால் பரிதவிக்கும் மக்களைப் பார்த்துக் கைகொட்டி ரசிக்கும் ஈனத்தனத்தையோ இயற்கை செய்துவிடவில்லை.


-சர்வசித்தன்

சிறிலங்காவில் சமாதானம் சாத்தியமா?


சிறிலங்காவில் சமாதானம் என்பது சாத்தியமான பாதையி்ல் பயணிக்கின்றதா அல்லது அதற்கு சாத்தியமான பாதையை - போர் முடிவுற்றதாக அறிவித்துள்ள - சிங்கள அரசு உருவாக்கிவருகிறதா என்ற அடிப்படை கேள்வி இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது. போர் முடிவடைந்து நான்கு மாதங்களாகியும் அங்கு அமைதி என்ற சொல்லுக்கு இன்னமும் அர்த்தம் இல்லாத நிலையே காணப்படுகிறது.
சிறிலங்கா என்ற நாடு சமாதானமாகவும் சுபீட்சம் மிக்கதாகவும் இருப்பதற்கு விடுதலைப்புலிகள்தான் பெரும்தடை என்ற கருத்துருவாக்கத்துடன் தசாப்தங்களாக இரத்தவெறி பிடித்த போரை பகுதி பகுதியாக மேற்கொண்ட சிங்கள அரசுகள் இன்றைய காலகட்டத்தில் ஏதோ ஒரு புள்ளியில் வெற்றிகண்டிருக்கிறது. அந்த வெற்றி தமிழ்மக்களது ஆயுதப்போராட்டத்துக்கு எதிராக வெற்றி மட்டுமே என்பது அனைவரும் அறிந்தவிடயம்.
vavuniya-camp-தெய்வீகன்

Thursday, 24 September 2009

புன்னகை என்ன விலை?

பொன்னகைக்கு விலையுண்டு. புன்னகைக்கு? அதற்கு விலை எதுவும் இல்லை. ஆனால் அதுவோ விலை மதிப்பில்லாதது. புன்னகையை 'எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைந்த கோடு' என வரையறுக்கிறது ஒரு பொன்மொழி. புன்னகையால் வசமாகாதவர்களே இருக்க முடியாது. நீங்கள் புன்னகையுங்கள், உலகமே உங்களுடன் புன்னகைக்கும்.

புன்னகை பூத்த முகமாக ஏன் இருக்க வேண்டும்? அதனால் என்ன பலன்? சில காரணங்களைத் தெரிந்துகொள்வோம்.

happy_childrenபுன்னகை நமது வெளியுலகத் தொடர்புகளை சீரான முறையில் வைத்திருக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நம்மைக் கவர்ச்சியாக்குகிறது.ஒருவர் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பின் அவர்களுடன் பழகத் தோன்றுமா என்ன? ஒரு புதிய அலுவலகத்துக்குள் நுழைகிறீர்கள். ஏதோ ஒரு தகவலை விசாரிக்கவேண்டும் என்றால் யாரை அணுகுவீர்கள்? அங்குள்ளவர்களில் அழகிய தோற்றமுடையவரையா அல்லது சிரித்த முகத்துடன் இருப்பவரையா? கண்டிப்பாக இரண்டாமவரைத்தான். ஏனெனில் அவர் முகத்தில் உள்ள புன்னகை உங்களை அவர்பால் ஈர்த்துவிடுகிறது. உண்மையா இல்லையா? பிறரை வசீகரிக்க வேண்டுமானால், நம்மை உயர் ரக ஆடைகளாலும், அணிகலன்களாலும் அலங்கரித்தாக வேண்டுமென்பதில்லை. உதடுகளில் புன்னகையை மட்டும் அணிந்தாலே போதுமானது. அது முன்பின் தெரியாதவர்களைக் கூட இணைக்கக் கூடிய கயிறு. -பாலகார்த்திகா

Wednesday, 23 September 2009

பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. பங்குச்சந்தையில், குறிப்பாக நாள் வணிகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இந்தப் பகுதியில் பார்த்தோம்.
நாள் வணிகம் மிக எளிமையானதாகவும் அதிக லாபகரமானதாகவும் தோற்றமளிக்கலாம். ஆனால், எதிரி நாட்டில் உளவு அறியச் சென்றிருக்கும் இராணுவ வீரன் போல் நாம் ஒவ்வொரு கணமும் தயார் நிலையில் இருப்பது அவசியம். நாள் வணிகத்தின்பொழுது பின்பற்ற வேண்டிய சில விதிகள் குறித்தும், நாள் வணிகத்தில் ஆதாயமடைவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும் சில கருத்துகளை இக்கட்டுரையில் காணலாம்.

share-market-213தொலைக்காட்சியில் / அல்லது செய்தித்தாளில் கொடுக்கப்படும் கணிப்புகளை அப்படியே நம்பவேண்டாம். இவ்வாறு கூறப்படும் பங்குகளில் அதிகப்பேர் ஆர்வம் காட்டுவதால் விலை கன்னாபின்னாவென்று அதிகரிக்கும். இத்தகைய போக்கு நீடிக்கும் என நம்ப இயலாது. நீங்களே, சரியான பங்குகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதே போல் பிறர் வாங்குவதைப் பார்த்து வாங்கக் கூடாது என்பதை ஏற்கனவே கண்டோம்.தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

சுவடுகள் 6 - கேணல் சங்கர் அண்ணா


தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமான படையணி ஒன்றை ஆரம்பித்தபோது அதன் தளபதியாக கேணல் சங்கர் நியமிக்கப்பட்டிருந்தார். கனடாவின் விமான பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.
ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு ஆரம்பிக்கப்படமுன்னர் கடல்புறா என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகள் இடம்பெற்றகாலத்தில் கடல்புறாவின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அவர் ஈடுபட்டிருந்தார். பின்னர் இந்திய இராணுவத்துடன் போர் ஏற்பட்டபோது தலைவரோடு இருந்து காட்டுப்போர்முறையின் நுணுக்கங்களை தானும்
கற்று போராளிககளுக்கும் கற்பித்து தலைவர் பிரபாகரன் அவர்களுடனே வாழ்ந்துவந்தவர்.


-வேங்கைச் செல்வன்

Tuesday, 22 September 2009

சுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்


இன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.
rajuஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.


-தீவண்ணன்

உடல் எடைக்குறியீட்டு எண்

உடல் எடைக்குறியீட்டு எண் என்பது நம் உடல் எடையையும், நம் உயரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படும் ஒன்றாகும். இது ஒரு புள்ளி விவரக் கணக்கு. இக்குறியீடு நமது உடலில் உள்ள கொழுப்பு முதலியவற்றை அளவிடுவது இல்லை. ஆனால், இந்த உயரத்திற்கு இந்த அளவு எடை இருப்பின் அது சராசரியான எடையா, அதிக எடையா, குறைவா என்று நாம் தெரிந்து கொள்ள உதவுவது இந்தக் குறியீடு. இது கணக்கிடுவதற்கு எளிதானது. எனவே உலகம் முழுவதும் எடை குறித்த பிரச்னைகளைக் கண்டறிய (Diagnose) அதிக அளவு பயன்படுத்தப் படுகிறது. இம்முறை பெல்ஜியத்தில் இருந்த ஒரு அறிஞரால் ஏறத்தாழ 1830-1850 அளவில் உருவாக்கப் பட்டது.

உடல் எடைக்குறியீட்டு எண்ணைக் கணக்கிடுவது எப்படி?

நமது உயரத்தையும், உடல் எடையையும் கொண்டு கணக்கிடப்படுவது இது. மெட்ரிக் முறை ( மீட்டர் / கிலோகிராம்) மற்றும் பழைய அளவீடுகளான பவுண்டு, அங்குலம் ஆகிய இரு வித அளவுகளுக்கும், இரு விதமான சூத்திரத்தைக் (Formula) கொண்டுள்ளது. உடல் எடைக்குறியீட்டு எண்ணுக்கான படிவம் ( BMI Chart) கொண்டும் இதைக் கண்டு பிடிக்கலாம். இந்தப் படிவத்தில் உடல் எடையானது கிடை அச்சிலும் (Horizontal Axis) உயரமானது செங்குத்தான அச்சிலும் (Vertical Axis) கொடுக்கப் படும்.இதன் மூலம் வெவ்வேறு அளவுகளுக்கான சரியான உடல் எடைக்குறியீட்டு எண்ணைக் (Body Mass Index) கண்டறியலாம்.

உடல் எடைக்குறியீட்டு எண்ணை அளவிடுவதற்கான சூத்திரங்கள்:தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

தெருவில் படித்த பாடம்


அறிஞர்களிடமிருந்து பாடங்கள் பெறுகிறோம். அறிவு சார்ந்த நூல்களில் இருந்து பாடங்கள் பெறுகிறோம். இது பெரிய விஷயமில்லை. சில சமயங்களில் தெருக்களில் கூட சில பாடங்களை, அறிஞர்களல்லாத சாதாரண மனிதர்களிடமிருந்து பெறும் சந்தர்ப்பங்கள் உண்டு. சாதாரண மனிதர்களாகத் தோன்றுபவர்களிடமிருந்து கிடைக்கும் பாடங்கள் பக்கம் பக்கமாக படிக்கும் புத்தகங்களில் இருந்தும், மணிக்கணக்கில் பேசும் அறிஞர்களிடமிருந்தும் கிடைக்கும் பாடங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை மிக எளிமையாகவும் ஆழமாகவும் நம் மனதில் பதிந்து விடுவதுண்டு.
life_is_happyஅப்படி நானும் ஒரு பாடம் படித்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது. சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.

Monday, 21 September 2009

சுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன்


1998 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒருநாள்.
வட்டுவாகல் பாலத்தையொட்டிய பகுதியில் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் என்பது வன்னியின் புதுக்குடியிருப்பு -  முல்லைத்தீவுச் சாலையில் வரும், நந்திக்கடல் நீரேரியின் மேலாகச் செல்லும் பாலம். அப்பாலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பக்கமாக, புதுக்குடியிருப்புச் சாலைக்கும் கடலுக்குமிடைப்பட்ட பற்றைக்குள்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அது பொதுமக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. கடற்புலிகளின் குறிப்பிட்ட அணியினருக்கு மட்டுமே அங்கே அனுமதியிருந்தது.
விமானத்திலிருந்து வீசப்படும் சில குண்டுகள் வெடிக்காமல் விடுவதுண்டு. பெரும்பாலும் 250 கிலோகிராம் நிறைகொண்ட குண்டுகளே அப்போது சிறிலங்கா வான்படையின் பயன்பாட்டிலிருந்தன. வெடிக்காத குண்டுகளைச் செயலிழக்கச் செய்து இயக்கம் பயன்படுத்துவதுண்டு. ஒரு குண்டை வெட்டியெடுத்தால், சும்மா இல்லை சுளையாக 90 கிலோ கிராம் உயர்சக்தி வெடிமருந்து கிடைக்கும். பின்னாட்களில், குண்டை செயலிழக்கச் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு வெடிமருந்தை அகற்றாமல் அந்த விமானக்குண்டு அப்படியே கடற்புலிகளால் ஒருதேவைக்குப் பயன்படுத்தப்பட்டது. குண்டைச் செயலிழக்கச் செய்வதில் அந்நேரத்தில் எமக்குப் படிப்பித்துக் கொண்டிருந்த வானம்பாடி மாஸ்டரும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தார்.
56025959_05a9119ad7


-அன்பரசன்

தமிழ்மக்களின் புதிய "அரசியல் வாய்பாடு"

தமிழ்மக்களின் விடிவுக்கான புதிய போராட்டம் எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பது தொடர்ச்சியாக விமர்சனத்துக்கு உட்பட்டுவரும் இக்காலகட்டத்தில், முப்பது வருடங்களாக கட்டியெழுப்பப்பட்ட ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு புதிய முலாம் என்ற பெயரில் பல எதிர்வினைகள் மக்கள் மத்தியில் பரப்பிவிடப்படுகின்றன. பன்னெடுங்காலமாக ஒரு இறுக்கமான - கட்டுக்கோப்பான - கட்டமைப்பிற்குள் தமது போராட்டத்தை முன்னெடுத்துவந்த தமிழ்மக்கள், இன்று அந்த கட்டுக்கோப்பும் இறுக்கமும் இல்லை என்று உணரத்தலைப்பட்டு இப்படியான பல்வேறு சில்லறை சிந்தனைகளாலும் ஆட்கொள்ளப்படும் அபாயம் நிலவ ஆரம்பித்திருக்கிறது.

இந்த இடத்தில் ஈழத்தமிர் விவகாரம் இன்று மூன்று முனையில் கையாளப்பட்டுவருவதை காணலாம். அதாவதுதொடர்ந்து வாசிக்க...


-பொற்கோ

Saturday, 19 September 2009

சுவடுகள்-3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான்


கப்டன் அன்பரசன் பற்றியும் அவன் வீரச்சாவடைந்த நிகழ்வு பற்றியும் கடந்த சுவட்டில் ‘தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன்’ என்ற தலைப்பில் பார்த்திருந்தோம்.
கப்டன் அன்பரசன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது 04/06/1998. அதுவொரு வியாழக்கிழமை. அதற்கு அடுத்துவந்த வியாழக்கிழமையும் அதேயிடத்தில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தது. அதன்பின் வந்த சில வியாழக்கிழமைகளை ஒருவித பீதியோடு கழிக்கும் வகையில் அந்த இரண்டாவது வெடிவிபத்து ஆழ்ந்த பாதிப்பை எமக்குள் ஏற்படுத்தியிருந்தது.
அன்பரசனின் சம்பவத்தின் பிறகு எமது கற்கைநெறி திட்டமிட்டபடியே நகர்ந்தது. அன்பரசனையும் காயமடைந்த இருவரையும் சேர்த்து மூன்றுபேர் குறைந்திருந்தார்கள். விபத்து நடந்து அடுத்தநாளே கட்டடத்தைத் துப்பரவாக்கி எல்லாம் பழையபடி ஒழுங்கமைத்து படிப்பைத் தொடங்கியிருந்தோம். எவரும் துவண்டுபோய்விட வானம்பாடி மாஸ்டர் விட்டுவிடவில்லை.
veeravanakkamவானம்பாடி மாஸ்டர் எமக்குக் கற்பிப்பதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரியர். இயக்கத்தின் ‘வெடிபொருள் பொறியமைப்புக் கல்வி’ தொடர்பில் அந்நேரத்தில் அவரே பொறுப்பாக நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார். பொறியமைப்புக்கள் தொடர்பில் நீண்டகால அனுபவமும் மிகத் தேர்ச்சியும் கொண்டிருந்தார். பொறியமைப்புச் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவதொன்றும் இலகுவான செயலன்று. கணனிகள் உட்பட நவீன சாதனங்கள் எவையுமின்றி வெறும் கரும்பலகையில் கீறிமட்டுமே கற்பிக்க வேண்டிய நிலையிற்கூட மிக அழகாக எல்லோருக்கும் விளங்கும் வணக்கம் கற்பிக்க அவரால் முடிந்தது. மிக எளிய எடுத்துக்காட்டுக்களோடு பொறியமைப்புத் தொகுதிகளின் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவார்.-அன்பரசன்

சுவடுகள் - 2. தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன் - கப்டன் அன்பரசன்


‘ஐயா’ என்றுதான் அவன் எங்களால் அழைக்கப்பட்டான். அவன் அதை விரும்பாதபோதும், சிலவேளைகளில் ‘இப்பிடிக் கூப்பிட்டா இனி நான் கதைக்க மாட்டன்’ என்று விசனத்துடன் சொன்னாலும் இறுதிவரை நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் கூப்பிட்டோம். மற்றப் பிரிவினர் அவனை அன்பரசன் என்று கூப்பிட்டாலும் நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் அழைப்போம். அவன் யாழ்ப்பாணத்தில் ஐயர் குடும்பமொன்றைச் சேர்ந்தவன் என்பதுதான் அதற்குக் காரணம்.
இயக்கம் அவனுக்கு வைத்த பெயர் அன்பரசன். அவனது வீட்டுப்பெயர் சரியாகத் தெரியாது. பொதுவாகவே போராளிகளின் இயற்பெயர்கள் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே இருக்கும். முன்பு அவனோடு படித்த ஒருவன் ஒருமுறை வீதியிற் கண்டு அவனைக் கூப்பிட்டபோது அவனது பெயர் இறுதியில் ‘சர்மா’ என்று முடியுமென்பதை அறிந்துகொண்டோம்.
அன்பரசனை நான் சந்தித்தது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில். வெவ்வேறு கடமைகளில் இருந்த நாம் ஒரு கற்கைநெறிக்காக ஓரிடத்துக்கு வந்திருந்தோம். அதன்பின் அவனது இறப்புவரை ஒன்றாகவே இருந்தோம்.
அன்பரசன் 1995 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் போராட்டத்தில் இணைந்தான். ‘கெனடி -1’ என்ற பெயரில் நடத்தப்பட்ட அடிப்படைப் பயிற்சி முகாமில் தனது பயிற்சியை நிறைவு செய்தான். அதன்பின்னர் இம்ரான்-பாண்டியன் படையணியில் கடமையாற்றினான்.
maaveerar1கற்கைநெறியில் பல படையணிகளிலிருந்தும், துறைகளிலிருந்தும் போராளிகள் பங்கெடுத்தனர். ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் தளமமைத்து எமது கற்கைநெறி தொடங்கியது. தள அமைப்பு வேலைகள் முடிந்து படிப்புத் தொடங்கிக் கொஞ்ச நாட்களிலேயே ‘ஜெயசிக்குறு’ தொடங்கிவிட்டது. அதுவும் முதலிரு நாட்களிலேயே நெடுங்கேணிப் பகுதியை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிவிட்டது.-அன்பரசன்

சுவடுகள் - I. எவனுக்காய் அழுவது?

http://www.eelanesan.com/tamil-ilakiyam/54-eelam-suvadukal/77-suvadukal-eelam.html
சம்பவம் நடந்த காலப்பகுதியைப் பற்றிய சுருக்கமான விவரிப்பு:
இது 1998 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதி. வன்னியில் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது. தொடக்கத்திலேயே எதிரி நெடுங்கேணியைக் கைப்பற்றியிருந்தான். பின் கண்டிவீதி வழியாக நகர்ந்து புளியங்குளத்தைத் தாண்ட முடியாமல் திணறியதால் கண்டிவீதிக்குக் கிழக்குப்புறமாக காடுகளால் முன்னகர்ந்து மாங்குளம் - ஒட்டுசுட்டான் சாலையில் கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான்.

அதன்பின் சண்டையின்றியே புளியங்குளம், பிறகு கனகராயன் குளம் என்பவற்றைக் கைப்பற்றியநிலையில், மாங்குளத்துக்காகச் சண்டைபிடித்துக் கொண்டிருந்தான். கண்டிவீதி வழியான நகர்வுகள் சரிவராத நிலையில் அவன் மாங்குளத்தைக் கைப்பற்ற கரிப்பட்டமுறிப்பிலிருந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமிருந்தான்.
map_ottisuddan_1
மாங்குளம் - ஒட்டுசுட்டான் சாலையில் தனது கட்டுப்பாட்டுப்பகுதியை அதிகரிப்பதற்காக எதிரி கடுமையாகச் சண்டையிட்டான். அதனால் ஒலுமடுப்பகுதியைக் கைப்பற்ற சில எத்தனங்களை சிறிலங்கா அரசபடை செய்தது.
சண்டையென்றால் இறுதிப்போரில் நடந்தது போலில்லை. அப்போதெல்லாம் ஒரு முன்னேற்ற முயற்சி தோல்வியடைந்தால், இராணுவம் போதிய அவகாசமெடுத்துத்தான் அடுத்த முன்னேற்ற முயற்சியைச் செய்யும். அது சிலவேளை ஒருமாதமளவு இடைவெளியாகக்கூட இருக்கும்.
ஜெயசிக்குறு தொடங்கிய சில காலத்திலேயே புலிகள் முறியடிப்புச் சமரில் தேர்ந்தவர்களாகி விட்டார்கள். கனரகப் பீரங்கிகளை ஒருங்கிணைத்து எதிரிக்கு உச்ச இழப்பைக் கொடுப்பதில் புலிகள் வல்லவராய் மாறியிருந்தனர்.-அன்பரசன்

Friday, 18 September 2009

இதயம் – உள்ளே இருப்பதை வெளியே தாங்கிய குழந்தை


"இதயம்", வயதுக்கு ஏற்ப வித விதவிதமான எண்ணங்களை நம்முள் வரச் செய்யும் உறுப்பு. காதலர்களுக்குக் கிளர்ச்சியையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கொழுப்பையும் (Cholestrol) நினைவுப்படுத்தும். துக்கம் நெஞ்சை அடைக்கும் பொழுது, "இதயம் வெடித்து விடும்போல உள்ளதே" என்று புலம்பச் செய்வதும் இதுவே. இப்படி வெறும் இரத்தமும் சதையும் கொண்ட இந்த உறுப்பு நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது. ஆனால், நெஞ்சுக் கூட்டுக்குள் "பத்திரமாக" இருக்க வேண்டிய இதயம், "உடலுக்கு வெளியே" உள்ளபடி இருந்தால் எப்படி இருக்கும்? ஆமாம், பீகாரில், அரசாங்க மருத்துவமனையில், கூலி வேலை செய்யும் மாஜி-விபா தம்பதிக்கு, ஓர் அழகான ஆண் குழந்தை 26 Aug 09 இல் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே (நெஞ்சுக்கு மேலே) இருந்தது . தட்டச்சு பிழை எதுவும் இல்லை, நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்தது.

diagram_of_the_human_heartஇந்த நிலை மருத்துவத்தில் Ectopia Cordis என்று சொல்லப்படுகிறது. அதாவது, தோலுக்கு வெளியே உறுப்பு உருவாவது என்ற குறைபாட்டுக்களில் ஒன்றுதான் இது. Ectopia Cordis - தோலுக்கு வெளியே உருவாகியிருக்கும் இதயம். இந்தக் குறைபாடு கோடியில் 3 குழந்தைகளுக்குத் தான் ஏற்படும் என்று ஆய்வுகளின்படி தெரியவந்துள்ளது. கருவில் இதயம் முழுவதுமாக வளரும் முன்னே நெஞ்சுக்கூடு ஒட்டிக்கொள்வதுதான் மூல காரணம் என்று மருத்துவப் புத்தகங்கள் சொல்கின்றன. இப்படி ஆவதால், இதயம் மட்டுமல்ல, சில பிள்ளைகளுக்கு நுரையீரல் போன்ற உறுப்புகளும் தோலுக்கு வெளியே வளருவதுண்டாம். முக்கிய உறுப்புகள் இப்படி தோலுக்கு வெளியே வளர்வதால், அவ்வுறுப்புகளுக்குச் சரியான பாதுகாப்புக் கிடைப்பதில்லை. இதனால் மேற்கொண்டு வரும் மருத்துவச் சிக்கல்கள் பல. அதனால் இம்மாதிரி குறைபாடுகள் இருக்கும் சிசு பெரும்பாலும் இறந்தே பிறக்கும் அல்லது, சில மணி நேரங்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்குமாம்.


-தீபா கோவிந்

தடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II


இதன் முதற்பகுதியை வாசிக்க இங்கே செல்லவும்.
மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது. எத்தனைபேர் இரவு நித்திரை கொண்டிருப்பார்களென்று தெரியவில்லை. எந்நேரமும் ‘லைன்’ பண்ணக்கூடியவாறு அனைவரும் தயாராகவே இருந்தார்கள். நான்குமணிவரை புதிதாக வந்து சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி நடந்தபடிதான் இருந்தது.
எல்லோரையும் வரச்சொன்னார்கள். தேவராஜ் அண்ணைதான் கதைத்தார். எல்லோரையும் குளத்தடிக் கோவிலுக்குச் சென்று ஒதுக்குப்புறமாக நிற்கும்படி சொல்லப்பட்டது. நாங்கள் அணியணியாக நடந்தே சென்றோம். விசுவமடுக் குளத்தின் ஒரு தொங்கலில் காட்டுக்குள் சற்று உட்பக்கமாக ஒரு சைவக் கோவில் இருந்தது. மிகப்பெரிய ஆலமரமொன்றில் அடியில் ஒரு சிறுபீடமும் அதில் கடவுளின் சிலையொன்றும் இருந்தது. கடவுள் யாரெனச் சரியாகத் தெரியாது, அனேகமாய் காளியாகவோ வைரவராகவோ இருக்க வேண்டும். பெரிய சூலமும் வேறு சிலவும் அக்கடவுளுக்குரிய பொருட்களாய் அங்கிருந்தன. முன்பே அப்பகுதி எமக்குப் பழக்கமானதே. அது மக்கள் நடமாட்டத்துக்குரிய பகுதியன்று. ஆனாலும் வருடத்துக்கொரு முறை அக்கிராம மக்கள் அங்குவந்து பெருமெடுப்பில் ஒரு திருவிழாவைச் செய்துவிட்டுச் செல்வார்கள்.
ltte_arty


-அன்பரசன்

சொல்லத்தான் நினைக்கிறேன் - 1


யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 28 ஆண்டுகளாகிவிட்டன. சில வருடங்களின் முன்னர் எரியும் நினைவுகள் என்ற பெயரில், இப்போது பார்த்தாலும் நெஞ்சை உலுக்கும் அந்த நினைவுகளை சோமிதரன் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த நூலக எரிப்புப் பற்றி அதிகம் பேசும் பலர் கூட இந்த ஆவணப் படத்தைப் பார்க்கவில்லை என்று பலருடன் பேசியபோது தெரிந்து கொண்டேன். 'யாழ்ப்பாணம் எரிகிறது', '24 மணி நேரம்' ஆகிய இரண்டு நூல்களிலும் யாழ்ப்பாண எரிப்புப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா “ஒரு லட்சம் புத்தகங்கள்” என்ற பெயரில் அந்த வலியை, அதற்குப் பின்னால் நடந்த மோசமான சிங்கள மற்றும் சில தமிழர்களின் அரசியலை ஒரு குறுநாவல் ஆக்கினார். இவையெல்லாம் நிச்சயம் எல்லாரும் பார்க்கவும், படிக்கவும், பத்திரப் படுத்தவும் வேண்டிய ஆவணங்கள். தமிழர்களிடம் இருக்கும் மிக மோசமான வழக்கம் சரியான முறையில் ஆவணப்படுத்தாமை என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலங்களிலேயே அதே தவறை திருப்பித் திருப்பிச் செய்துவருகிறோம்.
burned_library


-அருண்மொழி வர்மன்

விலங்குகளின் சாலை மரணங்கள்


கோடை காலத்தில் நம்மில் பலர் மலையும் மலை சார்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு குளிர்ச்சியை நாடி சென்றிருக்கக் கூடுமல்லவா? அது போன்ற பயணங்கள் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மனது முழுக்க ஆச்சரியங்களையும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கவும் வாய்ப்புகள் அனேகம்தானே? முகத்தில் சில்லெனப் பட்டுத் தெறித்து, தூக்கத்தைத் தூரமாக எட்டி வைக்கும் தூய்மையான காற்று, நாசியில் இறங்குவதே தெரியாமல் இறங்கிக் கொண்டிருக்கும் சுகமே ஒரு அலாதியான அனுபவம்தானே!
சில உயரமான மலை உச்சியின் முகடுகளில் நாம் பயணிக்கும் பேருந்து இப்பவோ, அப்பவோ சாய்ந்துவிடுவேன் என்று ஒரு பக்கமாகச் சாய்ந்து செல்வதைக் கூட மறக்கடிக்கும் நிலையில், வெளியில் நமக்குக் காட்சியாக பரந்து விரிந்து மரங்களடர்ந்த மலை முகடுகள், மேகங்களை தன் மேல் கிடத்திக் காட்டும் நிகழ்வைப் பார்த்து நமது பயணம் நீண்டு கொண்டே சென்றிருப்பதனைப் பருகியிருப்போம்.


-அ.பிரபாகர்

புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)


உயிர்வாழும் கிரகம் (Living Planet) என்றறியப்படும் பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியென்பது அவற்றின் இடப்பெயர்ச்சி முலமாகவே சாத்தியமாயிற்று. மனிதகுலத்தின் நாகரீகம் மனிதர்களின் இடப்பெயர்ச்சி மூலமாகத்தான் வளர்ச்சிபெற்றது. தொடக்க காலத்தில் கால்போன போக்கில் இடம்விட்டு இடம் நகர்ந்த மனிதன் அவனது தேவைகளும் அறிவும் வளர்ந்தபோது தன்னுடைய இடப்பெயர்ச்சியை இலகுவாக்குவதற்கான வழிவகைகளைத் தேடத் தொடங்கினான்.
காடுகளிலுள்ள பெருமரங்கள், நீர்நிலைகள், சிற்றோடைகள், பெருநதிகள், மலைகள், பறவை மற்றும் விலங்குகளின் அசைவியக்கங்கள், நட்சத்திரங்கள் எனத் தன்னுடைய நகர்வுகளுக்கும் பயணங்களுக்கும் இயற்கையை நம்பியிருந்த, இயற்கையைப் பயன்படுத்திக்கொண்ட மனிதன் தன்னுடைய அறிவின் திறன்கொண்டு தனக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கிய கருவிதான் இந்த புவிசார் நிலைகாண் தொகுதி (Global Positioning System). பல்வேறு தேவைகளுக்காகப் பல்வேறுபட்ட கருவிகளை உருவாக்கிய மனிதனின் அறிவுக்குழந்தையான இந்த புவிசார் நிலைகாண் தொகுதி மனிதனை அவனது சரியான பயணப்பாதையில் அழைத்துச்செல்கின்றது.
gpsதற்காலப் பயன்பாட்டிலுள்ள நவீன போக்குவரத்து ஊர்திகளில் வழிகாட்டும் தொகுதி (Navigation System) என்பது ஓர் இன்றியமையாத கருவியாகிவிட்டது. நாம் போகவேண்டிய இடத்தின் முகவரியை வழிகாட்டும் கருவியினுள் உள்ளீடு செய்ததும், நாம் பயணிக்கவேண்டிய பாதையினைத் திரையில் தோன்றும் வரைபடத்திற் குறித்துக் காட்டுவதுடன் நமது பயணத்தின்போது வீதியில் எமது நகர்வினையும் தொடர்ந்து குறித்துக்காட்டும் வேலையினையும் இக்கருவி செய்கின்றது. இச்செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும் அவற்றின் பின்னணி மற்றும் வரலாறு என்பவற்றையும் இங்கு மேலோட்டமாகப் பார்ப்போம்.


-ஜெயசீலன்

காஞ்சிவரமும் விருதுகளும்

2007 ஆம் ஆண்டுக்கான- 55ஆவது தேசிய திரைப்பட விருதுக்களுக்கான போட்டி சற்றுக் கடுமையனதாகவே இருந்திருக்க வேண்டும். ஷாருக்கானின் “சக்தே இண்டியா” அமீர்கானின் “தாரே சமீன் பர்” போன்ற முழு இந்தியாவின் மக்களுடைய மனம் கவர்ந்த படங்களுக்கு நடுவே நம் தென்னிந்தியப் படம் ஒன்று வெற்றியை அடைந்திருப்பது தனியான மகிழ்ச்சியைத் தருகிறது. பலநாட்டுத் திரைப்படங்களையும், வங்காள மொழிப்படங்களையும் பார்த்து இது போல காலத்தைக் கண் முன் காட்டும் நல்லதொரு திரைப்படம் தமிழில் வராதா என்று சிலர் நினைத்திருக்கலாம். சிறந்த இயக்குனரான பிரியதர்ஷனின் இயக்கத்தில், சினிமாவினை ஆழமாகக் காதல் புரியும் ப்ரகாஷ்ராஜின் நடிப்பில் விருதுக்கான எல்லாத் தகுதிகளுடன் தமிழில் வெளிவந்து ஏமாற்றாமல் விருதை வென்ற படம் ‘காஞ்சிவரம்’.


தொடர்ந்து வாசிக்க...


-கயல் லக்ஷ்மி

Case of War crimes: SL in the US net


While Tamil Diaspora constantly having rounds of talks with the Western Countries to convey the proper message about the Sri Lanks’s post war situation and How Mahinda regime executed the mass murders in the Wanni soil, the America and its allies preparing the case of War crimes against the Sri Lanka, the high placed sources said.
These sources further said that the US was rapidly making a case of war crimes against Sri Lanka on the basis of the conduct of her armed forces, police as well as the political leadership during the recently concluded war and former Ambassador to Sri Lanka, Mr. Robert Blake, now based at the State Department was behind the move.

Sri Lanka has no Political will - Bruce Haigh


In Sri Lanka there is neither the political will nor common compassion to meet Tamil aspirations for the future. It is incredibly difficult to say that Tamils have a realistic chance at equality in that country. The task for the Tamils of the moment is to commit wholeheartedly to an image change, and project that new image together with the justice of the cause to Australian society and the international community, says former Deputy High Commissioner at the Australian High Commission for Sri Lanka Bruce Douglas Haigh, in an exclusive interview to eelanation.com.
haughBruce Douglas Haigh is a well known political commentator, author and correspondent. He writes political columns to Australian Media about current affairs in international politics. He has served as a diplomat in many countries.
His interview with eelanation.com staff correspondent follows -

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் பயணம்

யாழ்ப்பாணத்துக்கு ரெயில் ஓடுதா? உமக்கு ஏதும் மறை கழண்டு போச்சா எண்டு நீங்கள் கேட்கிறது வன்னியிக்கை ஓ வெண்டு அடிக்கிற காற்றைப்போலத் தெளிவா கேட்குது. அது பாருங்கோ, யாழ்ப்பாணத்துக்கு ஓடுற பஸ் எல்லாம் ஒண்டுக்கு பின் ஒன்றாக வரிசையாக (கயிறு போட்டு ஒன்றை ஒன்று கட்டாததுதான் குறை!) போறதை பார்த்தா நீங்களும் யாழ்ப்பாணத்துக்கு தொடர் வண்டி போகுது எண்டதை ஏற்றுக் கொள்ளுவியள்.

முந்தியெண்டா யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டிலை இருந்து 30 நிமிசத்துக்கு ஒருக்கா வெளிமாவட்டங்களுக்கு பஸ் புறப்படும். அது வவுனியா பஸ் ஆக இருக்கலாம் மட்டக்களப்பு பஸ் ஆக இருக்கலாம் திருக்கணாமலை (திருகோணமலையை இப்பிடித்தான் நாங்கள் சொல்லுறது) பஸ்ஸாக இருக்கலாம். இல்லை கொழும்பு பஸ்ஸாகக் கூட இருக்கலாம். அவையவை அவையவைக்குத் தேவையான பஸ்ஸிலை ஏறிப் போகலாம்.

ஆனா இப்ப, யாழ்ப்பாணத்திலை இருந்து வெளிக்கிடுறது வவுனியாவுக்கான பஸ்தான். கொழும்புக்குப் போறவையை, அது மதவாச்சி வரை கொண்டுபோய் இறக்கும். அதுக்கு அங்காலை தமிழ்ப் பிரதேசத்து பஸ்கள் ( அதுவும் அரசாங்க சேவையான இ.போ.ச) போகமுடியாது.

bus"இதில் போனாச் சங்கடம்" எண்டுதான் முந்தி இ.போ.ச பஸ்ஸைச் சொல்லுறது. ஆனா அதைவிட பெரிய சங்கடங்களை போக்குவரத்தில் சந்தித்ததால் இ.போ.ச இப்போது "இனிய போக்குவரத்துச் சபை"யாக மாறிவிட்டது.

வவுனியாவிலை இருந்து பஸ் எடுக்கிறதெண்டா வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு போகக்கூடாது. ஆமிக் காம்ப்புக்கு வரவேணும். வவுனியா “ரம்யா ஹவுஸ்” எண்டது சிவில் நிர்வாக அலுவலகம் . இங்கைதான் “டோக்கன்“ கொடுக்கிறது. “டோக்கன்“ எண்டா நீங்கள் கொடுத்த “கிளியரன்ஸை” பார்த்து “செக்“ பண்ணி, சரி நீங்கள் பின்னேரம் பஸ் எடுக்கலாம் எண்டு குடுக்கிற ஒரு சின்னத்துண்டுதான்.


-பரதன்

தியாகதீபம் திலீபன்


தியாகி தீலீபன் அவர்களின் நீரின்றிய உண்ணாவிரதப் போராட்டம் தமிழீழ விடுதலைப் போரின் ஆன்ம உறுதியை நிலைநாட்டிய நிகழ்வு. ஆயுதம் தரித்துப் போராடிய வீரன் அகிம்சை வழியிலும் தன்னால் தாயக விடுதலைக்காக உறுதியுடன் போராட முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டி செப்ரம்பர் மாதம் 15 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு தனது நீரின்றிய உண்ணாநோன்பைத் தொடங்கி வைத்தான். பன்னிரண்டு நாட்கள் வெறும் வயிற்றுடன் நீதிகேட்டுப் போராடிய தியாகதீபம் திலீபன் இந்திய தேசத்தைத் தலைகுனியவைத்து தன்னுடலை உருக்கி தன்னுயிரை அழித்துக்கொண்டான்.
1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டனர். ஈழத்தமிழர்களின் தேசத்தில் அமைதியை ஏற்படுத்தவந்த படைகள் சிறிலங்காவில் நடந்துகொண்டிருந்த நில ஆக்கிரமிப்பைக் கண்மூடிப் பார்த்துக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அவசர ஒன்றுகூடலைச் செய்தது.

-வன்னியரசன்

திசநாயகம் வழக்கு: தீயினால் தீர்ப்பு எழுதிய சிறிலங்கா நீதிமன்றம்

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கையாக தொடர்ந்து இடம்பெற்றுவந்த ஊடகவியலாளர்கள் மீதான அரச பயங்கரவாதத்தின்,பின்னைய சம்பவமாக தமிழ் ஊடகவியலாளர் திசநாயகம் அவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் பயங்கரவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலான கட்டுரைகள் அடங்கிய “நோர்த் ஈஸ்டெர்ன் கெரால்ட்” எனப்படும் ஆங்கில சஞ்சிகையை எழுதி அச்சிட்டு வெளியிட்டதைற்காக ஐந்து வருட கடூழிய சிறையும் – பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து சஞ்சிகை நடத்தியதன் மூலம் பணம் பெற்றுக்கொண்டமைக்காக ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் –

இவ்வாறான ஒரு சஞ்சிகையை வெளியிட்டதன் மூலம் சமூகங்களின் உணர்வுகளுக்கு பங்கம் விளைவித்தமைக்காக பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் –

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றினால் தீர்க்கப்பட்டிருக்கிறது.தொடர்ந்து வாசிக்க...


-சேரன்

ஒரு புத்தகம் – ஓர் எண்ணம் – ஒரு திரைப்படம்


சொல்லத்தான் நினைக்கிறேன் – 2
-1 –
சடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சென்ற  வாரம் மீண்டும் ஒரு முறை வாசித்தேன்.  கலாசாரம், புனிதம்  என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான்.  அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.
-அருண்மொழிவர்மன்

மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர்”

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்கப்போவதாகக் கூறிக்கொண்டு தமிழ்மக்களுக்கு எதிராக மிகப்பெரிய அவலத்தை மேற்கொண்ட மகிந்த அரசினை சர்வதேச குற்ற விசாரணைக்குட்படுத்துவதற்கு சிங்கள கட்சிகளே ஆயத்தமாகிவருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்களக் கடும்போக்காளராக சிறிலங்காவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் மகிந்த அரசின் மீது மேற்குலகம் போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்றவேளை, பெரும்பான்மையினத்தின் கொழுத்த ஆதரவுடைய சிங்களக் கட்சிகள் பல இணைந்து மேற்குலகின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்திருக்கின்றன.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பதாக, மகிந்த அரசுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் முன்னணி ஒன்றைக் கட்டமைக்கும் பணியில் தென்னிலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும் - தொடர்ந்து வாசிக்க...


-சேரன்

பிரபாகரன் - சர்வதேசம்: யார் வலையில் யார்?

முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தம்மைக் கட்டமைத்துக்கொண்ட அளவிற்கு அரசியல் ரீதியில் தமது கொள்கைகளை வகுத்துக்கொள்ளவில்லை என்றும் சர்வதேச அரசியலைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிப் போக்கினால்தான் இன்று அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் பல்வேறு வகையான வியாக்கியானங்களை விடுதலைப்புலிகளை ஆரம்பம் முதலே எதிராக விமர்சித்துவந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் எல்லா வெற்றிகளுக்கும் சாமரம் வீசிய பலரும்கூட அவர்களுடன் கூடிநின்று தற்போது தடம் மாறி தத்துவம் பேசத் தலைப்பட்டுவிட்டார்கள்.தொடர்ந்து வாசிக்க...


-தெய்வீகன்

தமிழினத்தின் இன்னொரு வரலாறு: வதைமுகாம் வாழ்வு


தமிழ்மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் கொலைப்படலங்களும் கொடூரங்களும் ஆதாரத்துடன் வெளியாகிவரும் தற்போதைய நிலையில் இன்னமும் சிங்களச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு வதைக்கப்படும் தமிழ் உறவுகள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை அந்தச் சிறைகளிலிருநு்து வெளியே கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை அத்தியாவசியமாகியிருக்கிறது.
கடந்த மே மாத நடுப்பகுதியில் - போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய காலப்பகுதியில் - சிறிலங்கா அரச படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் கொடூரம் தாங்காமல் நிராயுதபாணிகளாகச் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்காப் படைகளால் நூற்றுக்கணக்கான இரகசிய வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு விசாரணைகள் என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
முகாம்களிலிருந்து தினமும் 20 பேர் காணாமல் போகிறார்கள், வெள்ளைவானில் வந்த அடையாள தெரியாத நபர்களால் முகாமிலுள்ளவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்ற செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில், அந்த காணாமல் போதல்களின் பின்னணியில் ' சனல்-4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில் காண்பிக்கப்பட்டது போன்ற சம்பவங்களே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்று சிறிலங்காவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பு சார்ந்த - பெயர்குறிப்பிட விரும்பாத - அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
155போரின் போது அல்லது போரின் கொடூரத்தால் இரண்டு கைகளையும் இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், கண்பார்வையற்றவர்கள் என எல்லோரையும் விசாரணைகள் என்ற பெயரில் அழைத்துச் செல்லும் சிறிலங்காப் படைகள் அவர்களை புகைப்படம் எடுத்தபின்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிவருவதாகவும் ஏனையவர்களைக் காட்டித்தரும்படி அவர்களை வதைப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
-முகிலன்

Thursday, 17 September 2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிவைத்துள்ள மகிந்தவின் மறைமுகத் திட்டம்

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்து தமிழினத்தைப் பகடைக்காயாக்கி அதனை தமது அரசியல் ஆதாயத்துக்கு செம்மையாக  பயன்படுத்துவது சிங்கள தேசத்தின் புதிய முயற்சியில்லை. தமிழினத்தினுள் உள்ள சில கோடரிக்காம்புகளை தமிழர்களுக்கு  எதிராக பயன்படுத்திய சந்திரிகா அம்மையாருக்கு கதிர்காமர் போலவும் ரணிலுக்கு கருணா போலவும் மகிந்தவுக்கு  பிள்ளையான் போலவும் எல்லாக்காலங்களிலுமே அரசுக்குச் சாமரம் வீசும் டக்ளஸ் தேவானந்தா போலவும் தமிழர்களின்  கசப்பான வரலாறு நீண்டுகொண்டே செல்லும்.

அந்த வரிசையில் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் துண்டாடும் இரகசியத் திட்டத்துடன் களத்திலிறங்கியுள்ள மகிந்த அரசு  சத்தம் சந்தடியில்லாமல் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டுவருவதாக கட்சிவட்டாரங்களிலிருந்து  அறியவருகிறது. அதாவது, விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக மார்தட்டி மகிழ்ச்சியடையும் மகிந்த  அரசுக்கு, சிறிலங்காவில் - சிங்கள தேசத்தின் செவிகளுக்கு ஒவ்வாத - தமிழ்த்தேசியம் மற்றும் தமிழர் உரிமை ஆகியவை பற்றி  தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் பலமான அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

tna1போர் முடிவடைந்த சூழ்நிலையில், தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதான பார்வை சர்வதேச அளவில்  அதிகரித்துள்ளது. தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கு இலங்கைத்தீவிலலுள்ள உள்ள ஒரே அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.  ஆகவே, இப்போதைக்கு கூட்டமைப்பினருடன் வெளிப்படையாக முறுகல்பட்டுக்கொண்டால், அது தமக்கு மேலும் சிக்கலை  கொண்டுவரும் என்பது மகிந்த அரசுக்கு உள்ளுர தெரிந்துள்ள விடயம். ஆகவே, இரகசிய சதி மூலம், கூட்டமைப்பினுள்  இறுக்கமாக இருந்துவரும் அந்த ஒற்றுமையைச் சிதைத்துவிடவும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் முறுகலை  ஏற்படுத்தி, தமிழர்களின் ஜனநாயகக் குரலாக ஒலித்துவரும் கூட்டமைப்பின் அத்திவாரத்தினை அடியோடு அழித்துவிடவும் மகிந்த  அரசு படிப்படியாக தனது காய்களை நகர்த்திவருவதாகவும் தெரியவருகிறது. இதற்கு அரசுடன் இணைந்து செயற்படும்  ஈ.பி.டி.பியின் உதவியுடன் காரியங்கள் நடந்துவருவதாக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து வாசிக்க...


-முகிலன்

சிறிலங்கா - மேற்குலகம்: திரைமறைவில் நடைபெறும் பனிப்போர்


சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், நல்லாட்சி விடயத்தில் ஆளும் மகிந்த அரசு காண்பிக்கும் பொறுப்பற்ற போக்கு, சிறுபான்மையின மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறை, தெளிவான திட்டமிடலுடன் அரசு மேற்கொள்ளும் இனச்சுத்திகரிப்பு போன்ற பல விடயங்களில் சீற்றமடைந்துள்ள மேற்குலகம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்தும்வகையில் மறைமுகமாக பல்வேறு அரசியல் - இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மனித உரிமைகள் என்ற விடயத்தில் மேற்குலகத்தின் பேச்சை கேட்காத சிறிலங்கா அரசை மேற்குலகம் வெளிப்படையாக சாடியது. சிறிலங்கா அரசும் பதிலுக்கு மேற்குலகுக்கு எதிராக தனது தெளிவான - திட்டமிட்ட - பிரசாரபோரை முன்னெடுத்தது மட்டுமல்லாமல், தனது போர் நிகழ்ச்சிநிரலுக்கு ஓத்துழைக்காத மேற்குலகுக்கு மேலும் சீற்றத்தை ஏற்படுத்தும்வகையில், பணி நிமிர்த்தம்  சிறிலங்காவை தளமாக கொண்டியங்கிய மேற்குலக ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் பலருக்கு கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியது.
-வானதி

மகிந்தவின் மரணப்பொறிக்குள் விலங்கிட்ட விலங்குகளான தமிழினம்


ஆக்கிரமிப்பு யுத்தத்தில் சரணடைந்த அப்பாவி தமிழர்களை சிறிலங்கா அரச படைகள் விலங்கிட்ட் விலங்குகளைப்போல் ஈவிரக்கமின்றி சுட்டுத்தள்ளும் மிருகவெறித்தனமான கொலைப்படலம் அண்மையில் ஆதாரத்துடன் வெளியாகியிருக்கிறது.
பிரிட்டனை தளமாகக்கொண்டு இயங்கும் 'சனல் - 4' தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொலி மனிதநேயம்மிக்க எல்லா மக்களின் மனங்களையும் ஒரு கணம் உலுப்பியிருக்கிறது. ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் இந்தக்காட்சியை கணனியின் முன்னிருந்து கண்ணீருடன் பார்த்து எழும்பி தன்னுறவுகளை நினைத்து வெதும்புகிறான்.
genocide-killingதற்போதைய நிலையில் ஈழத்தமினத்திற்கு சர்வதேச சமூகம்தான் எல்லாமே என்றாகிவிட்டதால் - இவற்றின் பின்னணியில் - சில நியாயமான வினாக்களை முன்வைப்பது இங்கு சாலப்பொருந்தும்.
கடந்த ஆண்டின் இறுதிப்பகுதி முதல் இந்த ஆண்டின் முற்பகுதிவரை இவ்வாறான சம்பவங்கள் தமிழர்தாயகத்தில் நடைபெறுகின்றன என்று புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் ஒப்பாரி வைத்தழுது தமது உறவுகளை காப்பாற்க்கோரி சர்வதேச சமூகத்திடம் மன்றாடி நின்றபோது, அது பற்றி செயல்ரீதியாக கிஞ்சித்தும் நடவடிக்கை எடுக்காது, தனியே அறிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துவந்த சர்வதேச சமூகம் இன்று இந்த ஆதாரபூர்வமான மனிதப்பேரவலத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
-தெய்வீகன்

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் புதிய போக்கு


ஈழத்தமிழரின் அரசியல் வாழ்வுரிமை தொடர்பில் இந்தியா புதிய போக்கொன்றைக் கடைப்பிடிக்கும் நோக்குடன் தனது இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் தனது புதிய நகர்வினை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எடுத்துக்கூறி அதன் ஊடாக புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களுக்கும் அந்த செய்தியை எடுத்துக்கூறும்படி இந்தியா கோரியிருப்பதாகவும் கொழும்பிலிருந்து பேசவல்ல சில தரப்புக்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் இல்லாத ஒரு வெற்றிடத்தில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தம்மால் இறங்கிவந்து பணிபுரிய முடியும் என்றும் ஈழத்தமிழர்களது போராட்டத்தை பிரபாகரனுக்கு முன், பிரபாகரனுக்கு பின் என்ற ரீதியில் தாம் அணுகவிரும்புவதாகவும் இன்றைய காலகட்டத்தில் தம்மை முழுமையாக நம்பலாம் என்றும் தமிழர்களின் அரசியல் விடிவுக்காக தாம் எந்தப் பணியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்தியா உயர்மட்டம் தமிழர் தரப்புக்கு எடுத்துக்கூறியிருப்பதாகத் தெரிகிறது.
-பொற்கோ 

கட்சிகளின் பெயரையும் கருவறுக்கத் துணிந்த சிங்களம்


சிறிலங்காவில் சிறுபான்மையின மக்களின் அரசியல்,ஜனநாயக அடிப்படை உரிமைகளின் மீது சிங்கள அரசு காலாகாலமாக மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளின் பிந்திய வடிவமாக அங்குள்ள சிறுபான்மைக் கட்சிகளின் பெயர்கள் எந்த ஒரு மதத்தையோ சமூகத்தையோ குறிப்பதாக இருக்கக்கூடாது என்ற புதுவிதமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.

அதாவது சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பெயர்களில் 'தமிழ்த்தேசியம்', 'முஸ்லிம் காங்கிரஸ்', 'விடுதலைப்புலிகள்' போன்ற சொற்கள் இருக்கக்கூடாது என்றும் அவ்வாறான பெயர்களுடன் தற்போது இயங்கிவரும் கட்சிகள் தமது பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும் எனவும் அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த ஜுலை 20 ஆம் திகதி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-தெய்வீகன்

ஈழம்-இந்தியம்-சர்வதேசம்!


சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்று, இந்தியத்தின் துணையோடும் , சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது!
இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும், படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால், ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது.
இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக்கங்களுக்குப் பயிற்சியும் வழங்கியது.
-சர்வ சித்தன்

தாயக உறவுகளின் அவலங்கள் தணிப்போம்


பேரினவாத ஆக்கிரமிப்புப் போரின் உக்கிரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ்மக்களின் முகாம் வாழ்க்கை இன்னமும் முடிவுக்குவராத -  அரசியல் மயப்படுத்தப்பட்ட - சாபக்கேடாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களின் பிரச்சனைகளைக் காணப்பித்து எவ்வாறு வெளிநாடுகளிடமிருந்து நிதியைப் பெற்று ஒரு சொற்பத்தை உதவிவிட்டு மீதியைத் தமது திறைசேரியை நிரப்புவதற்குப் பயன்படுத்தலாம் என்ற திட்டமிடல்களில்தான் கொழும்பு அதிகார வட்டம் தொடர்ச்சியாகப் பயணித்து வருகிறது. இந்நிலையில் முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சனைகள் தினமும் பெருகிப் பெருகி அவர்களின் தேவைகள் அதிகமாகிய வண்ணமுள்ளன.
- முகாம்களிலிருந்த சுமார் 250 இற்கும் மேற்பட்ட கற்பிணித் தாய்மார்களுக்குக் குழந்தைகள் கிடைத்திருப்பதால் அவர்களுக்கான அவசியத் தேவைகள் அவசரமாகியுள்ளன.
- அங்குள்ள சுமார் 40 ஆயிரம் சிறுவர்களுக்கான போசாக்குணவு அவசர தேவையாகியுள்ள அடுத்த விடயம்.
- முகாம்களிலுள்ள பெண்களுக்கான தேவைகள் அவசியம் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு முக்கிய விடயம்.
- சகலருக்குமான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகள்.
- இவை எல்லாவற்றுக்கும் மேலாக அங்குள்ள மக்களுக்கு மூன்று வேளை உணவு.
-தெய்வீகன்

Wednesday, 16 September 2009

புகைப்பழக்கத்தினை நிறுத்த வேண்டுமா?

என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது '2009' ம் வருடம் உங்கள் இலக்கு என்ன? என்று கேட்டேன். புகைப்பழக்கத்தைக் கைவிடுவது என்றார். சரி 2008ம் வருடம் என்ன தீர்மானம் போட்டீர்கள் என்றபொழுது '2008 மட்டுமில்லை.. 2005ம் வருடத்தில் இருந்து இதே தீர்மானம்தான், இதே இலக்குதான். ஆனால் புகைப்பழக்கத்தை விடத்தான் முடியவில்லை' என்றார் அவர். உண்மைதான். எந்த ஒரு தீய பழக்கத்தையும் விடுவது என்பது அவ்வளவு எளிதில்லை. ஆனால், விடாமுயற்சியும், மனத்திண்மையும் இருந்தால் முடியாதது என்பதும் எதுவும் கிடையாது.

புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான சில வழிகளை இங்கு பார்க்கலாம்.தொடர்ந்து வாசிக்க... 


-பாலகார்த்திகா

தியாகதீபம் திலீபன்

தியாகி தீலீபன் அவர்களின் நீரின்றிய உண்ணாவிரத போராட்டம் தமிழீழ விடுதலைப் போரின் ஆன்ம உறுதியை நிலைநாட்டிய நிகழ்வு. ஆயுதம் தரித்து போராடிய வீரன் அகிம்சை வழியிலும் தன்னால் தாயக விடுதலைக்காக உறுதியுடன் போராட முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டி செப்ரம்பர் மாதம் 15 ஆம் திகதி 1987 ஆம் ஆண்டு தனது நீரின்றிய உண்ணாநோன்பை ஆரம்பித்துவைத்தான். பன்னிரண்டு நாட்கள் வெறும் வயிற்றுடன் நீதிகேட்டு போராடிய தியாகதீபம் திலீபன் இந்திய தேசத்தை தலைகுனியவைத்து தன்னுடலை உருக்கி தன்னுயிரை அழித்துக்கொண்டான்.

1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்திய படைகள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டனர். ஈழத்தமிழர்களின் தேசத்தில் அமைதியை ஏற்படுத்தவந்த படைகள் சிறிலங்காவில் நடந்துகொண்டிருந்த நில ஆக்கிரமிப்பை கண்மூடி பார்த்துக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அவசர ஒன்றுகூடலை செய்தது.


தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 15 September 2009

புகைப்பழக்கத்தினை நிறுத்த வேண்டுமா?

என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது '2009' ம் வருடம் உங்கள் இலக்கு என்ன? என்று கேட்டேன். புகைப்பழக்கத்தைக் கைவிடுவது என்றார். சரி 2008ம் வருடம் என்ன தீர்மானம் போட்டீர்கள் என்றபொழுது '2008 மட்டுமில்லை.. 2005ம் வருடத்தில் இருந்து இதே தீர்மானம்தான், இதே இலக்குதான். ஆனால் புகைப்பழக்கத்தை விடத்தான் முடியவில்லை' என்றார் அவர். உண்மைதான். எந்த ஒரு தீய பழக்கத்தையும் விடுவது என்பது அவ்வளவு எளிதில்லை. ஆனால், விடாமுயற்சியும், மனத்திண்மையும் இருந்தால் முடியாதது என்பதும் எதுவும் கிடையாது.

புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான சில வழிகளை இங்குப் பார்க்கலாம்.தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

Monday, 14 September 2009

"மகிந்த சிந்தனை"யில் மாயமான பொன்சேகா

போர் முடிவடைந்துவிட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு மாதங்களில், நாட்டின் இராணுவ இயந்திரத்தில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றங்கள் படையினர் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாற்றங்களில் மிகமுக்கியமானதாகக் கருதப்படும் முன்னாள் இராணுவதளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிப்பறிப்பு அரசுத்தலைவர் மகிந்தவின் பல்வேறு சிந்தனைகளை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு எத்தகையது என்பது அனைவரும் அறிந்த விடயம். நடந்து முடிந்த போரில், வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலைக் களத்திலே செயற்படுத்தும் பணியையே சரத்பொன்சேகா மேற்கொண்டிருந்தார்.


தொடர்ந்து வாசிக்க...

Sunday, 13 September 2009

சந்தைக்குப் போகணும் – கார்டு குடு


"சந்தைக்குப் போகணும், காசு குடு; ஆத்தா வைய்யும்", என்று பறட்டையிடம் கெஞ்சும் சப்பாணியின் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. வாரம் ஒரு முறை கூடும் சந்தையில் என்னவெல்லாம் வாங்கவேண்டும் என்று வாரம் முழுவதும் பட்டியலிட்டு, சிறுகச் சிறுகச் சேமித்து, காசைக் கடைக்காரரிடம் கைமாறும் முன்னே, நூறு முறை எச்சில் தொட்டு எண்ணிய பிறகே கொடுப்பது என்று இருந்தது அந்தக் காலம்.
காலச் சக்கிரம் சுழல, பணப் புழக்கமும், அதன் பரிமாணங்களும் மாறின. இன்று வர்த்தகங்களின் பெரும் பகுதி Card Transaction இல் நடைபெறுகிறது. சொல்லப்போனால், "மால்" என்று சொல்லப்படும் அடுக்குமாடிக் கடைகளிலும் – பெட்ரோல் பங்கிலும் தான் Card Transactions அதிகப்படியாக நடக்கிறது. மிகமிகத் தேவையான அளவு காசை வைத்துக்கொண்டு மற்றதை இம்மாதிரி Card Transaction செய்வது வசதி மட்டுமில்லை, பாதுகாப்பானதும் கூட என்று சொல்லலாம். கடன் அட்டைப் பாதுகாப்பு - சில ஆலோசனைகள் என்னும் பதிவில் மேற்படி விவரங்களைக் காணலாம்.
-தீபா கோவிந்