Monday 28 September 2009

கண்பறித்துக் காட்சிகொடுக்கும் சர்வதேசம்


சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் "ஆழிப் பேரலை" என்னும் இயற்கையின் கோரப் பசிக்கு ஆயிரக் கணக்கில் மனித உயிர்கள் பறிக்கப்பட்டபோது, அந்த இயற்கையின் சீற்றத்துக்கு எதிராக எதுவும் செய்ய இயலாத நிலையில் மனிதகுலம் அலறித்துடித்தது!
பேரலையில் அள்ளுண்டுபோன மனித உயிர்களுக்காகப் பிரார்த்தனைகளை நடாத்தித் தன் இயலாமைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது உலக சமுதாயம். எஞ்சியிருந்தவர்களுக்கு உதவுவதற்காக இனம்-மொழி வேறுபாடின்றி உதவுவதற்கு ஓடோடி வந்தது சர்வதேசம்.
ஆனால்…….மனிதர்களால்…………."ஏகாதிபத்தியப்" பேராசை கொண்ட நாடுகள் சிலவற்றின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட பல்லாயிரக் கணக்கிலான மனிதப் படுகொலைகளைக் கண்டும், காணாதவர்களைப் போன்று கைகளைக் கட்டிக்கொண்டிருந்தது இதே சர்வதேசம்.
Kouchner-and-Miliband-in--002போதாதென்று…. அங்கு மனித அவலங்கள் நடந்தேறுவதற்கான அத்தனை இழுத்தடிப்புகளையும் சாவகாசமாகப் புரிந்து கொண்டிருந்தன ‘ஐ.நா’வும் அதன் அங்கத்துவ நாடுகள் சிலவும்!
இயற்கையின் கோபத்தின்போது உயிர்கள் பலியான நிகழ்வு மட்டுமே இடம்பெற்றிருந்தது. அப்போது "இயற்கை" எவரையும் சித்திரவதை செய்யவில்லை பாலியல் துன்புறுத்தல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கவில்லை! பட்டினிபோட்டுப் பணியவைக்கும் தந்திரத்தையோ, பசியால் பரிதவிக்கும் மக்களைப் பார்த்துக் கைகொட்டி ரசிக்கும் ஈனத்தனத்தையோ இயற்கை செய்துவிடவில்லை.


-சர்வசித்தன்

No comments:

Post a Comment