Thursday 17 September 2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிவைத்துள்ள மகிந்தவின் மறைமுகத் திட்டம்

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்து தமிழினத்தைப் பகடைக்காயாக்கி அதனை தமது அரசியல் ஆதாயத்துக்கு செம்மையாக  பயன்படுத்துவது சிங்கள தேசத்தின் புதிய முயற்சியில்லை. தமிழினத்தினுள் உள்ள சில கோடரிக்காம்புகளை தமிழர்களுக்கு  எதிராக பயன்படுத்திய சந்திரிகா அம்மையாருக்கு கதிர்காமர் போலவும் ரணிலுக்கு கருணா போலவும் மகிந்தவுக்கு  பிள்ளையான் போலவும் எல்லாக்காலங்களிலுமே அரசுக்குச் சாமரம் வீசும் டக்ளஸ் தேவானந்தா போலவும் தமிழர்களின்  கசப்பான வரலாறு நீண்டுகொண்டே செல்லும்.

அந்த வரிசையில் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் துண்டாடும் இரகசியத் திட்டத்துடன் களத்திலிறங்கியுள்ள மகிந்த அரசு  சத்தம் சந்தடியில்லாமல் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டுவருவதாக கட்சிவட்டாரங்களிலிருந்து  அறியவருகிறது. அதாவது, விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக மார்தட்டி மகிழ்ச்சியடையும் மகிந்த  அரசுக்கு, சிறிலங்காவில் - சிங்கள தேசத்தின் செவிகளுக்கு ஒவ்வாத - தமிழ்த்தேசியம் மற்றும் தமிழர் உரிமை ஆகியவை பற்றி  தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் பலமான அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

tna1போர் முடிவடைந்த சூழ்நிலையில், தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதான பார்வை சர்வதேச அளவில்  அதிகரித்துள்ளது. தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கு இலங்கைத்தீவிலலுள்ள உள்ள ஒரே அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.  ஆகவே, இப்போதைக்கு கூட்டமைப்பினருடன் வெளிப்படையாக முறுகல்பட்டுக்கொண்டால், அது தமக்கு மேலும் சிக்கலை  கொண்டுவரும் என்பது மகிந்த அரசுக்கு உள்ளுர தெரிந்துள்ள விடயம். ஆகவே, இரகசிய சதி மூலம், கூட்டமைப்பினுள்  இறுக்கமாக இருந்துவரும் அந்த ஒற்றுமையைச் சிதைத்துவிடவும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் முறுகலை  ஏற்படுத்தி, தமிழர்களின் ஜனநாயகக் குரலாக ஒலித்துவரும் கூட்டமைப்பின் அத்திவாரத்தினை அடியோடு அழித்துவிடவும் மகிந்த  அரசு படிப்படியாக தனது காய்களை நகர்த்திவருவதாகவும் தெரியவருகிறது. இதற்கு அரசுடன் இணைந்து செயற்படும்  ஈ.பி.டி.பியின் உதவியுடன் காரியங்கள் நடந்துவருவதாக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



தொடர்ந்து வாசிக்க...


-முகிலன்

No comments:

Post a Comment