Tuesday 8 September 2009

பறவைகளின் ஒலி : Birds Vocalization


நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் ஒலிகளின் அளவும், அதன் அழகு/கோர ஒலிக்குறிப்புகளும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி எவ்வாறாக அந்த நாள் நகர்கிறது என்பதனைத் தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது அல்லவா? அதற்குச் சான்றாக கிராமப் புறங்களில் அல்லது நிறைய மரங்களுடன் கூடிய வசிப்பிடங்களைப் பெற்றவர்கள் தம் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்னமே பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே எழுந்திருப்பதையும் பலத்த வாகன இரைச்சலுக்கிடையே வாழும் ஒருவர் தன் நாளைத் தொடங்குவதற்குமான வித்தியாசத்தையும் கொண்டு அறியலாம்.
இயற்கையின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்ற இந்த ஒலிகளை (calls and songs) எழுப்பும் பறவைகளின் உலகில் அந்த ஒலிகளுக்கான பொருள் அறிவது அவசியமாகப்படுகிறது. கண்டிப்பாக பறவைகளின் சங்கீதம் எது போன்ற சிந்தனைகள் நம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தாலும், அது ஓர் இனிமையான நாளைத்தானே தொடக்கமாக ஆரம்பித்து வைக்கிறது. அது போன்ற ஒலிகளை எழுப்பும் பறவைகளின் சங்கீதங்களுக்குப் பின்னால் இருக்கும் பரிணாமச் சூத்திரத்தைக் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?


-அ.பிரபாகர்

No comments:

Post a Comment