Wednesday 23 September 2009

பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. பங்குச்சந்தையில், குறிப்பாக நாள் வணிகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இந்தப் பகுதியில் பார்த்தோம்.
நாள் வணிகம் மிக எளிமையானதாகவும் அதிக லாபகரமானதாகவும் தோற்றமளிக்கலாம். ஆனால், எதிரி நாட்டில் உளவு அறியச் சென்றிருக்கும் இராணுவ வீரன் போல் நாம் ஒவ்வொரு கணமும் தயார் நிலையில் இருப்பது அவசியம். நாள் வணிகத்தின்பொழுது பின்பற்ற வேண்டிய சில விதிகள் குறித்தும், நாள் வணிகத்தில் ஆதாயமடைவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும் சில கருத்துகளை இக்கட்டுரையில் காணலாம்.

share-market-213தொலைக்காட்சியில் / அல்லது செய்தித்தாளில் கொடுக்கப்படும் கணிப்புகளை அப்படியே நம்பவேண்டாம். இவ்வாறு கூறப்படும் பங்குகளில் அதிகப்பேர் ஆர்வம் காட்டுவதால் விலை கன்னாபின்னாவென்று அதிகரிக்கும். இத்தகைய போக்கு நீடிக்கும் என நம்ப இயலாது. நீங்களே, சரியான பங்குகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதே போல் பிறர் வாங்குவதைப் பார்த்து வாங்கக் கூடாது என்பதை ஏற்கனவே கண்டோம்.



தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

No comments:

Post a Comment