Tuesday 22 September 2009

உடல் எடைக்குறியீட்டு எண்

உடல் எடைக்குறியீட்டு எண் என்பது நம் உடல் எடையையும், நம் உயரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படும் ஒன்றாகும். இது ஒரு புள்ளி விவரக் கணக்கு. இக்குறியீடு நமது உடலில் உள்ள கொழுப்பு முதலியவற்றை அளவிடுவது இல்லை. ஆனால், இந்த உயரத்திற்கு இந்த அளவு எடை இருப்பின் அது சராசரியான எடையா, அதிக எடையா, குறைவா என்று நாம் தெரிந்து கொள்ள உதவுவது இந்தக் குறியீடு. இது கணக்கிடுவதற்கு எளிதானது. எனவே உலகம் முழுவதும் எடை குறித்த பிரச்னைகளைக் கண்டறிய (Diagnose) அதிக அளவு பயன்படுத்தப் படுகிறது. இம்முறை பெல்ஜியத்தில் இருந்த ஒரு அறிஞரால் ஏறத்தாழ 1830-1850 அளவில் உருவாக்கப் பட்டது.

உடல் எடைக்குறியீட்டு எண்ணைக் கணக்கிடுவது எப்படி?

நமது உயரத்தையும், உடல் எடையையும் கொண்டு கணக்கிடப்படுவது இது. மெட்ரிக் முறை ( மீட்டர் / கிலோகிராம்) மற்றும் பழைய அளவீடுகளான பவுண்டு, அங்குலம் ஆகிய இரு வித அளவுகளுக்கும், இரு விதமான சூத்திரத்தைக் (Formula) கொண்டுள்ளது. உடல் எடைக்குறியீட்டு எண்ணுக்கான படிவம் ( BMI Chart) கொண்டும் இதைக் கண்டு பிடிக்கலாம். இந்தப் படிவத்தில் உடல் எடையானது கிடை அச்சிலும் (Horizontal Axis) உயரமானது செங்குத்தான அச்சிலும் (Vertical Axis) கொடுக்கப் படும்.இதன் மூலம் வெவ்வேறு அளவுகளுக்கான சரியான உடல் எடைக்குறியீட்டு எண்ணைக் (Body Mass Index) கண்டறியலாம்.

உடல் எடைக்குறியீட்டு எண்ணை அளவிடுவதற்கான சூத்திரங்கள்:



தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

No comments:

Post a Comment