Thursday 10 September 2009

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

கோபம் என்ற ஒரு குணம், நமது வாழ்வின் நிம்மதியை முற்றிலும் குலைக்கக் கூடியது. நமது குடும்ப வாழ்க்கை, தொழில் இரண்டையும் ஒருசேர அழித்துவிடக்கூடியது கோபம். கோபத்தின் தீமைகளைக் கூற வரும் வள்ளுவர் அதை 'சேர்ந்தாரைக்கொல்லி' என வருணிக்கிறார். அதாவது தான் எங்கிருக்கிறோமோ அந்த இடத்தை அழித்துவிடக்கூடிய தீ என்பது இதன் பொருள். கோபத்தால் ஏற்படும் நாசத்தை இதைவிடத் தெளிவாகக் கூற இயலாது. கோபம் நம் சிந்திக்கும் திறனை மழுங்கடித்துவிடும். நமது நினைவாற்றலைக் குறைத்துவிடும்.'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி இதைக் குறித்து எழுந்ததே!

anger21இன்றைய பரபரப்பான உலகம், வேகம் நிறைந்த உலகம் நம்மில் பலருடைய இயல்பான அமைதியான குணத்தை மாற்றி கோபக்காரர்களாக ஆக்கி விடுகிறது. கோபத்தின் காரணமாக உடல் நலம் கெடுகிறது. மன உளைச்சல் ஏற்படுகிறது. குடும்ப உறவுகள் சிதைகின்றன. இன்னும் பல மோசமான விளைவுகள் நேரிடுகின்றன.
இதைத்தான் வள்ளுவர்
'நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
' என்கிறார்.
இத்தகைய பல கேடுகளை உண்டாக்கும் சினத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான திறனை வளர்த்துக்கொள்ள சில வழிகளை இங்குப் பார்க்கலாமா?



-பாலகார்த்திகா















No comments:

Post a Comment