Friday, 30 October 2009

சிங்களத் தலைவர்களும் இனவாரிப் பிரதிநிதித்துவத்துவமும்


Ponnambalam_arunachalamநான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் இராமநாதன் இருவரும் இலங்கை அரசியலிலும் சமூக தளத்திலும் இமயம் போல் வலம் வந்தார்கள். இந்தக் கால கட்டத்தில் இவர்கள் இருவரும் இலங்கையின் சிறந்த தேசியத் தலைவர்களாகக் கருதப்பட்டனர்.
பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14, 1853 - ஜனவரி 9, 1924) கேட் முதலியார் என அழைக்கப்பட்ட அருணாசலம் பொன்னம்பலம், செல்லாச்சி (சேர் முத்து குமாரசுவாமியின் உடன்பிறப்பு) ஆகியோரின் மூன்றாவது மகனாவார். பொன்னம்பலம் குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது உடன்பிறப்புக்கள் ஆவர்.
பொன்னம்பலம் குமாரசுவாமி புகழ்பெற்ற சட்டத்தரணியாவார் (Proctor). 1893 இல் இலங்கை சட்டசபைக்கு நியமன உறுப்பினராக இருந்தார். இளவயதில் இவர் காலமாகி விட்டார்.-நக்கீரன்

Thursday, 29 October 2009

பரஸ்பர நிதிகள்


பரஸ்பர நிதிகள் என்றால் என்பது ஒரு வித முதலீட்டு நிறுவனங்களே! 'சிறு துளி பெருவெள்ளம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவன இந்தப் பரஸ்பர நிதிகள். நீங்கள் எத்தகைய முதலீடு செய்யவேண்டும் என்று விரும்பினாலும் அதற்கேற்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தை(Investment Scheme), பரஸ்பர நிதியங்கள் வழங்குகின்றன.ஏறத்தாழ இருபது வருடங்களாகப் பிரபலமாக இருக்கும் இந்தப் பரஸ்பர நிதியங்களுக்கான தொடக்கம் 1774ம் ஆண்டே ஹாலந்து நாட்டில் ஏற்பட்டது. இன்று பங்குச்சந்தைக்கு இணையாக பரஸ்பர நிதியங்கள் பல வந்துவிட்டன.


-பாலகார்த்திகா

மனதில் சுமப்பது குப்பைகளையா?


பாரதியார் குள்ளச் சாமி என்ற ஒரு சித்தரை அறிந்திருந்தார். அவர் மீது மிகவும் மதிப்பும் கொண்டிருந்தார். ஒரு முறை குள்ளச்சாமி பழங்கந்தைகளும், குப்பைகளும் கொண்ட அழுக்கு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி வருவதைக் கண்ட பாரதியாருக்கு என்னவோ போல் ஆகி விட்டது. சித்தராகக் கொண்டாடியவரை இப்படி பழங்குப்பை சுமக்கும் பைத்தியக்காரராகக் காணும்படியாகி விட்டதே என்று பாரதியாருக்கு ஒரே வருத்தம்.
life-not-easy"ஐயா ஏனிந்த கோலம். உங்கள் செய்கை பைத்தியக்காராரரின் செயல் போலல்லவா இருக்கிறது" என்று கேட்டார் பாரதி.
என்.கணேசன்

Wednesday, 28 October 2009

கல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம்


இலங்கைத்தீவானது பிரித்தானியா காலனியாதிக்கத்தின் பின்னர் பல இனப்படுகொலைகளை கண்டிருக்கிறது. 1983 இல் நடந்த இனப்படுகொலையானது உலக மனசாட்சியை உலுப்பிய ஒரு நிகழ்வாக இருந்தபோதும் முதலாவது இனப்படுகொலையாக கருதப்படும் 1956 இல் நடத்தப்பட்ட கல்லோயா படுகொலையை பற்றிய பார்வையை பதித்தல் முக்கியமானது என கருதுகிறோம்.
விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட பதுங்கிதாக்குதலின் எதிரொலியாகவே ஜூலை இனப்படுகொலை ஆரம்பமானது என இப்போதும் எம்மவரில் சிலர் கூறுவர். விடுதலைப்புலிகளால் சிங்கள படையினர் கொல்லப்பட்டதால் தான் பெரும்பான்மை இனத்தின் எதிர்வினை ஒரு இனப்படுகொலைக்கு வித்திட்டதாக கூச்சப்படாமல் நியாயப்படுத்தும் ”விற்பன்னர்கள்” இப்போதும் எம்மத்தியில் உண்டு. கடந்த கால வரலாறுகளை சரியாக அறிந்துகொள்ளாமல் விட்டாலும் அல்லது வரலாற்றை கெட்டித்தனமாக மறைக்க முற்பட்டாலும் நிகழ்காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் கேள்விக்குரியதாக்கிமாற்றிவிடுவோம்.
with_GG_Ponnambalam_and_Chelvanayagam_Thirucheclvam001


-கொக்கூரான்

Tuesday, 27 October 2009

மகிந்தவின் தேர்தலுக்கு எதிராக தமிழ்மக்கள் வகுக்கவேண்டிய வியூகம்

அரங்கேறப்போகும் அடுத்த ஐனாதிபதித்தேர்தலை மையப்படுத்திய அரசியல் நகர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல்களின் முடிவுகள் அரச தலைவர் ராஐபக்சவுக்கு சாதகமாக அமைந்தாலும் மகிந்த தனது வெற்றி வாய்ப்பு தொடர்பில் அச்சமடைந்ததாகவே தெரிகின்றது. யுத்தவெற்றியைக் காட்டி சிங்கள வாக்குகளை பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டாலும் அதை மட்டும் நம்பமுடியாத நிலை ராஐபக்சவுக்கு உள்ளது.


Mahinda_wif_baffollow


தொடர்ந்து வாசிக்க...

ஈழவன் மறக்க மாட்டான்


வழியெதும் தெரியார் அந்த
வவுனியத் தெருவின் மன்றில்
சுழியதில் அகப்பட் டோராய்ச்
சிக்கினர், நகர ஆட்சி
விழியதாய் ரதனே என்னும்
வேரினர் கண்டார், உற்ற
அழிவிலே நின்றார் தம்மை
ஆலயத் திருத்திக் காத்தார்!
Eelavan_Marrka_Mataan

-ஈழமாறன்

Monday, 26 October 2009

சங்க இலக்கியம் காட்டும் இறையுணர்வு

இன்றைய தமிழகத்தில் தமிழ்த்தலைவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்பவர்கள் ஒரு போலியான பகுத்தறிவு வாதம் பேசி வருவதோடு, தமிழர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள் என்றும், ஆரியர்கள் என்று இவர்கள் சொல்பவர்கள் வந்து தமிழ்நாட்டில் பொய்யாக மத நம்பிக்கையையும், வடமொழியாளர்களுடைய இறை வழிபாட்டு முறைகளையும் புகுத்தி விட்டார்கள் எனவும் பொய் பேசித் திரிகிறார்கள். ஆனால், சங்க இலக்கியங்கள், வடமொழியின் ஆதிக்கம் இங்கு வரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட முதற்சங்க இலக்கியங்கள், தமிழரின் வீரம், காதல், கொடைச்சிறப்பு இவை குறித்து மட்டுமில்லாது அவர்களுடைய சமய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் இவை குறித்தும் சாட்சி கூறுகின்றன.


தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

Sunday, 25 October 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 02


இந்துமா கடலைச் சுற்றி
   எத்தரின் கூடா ரங்கள்!
கந்தகச் சுரங்கத் தோடு
   கயவராய்ப் பலநா டுகள்!
செந்தமிழ் நிலத்துட் சிங்கச்
   சேனையர்க் காகக் கொட்டி
வந்தவல் லரசார் எல்லாம்
   வன்னியை முடித்தே விட்டார்!
eelakaviyam2
தொடர்ந்து வாசிக்க...

உள்ளிருப்போர் வர்த்தகம் - பங்கு வர்த்தக மோசடி


இன்று அமெரிக்காவின் பங்குச்சந்தையை, தவறு - அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டிருப்பது கல்லியான் ஹெட்ஜ் ஃபண்ட் (Galleon Hedge Funds) நிறுவனர் திரு ராஜ் ராஜரத்தினம் என்பவரும் மேலும் ஐந்து நபர்களும் செய்ததாகக் கூறப்படும் ஏறத்தாழ 20 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பங்குச்சந்தை தொடர்பான மோசடி. இவர்கள் மீது பிற நிறுவனங்களின் அந்தரங்கமான தகவல்களைத் திரட்டி, அந்தச் செய்திகளைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை Insider Trading என்பர். இதனைத் தமிழில் 'உள்ளிருப்போர் வர்த்தகம்' எனக் கூறலாம்.

உள்ளிருப்போர் வர்த்தகம் அதாவது Insider Trading என்றால் என்ன? அதைக்குறித்து, இந்தப் பங்குச்சந்தைப் பகுதியில் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
Raj-Rajaratnamபங்குச்சந்தைகளில் ஏற்படும் ஊசலாட்டத்திற்கும், பங்குகளின் விலை ஏறி இறங்குவதற்கும் நிறுவனங்கள் குறித்த தகவல்களும் காரணம் என்று முன்பே பார்த்தோம்.-பாலகார்த்திகா

Friday, 23 October 2009

உலங்குவானூர்தி (Helicopter


300px-LAPD_Bell_206_Jetrangerஉலங்கு வானூர்திகள் வான்வழிப் போக்குவரத்தின் இன்னொரு பரிமாணமாகவே காணப்படுகின்றன. உலங்குவானூர்திகள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிடைச்சுழலிகள் (horizontal rotor) கொண்டிருப்பதோடு ஒவ்வொரு சுழலியும் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சுழலித்தகடுகளைக் (rotor blades) கொண்டிருக்கக் காணப்படுகின்றன. உலங்குவானூர்திகள் நிலையான இறக்கைகளைக்கொண்ட வானூர்திகளிலிருந்து அவற்றின் நிலைக்குத்தான தூக்குசக்தியை (vertical lift) உருவாக்கும் விதத்தினால் வேறுபடுகின்றன.
உலங்குவானூர்திகளின் பிரதான அனுகூலமானது அவற்றின் நிலையான இடத்திலிருந்து மேலெழவோ கீழிறங்கவோ கூடிய தன்மையேயாகும். ஓடுபாதையின்றி சிறிய பகுதியில் தரையிறங்கவோ அல்லது மேலெழவோ கூடிய இத்தன்மையின் காரணமாக விமானங்களைப் பயன்படுத்த முடியாத பகுதிகளில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்த முடிகின்றது.


-ஜெயசீலன்

ராஜரட்ணம் விவகாரத்தில் மீன்பிடிக்கத் துடிக்கும் ராஜபக்ச அரசு

பங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்தகச் சட்டமூலங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் என்ற தமிழர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நாய்க்கு எங்கே கல் எறி விழுந்தாலும் காலைத் தூக்கிக்கொண்டு ஓடுவது போல தமிழர் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை அறிந்தமாத்திரத்திலேயே அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முடிச்சிட்டு, கைதுசெய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் விடுதலைப்புலிகளுக்கு நிதிவழங்கினார் என்ற அறிக்கையை அவசர அவசரமாக விடுத்துள்ளது சிறிலங்கா அரசு.


Raj_2
தொடர்ந்து வாசிக்க...


-சேரன்

Thursday, 22 October 2009

தகவல் தொடர்பில் உடல் மொழியின் பங்கு


தகவல் தொடர்பு(Communication) என்பது ஒருவர் தமது கருத்துக்களை, தமது தேவைகளை பிறருக்கு அறிவிப்பது ஆகும். ஆராய்ச்சிகள் பல, விலங்குகள், பறவைகள், ஏன், மரம் செடி கொடிகள் கூட தகவல்களைத் தமக்குள் பரிமாறிக்கொள்கின்றன என்று கூறுகின்றன. ஆனால், மனித இனமானது பேசவும் எழுதவும் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் தொடர்பின் உயரிய நிலையில் உள்ளது. இருந்தாலும், ஒருவருக்கொருவர் நேர்முகமாகப் பேசுகையில் நமது அடிப்படைத் தகவல் தொடர்பு சாதனம் உடல் மொழியே(Body Language) ஆகும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டினரும் பேசும் மொழி மாறுபடலாம். ஆனால் உடல் மொழி பொதுவாக மனித இனம் முழுவதற்குமே பொதுவானது. பசிக்கிறது என்பதற்கு வயிற்றைச் சுட்டிக்காட்டினாலும், போதும் என்பதற்குக் கையை உயர்த்திக்காட்டினாலும் எல்லாருமே புரிந்துகொள்ளலாம்தானே.

body-language
பாலகார்த்திகா

Wednesday, 21 October 2009

வெற்றிக்குணங்கள் 13

அது எப்படி சாத்தியமாயிற்று என்றறிய ஆர்வம் காட்டுதல் வெற்றியடையத் துடிக்கும் அனைவருக்குமே இயல்பல்லவா?


ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால் ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கை அல்லவா? அது எப்படி சாத்தியமாயிற்று என்றறிய ஆர்வம் காட்டுதல் வெற்றியடையத் துடிக்கும் அனைவருக்குமே இயல்பல்லவா?


-என். கணேசன்

இராணுவப்புரட்சி வருமா? அச்சத்தில் மகிந்த அரசு!

பாடுபட்டு தமது படையினர் கைப்பற்றிய பிரதேசங்களில் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தமிழ்மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தி சிறிலங்கா இராணுவத்துக்கு விருப்பமில்லாத அந்த காரியத்தை மேற்கொண்டால் அரசாங்கத்தை இராணுவ சதி மூலம் கவிழ்த்துவிடுவர் என்று சிறிலங்கா அரச அதிபர் புதுக்கதை ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் மேற்படி இந்திய எம்.பிக்களின் குழுவுக்கும் இடையே கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய எம்.பி ஒருவர் தமது தூதுக்குழுவிடம் சிறிலங்கா அரச அதிபர் இத்தகைய ஒரு தகவலை தெரிவித்தார் என்று கூறியிருக்கிறார்.LG-East


தொடர்ந்து வாசிக்க...

ஆயுதம் ஒன்றே பிணக்கினை வெல்லும்


நான்...
எப்போதும் போலவே
இப்பொழுதும்...

**தகடூரை அண்டிய அதிகமானின்
நெல்லிக் கனிக்காய்
அலைந்து,அலைந்து....
அங்கிருந்து இங்கும்,Aayuthamendre_Penekinai_Vellum


Tuesday, 20 October 2009

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

கனி ஜோதிடம் தெரியுமா உங்களுக்கு? கிளி ஜோதிடம் தெரியும், அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி, நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.

கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன, பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!

மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

Monday, 19 October 2009

ஈழத்தமிழர் கண்ணீரால் நிரம்பியுள்ள இந்தோனேஷியக் கடல்


இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி படகில் சென்று கொண்டிருந்த 260 ஈழத்தமிழர்கள் இந்தோனேஷிய கடற்படையினரால் நடுக்கடலில்வைத்து பிடிக்கப்பட்டு இந்தோனேஷியாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட விடயம் ஆஸ்திரேலியாவில் பாரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு இந்தோனேஷியாவிலிருந்து படகு ஒன்று புறப்பட்டு ஆஸ்திரேலியா வந்து கொண்டிருப்பதாகவும் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் நேரடியாக இந்தோனேஷிய அரச தலைவருக்கு தொலைபேசி மூலம் அறிவித்து உள்நாட்டில் மேற்கொண்ட அரசியல் ஸ்டன்ட் அவரது அரசை பூமராங் போல திருப்பி தாக்கத் தொடங்கியுள்ளது.

srilanka8-600x400


தொடர்ந்து வாசிக்க...

Saturday, 17 October 2009

குருதி காயாத தேசத்தில் போய் குசலம் விசாரித்த அரசியல்வியாபாரிகள்

இலங்கை இந்திய கூட்டுச்சதித்திட்டத்தின் ஆலாபனைகள் தொடங்கிவிட்டன. இலங்கைக்கான ஊர்வலத்திருவிழாவை முடித்துவிட்டு வந்த இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்களை, மூலமூர்த்தியே நேரில் சென்று வரவேற்று கலந்துரையாடி வழக்கமான பத்திரிக்கையாளர் மாநாடும் நடத்திமுடித்துவிட்டார். இதனூடாக இலங்கை மக்கள் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்திய மூலமூர்த்தியான கருணாநிதி, தனது சாதனைப்பட்டியலையும் சேர்த்தே நிரப்பியுள்ளார். ஊரே அழுதபோது ஊமையன் விசிலடித்தது போல தங்களது வழமையான கூத்தை நிறைவேற்றிவிட்டது தமிழக அரசு.Mahinda_Indian_MP13909_1தொடர்ந்து வாசிக்க...Friday, 16 October 2009

கவிஞர் தாமரை - ஒரு குறிப்பும் பேட்டியும்


திரைத்துறை: ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்தது, இருக்கிறது .
கனிமொழி மற்றும் வைசாலி கண்ணதாசன் போன்றோர் முன்பே பாடல்கள் எழுதி இருந்தாலும் அவர்கள் திரையிசைப் பாடலாசிரியர்களாக தங்கள் துறையை மாற்றிக் கொள்ளவில்லை. இயந்திரவியல் படித்து இயந்திரங்களுடன் பழகத்தலைப்பட்ட ஆறுவருடங்களின் பின் கவிதைகளுக்கான தன் தாகத்தை உணர்ந்தவராய் பாடல் புனையத் தொடங்கியவர் கவிஞர் தாமரை.
Thamaraiஈழநேசன் தளத்துக்காக தாமரை தந்த செவ்வி."கண்ணனை"க் கொண்டாடிக் "கம்ஸனை" ஆதரிப்போர் !


அண்மையில் 13 அக் 2009 அன்று வெளியாகியிருந்த இரண்டு செய்திகள் தாம் எனக்கு ‘இந்தக் கட்டுரை’யினை எழுதத் தூண்டியது.
அதில் ஒன்று, தமிழக நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆருண் என்பவர் கூறிய தகவல்.
"இந்திய ஊடகங்கள் தெரிவிப்பது போன்று தமிழர்கள் அவல நிலையில் இல்லை" என்றும், வடக்கு இடம்பெயர் முகாம்களை நேரில் பார்வையிட்டதின் மூலமாகத் தாம் இந்த உண்மையைக்(!) கண்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
gr_with_indian_delegation


-சர்வசித்தன்

சுடருள் இருள் | இரண்டாம் உலகபோரில் மானிடக் கூடுகள்


"சுடருள் இருள்" என்கிற பெயரில் நண்பர்கள் இணைந்து ஒன்றுகூடல் ஒன்றை சென்ற வாரம் ஒழுங்கமைத்து இருந்தோம். "சுடருள் இருள்" என்கிற வரிகள் கபிலரின் பாடல் ஒன்றில் வருகின்றன. வாழ்வு பற்றிய எத்தனை மகிழ்வுகளும், வெற்றிகளும் இருப்பதாக நாம் காட்டிக் கொண்டாலும் அல்லது எண்ணிக் கொண்டாலும் அதன் இடையிலும் ஓர் இருள் ஓயாது இருந்து கொண்டே இருக்கின்றது என்ற அர்த்தத்தை இந்த வரிகளில் இருந்து நான் புரிந்து கொண்டேன்.


-அருண்மொழி வர்மன்

Thursday, 15 October 2009

தூரத்து வெளிச்சம்


இறக்கை இழந்த
சிறுநெல்மணிக்கான
பறவைக் குறுநடையோடு
தேடித்தேடி
களைத்திருந்தான்
எவனுக்கோ இவனுக்கோ
உருவங்கள் சாயங்கள் மறையும் வரை
சீட்டுக்கள் என்றும்  ஏமாற்றுவதில்லை
கதைகளை புனைந்து

Thurathu_Velicham


-கயல் லக்ஷ்மி

இயற்கை எரி பொருள் வளத்திற்கு ஃபாசில் தேவையில்லை


இந்த ஃபாசில் எரிபொருட்கள் (Fossil Fuel) எங்கிருந்து வருகிறது? பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினூடே பயணித்து இன்று நமக்குப் பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து சதுர அடி தாவரப் பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்திருந்தால் நாம் இன்று அழித்துத் தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கக் கூடுமென்று.


- அ. பிரபாகர், PHD


Wednesday, 14 October 2009

நிறங்களும் அவற்றின் குணங்களும் - 2

சென்ற கட்டுரையில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தன்மையுண்டு என்பதையும், உளவியலில் அடிப்படை நிறங்கள் பதினொன்று எனவும், அவற்றுள் பச்சை, சிவப்பு, ஊதா, நீலம், ஆரஞ்சு மற்றும் மஞ்சளின் குணங்களையும் கண்டோம். அதன் தொடர்ச்சியாக மற்ற ஐந்து நிறங்களான கறுப்பு, வெண்மை, இளஞ்சிவப்பு (ரோஜா நிறம்), பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தின் தன்மைகளை இங்குக் காணலாம்.


தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

தமிழரும் இலங்கையரும்


"பிரபாகரன் என்ற மனிதர் உயிரோடு இருக்கிறார்.அவரால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டுக்கோப்புடன் இருக்கிறது. சிங்களப் படைகளின் அராஜகங்களை எதிர்க்கவும், பதிலடி கொடுக்கவும் முடிந்த பலத்துடன் இன்றும் களத்தில் நிற்கிறது ………." என்னும் நிலை ஈழ மண்ணில் நிலவி வந்தபோது, பதுங்கிக் கிடந்த சிலர்; இப்போது.. இவை எதுவுமே இல்லை 'ஈழக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது'- இனி இலங்கையர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள், ‘தமிழர்’கள் அல்ல என்று ராஜபக்‌ஷே அறைகூவல் விடுத்த பின்னர் – துணிந்து தங்கள் புற்றுகளிலிருந்து வெளியே வந்து…. "நாங்கள் தமிழரல்ல; இலங்கையர்கள்" என்று கூறத்தொடங்கியுள்ளார்கள்.


-சர்வசித்தன்

Tuesday, 13 October 2009

ஆறறிவு மனிதனே மாறு


எலியொன்று ஓடியது! பார்த்திருந்த பூனை
எலிமீது பாய்ந்து பிடிக்க -- எலியங்கே
பூனையின் வாயில் இரையாய்த் துடித்தது!
பூனையிடம் வீழ்ந்ததைப் பார்.

Aararivu_Manithanee_Maaru


-மதுரை பாபாராஜ்

இனிய இல்லறத்திற்கு

வாழ்க்கையின் வெற்றி இனிய, நிம்மதியான வாழ்வைப் பொறுத்தது. அந்த நிம்மதியைக் கொடுப்பதோ, கெடுப்பதோ நமது இல்லறம்தான். வெளியில் தமது நல்ல குணங்களுக்காகவும், பழகும் விதத்திற்காகவும் பாராட்டப்படுபவர்கள் கூட, தமது வீட்டில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியிடம் அல்லது கணவரிடம் பழகும்பொழுது உரிமையின் காரணமாக, பல சமயங்களில் அறிந்தோ அறியாமலோ காயப்படுத்திவிடுகின்றனர். இதனால் வாழ்க்கை பல நேரங்களில் கசந்துகூட விடுகிறது. எப்பொழுதும் வாழ்வு இனிமையாகவே இருக்கவேண்டுமானால் கீழ்க்கண்ட யோசனைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த யோசனைகள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் எளிமையானவை; கடைப்பிடிக்கக் கடினமானவை. ஆனால், இருவரில் ஒருவர் கடைப்பிடித்தால் கூட இல்லறம் நல்லறமாவதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

life-easyகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை: எப்பொழுதும் பிறரிடம் உள்ள நல்ல குணத்தை மட்டுமே பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். இது எல்லோருக்குமே பொருந்தும் என்றாலும், முக்கியமாக வாழ்க்கைத் துணையிடம் பின்பற்றவேண்டியது இது. 'Nobody is Perfect' என்பது ஞாபகம் இருக்கட்டும். எந்தச் செயலையும் வாய்விட்டு, மனம் விட்டுப் பாராட்டுங்கள். அது முடியவில்லையா? குறைந்த பட்சம் எதற்கெடுத்தாலும் குறை சொல்வதை நிறுத்துங்கள். நிஜமாகவே பெரிய தப்பாக இருந்தாலும், கத்திக் கூச்சல் போட்டு திட்டி..தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

Monday, 12 October 2009

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு


இன்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற ஒரு தமிழர் நோபல் பரிசு வாங்கிய பெருமையிலும் மகிழ்ச்சியிலும் நாம் அனைவரும் திளைத்திருக்கும் இந்த வேளையில் நோபல் பரிசின் கதையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா?
இன்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற தமிழர் ஒருவர் நோபல் பரிசு வாங்கிய பெருமையிலும் மகிழ்ச்சியிலும் நாம் அனைவரும் திளைத்திருக்கும் இந்த வேளையில் நோபல் பரிசின் கதையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா?
இன்று வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற தமிழர் ஒருவர் நோபல் பரிசு வாங்கிய பெருமையிலும் மகிழ்ச்சியிலும் நாம் அனைவரும் திளைத்திருக்கும் இந்த வேளையில் நோபல் பரிசின் கதையை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா?


-என். கணேசன்.

ஈழ மண்ணில் இந்தியாவின் புதிய நாடகம்


தமிழ்நாட்டைச்சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இலங்கை அகதி முகாங்களுக்குக் காட்சியளிக்கச் செல்லும் செய்திதான் இன்றைய தமிழ்ச் செய்தித்தாள்களிலும், இணையங்களிலும், முதன்மை இடத்தைப்பிடித்துள்ளது. தி.மு.க வின் நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைக்கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணி அரசின் பத்துப் பேர் கொண்ட குழு இலங்கையைச் சென்றடைந்துள்ளது. இக்குழு அங்குள்ள அகதிமுகாங்களில் வாழும் மூன்றரை இலட்சம் தமிழ்மக்களை நேரில் சந்தித்து, உண்மை நிலைவரங்களைக் கண்டறிந்து தமிழக முதல் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தரமான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான பயணமாக இது அமைந்திருக்கின்றது என அவர்களது பயணத்தின் நோக்கம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிகக்கொடுமையான யுத்தத்தில் தமிழ்மக்கள்  கொன்றொழிக்கப்பட்டபோது போருக்கு முண்டுகொடுத்து நின்ற காங்கிரஸ் கட்சியின் அரசிற்கு  தோள் கொடுத்த தமிழக அரசு, வெறுமனே கண்துடைப்புக்குப் போராட்டங்களை நடாத்தியதே தவிர தமிழ்மக்களின் அழிவைத்தடுக்க எந்த முயற்சியையும் ஆரோக்கியமாகச் செய்யவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

in_lk_1
தொடர்ந்து வாசிக்க...

Sunday, 11 October 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 01


விநாயகர் காப்பு
அங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றே
எங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழ
நேசர்க்காய் மண்ணின் நெடுஞ்சரிதம் தானெழுதும்
தேசப்பா உன்காப்புத் தேன்!


eelakaviyam


-புதிய பாரதி

Saturday, 10 October 2009

நடிகர் விஜயின் அரசியல் | தலைமறைவான எழுத்தாளர்கள் | புதிய வரவுகள்

vijayநடிகர் விஜய் இதோ அரசியலுக்கு வருகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார், சேர்ந்தே விட்டார், என்ற செய்திகள் எல்லாம் மெல்லக் கரைந்து போய், அவரது வேட்டைக்காரன் திரைப்படம் தான் வரப் போகிறது என்பது மெல்ல உறுதியாகி இருக்கின்றது. பரபரப்புச் செய்திகளை அள்ளிக் குவித்து, மோசமான வியாபாரம் செய்து கொண்ட பத்திரிகைகளும், இதழ்களும் மெல்ல மெல்ல இப்போது "விஜய் சொன்ன நோ, சூர்யாவுக்கு வலை வீசும் காங்கிரஸ்" என்று அடுத்த சரவெடியை பற்ற வைத்துள்ளனர். இந்த மோசமான வணிகத்தை புலம்பெயர் நாடுகளிலும் பெரும்பாலான பத்திரிகைகளும், ஊடகங்களும் தம் பங்குக்கு பெரிதாக்கி, நாளும் பொழுதுமாக செய்திகளை வெளியிட்டு செய்யும் அட்டகாசம் பெரிதாகியே வருகின்றது. முதலில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம், உரிமை.
தொடர்ந்து வாசிக்க...

தாரை இயந்திரங்கள் (Jet Engines)


engineanimatedதாரை இயந்திரங்களின் கண்டுபிடிப்பு இயந்திரத் தொழிநுட்பத்தில் ஒரு புதிய புரட்சியை உண்டுபண்ணியது என்றால் அது மிகையன்று. நவீன விமானத் தொழிநுட்பத்திலும் அது ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியதோடு அதன் வேகமான வளர்ச்சிக்கும் அடிகோலியது. தொடக்கத்தில் விமானங்களின் பயன்பாட்டிற்காகவே தாரை இயந்திரங்கள் உருவாக்கப்பட்டபோதிலும் பின்னாட்களில் அவை பல்வேறுபட்ட மாற்றங்களுடன் பல்வேறுபட்ட தேவைகளுக்காகப் பயன்பாட்டிற்கு வந்தன.
Dr. Hans von Ohain மற்றும் Sir Frank Whittle ஆகியோர் தாரை இயந்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஒருவரையொருவர் அறியாது சமநேரத்தில் ஈடுபட்டனர். Hans von Ohain இன் தாரை இயந்திரத்தைக் கொண்ட விமானம் 1939 இலும் Frank Whittle இன் தாரை இயந்திரத்தைக் கொண்ட விமானம் 1941 இலுமே முதற்பறப்பை மேற்கொண்டன. இருந்தபோதிலும் Frank Whittle தன்னுடைய ஆராய்ச்சியை 1930 இலேயே பதிவுசெய்துவிட்டபடியால், தாரை இயந்திரங்களின் கண்டுபிடிப்பாளர்களாக இவ்விருவருமே அறியப்படுகின்றனர்.-ஜெயசீலன்

Friday, 9 October 2009

ஒரு குடிமகனின் சரித்திரம்


நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில், ‘அவர் கனடாவிலை’, ‘அவ கலியாணம் கட்டி கொழும்பிலை’என்பதையொத்த பதில்கள் ஆசுவாசம் அளிப்பனவாக இருக்கின்றன. ஷெல்லடியில் சிதைந்துபோன, காணாமல் போன, அங்கவீனர்களாகிய, சிறைப்படுத்தப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, முகாமில் இருக்கிற வகையிலான பதில்கள் வரக்கூடாதென்பதே எங்களது பிரார்த்தனையாக இருக்கிறது.
அண்மையில் குருட்டு யோசனையோடு ‘அஸ்பெஸ்டாஸ்’ கூரையில் பல்லி பார்த்துக்கொண்டு சோபாவில் படுத்திருந்தபோது, ‘மணியம் மாமா என்னவாகியிருப்பார்?’ என்ற கேள்வி திடுதிப்பென்று எழுந்தது.

Oru_Kudimaganin_Kathai-தமிழ்நதி

இரும்புக் கம்பிகளின் பின்னால் தமிழரின் இன்னொரு சந்ததி

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை எனப்படுவது காலகாலமாக அரசியல்வாதிகளின் உறுதிமாழிகளால் பூசி மெழுகப்படும் விடயமாக இருந்துவருகிறது. அண்மையில்கூட, யாழ்ப்பாணம், அனுராதபுரம் சிறைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதிகளின் போராட்டம் அரசியல்வாதிகளின் உறுதிமொழியை அடுத்து முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.

சிறைக்கம்பிகளின் பின்னால் கண்ணீரால் கரையும் இவர்களின் எதிர்காலம் எந்த மந்திரக்கோலால் தீர்க்கப்படப்போகிறது?

யாழ்ப்பாணம், அனுராதபுரம், களுத்துறை, பூசா, வெலிக்கடை, நியூமகசின், நான்காம்மாடி, தெமட்டகொட பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பணியகம், கண்டி போகம்பரை சிறைச்சாலை போன்ற இடங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகளின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனைவிட தற்போது தினமும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதும் பின்னர் விடுதலை செய்யப்படுவதும் மறுபடியும் கைதுசெய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகவே அமைந்துள்ளது.தொடர்ந்து வாசிக்க...


-முகிலன்

Thursday, 8 October 2009

கனவுகளே! ஆயிரம் கனவுகளே!!


கனவு காணாத மனிதனே இருக்க முடியாது. அது ஒரு தன்னியல்பான நிகழ்வு. மிக அவசியமான நிகழ்வும் கூட. சொல்லப் போனால், கனவுகள் பல பிரச்னைகளுக்கான தீர்வு, சங்கடங்களை நீக்கும் ஒரு திறவுகோல். ஆனால் நம்மில் பலர் கனவுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது இல்லை. சிலரோ, கனவுகளுக்கான அர்த்தங்களைத் தாங்களாகவே கற்பித்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்தக் கனவு என்பதுதான் என்ன? அது எப்படி உருவாகிறது? அதன் பொருளை எப்படி உணர்வது? அது தேவைதானா என்பது குறித்ததே இக்கட்டுரை.


dream


-பாலகார்த்திகா

ஜென் வாழ்க்கையின் சூட்சுமம்


டோக்குசான் என்ற ஜென் துறவி மூலிகைகளை பறிப்பதற்காக மலைச்சாரல் ஒன்றில் சென்று கொண்டு இருந்தார். ஓரிடத்தில் ஒரு குன்றின் மீது சிறிய குடிசை இருப்பதைக் கண்டார். சுற்றிலும் நிறைய தூரத்திற்கு எந்த வீடும் இல்லை. அது போன்ற ஏகாந்தத்தில் குடிசை இருக்க வேண்டுமென்றால் அதில் வசிப்பது ஒரு துறவியாகத் தான் இருக்க வேண்டும் என்றெண்ணிய டோக்குசான் அந்தக் குடிசையின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்ததோ ஒரு மூதாட்டி.
அந்த ஜென் துறவியைப் பார்த்தவுடன் மூதாட்டி பக்தியுடன் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து வரவேற்றாள். அவருக்கு முகமலர்ச்சியோடு வரவேற்ற அவளைக் கண்டு வியப்பு. "அம்மா நீங்கள் இந்த மலையில் இந்த ஏகாந்தத்தில் என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டார்.
life-yen"ஐயா நான் இங்கு தனியாகத் தான் வசிக்கிறேன். இங்கு யாரும் வருவதில்லை. இங்கு காய்கறிகள் வளர்த்து அருகே உள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்கிறேன்" என்றாள் அந்த மூதாட்டி. விளையும் காய்கறிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் அவருக்கு விவரித்தாள். மலைச்சாரலில் விளையும் அந்தக் காய்கறிகள் சத்தானவை என்றும் அந்தக் கிராம மக்களுக்கு அந்த சத்தான காய்கறிகளை விற்பதில் தனக்கு ஒரு நிறைவிருக்கிறது என்றும் தெரிவித்தாள். அவருக்கும் அந்தக் காய்கறிகளைக் கொண்டு தான் சமைத்திருந்த எளிய உணவை அளித்து உபசரித்தாள். தன் வீட்டுக்கு வந்த அபூர்வமான அந்த விருந்தாளியைக் கண்டு அவளுக்கு பெருத்த மகிழ்ச்சி.Wednesday, 7 October 2009

இணங்கிப் போனதில் இழந்துபோனவை


இலங்கைத்தீவானது எப்படி ஒன்று சேர்க்கப்பட்டது என்பது பற்றியும் அதில் இடம்பெற்ற சில முக்கியமான சம்பவங்களையும் பற்றியும் இப்பத்தியில் ஆராய விரும்புகிறோம்.
1833 ஆம் ஆண்டளவில் அனைத்து சிங்கள அரசுகளும் தமிழ் அரசுகளும் ஏதோவிதத்தில் பிரித்தானிய படையினரால் வெற்றி கொள்ளப்பட்டு அப்போதிருந்த இலங்கைத்தீவின் அனைத்து நிர்வாக அலகுகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரு ஆளுகைக்குள் முதல் தடவையாக கொண்டுவரப்பட்டது.
ceylon-1833-கொக்கூரான்

உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை


அண்மையில் வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு படமிது. ஆகா ஓகோ என்று பெருவாரியான பாராட்டுக்களையும் புகழாரங்களையும் சூடிக்கொண்ட அதேநேரம் திரைப்படம் சொல்லவரும் கருத்து, அவற்றின் பின்னணி தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனங்களையும் சில தரப்புக்களிலிருந்து பெற்றுக்கொண்ட படம்.
சந்தேகமேயில்லாமல் தமிழ்த் திரையுலகில் இப்படம் ஒரு மைல் கல்லேதான். திரைப்படக் கலை என்றளவில் இது மிக நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்ட ஒரு திரைப்படம். அவ்வகையில் இப்படத்துக்குரிய இடம் முக்கியமானதே. ஆனால் இதன் கருவாக, போதனையாக, அறிவுரையாகச் சொல்லப்படும் விடயம் தமிழ்த் திரையுலகிற்குப் புதியதன்று. ஏற்கனவே விஜயகாந்த், அர்ஜுன் போன்றவர்களின் படங்களிற் சொல்லப்பட்டவைதாம்.

Tuesday, 6 October 2009

தடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II


Thadamkall02இதன் முதற்பகுதியை வாசிக்க இங்கே செல்லவும்.
மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது. எத்தனைபேர் இரவு நித்திரை கொண்டிருப்பார்களென்று தெரியவில்லை. எந்நேரமும் ‘லைன்’ பண்ணக்கூடியவாறு அனைவரும் தயாராகவே இருந்தார்கள். நான்குமணிவரை புதிதாக வந்து சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி நடந்தபடிதான் இருந்தது.
எல்லோரையும் வரச்சொன்னார்கள். தேவராஜ் அண்ணைதான் கதைத்தார். எல்லோரையும் குளத்தடிக் கோவிலுக்குச் சென்று ஒதுக்குப்புறமாக நிற்கும்படி சொல்லப்பட்டது. நாங்கள் அணியணியாக நடந்தே சென்றோம். விசுவமடுக் குளத்தின் ஒரு தொங்கலில் காட்டுக்குள் சற்று உட்பக்கமாக ஒரு சைவக் கோவில் இருந்தது. மிகப்பெரிய ஆலமரமொன்றில் அடியில் ஒரு சிறுபீடமும் அதில் கடவுளின் சிலையொன்றும் இருந்தது. கடவுள் யாரெனச் சரியாகத் தெரியாது, அனேகமாய் காளியாகவோ வைரவராகவோ இருக்க வேண்டும். பெரிய சூலமும் வேறு சிலவும் அக்கடவுளுக்குரிய பொருட்களாய் அங்கிருந்தன. முன்பே அப்பகுதி எமக்குப் பழக்கமானதே. அது மக்கள் நடமாட்டத்துக்குரிய பகுதியன்று. ஆனாலும் வருடத்துக்கொரு முறை அக்கிராம மக்கள் அங்குவந்து பெருமெடுப்பில் ஒரு திருவிழாவைச் செய்துவிட்டுச் செல்வார்கள்.

தடங்கள்-1. ஆட்லறிக்கான ஒரு சண்டை


Thadamkall011997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்றுசேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கைநெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும் தொடங்கிவிட்டது.
தொடக்க நாட்களிலேயே நெடுங்கேணியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால் ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்த எமக்கு ஆபத்து நெருங்கியிருந்தது. ஆகவே எமது கற்கைநெறியும் பாதிக்கப்பட்டது. காட்டுப்பகுதியிலிருந்து கொஞ்சம் பின்னகர்ந்து புளியங்குளத்தில் எமது முதன்மைத் தளத்தை அமைத்துக் கொண்டோம். அங்கே நிர்வாக வேலைகள் நடந்துகொண்டிருக்க, படிப்புக்காக மட்டுமே அணிகள் அங்கே ஒன்றுகூடுவோம். மற்றும்படி பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறுசிறு அணிகளாகப் பிரிந்து சற்றுத் தூரம் தள்ளித் தங்கியிருந்தோம். இந்தப் புளியங்குளம் என்பது ‘ஜெயசிக்குறு’ புகழ் புளியங்குளமன்று. அது கண்டிவீதியில் ஓமந்தைக்கும் கனகராயன் குளத்துக்குமிடையில் அமைந்துள்ளது. இது ஒட்டுசுட்டான் புளியங்குளம். ஒட்டுசுட்டான் – முள்ளியவளைச் சாலையில் ஒட்டுசுட்டானுக்கு அடுத்துள்ள கிராமம்.