Thursday 1 October 2009

இணையதளம் - சாபமாய் மாறுமா வரம்?

இணைய தளம் இன்றைய வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றிவிட்டது. எதைக்குறித்தும் ஏராளமான தகவல்களைப் பெறவும் எந்த நாட்டில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும், உங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கவும், வீட்டில் இருந்தபடியே பணி புரிந்து பணம் சம்பாதிக்கவும், வங்கிகளில் வரவு செலவு மேற்கொள்ளவும்.... இன்னும் எத்தனையோ வசதிகள் கொட்டிக்கிடக்கின்றன இணையத் தளங்களில். ஆனால் அதே வசதிகள் உங்களை ஏமாற்றவும், தப்பான, சட்டத்திற்குப் புறம்பான காரியங்கள் செய்யவும், குழந்தைகளின் மனத்தினை நஞ்சாக்கவும்.. இன்னும் பற்பல தீய நிகழ்வுகளுக்கும் துணை போகக்கூடும்.
இத்தகைய சூழலில், இணைய தளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும், பண வரவு செலவுகளில் ஏமாந்து விடாமல் இருக்கவும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அத்துடன் இணைத்தளத்தை சரிவரப் பயன்படுத்தாவிடில் நமது நற்பெயரும் குலைந்துவிடக் கூடும், அது குறித்தும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

-பாலகார்த்திகா

No comments:

Post a Comment