Monday 12 October 2009

ஈழ மண்ணில் இந்தியாவின் புதிய நாடகம்


தமிழ்நாட்டைச்சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இலங்கை அகதி முகாங்களுக்குக் காட்சியளிக்கச் செல்லும் செய்திதான் இன்றைய தமிழ்ச் செய்தித்தாள்களிலும், இணையங்களிலும், முதன்மை இடத்தைப்பிடித்துள்ளது. தி.மு.க வின் நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைக்கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணி அரசின் பத்துப் பேர் கொண்ட குழு இலங்கையைச் சென்றடைந்துள்ளது. இக்குழு அங்குள்ள அகதிமுகாங்களில் வாழும் மூன்றரை இலட்சம் தமிழ்மக்களை நேரில் சந்தித்து, உண்மை நிலைவரங்களைக் கண்டறிந்து தமிழக முதல் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தரமான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான பயணமாக இது அமைந்திருக்கின்றது என அவர்களது பயணத்தின் நோக்கம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிகக்கொடுமையான யுத்தத்தில் தமிழ்மக்கள்  கொன்றொழிக்கப்பட்டபோது போருக்கு முண்டுகொடுத்து நின்ற காங்கிரஸ் கட்சியின் அரசிற்கு  தோள் கொடுத்த தமிழக அரசு, வெறுமனே கண்துடைப்புக்குப் போராட்டங்களை நடாத்தியதே தவிர தமிழ்மக்களின் அழிவைத்தடுக்க எந்த முயற்சியையும் ஆரோக்கியமாகச் செய்யவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

in_lk_1




தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment