Friday 23 October 2009

உலங்குவானூர்தி (Helicopter


300px-LAPD_Bell_206_Jetrangerஉலங்கு வானூர்திகள் வான்வழிப் போக்குவரத்தின் இன்னொரு பரிமாணமாகவே காணப்படுகின்றன. உலங்குவானூர்திகள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிடைச்சுழலிகள் (horizontal rotor) கொண்டிருப்பதோடு ஒவ்வொரு சுழலியும் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சுழலித்தகடுகளைக் (rotor blades) கொண்டிருக்கக் காணப்படுகின்றன. உலங்குவானூர்திகள் நிலையான இறக்கைகளைக்கொண்ட வானூர்திகளிலிருந்து அவற்றின் நிலைக்குத்தான தூக்குசக்தியை (vertical lift) உருவாக்கும் விதத்தினால் வேறுபடுகின்றன.
உலங்குவானூர்திகளின் பிரதான அனுகூலமானது அவற்றின் நிலையான இடத்திலிருந்து மேலெழவோ கீழிறங்கவோ கூடிய தன்மையேயாகும். ஓடுபாதையின்றி சிறிய பகுதியில் தரையிறங்கவோ அல்லது மேலெழவோ கூடிய இத்தன்மையின் காரணமாக விமானங்களைப் பயன்படுத்த முடியாத பகுதிகளில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்த முடிகின்றது.


-ஜெயசீலன்

No comments:

Post a Comment