Thursday 1 October 2009

சுற்றுப்புறச் சூழலின் ஆரோக்கியமறியத் தரும் தவளைகள்


இயற்கையின் படைப்பாக்கத்தில் புதிது புதிதாக உயிரினங்கள் தோன்றுவதும், மறைவதும் சுழற்சி அடிப்படையில் அமைவது; அது தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. இந்த நிலையில் இது வரையிலும் இந்தப் பூமியின் உயிரினத் தோன்றலிலிருந்து நான்கு முக்கிய மொத்த உயிரின அழிவு (Mass Extinction) நடந்தேறப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. ஆனால், ஐந்தாவதாக ஒன்று இப்பொழுது நமது காலத்தில், நம் கண்களுக்கு முன்னாலேயே, அதுவும் நம்முடைய நடவடிக்கைகளால் துரிதமாக நடந்து கொண்டிருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் நமக்கு அறியத்தருகிறார்கள்.
இது போன்ற விரைந்தழியும் தன்மை மனிதனால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என்று தோராயமாகக் காணும்பொழுது அது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வட அமெரிக்காவில் மனிதன் குடியேறி அங்கு வாழ்ந்த விலங்கினங்களில் பெரும்பாலானவற்றை வேட்டையாடி முடித்ததிலிருந்தோ அல்லது அண்மைய தொழிற்புரட்சிக்குப் பிறகு தொடங்கி வைத்த இந்த உலகச் சூடேற்றத்தாலோ கூட இருக்கலாம் என்று தெரிகிறது.



No comments:

Post a Comment