Monday, 28 December 2009

கிறிஸ்துமஸ் தாத்தா

santa-clausதூய வெள்ளை தாடி, சிவப்பு நிற உடை, அன்பும் கனிவும் நிறைந்த பார்வை, சிரித்த முகம், கை நிறைந்த பரிசுகள் - இந்த உருவத்தைப் பார்த்தவுடன் சின்னக் குழந்தைகள் "கிறிஸ்துமஸ்" தாத்தா என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவார்கள். இன்று வரை, பல நாடுகளிலும் ஒவ்வொரு சிறு குழந்தையும், கிறிஸ்துமசுக்கு முதல் நாள் இரவு அவர்கள் விரும்பும் பரிசுப்பொருளை கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் அல்லது அவர்களது காலுறைக்குள் "சாண்டா க்ளாஸ்" என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வைப்பதாக நம்புகிறார்கள். மேல்நாட்டில், குழந்தைகள் தமக்கு விருப்பமான பரிசுப்பொருள்கள் குறித்து கிறிஸ்துமஸ் தாத்தாவிற்குக் கடிதம் எழுதுவது கூட உண்டு.


தொடர்ந்து வாசிக்க...

மெத்தை - சிறுகதை

இன்று நத்தார். உலகைமீட்கும் இரட்சகர் புவிப்பிறந்த நாள். இந்த மகத்தான நாளை மார்கழி மாதம் முழுவதுமே நினைவுகூருமாப்போல முன்கூட்டியே வண்ண விளக்கு அலங்காரங்களும்,பைன் மரங்களில் தோரண மாலைகளும் குடும்பங்கள் யாவும் ஒன்று கூடி கலகலப்பும், கும்மாளமுமாய் ஊரே அமர்க்களப்பட்டது. இந்த நாட்களில்த் தான் வடதுருவக் கோடியில் இருந்து கலைமான் பூட்டிய சறுக்குவண்டியில் வெண்பனித்தாடியுடன் "சாந்தா கிள்வ்ஸ்" எனப்படும் நத்தார்ப்பாப்பா எங்களுக்கு வேண்டும் பரிசு கொணர்ந்து வீட்டின் புகைபோக்கியினூடாகப் போடுகிற நாள் என்று பேசிக்கொள்வார்கள். ஆனால் இது வரையில் நானோ, ஆடம்பரமான மோல்களில் பிள்ளைகளை மடிமீது இருத்தி போட்டோ எடுத்த பின் அதனை விற்பனை செய்கிற வியாபார நத்தார்ப் பாப்பாக்களைத்தான் கண்டிருக்கின்றேன்.


தொடர்ந்து வாசிக்க...

Sunday, 27 December 2009

செயற்கைக்கோள்


150px-Sputnik_asmசெயற்கைக்கோள்!
மனித குலம் படைத்த சாதனைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அண்டவெளியெங்கும் சஞ்சரிக்கும் மனிதனால் படைக்கப்பட்டதோர் உயரிய சக்திமிக்க சாதனம். செய்மதிகளின் பயன்பாட்டு எல்லைகள் நாளும் வளர்ந்தவண்ணமுள்ளன. தொலைத்தொடர்பு, விஞ்ஞான ஆய்வு, இராணுவம் எனப் பல்வேறுபட்ட தளங்களில் செய்மதிகளின் பயன்பாடுகள் விரிந்து பரந்து காணப்படுகின்றன. 1957 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தினால் விண்ணில் ஏவப்பட்ட ஸ்புட்னிக்-01 (Sputnik-01) என்ற செய்மதியுடன் ஆரம்பமான செய்மதிகளின் வரலாற்றில், இன்றளவில் இப்புவியைச்சூழ, ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சொந்தமான, ஆயிரக்கணக்கான செய்மதிகள்வரை காணப்படுகின்றன.

Saturday, 26 December 2009

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று வெகுமானம்


வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இந்த உண்மையை நோர்வே, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் எண்பித்துள்ளார்கள். விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானப் பற்றிய வாக்குக் கணிப்பு (Referendum) நடைபெற இருக்கிறது.
இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக விழும் வாக்குகளைவிட அதன்பின்னால் உள்ள மக்களது வேட்கையும் துடிப்பும் முக்கியமானது. தேர்தல் நாளன்று அந்தளவு தூரம் ஆர்வம் கரை புரண்டோடியது. எண்பது அகவை தாண்டிய பாட்டன் பாட்டி ஆகியோரைப் பேரப்பிள்ளைகள் கைத்தாங்கலாகப் பிடித்து வந்து வாக்களிக்க வைத்தார்கள்.

Thursday, 24 December 2009

இந்திய சுயாட்சி ஈழத்திற்குப் பொருந்துமா?


indianstates
தனிநாட்டுக்கான ஈழவிடுதலைப் போராட்டம் அரசியல் வழியில் கூர்மைப்படுத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தற்போது அவசியமாகவும் அவசரமாகவும் உள்ளது. ஆயுத ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் வல்லாதிக்கச் சக்திகளின் நேரடித் தலையீட்டுடன் பெரும் சரிவைச் சந்தித்த நிலையில் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டுவிட வேண்டுமென ஒரு கருத்து எழுந்துவருகின்றது.
இந்திய சுயாட்சி முறைகளைப் போல ஓர் அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமென்பது அவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. இந்தவேளையில் தற்போது தமிழ் ஈழத்திற்கான மாற்றுவழிகள் தேவையா என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.


-கொக்கூரான்

Wednesday, 23 December 2009

பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......

சீடர்கள் சூழச் சிரித்தபடியே
விருந்து நாயகனின்,
பாதம் கழுவிப் பணிந்து தொழுவதாய்
பாசாங்கு செய்து
விழுந்து கிடக்குமென்
யூதாஸ் கரியோத்து...

எழுந்திரு !!!தொடர்ந்து வாசிக்க...

தைராய்டு பற்றித் தெரிந்துகொள்வோம்

தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும். நம் உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச் சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும் இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள்.

bigthyroidஇந்த ஹார்மோன்களின் பணி என்ன?
இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும், செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும் எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை உருவாக்குவதாகட்டும், வளர்சிதை மாற்றமாக இருக்கட்டும், இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த இரு ஹார்மோன்களும் சரியான அளவில் சுரப்பது மிக மிக மிக அவசியம். இது அதிகமானாலும், குறைவானாலும் உடல் பலவிதக் கோளாறுகளுக்கு ஆளாகிவிடுகிறது.தொடர்ந்து வாசிக்க...

Monday, 21 December 2009

இந்திய சிறிலங்கா ஆட்சிபீடங்களின் துருப்புச்சீட்டு சிவாஜிலிங்கம்!!

Shivajilingham-mahinda-soniaதென்னிலங்கை அரசியலின் மற்றொரு முக்கிய பேசுபொருளாய் மாறியிருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தனக்குள் எழுந்த அதீத தமிழ் பற்று மேலீட்டால் தனது கட்சிகளின் ஒருமித்த கொள்கைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணமும் செலுத்தியுள்ளார். தற்போது பரப்புரை நடவடிக்கைகளிலும் தோளில் கறுப்புச் சால்வையுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என்பது யாவரும் அறிந்தவிடயம்.


தொடர்ந்து வாசிக்க...

கடல் விமானம்


300px-Grumman_HU-16D_Albatross_Chalks_MIA_03.87நிலையான இறக்கைகளைக் கொண்ட நீர் நிலைகளில் தரையிறங்கக் கூடியதும் நீர்நிலைகளிலிருந்து மேலெழக்கூடியதுமான விமானங்களே கடல்விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை விமானங்கள் பொதுவாக இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன.
  • மிதவை விமானங்கள் (float planes)
  • பறக்கும் படகுகள் (flying boats)


Sunday, 20 December 2009

கனடாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு - ஒரு நோக்கு

canada-vaddukoddaiநெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ – கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ.
கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ – கிளியே
நாளில் மறப்பா ரடீ.
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ – கிளியே
ஊமைச் சனங்க ளடீ.
ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் – கிளியே
வாழத் தகுதி யுண்டோ?
சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை இரங்கா ரடீ – கிளியே
செம்மை மறந்தா ரடீதொடர்ந்து வாசிக்க...

Friday, 18 December 2009

தமிழீழத்துக்கான வாக்கெடுப்பினால் அதிர்ச்சி! முறியடிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் அரசுக்கு ஆலோசனை!!

Tamil_eelamபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களினால் எல்லா நாடுகளிலும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஐக்கிய இலங்கைக்கு பாரிய ஆபத்தாக மாறவுள்ளது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைக்கு சமாந்தரமாக சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தேர்தல் முடிவடைந்த கையோடு வேகமாக ஆரம்பிக்கவேண்டும் என்று சிங்கள புத்திஜீவிகள் சிலர் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்துவரும் குமார் மேசஸ், வோல்டர் ஜெயவர்த்தன போன்ற சிங்கள இனவாத புத்திஜீவிகள் குழுவே இந்த ஆலோசனையை சிறிலங்கா அரசுக்கு வழங்கியுள்ளது.தொடர்ந்து வாசிக்க...

ஈழகாவியம் - 13


நாடு கடந்த தமிழீழ அரசு
(ஆசிரியத்தாழிசை)

நாடு கடந்த தமிழார் அரசென்று
ஏடு உடைத்து எழுமாகில் வெள்ளைமண்
ஊடாய் நிமிருமே  எங்கள் தமிழீழம்!

வேளை இதனுள் விழுந்த தமிழ்மண்ணை
மாளாது வைக்க மதியுரைத்துச் செந்தமிழர்
கோளாகக் கொற்றம் குறித்தார் உலகெலாம்!
தொடர்ந்து வாசிக்க...

Wednesday, 16 December 2009

மகிந்த கொம்பனியும் சரத் பொன்சேகாவும்


சிறிலங்காவின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான அரச தலைவர் பதவிக்கான தேர்தல் என்பது தமிழர்களின் தாயகத்திலுள்ள நெருக்கடிகளை மிதமாக்குமா இல்லையா என்பதை நிலைநிறுத்தபோகின்ற ஒரு தேர்தலாக அனைவராலும் நோக்கப்படுகின்றது. இத்தேர்தலில் தமிழின உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுப்பதா அல்லது அரசியல் சாணக்கியத்துடன் முடிவெடுத்து தமிழ்மக்களுக்கு ஓரளாவாவது நிம்மதியை பெற்றுக்கொடுப்பதா என்பதில் இன்னும் குழப்பமான நிலைமையே இப்போதும் தமிழர் தரப்பிடம் உண்டு.


-கொக்கூரான்

Tuesday, 15 December 2009

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான் - அசையும் படங்கள்

உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் (கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றன. முப்பரிமாணத்தில் வரையப்படும் கதாபாத்திரங்கள் தன் அசைவுகளாலும் உணர்வு வெளிப்பாடுகளாலும் ஓவியங்கள் என்பதனையே நம்மை மறக்கச் செய்யக்கூடிய வல்லமை படைத்தவையாக இருக்கின்றன.


read more...

6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜிட்டல் உலகுடன் இணைக்கும் ஆறாம்-அறிவின் தொழில்நுட்பம்

பஞ்சபூதம் என்று நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றவையை குறிப்பிடுகிறோம். இவைகளைப் போலவே நம்முள் இயங்கும் சுவைக்கும் நாக்கு, நுகரும் மூக்கு, பார்க்கும் கண்கள், கேட்கும் காதுகள், உணரும் சருமம் போன்றவைகளை பஞ்சேந்திரியங்கள் என்று சொல்கிறோம்.  ஒவ்வொருவரின் பஞ்சேந்திரியங்களும் அவற்றைச் சுற்றி இருக்கும் பஞ்சபூதங்களுடன் இயைந்து செயல்படுகின்றன. நம் அன்றாட வாழ்வின் சம்பவங்களும் இவற்றின் விளைவுகளே என்பதும் மறுக்க முடியாத உண்மை. பஞ்சேந்திரியம், பஞ்சபூதம் என்று ஆன்மீகச் சொற்ப்பொழிவுகளில் பரவலாகப் பயன்படுத்தபடும் சொற்கள்(கணனி) தொழில்நுட்பப் பகுதியில் ஏன் இடம்பெற்றுள்ளது என்று நீங்கள் குழம்பிப்போயிருந்தால் வியப்புஇல்லை.


read more...

புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு கோத்தபாய உத்தரவிட்டதாக தான் கூறவில்லை என பொன்சேகா தெரிவிப்பு!

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவுப்படி சுட்டுக்கொல்லப்பட்டாரகள் என்று தான் எவருக்கும் எந்த செவ்வியும் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


Reed more...

Monday, 14 December 2009

அதிகாரப்பகி்ர்வு தொடர்பான இரகசிய ஆவணம் மகிந்த தரப்பினால் இந்தியாவிடம் கையளிப்பு!

அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை அரசு இந்தியாவிடம் கையளித்திருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க...

கொலை வழக்கில் முதல் எதிரி மகிந்த இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்!


இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசை ஆதரிப்பது? அல்லது இரண்டு பிசாசுமே வேண்டாம் நாம் தனித்து நின்று கேட்போம், அதுவும் வேண்டாம் இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன அல்லது இடையில் வந்த அனுமான் ஆண்டால் என்னவென்று தேர்தலையே முற்றாகப் புறக்கணிப்போம். இந்த தெரிவுகளையிட்டுத்தான் தமிழ்த் தேசியக் கூட்டணி தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறது போல் தெரிகிறது.

வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று நாள்களே (டிசெம்பர் 17) முழுதாக எஞ்சியிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பிப் போய்த் திண்டாடுகிறது.
"சனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மீண்டும் கூடி சனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்ற செய்தி உண்மையல்ல. 12 ஆம் நாள் (சனிக்கிழமை) வரை எந்த முடிவையும் தமிழத் தேசியக் கூட்டணி எடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.


-இந்திரஜித்

Sunday, 13 December 2009

கோத்தபாயவின் கட்டளைப்படி அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள் சுடப்பட்டனர் - சரத் பொன்சேகா

சரணடைந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைப்படியேதான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதை சிறிலங்காவின் அரச தலைவருக்கான வேட்பாளர் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு கொடுக்கப்பட்ட நேர்காணலில் உறுதிப்படுத்தினார்.


nadesan
தொடர்ந்து வாசிக்க...

Friday, 11 December 2009

மகிந்த, பொன்சேகா இருவரில் ஓருவருக்கு ஆதரவு கோரும் கடைசி நேர அறிவிப்பை தமிழ்க்கூட்டமைப்பு வெளியிடும்?


Tamil_National_Alliance_logoஎதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை கைவிடுவது என்று எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அரசதலைவர் தேர்தலில் போட்டியிடும இரு பிரதான வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைசிநேரத்தில் தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நடைபெறவிருக்கும் அரசதலைவர் தேர்தலை ஒட்டி என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து பின்னர் கூடி ஆராய்வது என்றும் அது தீர்மானித்துள்ளது.

பேரருள்


காணிக்கை என்பதும் கையூட்டாய்
கடவுள் கூட  அவர் கூட்டாய்
பால்வெண்மையில்  கரையுமோ
சிவப்பு நிறப்பாவங்கள்
கண்கள் மூடிய  அரையிருட்டில்
தள்ளுமுள்ளு இல்லாத

வலம்வரும் டக்ளஸின் வரலாறு என்ன?


நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போது போரற்ற சூழ்நிலையில் ஏ9 உடனான சீரான போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும் என்றும் மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்பதும் போன்ற பத்து நிபந்தனைகளை சொன்னாராம். தமிழர்களின் அன்றாட வாழ்வாதார உரிமைகளையே கேட்டு பெறவேண்டிய தேவை எழுந்துள்ளதை மறந்த அமைச்சர்ளும் அவரைப் போன்றவர்களும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி கதைப்பார்களா என்பதை மீளவும் இன்றைய நிலையில் நாம் சிந்தித்துபார்க்கவேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை மைதானத்திற்கு வெளிச்சமூட்ட மின்சாரம் வழங்கப்பட்டால் கூட அதனை ஆரம்பித்துவைக்கவும் டக்ளஸ்தான் செல்கின்றார் என்ற நிலையில் மீளவும் சில விடயங்களை நினைவூட்டுவது பொருத்தமாகவிருக்கும் என கருதுகின்றோம்.

douglas (1)


-நிலவன்

Wednesday, 9 December 2009

போர் முடியும்வரை வன்னியில் செயற்பட்ட 'றோ' முகவர்கள் 50 பேர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்

வன்னியிலிருந்த றோ முகவர்கள் ஐம்பது பேரை போர்முடிவடைந்த கையோடு றோ அமைப்பு இந்தியாவுக்குள் எடுத்துவிட்டது. வன்னியில் றோ முகவர்களாக செயற்பட்ட இந்த ஐம்பது பேரும் ஈழத்தமிழர்கள் என்றும் இவர்களை சிறிலங்கா அரசுடன் பேசி இரகசியமாக றோ இந்தியாவுக்குள் எடுத்துக்கொண்டது என்று சிறிலங்காவின் உயர் அரச மட்டங்களிலிருந்து கசிந்திருக்கிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-தொடர்ந்து வாசிக்க...

Tuesday, 8 December 2009

ஈழகாவியம் - 11

கூழுக்குப் பயறு போலே
குழைதின்னும் ஆடு போலே
ஏழுக்கு எட்டுப் போலே
இருக்கைக்கு அடுத்தாற் போலே
சூழுக்கு வெளிச்சம் போலே
சீயெனும் எட்டர் போலே
சீழுற்றான் இல்லை மண்ணின்
சூரியன் பிரபா தானே!
தொடர்ந்து வாசிக்க...


-புதிய பாரதி

Monday, 7 December 2009

இரவு ஒளியின் இருண்ட பக்கம்


இரவில் நாம் பயன்படுத்தும் செயற்கை வெளிச்சமானது, பறவைகள், கடல் ஆமை, எலி, தவளை போன்ற விலங்கினங்கள் இவற்றைப் பாதிப்பது குறித்து நாம் சென்ற கட்டுரையில் கண்டோம். ஆனால் மனித குலத்திற்கு இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பறவைகள் போல் நாம் உயரமான கட்டிடங்களில் மோதிக்கொண்டு உயிரை விடப்போவதோ, கடல் ஆமைக்குஞ்சுகள் போல் கடற்கரையில் அலைந்து அடிபட்டுச் சாகப் போவதோ இல்லைதான். ஆனால், இரவில் ஏற்படும் செயற்கை ஒளியானது நமது உடலில் பலவிதமான எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இதனால் பல வித உடல் மற்றும் மனக்கோளாறுகள் உண்டாகின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வன்னிச் சொத்துக்கள் மோசடி அம்பலத்துக்கு வருமா?


"பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் மூலம் வன்னியில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன" – பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபச்ச தெரிவிப்பு.
"வன்னியில் இருந்து கைப்பற்றப்பட்ட நிதி மற்றும் சொத்துக்களை தன்வசப்படுத்தி அவற்றைத் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்த மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்" - ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவிப்பு.
இவ்வாறான செய்திகளும் இன்று தென்னிலங்கை ஊடகங்களில் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தச் செய்திகளில் நேரடியான உண்மை ஒன்றை மறைமுகமாக பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

-இராவணேசன்

புதியவழியில் எழுச்சிபெற ஆரம்பித்துள்ள புலிகளை அழித்தொழிக்கவேண்டும்: சீறுகிறார் கோத்தபாய


Gotabaya-Rajapaksaவிடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் புதிய பரிமாணத்தில் எழுச்சிய பெற ஆரம்பித்துள்ளன. அவற்றை தலை தூக்க விடாமல் அழித்தொழிப்பதற்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்லும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஊனமுற்ற படையினருக்கு உதவவென குடாநாட்டில் போலி ஆசாமிகள் நிதி சேகரிப்பு!

ஊனமுற்ற படையினருக்கு உதவிபுரிவதற்கென குடாநாட்டில் போலி ஆசாமிகள் நிதி சேகரிப்பது குறித்து பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு யாழ்ப்பாணத்தின் 51ஆவது படையணித் தலைமையகம் எச்சரித்திருக்கிறது.


தொடந்து வாசிக்க...

Sunday, 6 December 2009

விமானந்தாங்கிக் கப்பல்

350px-Principe-de-Asturias_Wasp_Forrestal_Invincible_1991_DN-ST-92-01129sநாடுகளுக்கிடையிலான யுத்தங்களின்போது விமானப்படையின் பணி பிரதானமானதாகக் காணப்படுகின்றது. எதிரி நாடுகளின் உட்கட்டுமானங்களைச் சிதைப்பதில் விமானப்படையின் பங்கே மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. தொலைவிலுள்ள நாடுகளுடனான யுத்தங்களின் போது விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் வெடிபொருள் நிரப்புதலுக்கான தளங்களைத் தெரிவுசெய்வதிலுள்ள சிரமங்களைத் தவிர்ப்பதன் பொருட்டே விமானந்தாங்கிக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நவீன யுத்த விமானங்களுக்கு வானிற் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி காணப்பட்ட போதிலும் வெடிபொருள் மீள் நிரப்புகைக்காகத் தளங்கள் தேவையாகவேயுள்ளன.


தொடர்ந்து வாசிக்க...


-ஜெயசீலன்

கே.பி. விசாரணையில் திருப்பம்: புலிகளின் பணம் எதுவும் வைப்பில் இல்லை என சுவிஸ் வங்கி கைவிரிப்பு!

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குக்களை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கே.பி.யிடமிருக்கும் சகல சொத்துக்களும் அவரது உண்மையான தகவலின் அடிப்படையில் இல்லாமை மற்றும் இந்தப் பணம் வியாபார நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் என்பதால் அது ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிப்பது சிரமம் என்பதாலேயே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து வாசிக்க...

Saturday, 5 December 2009

வரலாறுகள் அழிவதில்லை…


தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ள தேர்தல் கருத்து மோதல்கள் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைகின்ற அதேவேளை ஒவ்வொருவரது உண்மையான நிலைப்பாடுகளையும் வெளிப்படையாய் வெளிக் கொணர்கின்ற நிலையினைக் கொண்டுவந்திருப்பதை தமிழ் மக்களால் வேடிக்கை பார்க்க முடிகின்றது.
தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் மக்களை ஒரு உயிருள்ள ஜீவன்களாயும், வெற்றி பெற்றுவிட்டால் அவர்களை ஏதோ கண்காட்சிப் பொருட்களாயுமே சிங்களப் பேரினவாதத்தின் முக்கிய கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் கருதி வந்துள்ளனர்.
jaffna-situation

-இராவணேசன்

சம்பந்தர் - மகிந்த இடையில் நடைபெற்ற சூடான சந்திப்பு: நடந்தது என்ன?

sampatahnதமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவின் அரசதலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்கு அழைப்பித்து, எதிர்வரும் அரசதலைவர்த் தேர்தலை ஒட்டிய விடயங்கள் குறித்து அவருடன் பேச்சு நடத்தினார் என அறியவந்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுகளின் பெறுபேறு குறித்து கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் அதிருப்தியே தெரிவித்தன. அரசதலைவர் தரப்பிலிருந்து காட்டப்பட்ட சமிக்ஞைகள் தமிழர் தரப்பின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவு செய்வனவாக அமையவில்லை என்று அவை குறிப்பிட்டன.


தொடர்ந்து வாசிக்க...

Friday, 4 December 2009

மாணவர்களின் உடலில் துப்பாக்கி ரவைகள்: மருத்துவ சோதனையில் கண்டுபிடிப்பு


இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிந்து ஆறுமாதங்கள் ஆன நிலையில், அதன் பன்முக பாதிப்புக்கள் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
போரின் போது உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த இளவயது மாணவர்கள் பலருக்கு, அவர்களின் உடலிலிருந்து அவை இன்னமும் அகற்றப்படாமலிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

Thursday, 3 December 2009

கொழும்பில் மர்மமான முறையில் காணமல்போயுள்ள நால்வர்!


காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் வர்த்தகர் உட்பட  நால்வர் கொழும்பில் நேற்றிரவு முதல் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளனர். அவர்கள் பயணம் செய்த வாகனம் இன்றுகாலை பொரளை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

புலிகளின் மூன்று கப்பல்கள் கைப்பற்றப்பட்டது எப்படி?


விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள நிதி ஆகியவற்றை சிறிலங்கா அரசின் சொத்துக்களாக்கும் வகையில், தடுப்புக்காவலில் வைத்துள்ள கே.பியை பலவந்தப்படுத்தி குறிப்பிட்ட ஆவணங்களில் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக உயர் அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள கே.பி. தொடர்பாகவும் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் முறை குறித்தும் தகவல்கள் தெரிந்த சிறிலங்கா அரசின் உயர் வட்டாரங்கள் சில தெரிவிக்கையில்...

தமிழர் என்ற காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட பாலவர்மன் சிவகுமார்


sunanthaபம்பலப்பிட்டி கடலில் சிறிலங்கா காவல்துறையினரால் அடித்து மூழ்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட பாலவர்மன் சிவகுமார் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகியுள்ளது. அவரது படுகொலை தொடர்பாக சிறிலங்கா சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுனந்த தேசப்பிரிய எழுதிய பத்தி வருமாறு:-

பாலவர்ணம் சிவகுமார் தற்போது எம்மிடையே இல்லை. இனரீதியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ள எமது சமுகத்தில் பலர் இவர் மற்றுமொரு தமிழர் என்றே கணக்கில் கொள்வர். எனினும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தமிழ் சமூகமும், அவர் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு தமிழ் இனத்தவர் எனக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.


சாதி இரண்டொழிய


எனக்குத் தெரிந்த காலம் தொடக்கம் அந்தக் கிணறு மக்களின் பாவனையின்றியே கிடந்தது.
இரவு எட்டுமணிக்கே படுக்கப் போனபோது தான் சின்னராசாவின் மகளும் கடைசிப் பெடியனும் வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள்.
அவர்கள் தண்ணீர் எடுக்க வருவதைப் பார்த்த மாமி ஏதோ தன் பாட்டில் பேசிக் கொண்டு
"என்ன தண்ணி அள்ள வாறதெண்டா விளக்கு வைக்க முன்னம் வர வேணும் எண்டு சொன்னனான் தானே."

-ஆவூரான்

Wednesday, 2 December 2009

தடுப்புமுகாம் மக்கள் 15 நாட்களுக்கு வெளியில் தங்கியிருந்துவிட்டு வர அரசு அனுமதி!


வவுனியா அகதி முகாம்களில் தங்கவைக் கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முதல் சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டிசெம்பர் முதலாம் திகதி முதல் இந்த மக்களுக்கு நடமாட்டச் சுதந்திரம் வழங்கப்படும் என இரு வாரங்களுக்கு முன்னர் அரசு அறிவித்திருந்தது தெரிந்ததே.
நேற்று நண்பகல் வரை ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாமிலிருந்து வெளியேறினர் என்று வவுனியா பதில் பிரதேச செயலாளர் என்.திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.
"முகாமிலிருந்து செல்வதற்கான போக்குவரத்தே பிரச்சினையாகவுள்ளது. எனினும், மக்கள் அங்கிருந்து செல்வது குறித்து மகிழ்ச்சியாகவுள்ளனர்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
6


வெளிநாடொன்றில் விடுதலைப்புலிகளின் மூன்று கப்பல்களை சிறிலங்கா அரசு கைப்பற்றியுள்ளதாம்!


விடுதலைப்புலிகளின் மூன்று கப்பல்களை வெளிநாட்டு துறைமுகம் ஒன்றில்வைத்து சிறிலங்கா அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட பத்மநாதன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட இந்த கப்பல்கள் இரண்டு வாரங்களுக்குள் சிறிலங்காவுக்கு கொண்டுவரப்படவுள்ளன என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈழகாவியம் இலக்கியதொடர் - 10

புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:12 நிகழ்காலம்.
சிறீலங்கா மீதான ஒரு பார்வை
(வெண்பா)

புலத்தி லிருந்திப் பொழுதில் இலங்கா
மலக்கா டுறைவதைப் பார்த்தேன்-அலக்காகி
துட்டன் பெயரைத் துருவித் தனக்குத்தான்
இட்டான் மகிந்தனே ஏல்!தொடர்ந்து வாசிக்க...

நூறாவது குரங்கு

1952 ஆம் ஆண்டு சில ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கோஷிமா என்ற தீவில் ஒரு வகைக் குரங்கினத்தின் இயல்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் குரங்குகளுக்கு உணவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு தந்து வந்தார்கள். அவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெட்ட வெளியில் போட குரங்குகள் அவற்றை எடுத்து சாப்பிட்டு வந்தன. பெரும்பாலும் ஈர சகதியில் விழுந்திருந்த கிழங்கை எடுத்து சாப்பிட்ட குரங்குகள் அந்த சகதியின் சுவையும் கிழங்கோடு சேரவே, அதை சிரமத்துடன் சாப்பிட்டன.


தொடர்ந்து வாசிக்க...


-என். கணேசன்

Tuesday, 1 December 2009

போதையில் இருந்து விடுபட...

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவன் ஒரு நாள் ஒரு ஞானியைச் சென்று சந்தித்தான். "ஐயா! குடிப்பழக்கம் என்னை ஆட்கொண்டு விட்டது. அதில் இருந்து என்னால் மீள முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். ஞானி பதில் எதுவும் கூறாமல், அருகில் இருந்த ஒரு மரத்தின் அருகில் சென்று அந்த மரத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டார். பின் உரத்த குரலில் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!! இந்த மரம் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டது. என்னை அதில் இருந்து விடுவிக்க வாருங்கள்" என்று கத்தினார். குடிகாரன் மனதிற்குள் இவர் நம்மை விடப் பெரிய குடிகாரர் போலிருக்கிறதே! என்று நினைத்தவாறே "இது என்ன அசட்டுத்தனம் சுவாமி! நீங்கள் மரத்தை வலியச்சென்று கட்டிப் பிடித்து விட்டு, அது உங்களைப் பிடித்துக் கொண்டு விடவில்லை என்று கத்துகிறீர்களே! நீங்கள் விடுபட வேண்டும் என உண்மையில் விரும்பினால் நீங்கள் அல்லவா உங்கள் கைகளை விலக்க வேண்டும்?" என்றான்.


தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

Mi-24 பறக்கும் டாங்கி

180px-Mi-24_Macedonianகடந்த வாரம் இப்பகுதியில் அமெரிக்கத் தயாரிப்பான AH-65 தாக்குதல் உலங்குவானூர்தி தொடர்பாகப் பார்த்திருந்தோம். இவ்வாரம். பறக்கும் டாங்கி என ரஸ்ய விமானிகளால் அழைக்கப்படும் Mi-24 தாக்குதல் உலங்குவானூர்தி தொடர்பாகப் பார்க்கவிருக்கின்றோம். 1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது.


தொடர்ந்து வாசிக்க...


-ஜெயசீலன்