Monday 14 December 2009

கொலை வழக்கில் முதல் எதிரி மகிந்த இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்!


இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசை ஆதரிப்பது? அல்லது இரண்டு பிசாசுமே வேண்டாம் நாம் தனித்து நின்று கேட்போம், அதுவும் வேண்டாம் இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன அல்லது இடையில் வந்த அனுமான் ஆண்டால் என்னவென்று தேர்தலையே முற்றாகப் புறக்கணிப்போம். இந்த தெரிவுகளையிட்டுத்தான் தமிழ்த் தேசியக் கூட்டணி தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறது போல் தெரிகிறது.

வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று நாள்களே (டிசெம்பர் 17) முழுதாக எஞ்சியிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பிப் போய்த் திண்டாடுகிறது.
"சனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மீண்டும் கூடி சனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்ற செய்தி உண்மையல்ல. 12 ஆம் நாள் (சனிக்கிழமை) வரை எந்த முடிவையும் தமிழத் தேசியக் கூட்டணி எடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.


-இந்திரஜித்

No comments:

Post a Comment