Tuesday 1 December 2009

போதையில் இருந்து விடுபட...

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவன் ஒரு நாள் ஒரு ஞானியைச் சென்று சந்தித்தான். "ஐயா! குடிப்பழக்கம் என்னை ஆட்கொண்டு விட்டது. அதில் இருந்து என்னால் மீள முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். ஞானி பதில் எதுவும் கூறாமல், அருகில் இருந்த ஒரு மரத்தின் அருகில் சென்று அந்த மரத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டார். பின் உரத்த குரலில் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!! இந்த மரம் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டது. என்னை அதில் இருந்து விடுவிக்க வாருங்கள்" என்று கத்தினார். குடிகாரன் மனதிற்குள் இவர் நம்மை விடப் பெரிய குடிகாரர் போலிருக்கிறதே! என்று நினைத்தவாறே "இது என்ன அசட்டுத்தனம் சுவாமி! நீங்கள் மரத்தை வலியச்சென்று கட்டிப் பிடித்து விட்டு, அது உங்களைப் பிடித்துக் கொண்டு விடவில்லை என்று கத்துகிறீர்களே! நீங்கள் விடுபட வேண்டும் என உண்மையில் விரும்பினால் நீங்கள் அல்லவா உங்கள் கைகளை விலக்க வேண்டும்?" என்றான்.


தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

No comments:

Post a Comment