Tuesday 6 October 2009

செல்பேசி - சில உண்மைகள்



canon-blackberry-phoneஇன்றைய உலகில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக, மனிதனின் இன்னொரு உறுப்பாக மாறிவிட்டது செல்பேசி. (தமிழில் இதை அலைபேசி எனவும் சிலர் வழங்குவதுண்டு). எந்த ஒரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருப்பது உலக இயல்பே. செல்பேசியும் இதற்கு விதிவிலக்கன்று. யாருடனும் எந்த நேரத்திலும் யாராலும் தொடர்பு கொள்ள இயலும். எந்த நெருக்கடி நிலையிலும் அவசரத்திலும் கைகொடுக்கக் கூடியது. நாம் செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியும். செல்பேசிகளில் உள்ள பிற வசதிகளாகிய குறுந்தகவல்கள் (SMS), ஆர்கனைசர், அலாரம், இணையத் தொடர்பு (GPRS), வானொலி போன்ற இன்ன பிற வசதிகள் இதன் பயன்பாட்டை தவிர்க்க இயலாததாக்கி விட்டன. அதே நேரம் இதன் பயன்பாடு அளவுக்கு அதிகமாகி விட்டது. குறிப்பாக இளைய தலைமுறையினரின் மத்தியில் இதன் தாக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. கண்ட கண்ட நேரங்களில் தொடர்பு கொள்வது, நேரத்தை அதிக அளவு வீணடிப்பது முதலியவை இதன் பயன்பாட்டால் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் இது நமக்கு ஓய்வே இல்லாத நிலையையும் ஏற்படுத்துகிறது.


-பாலகார்த்திகா

No comments:

Post a Comment