Tuesday 18 August 2009

பொக்கிசம் - ஒரு பார்வை


கதாநாயகர்களுக்காக சினிமா பார்ப்பது என்பதை மாற்றி அவ்வப்போது இயக்குனர்களுக்காக ஒரு சினிமா பார்க்கலாம் என்ற நம்பிக்கையை விதைக்கும் இயக்குனர் வரிசையில் சேரன் இருக்கிறார். பொக்கிஷம் திரைப்படம் மிக எதிர்பார்ப்பினையும் வேறு எழுப்பிவிட்டிருந்தது. ஆனால் நிறை குறைகள் சரிசமம். முழுப்படமும் ஒரு நீண்ட காதல் கவிதை. தற்போது நீளத்தைச் சற்றே குறைத்து வெளியிடுவதாக செய்தி வருகிறது என்றாலுமே இது மிக நீஈஈஈஈஈஈஈஈஈண்ட கவிதையே.
pokisam4காதலில் காத்திருந்து பழக்கப்பட்டவர்களுக்கும் பிரிவின் வலியை அனுபவித்தவர்களுக்கும் ஓர் இதமான உணர்வினைத் தருவதாக இப்படம் அமைந்திருக்கிறது. லெனினாக வருகிற சேரனின் மகன் மகேஷ் (ராஜேஸ்) இன்றைய தலைமுறையின் எஸ் எம் எஸ் , மிஸ்டுக்கால் வகையறா காதலில் கதையைத் துவங்கிவைக்கிறார் . தற்செயலாக தந்தையின் முகவரியிட்ட அவர் காதலியின் கடிதங்களைப் படிக்க நேர்கிறது. நெகிழ்வோடு அக்கடிதங்களின் வழி நாதிராவின் ( பத்மப்ரியா) காதலையும் அந்தக் கடிதங்கள் வந்த தேதியிட்ட தந்தையின் டைரிக்குறிப்பினால் அவருடைய காதலையும் மாறி மாறி அறிந்துகொள்கிறார்.


-கயல் லக்ஷ்மி

No comments:

Post a Comment