Saturday 9 January 2010

2009 இல் ஹொலிவூட் திரையுலகம்.


உலகின் மிகப்பெரும் வர்த்தக – பொழுதுபோக்குத் துறைகளுள் ஒன்றான ஹொலிவூட் திரையுலகமானது நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டில் 10 பில்லியன் வசூலை அமெரிக்கா, கனடா ஆகியவற்றில் திரட்டிச் சாதனை புரிந்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் இந்தப் புள்ளி இப்போதுதான் ஹொலிவூட் திரையுலகத்தால் எட்டப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் ஓராண்டில் அதிகளவான வசூலைக் குவித்தது (அமெரிக்கா, கனடாவில்) 2007 ஆம் ஆண்டில்தான். அவ்வாண்டில் 9.68 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வசூலாகியது. 2008 இல் இத்தொகை 9.63 பில்லியன்களாக இருந்தது. 2009 இல் இது அண்ணளவாக 10.6 பில்லியன்களாக உயர்ந்துள்ளது. 2009 இன் இறுதிப்பகுதியில் வெளியான ‘Avatar’ மற்றும் ‘Sherlock Holmes’ ஆகிய படங்கள் இவ்வாண்டுக்கான வசூலை உயர்த்தியவற்றில் முக்கியமானவை.

No comments:

Post a Comment