தாயகத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய சக்திகள் இருமுனையில் போட்டியிடுகிறார்கள். தமிழ் தேசியத்தின் உறுதியான பற்றுதலில் பயணிக்கவேண்டும் என்ற வகையில் ஒரு தரப்பும் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எமது போராட்டமும் பயணிக்கவேண்டும் என இன்னொரு தரப்புமாக இரண்டு எதிர்நிலைகளில் தமிழ் தேசிய சக்திகள் பயணிக்கின்றன என்பது யாவரும் அறிந்தவிடயம்.தமிழ் தேசிய சக்திகளின் போக்குகளையும் அதன் நிலைப்பாடுகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சித்து அதன் சரியான நிலைப்பாடுகளை மக்கள் முன்னெடுத்து செல்வதே ஊடகங்களின் நிலைப்பாடாக இருக்கவேண்டும். ஆனால் இன்று சில ஊடகங்கள் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களை மட்டும் முன்வைத்தோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கருத்தை மட்டும் முன்வைத்தோ அரசியல் செய்கின்றனர்.
நிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது.
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
பொதுவாகப் படகுகள் நீரின் அடியில் சுழலும் சுழலிகளின் (propeller) மூலமாகக் கிடைக்கும் உந்துவிசையின் மூலமாகவே உந்திச்செல்லப்படுகின்றன. ஆனால், நீருந்து விசைப்படகு நீர்த்தாரைகளைப் படகின் பின்னோக்கிப் பீய்ச்சியடிப்பதன் மூலம் நீர்ப்பரப்பின் மீது உந்துவிசையை உருவாக்குகின்றது. இதன்காரணமாக, நீருந்து விசைப்படகுகளில் சுழலிகளுக்குப் பதிலாக நீர்த்தாரைகளைப் பீய்ச்சியடிக்கும் இயந்திர அமைப்புக்கள் காணப்படும். ஆரம்பத்தில் வேகமாக ஓடும் மற்றும் ஆழம் குறைந்த நதிகளிற் பயன்படுத்துவதற்காக, நியூசிலாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான சேர் வில்லியம் ஹமில்ற்றன் (Sir William Hamilton) என்பவரால் 1954 ஆம் ஆண்டில் நீருந்து விசைப்படகு வடிவமைக்கப்பட்டது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான தடுமாற்றமான நிலைப்பாடுகளால் அனைத்து தமிழ் மக்களிடத்திலும் ஏமாற்றமான மனநிலை காணப்படுகிறது.
இறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில் இருந்து மீண்டெழுந்தது மட்டுமின்றி, தான் விபத்தில் அடிபட்டதையும் அதிலிருந்து மீண்டதையும் 'மகிழ்ச்சியான கதை' என்று கூறும் ஒரு வித்தியாசமான பெண் டேனியலா கார்சியா.
2010 நாடாளுமன்றத் தேர்தல் வழமையிலும் பார்க்க இந்த முறை பரபரப்பு மிக்கதாக நோக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் மாறுபட்ட வாதப்பிரதிவாதங்களும், மக்கள் முடிவெடுப்பதில் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல சிங்கள தேசத்திலும் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள்.
உலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள்.
இன்றுவரை புலத்து தமிழர்கள் வாழ்ந்துவரும் பல்வேறு நாடுகளில் தமிழீழ தனிநாட்டுக்கான மக்களாணையை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு நடத்தப்பட்டுவரும் தேர்தல்களும் அவற்றில் மக்களின் பங்களிப்பும் சர்வதேச அரசுகளினது கவனத்தை கவர்ந்துள்ளதுள்ளதுடன், சிறிலங்கா அரசையும் அச்சுறுத்த தொடங்கியுள்ள வேளையில், இவ்வாறான தேர்தல்களும் அவை சாதிக்கபோவது என்ன? என்ற வினாக்களும் அவசியமற்றவை தான்.
எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத்தீவிலுள்ள பெரும்பாலும் அனைத்து தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகள் எவற்றுடனும் சேராது தனித்து போட்டியிடவுள்ளதாகவே இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வெளிக்காட்டிய உணர்வின் வெளிப்பாடுகளின் விளைவுகளாகவே தற்போது தமிழ்க்கட்சிகள் எடுக்கின்ற முடிவுகளை நோக்கவேண்டும். அவை தொடர்பான அலசல்களாக விரிகின்றது இக்கட்டுரை.
நளினி உள்ளே நுழையும்பொழுதே அம்மாவிற்குப் புரிந்துவிட்டது, இன்றும் அலுவலகத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் நடந்திருக்கின்றன என்று. நளினி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள முகாமையாளராக சில நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தாள். சமீப காலமாக, அங்கு ஏராளமான நிர்வாகக் கோளாறுகள், குழப்பங்கள், எக்கச்சக்க நெருக்கடிகள். புதிதாகச் சேர்ந்த நளினிக்கு அவற்றை தினம் தினம் எதிர்கொள்வது பெரும் சோதனையாக இருந்தது. தன்னுடைய பதட்டம், சலிப்பு எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லிப் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது அவளுக்கு. இன்றும் அப்படித்தான். 'சோதனைகளை எதிர்கொள்ளாமல் சாதனைகள் இல்லை' என்று நளினிக்குப் புரியவைத்தாக வேண்டும் என்று தோன்றியது அவள் அம்மாவிற்கு.
செல்லப் பிராணிகள் பலருக்கு இருப்பதுண்டு. ஆனால் கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த சிடோ (Chito) என்றழைக்கப்படும் கில்பர்ட்டோ ஷெட்டென்Gilberto Shedden என்ற மீனவனுக்குச் செல்லப் பிராணி எது தெரியுமா? பதினேழு அடி நீளமுள்ள ஒரு முதலை தான். 52 வயதான சிடோ தண்ணீரில் அந்த பெரிய முதலையுடன் கட்டிப் பிடித்து விளையாடுவது கண் கொள்ளாக் காட்சி.
குண்டுவீச்சு விமானங்களின் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் அவை காலத்திற்குக் காலம் நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி புதிய வினைத்திறனுடன் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. இந்த வகையில் அமெரிக்க விமானப்படையாற் பயன்படுத்தப்படும் B-52 வகைக் குண்டுவீச்சு விமானம் மிக நவீன தொழிநுட்பங்களை உள்ளடக்கிய ஒரு விமானமாகும். 1955 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விமானப்படையின் சேவையில் உள்ள இவ்வகைக் குண்டுவீச்சு விமானங்கள் காலத்திற்குக் காலம் விருத்திசெய்யப்பட்டு நவீன தொழிநுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 22-02-2010 உடன் ஓராண்டு பூர்த்தி கொள்கின்றது.
கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது.
நீதி வேண்டிநிற்கும் உலகில் மற்றோர் நீதி அரங்கேற்றம் பெற்றுள்ளது. ஆனால் அந்த நீதி மற்றொரு அநீதியால் அரங்கேற்றப்பட்டுள்ளமை தான் வித்தியாசமானது. தமிழின அழிப்பினை மேற்கொண்ட ஓரங்க நாடகத்தின் பிரதான வில்லன்களில் ஒரு வில்லன் மற்றொரு வில்லனால் அழிக்கப்பட்ட அல்லது சிறையெடுக்கப்பட்ட கதைதான் பொன்கேசா கைது.
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக அவன் கோபமும், சண்டையுமாக இருப்பதால் அவனுக்கு நண்பர்களே இல்லை, பள்ளியிலும் ஆசிரியர்களிடம் அவனுக்குக் கெட்ட பெயர்தான். இதன் காரணமாக அவனும் எப்பொழுது பார்த்தாலும் வருத்தத்தில் இருந்தான். கோபமும் துயரமுமான மனநிலையிலேயே அவன் இருந்ததால் அவனால் சரிவரப்படிப்பிலும் கவனம் செலுத்த இயலவில்லை, விளையாட்டுக்களிலும் அவனைச் சேர்த்துக்கொள்ள யாரும் விரும்பவில்லை.

அனைவருமே வெற்றிக்கான பாதையில் தான் செல்ல விரும்புகிறோம். ஆனால் வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிற போது போட்டி, பொறாமைகள், பிரச்சனைகள், தோல்விகள், மனக்கசப்புகள் என்று படிப்படியாக பல தடைகளும் துன்பங்களும் நேரிடுகிறது. வெற்றியின் பின்னால் ஓடாமல் ஒரு நல்ல செயலை எடுத்துக்கொண்டு நல்ல திட்டமிடுதலும் அதை சரியான வழியில் செயல்படுத்தலும் வெற்றியை தன் பின்னால் ஓடிவரச் செய்யக்கூடியதாக மாற்றுவதும் ஒரு புத்திசாலியின் வழியாகும்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது ஆதரவை நல்க வேண்டுமெனவும் வெளிவிகார அமைச்சர் யாழ் நூலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார்.
மீண்டுமொரு தேர்தல் முனைப்புக்களுக்கான தளம் திறக்கப்பட்டுள்ளது. ஆரசியல் களத்தில் நான் முந்தி நீ முந்தி என கூட்டணிகளும், கருத்து வெளிப்பாடுகளும் தலை தூக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சரியான கேள்விகளுக்கான சரியான பதில்களை வழங்க வேண்டிய சூழலில் தமிழ் அரசியல்த் தலைவர்கள் இருக்கின்றார்கள்.
விமானவியற் தொழிநுட்பத்தில், ஒலியின் வேகத்திலும் ஐந்து மடங்கு அதிகமான வேகத்திற் பயணிக்கவல்ல விமானங்கள் hypersonic விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. சாதாரண தாரை இயந்திரங்களின் (jet engines) மூலம் ஒலியின் ஐந்து மடங்கு வேகத்தினைப் பெறுவதென்பது இலகுவான காரியமில்லை. இதன் காரணமாக இவ்வகை விமானங்களுக்கு, அடிப்படையில் ramjet இயந்திரத்தின் தத்துவத்தில் இயங்கினாலும், அதனைவிட அதிகளவாக உந்துசக்தியைப் பிறப்பிக்கவல்ல scramjet இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் சிப்பாய்களைக் காண அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்வார். மருத்துவர்களிடம் அவர்களுடைய உடல்நல முன்னேற்றத்தைக் கேட்டு அறிந்து கொள்வார்.
தற்போது இலங்கைத்தீவில் நடந்துமுடிந்த தேர்தல், அங்கு வாழும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை எவ்வாறு சிறிலங்கா என்ற நாட்டுக்குள் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்ற வினாவை மீண்டும் எழுப்பி நிற்கின்றது. அத்துடன் தமது ஆட்சிக்கதிரைக்காக தமிழர்களை எவ்வாறு அடக்குகிறார்கள் என்பதை வெளிக்காட்டும் இன்னொரு சாட்சியாகவும் அத்தேர்தல் முடிந்திருக்கிறது.
மிகத் தொலைதூர இலக்குக்களை நோக்கி உயர் புவிச்சுற்றுவட்டப்பாதைவழியே வழிநடாத்தப்பட்டு இலக்குகளைத் தாக்கியழிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணையே எறிபாதை ஏவுகணை (Ballistic Missile) என்றழைக்கப்படுகின்றது. இவ்வகை ஏவுகணைகள் எறிபாதை ஏவுகணை என்று அழைக்கப்படுவதன் காரணம் இவை ஒரு எறியப்பாதையினூடாகவே பயணிக்கின்றன. இவ்வகை ஏவுகணைகள் கிடைப்பறப்பை மேற்கொள்வதில்லை. சாதாரணமாக பந்து ஒன்றையோ அல்லது வேறொரு பொருளையோ எறியும்போது அது எவ்வாறு ஒரு எறியப்பாதையில் பயணிக்கின்றதோ, அவ்வாறே எறியப்பாதை ஏவுகணைகளும் பயணிக்கின்றன.
மீண்டும் தமிழர்தாயக மக்கள் ஒன்றிணைந்ததான தமது கொள்கையை நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஒன்று சேர வெளிப்படுத்தியுள்ளனர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு என்பது தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே வெளியாகியிருக்கின்றது.
1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.
இசை, மொழி இனம் மதம் கடந்து அனைவரையும் இணைக்கக் கூடியது, அதிலும் குறிப்பாக இந்தியாவில், இந்து மதத்தில் "இசையால் தமிழாய் இருப்பவனே" என்றும், "இசையால் வசமாகா இதயம் எது, ஈசனே இசைவடிவம் எனும்போது" என்றும் இசை இறைவடிவாகவே நோக்கப் படுகிறது. கலைமகள் வீணையிசைப்பதாகவும், நாரதர் கந்தருவர்கள் முதலியவர்கள் இசையில் தேர்ந்தவர்கள் எனவும், கண்ணனின் குழலிசையில் பசுக்களும், பறவைகளும், ஏன்... செடி கொடிகள் கூட மயங்கி நின்றதாகவும் இசை தொடர்பான ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.
வரும் 26 ஆம் நாள் (26/01/2010) இலங்கையில் இடம்பெற இருக்கும் அதிபருக்கான தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு அமையவும் நடைபெறுமா என்னும் கேள்வி இப்போது எழுந்துள்ளது.
மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.
கிளிநொச்சி மீள்குடியேற்றம் அதன் பின்னான மக்களின் இயல்பு வாழ்வு என்றெல்லாம் பல்வேறு செய்திகள் நாளுக்கு நாள் வெளிவந்தாலும் உண்மையில் கிளிநொச்சியின் நிலைப்பாடு தொடர்பில் வெளி உலகிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரிய பலமாக விளங்கிய தமிழர்களின் இராணுவ பலம் சிறிலங்கா அரசினாலும் அதன் நேச சக்திகளின் கூட்டுச்சதியினாலும் சிதைக்கப்பட்ட தற்போதைய நிலையில் அவ்வாறான சூழ்ச்சிவலையில் தமிழ்மக்கள் எவ்வாறு சிக்கினார்கள்? அந்த சூழ்ச்சிவலையின் பிரதான சூத்திரதாரிகள் யார்? அவ்வாறான கபடநாடகங்கள் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் போராட்டங்களில் எவ்வாறான பரிணாமத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றன? போன்ற விடயங்களை, போரின் உஷ்ணம் தணிந்துள்ள இப்போது சற்று இரைமீட்டிக்கொள்வது எதிர்கால பயணத்துக்கு ஆரோக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கும் என்பது உறுதி.

நேர்முகத்தேர்வில் உங்கள் அறிவைச் சோதிக்கும் கேள்விகளை விட உங்கள் தன்மையைச் சோதிக்கும் கேள்வுகள் தான் பொதுவாக அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் வெவ்வேறு விதம். ஒரு தேர்வாளரின் குணமும் மற்றவருடைய குணமும், நேர்முகத்தேர்வுகளுக்கான முறைகளும் ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் அமைதியாக, தட்டிக்கொடுக்கும் விதமாக உங்களை நேர்முகம் செய்யலாம். சிலர் உங்களைச் சீண்டி உங்கள் குணாதிசயத்தை எடை போட விரும்பலாம். ஆனால் நீங்கள் ஒரே விதமாக, அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் பதில்களைச் சொல்வது அவசியம்.
சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது சிறிலங்காவின் தேர்தல்தான். யார் ஆட்சிக்கு வந்தாலென்ன அவர்களுடன் தமது அரசுகள் தொடர்ந்து இணைந்து செயற்படும் என அறிவித்துவிட்டு தேர்தல் முடியும்வரை காத்திருக்க சர்வதேச நாடுகள் தயாரில்லை. சிறிலங்காவின் தேர்தல் தற்போது சர்வதேச சக்திகளின் கைகளுக்கும் சென்றுவிட்டதை தெளிவாக காணமுடிகின்றது.
நவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்கமும் அவற்றுக்கான நவீன தொழிநுட்ப உருவாக்கமும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.
பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.