ஒரு ஊரில் சோமு என்பவன் வசித்து வந்தான். ஒரு நாள் செய்யாத ஒரு குற்றத்திற்கான அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டு விட்டது. உன்னுடைய கடைசி ஆசை என்ன? என்று கேட்ட மன்னரிடம், தள்ளாத வயதுடைய தனது தாய் பக்கத்து ஊரில் வசிப்பதாகவும், அவளை ஒரு முறை பார்த்து வணங்கிவிட்டு வர அனுமதி வேண்டுமென்றும் கோரினான் சோமு. "நீ திரும்பி வரவில்லையென்றால் என்ன செய்வது? உனக்குப்பதில் வேறொருவர் பிணையாக நிற்பதானால் உன்னை அனுமதிக்கிறேன். இல்லையென்றால் முடியாது", என்றார் அரசர்.
தொடர்ந்து வாசிக்க...
Tuesday, 26 January 2010
ஒருகாலத்தில் தமிழர்களின் கருவறை தெய்வமாக விளங்கிய இந்தியா இன்று சண்டேஸ்வரர் நிலையில்!
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரிய பலமாக விளங்கிய தமிழர்களின் இராணுவ பலம் சிறிலங்கா அரசினாலும் அதன் நேச சக்திகளின் கூட்டுச்சதியினாலும் சிதைக்கப்பட்ட தற்போதைய நிலையில் அவ்வாறான சூழ்ச்சிவலையில் தமிழ்மக்கள் எவ்வாறு சிக்கினார்கள்? அந்த சூழ்ச்சிவலையின் பிரதான சூத்திரதாரிகள் யார்? அவ்வாறான கபடநாடகங்கள் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் போராட்டங்களில் எவ்வாறான பரிணாமத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றன? போன்ற விடயங்களை, போரின் உஷ்ணம் தணிந்துள்ள இப்போது சற்று இரைமீட்டிக்கொள்வது எதிர்கால பயணத்துக்கு ஆரோக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கும் என்பது உறுதி.தொடர்ந்து வாசிக்க...
Wednesday, 20 January 2010
எடடி மண்வெட்டி! நடவடி அம்பாந்தோட்டைக்கு!
தேர்தல் களத்தில் நாளுக்கு நாளான கருத்து மோதல்களும் அதனூடான உளறல்களும் அதிகரித்து வருகின்றன. இனி வரும் காலங்களில் தமது குடும்ப அரசியலை யாராலும் அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த மகிந்த குடும்பம் தற்போது அச்சத்தால் வெருண்டிருப்பதை அண்மைய நடவடிக்கைகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.
"நாட்டின் ஆட்சியின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளமையால் அதனைக் காக்கும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபடவேண்டும்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எதனைக் கருத்திற் கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார் என்று புரிகின்றது.
Tuesday, 19 January 2010
யாதுமாகி
நேர்முகத்தேர்வு- பொதுவான கேள்விக்கணைகள்
நேர்முகத்தேர்வில் உங்கள் அறிவைச் சோதிக்கும் கேள்விகளை விட உங்கள் தன்மையைச் சோதிக்கும் கேள்வுகள் தான் பொதுவாக அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் வெவ்வேறு விதம். ஒரு தேர்வாளரின் குணமும் மற்றவருடைய குணமும், நேர்முகத்தேர்வுகளுக்கான முறைகளும் ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் அமைதியாக, தட்டிக்கொடுக்கும் விதமாக உங்களை நேர்முகம் செய்யலாம். சிலர் உங்களைச் சீண்டி உங்கள் குணாதிசயத்தை எடை போட விரும்பலாம். ஆனால் நீங்கள் ஒரே விதமாக, அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் பதில்களைச் சொல்வது அவசியம்.தொடர்ந்து வாசிக்க...
Monday, 18 January 2010
காய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர் தரப்பு
சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது சிறிலங்காவின் தேர்தல்தான். யார் ஆட்சிக்கு வந்தாலென்ன அவர்களுடன் தமது அரசுகள் தொடர்ந்து இணைந்து செயற்படும் என அறிவித்துவிட்டு தேர்தல் முடியும்வரை காத்திருக்க சர்வதேச நாடுகள் தயாரில்லை. சிறிலங்காவின் தேர்தல் தற்போது சர்வதேச சக்திகளின் கைகளுக்கும் சென்றுவிட்டதை தெளிவாக காணமுடிகின்றது.இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத் பொன்சேகாதான் ஆட்சிக்கு வருவார் என்பது வெளிப்படையானது. இவ்வாறான பின்புலத்தில், இத்தேர்தலில் சர்வதேச நாடுகளின் வகிபாகம் என்னவாக இருக்கபோகின்றது? குறிப்பாக இந்தியாவின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.
குரூஸ் ஏவுகணை (Cruise Missile)
நவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்கமும் அவற்றுக்கான நவீன தொழிநுட்ப உருவாக்கமும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.தொடர்ந்து வாசிக்க...
Sunday, 17 January 2010
கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!

கணினி மயமான வாழ்க்கை முறையில்
மனிதன் குடும்பத்தை விட்டுக் -- கணினியுடன்
ஒன்றிக் கலந்துவிட்டான்!இங்கே குடும்பத்தார்
திண்டாடும் கோலங்கள் பார்
தொடர்ந்து வாசிக்க...
Thursday, 14 January 2010
நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.தொடர்ந்து வாசிக்க...
Wednesday, 13 January 2010
உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்
சுய முன்னேற்றம் பெறவேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அவர் முதலில் செய்ய வேண்டுவது சுயபரிசோதனை. தன்னைத் தான் அறிதல் எந்த வெற்றிப்பயணத்திற்கும் அவசியம். தன்னை அறிதலும், பிறர் தன்னைப்பற்றி நல்ல முறையில் அறியும்படி செய்தலும் வாழ்வில் பல பொன்னான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கக் கூடியவை. நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? என நினைக்க வேண்டாம்.நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது நிரம்பவே இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொள்ள நாம் செய்யவேண்டியது கொஞ்சம் சுய பரிசோதனை. இந்தப் பரிசோதனை தனிமனிதர்கள் மட்டுமல்ல, பல சமயங்களில் பெரும் நிறுவனங்கள் கூட செய்துகொள்ளவேண்டிய சோதனை. அதுதான் உங்கள் வலிமை, பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த 'SWOT Analysis' (Strengths, Weaknesses, Opportunities and Threats).
தொடர்ந்து வாசிக்க...
தொடர்ந்து வாசிக்க...
Tuesday, 12 January 2010
பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்
பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.தொடர்ந்து வாசிக்க...
வாலியிடம் பேச்சிழந்த இராமன்
ம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான்.
Monday, 11 January 2010
அரை நூற்றாண்டு காலமாக அரசியலில் ஆளுமை செலுத்திய பொன். இராமநாதன்
பொன்.இராமநாதன் ஒரு சிறந்த வழக்கறிஞர். அரசியல் அறிஞர். சட்டசபை உறுப்பினர். திறமையான பேச்சாளர். 1879 இல் தனது 28 ஆவது அகவையில் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் ஆதரவோடு சட்டவாக்க சபையில் காலடி எடுத்து வைத்ததோடு அவரது அரசியல் வரலாறு தொடங்கியது. எழுபதாவது அகவையில் 1921 ஆம் ஆண்டில் சேர் பட்டம் பெற்றவர்இராமநாதன் 1911 இல் அகில இலங்கை அடிப்படையில் படித்தோர் தொகுதிக்குப் போட்டியிட்டு சிங்களத் தலைவர்களில் ஒருவரான சேர் மார்க்கஸ் பெர்னாந்துவைத் தோற்கடித்தார். கண்டி உயர்சாதிப் பவுத்த சிங்களவர்கள் கிறித்து சமயத்தவரும் கரவா சாதியைச் சேர்ந்தவருமான பெர்னாந்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.
ஏழை அகதிகளை இரட்சிக்க யார் வருவார்?
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ஊடகங்களுக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் செய்திகளை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றமையால் தற்போது முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகளின் நிலை குறித்து எதுவும் வெளிவருவதில்லை.ஒற்றைத்தண்டவாளத் தொடர்வண்டி (Monorail)
ஒற்றைத் தண்டவாளத்தில் பயணிக்கும் தொடர்வண்டி வகையைச்சேர்ந்த போக்குவரத்து வாகனமே ஒற்றைத்தண்டவாளத் தொடர்வண்டி (Monorail) என்றழைக்கப்படுகின்றது. Monorail என்ற ஆங்கிலப்பதம் ஒற்றைத்தண்டவாளத்தையே குறித்தாலும், அதிலே பயணிக்கும் தொடர்வண்டியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகின்றது. இவ்வகைப் போக்குவரத்து வாகனங்கள் தொடர்வண்டிகள் என்றழைக்கப்பட்டபோதிலும், பெரும்பாலும் இவை தொடர்வண்டிகளின் அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லவல்லவையாகக் காணப்படுவதில்லை. இதன்காரணமாக இவ்வகை தொடர்வண்டிகள் தூர இடங்களுக்கு இயக்கப்படுவதில்லை. பொதுவாக நகரங்களுக்குள்ளான போக்குவரத்துத் தேவைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது. சில நாடுகளில் விமான நிலையறங்களுக்கான போக்குவரத்திலும் பயன்படுத்தப்படுகின்றது.
Subscribe to:
Posts (Atom)

