Friday, 11 December 2009

வலம்வரும் டக்ளஸின் வரலாறு என்ன?


நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போது போரற்ற சூழ்நிலையில் ஏ9 உடனான சீரான போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும் என்றும் மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்பதும் போன்ற பத்து நிபந்தனைகளை சொன்னாராம். தமிழர்களின் அன்றாட வாழ்வாதார உரிமைகளையே கேட்டு பெறவேண்டிய தேவை எழுந்துள்ளதை மறந்த அமைச்சர்ளும் அவரைப் போன்றவர்களும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி கதைப்பார்களா என்பதை மீளவும் இன்றைய நிலையில் நாம் சிந்தித்துபார்க்கவேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை மைதானத்திற்கு வெளிச்சமூட்ட மின்சாரம் வழங்கப்பட்டால் கூட அதனை ஆரம்பித்துவைக்கவும் டக்ளஸ்தான் செல்கின்றார் என்ற நிலையில் மீளவும் சில விடயங்களை நினைவூட்டுவது பொருத்தமாகவிருக்கும் என கருதுகின்றோம்.

douglas (1)


-நிலவன்

No comments:

Post a Comment