இரவில் நாம் பயன்படுத்தும் செயற்கை வெளிச்சமானது, பறவைகள், கடல் ஆமை, எலி, தவளை போன்ற விலங்கினங்கள் இவற்றைப் பாதிப்பது குறித்து நாம் சென்ற கட்டுரையில் கண்டோம். ஆனால் மனித குலத்திற்கு இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பறவைகள் போல் நாம் உயரமான கட்டிடங்களில் மோதிக்கொண்டு உயிரை விடப்போவதோ, கடல் ஆமைக்குஞ்சுகள் போல் கடற்கரையில் அலைந்து அடிபட்டுச் சாகப் போவதோ இல்லைதான். ஆனால், இரவில் ஏற்படும் செயற்கை ஒளியானது நமது உடலில் பலவிதமான எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இதனால் பல வித உடல் மற்றும் மனக்கோளாறுகள் உண்டாகின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Monday, 7 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment