மீண்டும் தமிழர்தாயக மக்கள் ஒன்றிணைந்ததான தமது கொள்கையை நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஒன்று சேர வெளிப்படுத்தியுள்ளனர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு என்பது தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே வெளியாகியிருக்கின்றது.சிங்களப் பெரும்பான்மை சக்திகளால் தமிழின அழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்த போது ஒருவர் தீர்மானம் எடுக்க அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றியவர் மற்றவர். இருவரும் எதிர் எதிர் துருவங்களாக நின்று ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் நிலைபாட்டினை எடுத்தது மட்டுமல்லாமல் இருவர் தொடர்பிலான வெளிவராத பல உண்மைகள் வெளிவரத் தொடங்கின. இன்னும் பெருமளவில் வெளிவரும் என்பதனை யாரும் மறைக்க முடியாது.
தொடர்ந்து வாசிக்க...
1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.
இசை, மொழி இனம் மதம் கடந்து அனைவரையும் இணைக்கக் கூடியது, அதிலும் குறிப்பாக இந்தியாவில், இந்து மதத்தில் "இசையால் தமிழாய் இருப்பவனே" என்றும், "இசையால் வசமாகா இதயம் எது, ஈசனே இசைவடிவம் எனும்போது" என்றும் இசை இறைவடிவாகவே நோக்கப் படுகிறது. கலைமகள் வீணையிசைப்பதாகவும், நாரதர் கந்தருவர்கள் முதலியவர்கள் இசையில் தேர்ந்தவர்கள் எனவும், கண்ணனின் குழலிசையில் பசுக்களும், பறவைகளும், ஏன்... செடி கொடிகள் கூட மயங்கி நின்றதாகவும் இசை தொடர்பான ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.
வரும் 26 ஆம் நாள் (26/01/2010) இலங்கையில் இடம்பெற இருக்கும் அதிபருக்கான தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு அமையவும் நடைபெறுமா என்னும் கேள்வி இப்போது எழுந்துள்ளது.
மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.
கிளிநொச்சி மீள்குடியேற்றம் அதன் பின்னான மக்களின் இயல்பு வாழ்வு என்றெல்லாம் பல்வேறு செய்திகள் நாளுக்கு நாள் வெளிவந்தாலும் உண்மையில் கிளிநொச்சியின் நிலைப்பாடு தொடர்பில் வெளி உலகிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரிய பலமாக விளங்கிய தமிழர்களின் இராணுவ பலம் சிறிலங்கா அரசினாலும் அதன் நேச சக்திகளின் கூட்டுச்சதியினாலும் சிதைக்கப்பட்ட தற்போதைய நிலையில் அவ்வாறான சூழ்ச்சிவலையில் தமிழ்மக்கள் எவ்வாறு சிக்கினார்கள்? அந்த சூழ்ச்சிவலையின் பிரதான சூத்திரதாரிகள் யார்? அவ்வாறான கபடநாடகங்கள் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் போராட்டங்களில் எவ்வாறான பரிணாமத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றன? போன்ற விடயங்களை, போரின் உஷ்ணம் தணிந்துள்ள இப்போது சற்று இரைமீட்டிக்கொள்வது எதிர்கால பயணத்துக்கு ஆரோக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கும் என்பது உறுதி.

நேர்முகத்தேர்வில் உங்கள் அறிவைச் சோதிக்கும் கேள்விகளை விட உங்கள் தன்மையைச் சோதிக்கும் கேள்வுகள் தான் பொதுவாக அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் வெவ்வேறு விதம். ஒரு தேர்வாளரின் குணமும் மற்றவருடைய குணமும், நேர்முகத்தேர்வுகளுக்கான முறைகளும் ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் அமைதியாக, தட்டிக்கொடுக்கும் விதமாக உங்களை நேர்முகம் செய்யலாம். சிலர் உங்களைச் சீண்டி உங்கள் குணாதிசயத்தை எடை போட விரும்பலாம். ஆனால் நீங்கள் ஒரே விதமாக, அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் பதில்களைச் சொல்வது அவசியம்.
சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது சிறிலங்காவின் தேர்தல்தான். யார் ஆட்சிக்கு வந்தாலென்ன அவர்களுடன் தமது அரசுகள் தொடர்ந்து இணைந்து செயற்படும் என அறிவித்துவிட்டு தேர்தல் முடியும்வரை காத்திருக்க சர்வதேச நாடுகள் தயாரில்லை. சிறிலங்காவின் தேர்தல் தற்போது சர்வதேச சக்திகளின் கைகளுக்கும் சென்றுவிட்டதை தெளிவாக காணமுடிகின்றது.
நவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்கமும் அவற்றுக்கான நவீன தொழிநுட்ப உருவாக்கமும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.
பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.
ம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.
பொன்.இராமநாதன் ஒரு சிறந்த வழக்கறிஞர். அரசியல் அறிஞர். சட்டசபை உறுப்பினர். திறமையான பேச்சாளர். 1879 இல் தனது 28 ஆவது அகவையில் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் ஆதரவோடு சட்டவாக்க சபையில் காலடி எடுத்து வைத்ததோடு அவரது அரசியல் வரலாறு தொடங்கியது. எழுபதாவது அகவையில் 1921 ஆம் ஆண்டில் சேர் பட்டம் பெற்றவர்
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ஊடகங்களுக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் செய்திகளை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றமையால் தற்போது முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகளின் நிலை குறித்து எதுவும் வெளிவருவதில்லை.
ஒற்றைத் தண்டவாளத்தில் பயணிக்கும் தொடர்வண்டி வகையைச்சேர்ந்த போக்குவரத்து வாகனமே ஒற்றைத்தண்டவாளத் தொடர்வண்டி (Monorail) என்றழைக்கப்படுகின்றது. Monorail என்ற ஆங்கிலப்பதம் ஒற்றைத்தண்டவாளத்தையே குறித்தாலும், அதிலே பயணிக்கும் தொடர்வண்டியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகின்றது. இவ்வகைப் போக்குவரத்து வாகனங்கள் தொடர்வண்டிகள் என்றழைக்கப்பட்டபோதிலும், பெரும்பாலும் இவை தொடர்வண்டிகளின் அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லவல்லவையாகக் காணப்படுவதில்லை. இதன்காரணமாக இவ்வகை தொடர்வண்டிகள் தூர இடங்களுக்கு இயக்கப்படுவதில்லை. பொதுவாக நகரங்களுக்குள்ளான போக்குவரத்துத் தேவைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது. சில நாடுகளில் விமான நிலையறங்களுக்கான போக்குவரத்திலும் பயன்படுத்தப்படுகின்றது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு பிரதான தரப்புக்களும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தன. எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியுமா? எனத் தீவிரமாக ஆராய்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதியில் சில அம்சங்களைக் கோரிக்கைகளாக்கி இரண்டு தரப்பிடமும் முன்வைத்தது. இந்தக் கோரிக்கைகளுக்கு உடன்படும் வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு ஆதரவு வழங்குவதென கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தது.
கதையின் தொடக்கத்தில் கோயிலைச் சேர்ந்த 'எருமத்ர' மடத்தினை 'கண்டெழுத்து' (நில அளவுRevenue survey and settelment period) எழுதவருகிற 'க்ளாசிப்பேரு கொச்சுப்பிள்ளை' (classifier)க்காக சுத்தம் செய்து தயார் ஆக்குகிறார்கள். கோடாந்திர முத்தாசான் போன்றவர்களுக்கு கிளாசிப்பேர் என்றால் அந்த பெயரை வைத்து என்ன மாதிரியான வேலை அது, என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று பல குழப்பங்கள். அதுகாலம் வரையிலும் பிராமணல்லாதவரை எருமத்ரமடத்தில் தங்க வைத்ததில்லை. ஆனால் பொன்னு தம்பிரான் (ராஜா) உத்தரவு . இதனைக் காலமாற்றம் நிகழத்தொடங்கியதின் குறிப்பு எனக்கொள்ளலாம். செய்யும் வேலையினைக் கொண்டு ஒருவருடைய நிலை உயர்த்தப்பட்டுவிட்டது.
நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன? சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது.
பரஸ்பர நிதிகள்(Mutual funds) என்றால் என்ன? அவற்றின் நிறைகுறைகள் என்னென்ன என்பன குறித்து சென்ற கட்டுரையில் கண்டோம். நாம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக இருந்தால், சரியான பரஸ்பர நிதியத்தினைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.
நம்மில் பலர் காலையில் எழுந்திருக்கையிலேயே அதிகமான இடுப்புவலி, முதுகுவலியுடன் எழுகிறோம். அதற்கு என்ன காரணம்? வயதானவர்கள் பலருக்கு, மிக இலேசாக அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படுகிறது. உடம்பிலேயே மிக வலுவானது என்று கருதப்படும் இந்த எலும்புகள், பட்பட் என்று ரொட்டித்துண்டு போல் உடைவது ஏன்?அது மட்டுமல்ல. இன்று பல சிறு குழந்தைகளுக்குக் கூட கை கால்கள் வளைதல், எளிதில் எலும்பு முறிதல் ஆகியவை ஏற்படுகின்றன என்பதைப் பல செய்தித்தாள்களில் படிக்க நேரிடுகிறது.
தொடர்வண்டி (Train) என்றதும் உடனடியாக எமது மனக்கண்முன் தோன்றும் வடிவம் நீண்ட காலமாகப் பயன்பாட்டிலுள்ள எரிபொருள் இயந்திரத்தின் மூலம் இயங்கும் தொடர்வண்டியே. பெரும் சுமைகளைச் கொண்டு செல்லும் பணிகளில் இன்றும் எரிபொருள் மூலம் இயங்கும் தொடர்வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றதன. இருந்தபோதிலும் பயணிகள் போக்குவரத்துக்கான தேவைகளில் பெரும்பாலான நாடுகளில் இன்று மின்சாரத்தில் இயங்கும் தொடர்வண்டிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. மின்சாரத் தெடர்வண்டிகளின் வருகையின் பின்னர் தொடர்வண்டிகளைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. இத்துடன் உயர் சக்தியை வழங்கவல்ல மின்சாரத் தொடர்வண்டிகளின் பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான பொருளாதாரச் செலவு ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுவதும் இவ்வகைத் தொடர்வண்டிகளின் அதிகரித்த பயன்பாட்டிற்கான பிரதான காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.
இழப்புக்களையும் வலிகளையும் சுமந்த ஆண்டான 2009 கடந்து இன்று புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த விடுதலை போராட்டம் வல்லாதிக்க சக்திகளின் உதவியுடனும் போராட்ட பயணத்தில் உறுதியோடு பயணித்து தடம்மாறி காட்டிக்கொடுப்போராக மாறிய எம்மவர்களின் துரோகங்களுடனும் எமது தமிழ் இராச்சியம் மீளவும் வீழ்த்தப்பட்ட ஆண்டாக 2009 ஆம் ஆண்டு கடந்துசெல்கின்றது. புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன?
தாயகத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகவாவது தமிழ்த் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஒரே குரலில் நின்று பெற்றுக்கொள்ள முடியுமென்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டங்களிலிருந்தது. ஆனால் தற்போது எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வெவ்வேறான நிலைப்பாடுகள் இருப்பது வெளிக்காட்டப்பட்டு வருகின்றது.
மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்பது பொன்மொழி. நேற்றுபோல் இன்று இல்லை, இன்று போல் நாளையில்லை. ஒவ்வொரு நாளும் உலகம் ஒரு புதிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. ஆதிமனிதன் முதலில் இலைகளை உடுத்தத்தொடங்கியது முதல், இன்றைய கணிணி யுகம் வரை, வாழ்க்கை முறைகளில், வியாபாரங்களில், தகவல் பரிமாற்றங்களில், சுற்றுப்புறச் சூழலில் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக்கொள்ளாத எதுவும் நிலைத்திருக்க முடிவதில்லை. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறாத உயிரினமான டைனோசர், எத்தனையோ பெரியதாக இருந்தும், சுத்தமாக அழிந்து விட்ட உயிரினமாகி விட்டது. சூழலுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் கரப்பான்பூச்சிகளை எத்தனை பூச்சிக்கொல்லிகள் வந்தும் அழிக்க இயலவில்லை. இன்று பெங்குயின்கள் கூட மெள்ளமெள்ளப் பறக்கத் துவங்குவதாக ஒரு பிபிசி நிகழ்ச்சியில் பார்த்தோம்.
சிறிலங்காவுக்கான அரச தலைவர் தேர்தலுக்காக தமிழர் தரப்பு தமது முடிவினை விரைவினில் வெளிப்படுத்தவேண்டிய நிலையில் இருப்பதால் ஆட்சி மாற்றத்தின் மூலம் சாதிக்கப்போவது என்னென்னவென்பது பற்றியும் அதற்கு அவசியமான காரணங்கள் பற்றியும் அலசுகிறது இக்கட்டுரை.