ஈழ விடுதலைப்போராட்டத்தின் இருப்பினை அடியோடு அழித்துவிடவேண்டும் என்பதில் வெறித்தனமாகச் செயற்படும் சக்திகளின் சதியால் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயலாளர் நாயகம் பத்மநாதன் அவர்கள் அண்மையில் கைதாகிக் கடத்தப்பட்டிருப்பதன் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பும் விடிவுக்கான போராட்டமும் எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்ற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுந்துள்ளது.
"சிறிலங்காவில் புலிப்பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு உயிர்ப்பளிக்கும் செயற்பாடு உலகின் எந்த மூலையில் நடைபெற்றாலும் அதைத் தேடிச்சென்று நசுக்கும் வல்லமையுடன் சிறிலங்கா அரசு உள்ளது" - என்று பத்மநாதன் அவர்களின் கைதின் பின்னர் பேசிய சிறிலங்கா அரசின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்குப் பயங்கரவாத முலாம் பூசியது மட்டுமல்லாமல், அந்தப் போராட்ட உணர்வுடன் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் செயற்பாடுகளுக்கும் சிறிலங்கா அரசு சவால் விடுத்திருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க...
-பொற்கோ
Tuesday, 1 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment