Thursday, 17 September 2009

மகிந்தவின் மரணப்பொறிக்குள் விலங்கிட்ட விலங்குகளான தமிழினம்


ஆக்கிரமிப்பு யுத்தத்தில் சரணடைந்த அப்பாவி தமிழர்களை சிறிலங்கா அரச படைகள் விலங்கிட்ட் விலங்குகளைப்போல் ஈவிரக்கமின்றி சுட்டுத்தள்ளும் மிருகவெறித்தனமான கொலைப்படலம் அண்மையில் ஆதாரத்துடன் வெளியாகியிருக்கிறது.
பிரிட்டனை தளமாகக்கொண்டு இயங்கும் 'சனல் - 4' தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொலி மனிதநேயம்மிக்க எல்லா மக்களின் மனங்களையும் ஒரு கணம் உலுப்பியிருக்கிறது. ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் இந்தக்காட்சியை கணனியின் முன்னிருந்து கண்ணீருடன் பார்த்து எழும்பி தன்னுறவுகளை நினைத்து வெதும்புகிறான்.
genocide-killingதற்போதைய நிலையில் ஈழத்தமினத்திற்கு சர்வதேச சமூகம்தான் எல்லாமே என்றாகிவிட்டதால் - இவற்றின் பின்னணியில் - சில நியாயமான வினாக்களை முன்வைப்பது இங்கு சாலப்பொருந்தும்.
கடந்த ஆண்டின் இறுதிப்பகுதி முதல் இந்த ஆண்டின் முற்பகுதிவரை இவ்வாறான சம்பவங்கள் தமிழர்தாயகத்தில் நடைபெறுகின்றன என்று புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் ஒப்பாரி வைத்தழுது தமது உறவுகளை காப்பாற்க்கோரி சர்வதேச சமூகத்திடம் மன்றாடி நின்றபோது, அது பற்றி செயல்ரீதியாக கிஞ்சித்தும் நடவடிக்கை எடுக்காது, தனியே அறிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துவந்த சர்வதேச சமூகம் இன்று இந்த ஆதாரபூர்வமான மனிதப்பேரவலத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
-தெய்வீகன்

No comments:

Post a Comment