முந்தியெண்டா யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டிலை இருந்து 30 நிமிசத்துக்கு ஒருக்கா வெளிமாவட்டங்களுக்கு பஸ் புறப்படும். அது வவுனியா பஸ் ஆக இருக்கலாம் மட்டக்களப்பு பஸ் ஆக இருக்கலாம் திருக்கணாமலை (திருகோணமலையை இப்பிடித்தான் நாங்கள் சொல்லுறது) பஸ்ஸாக இருக்கலாம். இல்லை கொழும்பு பஸ்ஸாகக் கூட இருக்கலாம். அவையவை அவையவைக்குத் தேவையான பஸ்ஸிலை ஏறிப் போகலாம்.
ஆனா இப்ப, யாழ்ப்பாணத்திலை இருந்து வெளிக்கிடுறது வவுனியாவுக்கான பஸ்தான். கொழும்புக்குப் போறவையை, அது மதவாச்சி வரை கொண்டுபோய் இறக்கும். அதுக்கு அங்காலை தமிழ்ப் பிரதேசத்து பஸ்கள் ( அதுவும் அரசாங்க சேவையான இ.போ.ச) போகமுடியாது.
"இதில் போனாச் சங்கடம்" எண்டுதான் முந்தி இ.போ.ச பஸ்ஸைச் சொல்லுறது. ஆனா அதைவிட பெரிய சங்கடங்களை போக்குவரத்தில் சந்தித்ததால் இ.போ.ச இப்போது "இனிய போக்குவரத்துச் சபை"யாக மாறிவிட்டது.
வவுனியாவிலை இருந்து பஸ் எடுக்கிறதெண்டா வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு போகக்கூடாது. ஆமிக் காம்ப்புக்கு வரவேணும். வவுனியா “ரம்யா ஹவுஸ்” எண்டது சிவில் நிர்வாக அலுவலகம் . இங்கைதான் “டோக்கன்“ கொடுக்கிறது. “டோக்கன்“ எண்டா நீங்கள் கொடுத்த “கிளியரன்ஸை” பார்த்து “செக்“ பண்ணி, சரி நீங்கள் பின்னேரம் பஸ் எடுக்கலாம் எண்டு குடுக்கிற ஒரு சின்னத்துண்டுதான்.

-பரதன்
No comments:
Post a Comment