தூய வெள்ளை தாடி, சிவப்பு நிற உடை, அன்பும் கனிவும் நிறைந்த பார்வை, சிரித்த முகம், கை நிறைந்த பரிசுகள் - இந்த உருவத்தைப் பார்த்தவுடன் சின்னக் குழந்தைகள் "கிறிஸ்துமஸ்" தாத்தா என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவார்கள். இன்று வரை, பல நாடுகளிலும் ஒவ்வொரு சிறு குழந்தையும், கிறிஸ்துமசுக்கு முதல் நாள் இரவு அவர்கள் விரும்பும் பரிசுப்பொருளை கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் அல்லது அவர்களது காலுறைக்குள் "சாண்டா க்ளாஸ்" என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வைப்பதாக நம்புகிறார்கள். மேல்நாட்டில், குழந்தைகள் தமக்கு விருப்பமான பரிசுப்பொருள்கள் குறித்து கிறிஸ்துமஸ் தாத்தாவிற்குக் கடிதம் எழுதுவது கூட உண்டு.தொடர்ந்து வாசிக்க...
செயற்கைக்கோள்!
இந்த ஹார்மோன்களின் பணி என்ன?
தென்னிலங்கை அரசியலின் மற்றொரு முக்கிய பேசுபொருளாய் மாறியிருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தனக்குள் எழுந்த அதீத தமிழ் பற்று மேலீட்டால் தனது கட்சிகளின் ஒருமித்த கொள்கைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணமும் செலுத்தியுள்ளார். தற்போது பரப்புரை நடவடிக்கைகளிலும் தோளில் கறுப்புச் சால்வையுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என்பது யாவரும் அறிந்தவிடயம்.
நிலையான இறக்கைகளைக் கொண்ட நீர் நிலைகளில் தரையிறங்கக் கூடியதும் நீர்நிலைகளிலிருந்து மேலெழக்கூடியதுமான விமானங்களே கடல்விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை விமானங்கள் பொதுவாக இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன.
நெஞ்சில் உரமுமின்றி
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களினால் எல்லா நாடுகளிலும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஐக்கிய இலங்கைக்கு பாரிய ஆபத்தாக மாறவுள்ளது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைக்கு சமாந்தரமாக சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தேர்தல் முடிவடைந்த கையோடு வேகமாக ஆரம்பிக்கவேண்டும் என்று சிங்கள புத்திஜீவிகள் சிலர் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை கைவிடுவது என்று எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அரசதலைவர் தேர்தலில் போட்டியிடும இரு பிரதான வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைசிநேரத்தில் தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..jpg)

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் புதிய பரிமாணத்தில் எழுச்சிய பெற ஆரம்பித்துள்ளன. அவற்றை தலை தூக்க விடாமல் அழித்தொழிப்பதற்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்லும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கிடையிலான யுத்தங்களின்போது விமானப்படையின் பணி பிரதானமானதாகக் காணப்படுகின்றது. எதிரி நாடுகளின் உட்கட்டுமானங்களைச் சிதைப்பதில் விமானப்படையின் பங்கே மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. தொலைவிலுள்ள நாடுகளுடனான யுத்தங்களின் போது விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் வெடிபொருள் நிரப்புதலுக்கான தளங்களைத் தெரிவுசெய்வதிலுள்ள சிரமங்களைத் தவிர்ப்பதன் பொருட்டே விமானந்தாங்கிக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நவீன யுத்த விமானங்களுக்கு வானிற் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி காணப்பட்ட போதிலும் வெடிபொருள் மீள் நிரப்புகைக்காகத் தளங்கள் தேவையாகவேயுள்ளன.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவின் அரசதலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்கு அழைப்பித்து, எதிர்வரும் அரசதலைவர்த் தேர்தலை ஒட்டிய விடயங்கள் குறித்து அவருடன் பேச்சு நடத்தினார் என அறியவந்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுகளின் பெறுபேறு குறித்து கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் அதிருப்தியே தெரிவித்தன. அரசதலைவர் தரப்பிலிருந்து காட்டப்பட்ட சமிக்ஞைகள் தமிழர் தரப்பின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவு செய்வனவாக அமையவில்லை என்று அவை குறிப்பிட்டன.
பம்பலப்பிட்டி கடலில் சிறிலங்கா காவல்துறையினரால் அடித்து மூழ்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட பாலவர்மன் சிவகுமார் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகியுள்ளது. அவரது படுகொலை தொடர்பாக சிறிலங்கா சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுனந்த தேசப்பிரிய எழுதிய பத்தி வருமாறு:-
கடந்த வாரம் இப்பகுதியில் அமெரிக்கத் தயாரிப்பான AH-65 தாக்குதல் உலங்குவானூர்தி தொடர்பாகப் பார்த்திருந்தோம். இவ்வாரம். பறக்கும் டாங்கி என ரஸ்ய விமானிகளால் அழைக்கப்படும் Mi-24 தாக்குதல் உலங்குவானூர்தி தொடர்பாகப் பார்க்கவிருக்கின்றோம். 1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது.


