போதாதென்று…. அங்கு மனித அவலங்கள் நடந்தேறுவதற்கான அத்தனை இழுத்தடிப்புகளையும் சாவகாசமாகப் புரிந்து கொண்டிருந்தன ‘ஐ.நா’வும் அதன் அங்கத்துவ நாடுகள் சிலவும்!Monday, 28 September 2009
கண்பறித்துக் காட்சிகொடுக்கும் சர்வதேசம்
போதாதென்று…. அங்கு மனித அவலங்கள் நடந்தேறுவதற்கான அத்தனை இழுத்தடிப்புகளையும் சாவகாசமாகப் புரிந்து கொண்டிருந்தன ‘ஐ.நா’வும் அதன் அங்கத்துவ நாடுகள் சிலவும்!சிறிலங்காவில் சமாதானம் சாத்தியமா?

Thursday, 24 September 2009
புன்னகை என்ன விலை?
புன்னகை பூத்த முகமாக ஏன் இருக்க வேண்டும்? அதனால் என்ன பலன்? சில காரணங்களைத் தெரிந்துகொள்வோம்.
புன்னகை நமது வெளியுலகத் தொடர்புகளை சீரான முறையில் வைத்திருக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நம்மைக் கவர்ச்சியாக்குகிறது.ஒருவர் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பின் அவர்களுடன் பழகத் தோன்றுமா என்ன? ஒரு புதிய அலுவலகத்துக்குள் நுழைகிறீர்கள். ஏதோ ஒரு தகவலை விசாரிக்கவேண்டும் என்றால் யாரை அணுகுவீர்கள்? அங்குள்ளவர்களில் அழகிய தோற்றமுடையவரையா அல்லது சிரித்த முகத்துடன் இருப்பவரையா? கண்டிப்பாக இரண்டாமவரைத்தான். ஏனெனில் அவர் முகத்தில் உள்ள புன்னகை உங்களை அவர்பால் ஈர்த்துவிடுகிறது. உண்மையா இல்லையா? பிறரை வசீகரிக்க வேண்டுமானால், நம்மை உயர் ரக ஆடைகளாலும், அணிகலன்களாலும் அலங்கரித்தாக வேண்டுமென்பதில்லை. உதடுகளில் புன்னகையை மட்டும் அணிந்தாலே போதுமானது. அது முன்பின் தெரியாதவர்களைக் கூட இணைக்கக் கூடிய கயிறு. -பாலகார்த்திகா
Wednesday, 23 September 2009
பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?
நாள் வணிகம் மிக எளிமையானதாகவும் அதிக லாபகரமானதாகவும் தோற்றமளிக்கலாம். ஆனால், எதிரி நாட்டில் உளவு அறியச் சென்றிருக்கும் இராணுவ வீரன் போல் நாம் ஒவ்வொரு கணமும் தயார் நிலையில் இருப்பது அவசியம். நாள் வணிகத்தின்பொழுது பின்பற்ற வேண்டிய சில விதிகள் குறித்தும், நாள் வணிகத்தில் ஆதாயமடைவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும் சில கருத்துகளை இக்கட்டுரையில் காணலாம்.
தொலைக்காட்சியில் / அல்லது செய்தித்தாளில் கொடுக்கப்படும் கணிப்புகளை அப்படியே நம்பவேண்டாம். இவ்வாறு கூறப்படும் பங்குகளில் அதிகப்பேர் ஆர்வம் காட்டுவதால் விலை கன்னாபின்னாவென்று அதிகரிக்கும். இத்தகைய போக்கு நீடிக்கும் என நம்ப இயலாது. நீங்களே, சரியான பங்குகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதே போல் பிறர் வாங்குவதைப் பார்த்து வாங்கக் கூடாது என்பதை ஏற்கனவே கண்டோம்.தொடர்ந்து வாசிக்க...
-பாலகார்த்திகா
சுவடுகள் 6 - கேணல் சங்கர் அண்ணா
Tuesday, 22 September 2009
சுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்
ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.உடல் எடைக்குறியீட்டு எண்
உடல் எடைக்குறியீட்டு எண்ணைக் கணக்கிடுவது எப்படி?
நமது உயரத்தையும், உடல் எடையையும் கொண்டு கணக்கிடப்படுவது இது. மெட்ரிக் முறை ( மீட்டர் / கிலோகிராம்) மற்றும் பழைய அளவீடுகளான பவுண்டு, அங்குலம் ஆகிய இரு வித அளவுகளுக்கும், இரு விதமான சூத்திரத்தைக் (Formula) கொண்டுள்ளது. உடல் எடைக்குறியீட்டு எண்ணுக்கான படிவம் ( BMI Chart) கொண்டும் இதைக் கண்டு பிடிக்கலாம். இந்தப் படிவத்தில் உடல் எடையானது கிடை அச்சிலும் (Horizontal Axis) உயரமானது செங்குத்தான அச்சிலும் (Vertical Axis) கொடுக்கப் படும்.இதன் மூலம் வெவ்வேறு அளவுகளுக்கான சரியான உடல் எடைக்குறியீட்டு எண்ணைக் (Body Mass Index) கண்டறியலாம்.
உடல் எடைக்குறியீட்டு எண்ணை அளவிடுவதற்கான சூத்திரங்கள்:
தொடர்ந்து வாசிக்க...
-பாலகார்த்திகா
தெருவில் படித்த பாடம்
அப்படி நானும் ஒரு பாடம் படித்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது. சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.Monday, 21 September 2009
சுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன்

தமிழ்மக்களின் புதிய "அரசியல் வாய்பாடு"
இந்த இடத்தில் ஈழத்தமிர் விவகாரம் இன்று மூன்று முனையில் கையாளப்பட்டுவருவதை காணலாம். அதாவது
தொடர்ந்து வாசிக்க...
-பொற்கோ
Saturday, 19 September 2009
சுவடுகள்-3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான்
வானம்பாடி மாஸ்டர் எமக்குக் கற்பிப்பதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரியர். இயக்கத்தின் ‘வெடிபொருள் பொறியமைப்புக் கல்வி’ தொடர்பில் அந்நேரத்தில் அவரே பொறுப்பாக நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார். பொறியமைப்புக்கள் தொடர்பில் நீண்டகால அனுபவமும் மிகத் தேர்ச்சியும் கொண்டிருந்தார். பொறியமைப்புச் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவதொன்றும் இலகுவான செயலன்று. கணனிகள் உட்பட நவீன சாதனங்கள் எவையுமின்றி வெறும் கரும்பலகையில் கீறிமட்டுமே கற்பிக்க வேண்டிய நிலையிற்கூட மிக அழகாக எல்லோருக்கும் விளங்கும் வணக்கம் கற்பிக்க அவரால் முடிந்தது. மிக எளிய எடுத்துக்காட்டுக்களோடு பொறியமைப்புத் தொகுதிகளின் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவார்.சுவடுகள் - 2. தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன் - கப்டன் அன்பரசன்
கற்கைநெறியில் பல படையணிகளிலிருந்தும், துறைகளிலிருந்தும் போராளிகள் பங்கெடுத்தனர். ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் தளமமைத்து எமது கற்கைநெறி தொடங்கியது. தள அமைப்பு வேலைகள் முடிந்து படிப்புத் தொடங்கிக் கொஞ்ச நாட்களிலேயே ‘ஜெயசிக்குறு’ தொடங்கிவிட்டது. அதுவும் முதலிரு நாட்களிலேயே நெடுங்கேணிப் பகுதியை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிவிட்டது.சுவடுகள் - I. எவனுக்காய் அழுவது?

Friday, 18 September 2009
இதயம் – உள்ளே இருப்பதை வெளியே தாங்கிய குழந்தை
இந்த நிலை மருத்துவத்தில் Ectopia Cordis என்று சொல்லப்படுகிறது. அதாவது, தோலுக்கு வெளியே உறுப்பு உருவாவது என்ற குறைபாட்டுக்களில் ஒன்றுதான் இது. Ectopia Cordis - தோலுக்கு வெளியே உருவாகியிருக்கும் இதயம். இந்தக் குறைபாடு கோடியில் 3 குழந்தைகளுக்குத் தான் ஏற்படும் என்று ஆய்வுகளின்படி தெரியவந்துள்ளது. கருவில் இதயம் முழுவதுமாக வளரும் முன்னே நெஞ்சுக்கூடு ஒட்டிக்கொள்வதுதான் மூல காரணம் என்று மருத்துவப் புத்தகங்கள் சொல்கின்றன. இப்படி ஆவதால், இதயம் மட்டுமல்ல, சில பிள்ளைகளுக்கு நுரையீரல் போன்ற உறுப்புகளும் தோலுக்கு வெளியே வளருவதுண்டாம். முக்கிய உறுப்புகள் இப்படி தோலுக்கு வெளியே வளர்வதால், அவ்வுறுப்புகளுக்குச் சரியான பாதுகாப்புக் கிடைப்பதில்லை. இதனால் மேற்கொண்டு வரும் மருத்துவச் சிக்கல்கள் பல. அதனால் இம்மாதிரி குறைபாடுகள் இருக்கும் சிசு பெரும்பாலும் இறந்தே பிறக்கும் அல்லது, சில மணி நேரங்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்குமாம்.தடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II

சொல்லத்தான் நினைக்கிறேன் - 1

விலங்குகளின் சாலை மரணங்கள்
புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)
தற்காலப் பயன்பாட்டிலுள்ள நவீன போக்குவரத்து ஊர்திகளில் வழிகாட்டும் தொகுதி (Navigation System) என்பது ஓர் இன்றியமையாத கருவியாகிவிட்டது. நாம் போகவேண்டிய இடத்தின் முகவரியை வழிகாட்டும் கருவியினுள் உள்ளீடு செய்ததும், நாம் பயணிக்கவேண்டிய பாதையினைத் திரையில் தோன்றும் வரைபடத்திற் குறித்துக் காட்டுவதுடன் நமது பயணத்தின்போது வீதியில் எமது நகர்வினையும் தொடர்ந்து குறித்துக்காட்டும் வேலையினையும் இக்கருவி செய்கின்றது. இச்செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும் அவற்றின் பின்னணி மற்றும் வரலாறு என்பவற்றையும் இங்கு மேலோட்டமாகப் பார்ப்போம்.காஞ்சிவரமும் விருதுகளும்
தொடர்ந்து வாசிக்க...
-கயல் லக்ஷ்மி
Case of War crimes: SL in the US net
Sri Lanka has no Political will - Bruce Haigh
Bruce Douglas Haigh is a well known political commentator, author and correspondent. He writes political columns to Australian Media about current affairs in international politics. He has served as a diplomat in many countries.வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் பயணம்
முந்தியெண்டா யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டிலை இருந்து 30 நிமிசத்துக்கு ஒருக்கா வெளிமாவட்டங்களுக்கு பஸ் புறப்படும். அது வவுனியா பஸ் ஆக இருக்கலாம் மட்டக்களப்பு பஸ் ஆக இருக்கலாம் திருக்கணாமலை (திருகோணமலையை இப்பிடித்தான் நாங்கள் சொல்லுறது) பஸ்ஸாக இருக்கலாம். இல்லை கொழும்பு பஸ்ஸாகக் கூட இருக்கலாம். அவையவை அவையவைக்குத் தேவையான பஸ்ஸிலை ஏறிப் போகலாம்.
"இதில் போனாச் சங்கடம்" எண்டுதான் முந்தி இ.போ.ச பஸ்ஸைச் சொல்லுறது. ஆனா அதைவிட பெரிய சங்கடங்களை போக்குவரத்தில் சந்தித்ததால் இ.போ.ச இப்போது "இனிய போக்குவரத்துச் சபை"யாக மாறிவிட்டது.வவுனியாவிலை இருந்து பஸ் எடுக்கிறதெண்டா வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு போகக்கூடாது. ஆமிக் காம்ப்புக்கு வரவேணும். வவுனியா “ரம்யா ஹவுஸ்” எண்டது சிவில் நிர்வாக அலுவலகம் . இங்கைதான் “டோக்கன்“ கொடுக்கிறது. “டோக்கன்“ எண்டா நீங்கள் கொடுத்த “கிளியரன்ஸை” பார்த்து “செக்“ பண்ணி, சரி நீங்கள் பின்னேரம் பஸ் எடுக்கலாம் எண்டு குடுக்கிற ஒரு சின்னத்துண்டுதான்.
தியாகதீபம் திலீபன்
திசநாயகம் வழக்கு: தீயினால் தீர்ப்பு எழுதிய சிறிலங்கா நீதிமன்றம்
நாட்டில் பயங்கரவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலான கட்டுரைகள் அடங்கிய “நோர்த் ஈஸ்டெர்ன் கெரால்ட்” எனப்படும் ஆங்கில சஞ்சிகையை எழுதி அச்சிட்டு வெளியிட்டதைற்காக ஐந்து வருட கடூழிய சிறையும் –
பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து சஞ்சிகை நடத்தியதன் மூலம் பணம் பெற்றுக்கொண்டமைக்காக ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் –
இவ்வாறான ஒரு சஞ்சிகையை வெளியிட்டதன் மூலம் சமூகங்களின் உணர்வுகளுக்கு பங்கம் விளைவித்தமைக்காக பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் –
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றினால் தீர்க்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க...
-சேரன்
ஒரு புத்தகம் – ஓர் எண்ணம் – ஒரு திரைப்படம்
மகிந்தவுக்கு ஆயத்தமாகும் “அரசியல் கிளைமோர்”
அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பதாக, மகிந்த அரசுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் முன்னணி ஒன்றைக் கட்டமைக்கும் பணியில் தென்னிலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும் -
தொடர்ந்து வாசிக்க...
-சேரன்
பிரபாகரன் - சர்வதேசம்: யார் வலையில் யார்?
விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தம்மைக் கட்டமைத்துக்கொண்ட அளவிற்கு அரசியல் ரீதியில் தமது கொள்கைகளை வகுத்துக்கொள்ளவில்லை என்றும் சர்வதேச அரசியலைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிப் போக்கினால்தான் இன்று அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் பல்வேறு வகையான வியாக்கியானங்களை விடுதலைப்புலிகளை ஆரம்பம் முதலே எதிராக விமர்சித்துவந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் எல்லா வெற்றிகளுக்கும் சாமரம் வீசிய பலரும்கூட அவர்களுடன் கூடிநின்று தற்போது தடம் மாறி தத்துவம் பேசத் தலைப்பட்டுவிட்டார்கள்.
தொடர்ந்து வாசிக்க...
-தெய்வீகன்
தமிழினத்தின் இன்னொரு வரலாறு: வதைமுகாம் வாழ்வு
போரின் போது அல்லது போரின் கொடூரத்தால் இரண்டு கைகளையும் இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், கண்பார்வையற்றவர்கள் என எல்லோரையும் விசாரணைகள் என்ற பெயரில் அழைத்துச் செல்லும் சிறிலங்காப் படைகள் அவர்களை புகைப்படம் எடுத்தபின்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிவருவதாகவும் ஏனையவர்களைக் காட்டித்தரும்படி அவர்களை வதைப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. Thursday, 17 September 2009
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிவைத்துள்ள மகிந்தவின் மறைமுகத் திட்டம்
அந்த வரிசையில் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் துண்டாடும் இரகசியத் திட்டத்துடன் களத்திலிறங்கியுள்ள மகிந்த அரசு சத்தம் சந்தடியில்லாமல் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டுவருவதாக கட்சிவட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. அதாவது, விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக மார்தட்டி மகிழ்ச்சியடையும் மகிந்த அரசுக்கு, சிறிலங்காவில் - சிங்கள தேசத்தின் செவிகளுக்கு ஒவ்வாத - தமிழ்த்தேசியம் மற்றும் தமிழர் உரிமை ஆகியவை பற்றி தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் பலமான அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
போர் முடிவடைந்த சூழ்நிலையில், தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதான பார்வை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கு இலங்கைத்தீவிலலுள்ள உள்ள ஒரே அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. ஆகவே, இப்போதைக்கு கூட்டமைப்பினருடன் வெளிப்படையாக முறுகல்பட்டுக்கொண்டால், அது தமக்கு மேலும் சிக்கலை கொண்டுவரும் என்பது மகிந்த அரசுக்கு உள்ளுர தெரிந்துள்ள விடயம். ஆகவே, இரகசிய சதி மூலம், கூட்டமைப்பினுள் இறுக்கமாக இருந்துவரும் அந்த ஒற்றுமையைச் சிதைத்துவிடவும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் முறுகலை ஏற்படுத்தி, தமிழர்களின் ஜனநாயகக் குரலாக ஒலித்துவரும் கூட்டமைப்பின் அத்திவாரத்தினை அடியோடு அழித்துவிடவும் மகிந்த அரசு படிப்படியாக தனது காய்களை நகர்த்திவருவதாகவும் தெரியவருகிறது. இதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் ஈ.பி.டி.பியின் உதவியுடன் காரியங்கள் நடந்துவருவதாக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து வாசிக்க...
-முகிலன்
சிறிலங்கா - மேற்குலகம்: திரைமறைவில் நடைபெறும் பனிப்போர்
போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மனித உரிமைகள் என்ற விடயத்தில் மேற்குலகத்தின் பேச்சை கேட்காத சிறிலங்கா அரசை மேற்குலகம் வெளிப்படையாக சாடியது. சிறிலங்கா அரசும் பதிலுக்கு மேற்குலகுக்கு எதிராக தனது தெளிவான - திட்டமிட்ட - பிரசாரபோரை முன்னெடுத்தது மட்டுமல்லாமல், தனது போர் நிகழ்ச்சிநிரலுக்கு ஓத்துழைக்காத மேற்குலகுக்கு மேலும் சீற்றத்தை ஏற்படுத்தும்வகையில், பணி நிமிர்த்தம் சிறிலங்காவை தளமாக கொண்டியங்கிய மேற்குலக ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் பலருக்கு கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியது.
மகிந்தவின் மரணப்பொறிக்குள் விலங்கிட்ட விலங்குகளான தமிழினம்
தற்போதைய நிலையில் ஈழத்தமினத்திற்கு சர்வதேச சமூகம்தான் எல்லாமே என்றாகிவிட்டதால் - இவற்றின் பின்னணியில் - சில நியாயமான வினாக்களை முன்வைப்பது இங்கு சாலப்பொருந்தும்.ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் புதிய போக்கு
விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் இல்லாத ஒரு வெற்றிடத்தில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தம்மால் இறங்கிவந்து பணிபுரிய முடியும் என்றும் ஈழத்தமிழர்களது போராட்டத்தை பிரபாகரனுக்கு முன், பிரபாகரனுக்கு பின் என்ற ரீதியில் தாம் அணுகவிரும்புவதாகவும் இன்றைய காலகட்டத்தில் தம்மை முழுமையாக நம்பலாம் என்றும் தமிழர்களின் அரசியல் விடிவுக்காக தாம் எந்தப் பணியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்தியா உயர்மட்டம் தமிழர் தரப்புக்கு எடுத்துக்கூறியிருப்பதாகத் தெரிகிறது.
கட்சிகளின் பெயரையும் கருவறுக்கத் துணிந்த சிங்களம்
அதாவது சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பெயர்களில் 'தமிழ்த்தேசியம்', 'முஸ்லிம் காங்கிரஸ்', 'விடுதலைப்புலிகள்' போன்ற சொற்கள் இருக்கக்கூடாது என்றும் அவ்வாறான பெயர்களுடன் தற்போது இயங்கிவரும் கட்சிகள் தமது பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும் எனவும் அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த ஜுலை 20 ஆம் திகதி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈழம்-இந்தியம்-சர்வதேசம்!
தாயக உறவுகளின் அவலங்கள் தணிப்போம்
Wednesday, 16 September 2009
புகைப்பழக்கத்தினை நிறுத்த வேண்டுமா?
புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான சில வழிகளை இங்கு பார்க்கலாம்.
தொடர்ந்து வாசிக்க...
-பாலகார்த்திகா
தியாகதீபம் திலீபன்
தியாகி தீலீபன் அவர்களின் நீரின்றிய உண்ணாவிரத போராட்டம் தமிழீழ விடுதலைப் போரின் ஆன்ம உறுதியை நிலைநாட்டிய நிகழ்வு. ஆயுதம் தரித்து போராடிய வீரன் அகிம்சை வழியிலும் தன்னால் தாயக விடுதலைக்காக உறுதியுடன் போராட முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டி செப்ரம்பர் மாதம் 15 ஆம் திகதி 1987 ஆம் ஆண்டு தனது நீரின்றிய உண்ணாநோன்பை ஆரம்பித்துவைத்தான். பன்னிரண்டு நாட்கள் வெறும் வயிற்றுடன் நீதிகேட்டு போராடிய தியாகதீபம் திலீபன் இந்திய தேசத்தை தலைகுனியவைத்து தன்னுடலை உருக்கி தன்னுயிரை அழித்துக்கொண்டான்.
1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்திய படைகள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டனர். ஈழத்தமிழர்களின் தேசத்தில் அமைதியை ஏற்படுத்தவந்த படைகள் சிறிலங்காவில் நடந்துகொண்டிருந்த நில ஆக்கிரமிப்பை கண்மூடி பார்த்துக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அவசர ஒன்றுகூடலை செய்தது.
Tuesday, 15 September 2009
புகைப்பழக்கத்தினை நிறுத்த வேண்டுமா?
புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான சில வழிகளை இங்குப் பார்க்கலாம்.
தொடர்ந்து வாசிக்க...
-பாலகார்த்திகா
Monday, 14 September 2009
"மகிந்த சிந்தனை"யில் மாயமான பொன்சேகா
போர் முடிவடைந்துவிட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு மாதங்களில், நாட்டின் இராணுவ இயந்திரத்தில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றங்கள் படையினர் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றங்களில் மிகமுக்கியமானதாகக் கருதப்படும் முன்னாள் இராணுவதளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிப்பறிப்பு அரசுத்தலைவர் மகிந்தவின் பல்வேறு சிந்தனைகளை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு எத்தகையது என்பது அனைவரும் அறிந்த விடயம். நடந்து முடிந்த போரில், வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலைக் களத்திலே செயற்படுத்தும் பணியையே சரத்பொன்சேகா மேற்கொண்டிருந்தார்.