நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் இராமநாதன் இருவரும் இலங்கை அரசியலிலும் சமூக தளத்திலும் இமயம் போல் வலம் வந்தார்கள். இந்தக் கால கட்டத்தில் இவர்கள் இருவரும் இலங்கையின் சிறந்த தேசியத் தலைவர்களாகக் கருதப்பட்டனர்.பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14, 1853 - ஜனவரி 9, 1924) கேட் முதலியார் என அழைக்கப்பட்ட அருணாசலம் பொன்னம்பலம், செல்லாச்சி (சேர் முத்து குமாரசுவாமியின் உடன்பிறப்பு) ஆகியோரின் மூன்றாவது மகனாவார். பொன்னம்பலம் குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது உடன்பிறப்புக்கள் ஆவர்.
பொன்னம்பலம் குமாரசுவாமி புகழ்பெற்ற சட்டத்தரணியாவார் (Proctor). 1893 இல் இலங்கை சட்டசபைக்கு நியமன உறுப்பினராக இருந்தார். இளவயதில் இவர் காலமாகி விட்டார்.
-நக்கீரன்
"ஐயா ஏனிந்த கோலம். உங்கள் செய்கை பைத்தியக்காராரரின் செயல் போலல்லவா இருக்கிறது" என்று கேட்டார் பாரதி.



பங்குச்சந்தைகளில் ஏற்படும் ஊசலாட்டத்திற்கும், பங்குகளின் விலை ஏறி இறங்குவதற்கும் நிறுவனங்கள் குறித்த தகவல்களும் காரணம் என்று முன்பே பார்த்தோம்.
உலங்கு வானூர்திகள் வான்வழிப் போக்குவரத்தின் இன்னொரு பரிமாணமாகவே காணப்படுகின்றன. உலங்குவானூர்திகள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிடைச்சுழலிகள் (horizontal rotor) கொண்டிருப்பதோடு ஒவ்வொரு சுழலியும் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சுழலித்தகடுகளைக் (rotor blades) கொண்டிருக்கக் காணப்படுகின்றன. உலங்குவானூர்திகள் நிலையான இறக்கைகளைக்கொண்ட வானூர்திகளிலிருந்து அவற்றின் நிலைக்குத்தான தூக்குசக்தியை (vertical lift) உருவாக்கும் விதத்தினால் வேறுபடுகின்றன.









குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை: எப்பொழுதும் பிறரிடம் உள்ள நல்ல குணத்தை மட்டுமே பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். இது எல்லோருக்குமே பொருந்தும் என்றாலும், முக்கியமாக வாழ்க்கைத் துணையிடம் பின்பற்றவேண்டியது இது. 'Nobody is Perfect' என்பது ஞாபகம் இருக்கட்டும். எந்தச் செயலையும் வாய்விட்டு, மனம் விட்டுப் பாராட்டுங்கள். அது முடியவில்லையா? குறைந்த பட்சம் எதற்கெடுத்தாலும் குறை சொல்வதை நிறுத்துங்கள். நிஜமாகவே பெரிய தப்பாக இருந்தாலும், கத்திக் கூச்சல் போட்டு திட்டி..

நடிகர் விஜய் இதோ அரசியலுக்கு வருகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார், சேர்ந்தே விட்டார், என்ற செய்திகள் எல்லாம் மெல்லக் கரைந்து போய், அவரது வேட்டைக்காரன் திரைப்படம் தான் வரப் போகிறது என்பது மெல்ல உறுதியாகி இருக்கின்றது. பரபரப்புச் செய்திகளை அள்ளிக் குவித்து, மோசமான வியாபாரம் செய்து கொண்ட பத்திரிகைகளும், இதழ்களும் மெல்ல மெல்ல இப்போது "விஜய் சொன்ன நோ, சூர்யாவுக்கு வலை வீசும் காங்கிரஸ்" என்று அடுத்த சரவெடியை பற்ற வைத்துள்ளனர். இந்த மோசமான வணிகத்தை புலம்பெயர் நாடுகளிலும் பெரும்பாலான பத்திரிகைகளும், ஊடகங்களும் தம் பங்குக்கு பெரிதாக்கி, நாளும் பொழுதுமாக செய்திகளை வெளியிட்டு செய்யும் அட்டகாசம் பெரிதாகியே வருகின்றது. முதலில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம், உரிமை.
தாரை இயந்திரங்களின் கண்டுபிடிப்பு இயந்திரத் தொழிநுட்பத்தில் ஒரு புதிய புரட்சியை உண்டுபண்ணியது என்றால் அது மிகையன்று. நவீன விமானத் தொழிநுட்பத்திலும் அது ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியதோடு அதன் வேகமான வளர்ச்சிக்கும் அடிகோலியது. தொடக்கத்தில் விமானங்களின் பயன்பாட்டிற்காகவே தாரை இயந்திரங்கள் உருவாக்கப்பட்டபோதிலும் பின்னாட்களில் அவை பல்வேறுபட்ட மாற்றங்களுடன் பல்வேறுபட்ட தேவைகளுக்காகப் பயன்பாட்டிற்கு வந்தன.
யாழ்ப்பாணம், அனுராதபுரம், களுத்துறை, பூசா, வெலிக்கடை, நியூமகசின், நான்காம்மாடி, தெமட்டகொட பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பணியகம், கண்டி போகம்பரை சிறைச்சாலை போன்ற இடங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகளின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
"ஐயா நான் இங்கு தனியாகத் தான் வசிக்கிறேன். இங்கு யாரும் வருவதில்லை. இங்கு காய்கறிகள் வளர்த்து அருகே உள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்கிறேன்" என்றாள் அந்த மூதாட்டி. விளையும் காய்கறிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் அவருக்கு விவரித்தாள். மலைச்சாரலில் விளையும் அந்தக் காய்கறிகள் சத்தானவை என்றும் அந்தக் கிராம மக்களுக்கு அந்த சத்தான காய்கறிகளை விற்பதில் தனக்கு ஒரு நிறைவிருக்கிறது என்றும் தெரிவித்தாள். அவருக்கும் அந்தக் காய்கறிகளைக் கொண்டு தான் சமைத்திருந்த எளிய உணவை அளித்து உபசரித்தாள். தன் வீட்டுக்கு வந்த அபூர்வமான அந்த விருந்தாளியைக் கண்டு அவளுக்கு பெருத்த மகிழ்ச்சி.
இதன் முதற்பகுதியை வாசிக்க
1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்றுசேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கைநெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும் தொடங்கிவிட்டது.