Wednesday 7 October 2009

உன்னைப்போல் ஒருவன் – ஒரு பார்வை


அண்மையில் வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு படமிது. ஆகா ஓகோ என்று பெருவாரியான பாராட்டுக்களையும் புகழாரங்களையும் சூடிக்கொண்ட அதேநேரம் திரைப்படம் சொல்லவரும் கருத்து, அவற்றின் பின்னணி தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனங்களையும் சில தரப்புக்களிலிருந்து பெற்றுக்கொண்ட படம்.
சந்தேகமேயில்லாமல் தமிழ்த் திரையுலகில் இப்படம் ஒரு மைல் கல்லேதான். திரைப்படக் கலை என்றளவில் இது மிக நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்ட ஒரு திரைப்படம். அவ்வகையில் இப்படத்துக்குரிய இடம் முக்கியமானதே. ஆனால் இதன் கருவாக, போதனையாக, அறிவுரையாகச் சொல்லப்படும் விடயம் தமிழ்த் திரையுலகிற்குப் புதியதன்று. ஏற்கனவே விஜயகாந்த், அர்ஜுன் போன்றவர்களின் படங்களிற் சொல்லப்பட்டவைதாம்.

1 comment:

Post a Comment